Monday, November 8, 2010

முத்தேவியர்

அன்னை ராஜராஜேஸ்வரி கொலுவிருந்தாள்
ஸ்ரீசக்கரத்தில் அமர்ந்து கொலுவிருந்தாள்
முத்துமண்டபத்தில் அமர்ந்திருந்தாள்
என் உள்ளத்திலே வந்து கலந்திருந்தாள் .
அலைமகள் கலைமகள் அங்கு இருக்க
சப்த கன்னிகள் அங்கு கீதம் பாட
நந்திகேஸ்வரர் மேளம் கொட்ட
தேவி பரமேஸ்வரி கொலுவிருந்தாள்
சிவமனோகரியாய் அருள்புரிந்து நின்றாள்
என் சிந்தையிலே வந்து மிதந்து நின்றாள்.


வெள்ளைத்தாமரையில் வீற்றிருந்தாள்
வீணையில் நாதத்தைக்காற்றினில் கலந்தாள் ,
அன்னவாஹன தேவியானாள்
வித்தைகளுக்கெல்லாம் தலைவி அவள்.
மரகதக்கரங்கள் வீணையை மீட்ட
கல்யாணி வந்து கொலுவிருந்தாள்

சிம்மவாகனத்தில் அமர்ந்து வந்தாள்
கையில் சூலம் ஏந்தி நினறாள்
மகிஷனை வதம் செய்தவள்
மகிஷாசுரமர்த்தனி ஆனவள்
அருள் புரியும் துர்க்கையானாள்,
முப்பத்து முக்கோடிதேவர்கள் மலர் தூவ
ரத்னஹாரங்கள் அங்குமிங்கும் அசைய
நவரத்னசிம்மாசனத்தில் கொலுவிருந்தாள்
என் இதயத்தில் வந்து கலந்து நின்றாள் .

நமக்குள் ஒரு ராவணன்

வட இந்தியாவில் நவராத்திரியை "தசேரா" என்று கொண்டாடுகிறர்கள் .இங்கு ஒரு
பெரிய மைதானத்தில் {தில்லியில் ராமலீலா மைதானம்} இராமயணத்தை நாடகமாகப்போடுவார்கள் அதில் துளசிராமாயணம் பெரிய பங்கு வகிக்கும்
தஸ் ஹரா என்பது தசேராவாக மாறி இருக்கலாம் .அதாவது பத்து தலைகளை
மாய்ப்பது " என்று பொருள் வரும் அந்தப்பத்து தலைகள் என்பது நம்மிடமே
இருக்கின்றன .அதாவது பொறாமை, .கோபம் ,பேராசை பற்று ,வரட்டுகௌரவம்
தன்னலம் , குயுக்தி புத்தி .வெறுப்பு .வரம்பைத்தாண்டும் காமம் ,ஈகோ .

ஸ்ரீராமரும் இராவணனைக்கொல்ல தேவியை ஆயிரம் தாமரையால் பூஜித்தார் ,
பூஜை முடியும் கட்டத்தில் தேவி விளையாட கடைசி தாமரையை ஒளித்து
வைத்துக்கொண்டாள், ஸ்ரீராமார் கடைசிப்பூவைப்போட கண்களைத்திறந்து
பார்த்தார் .அது அங்கு இல்லாததால் மனம் மிகவும் வருத்தமுற்று
"தேவி இது என்ன சோதனை? பூஜை முடியும் தருவாயில் இப்படி ஆக வேண்டுமா?
பரவாயில்லை என் தாய் என் கண்களைத்தாமரை மலருக்கு ஒப்பிடுவாள்.ஆகையால்
என் கண்ணைப்பிடுங்கி உனக்கு மலராகச்சம்ர்ப்பிக்கிறேன் "
என்று சொல்லியபடியே தன் கண்களைப்பிடுங்க , ஒரு கை வந்து தடுத்து நிறுத்தியது
பாராசக்திதான் அவள் , இதை மிக அழகாக "சூர்யகாந்த் திரிபாடி நிராலா "என்பவர்
ஸ்ரீராம் கி சக்தி பூஜா "என்ற கவிதையில் சொல்லியிருக்கிறார்.

இதில் இராவணின் அழிவு என்பது மனதில் இருக்கும் ஆசாபாசங்களை அழித்து
மனதை வெற்றிக்கொளவது இதை மகிஷாசுரனின் அழிவிலும் பண்டாசுரனின்
அழிவிலும் எடுத்துக்கொள்ளலாம் பஞ்சேந்திரியங்களைக்கட்டுப்படுத்தி ஞானத்தை
வரவழைக்கும் செயல் மனதைக்கட்டுப்படித்தினால் தான் இயலும் ,மனம் ஒரு குரங்கு.
தாவிக்கொண்டே இருக்கும்
அந்தக்குரங்கைக்கட்டிப்போடுவது அவ்வளவு எளிதல்ல அதற்கு அம்பாளின் அருளும்
நாமஸ்மரணையும் வேண்டும் ,இடைவிடாநாமஜபத்தால் மெஸ்மரிசம் போல் இந்த
மனக்குரங்கு கட்டப்பட்டுவிடும்

பாண்டிசேரி அன்னையை ஸ்ரீ அரவிந்தார் முத்தேவியின் ரூபமாகக் காண்கின்றார்,
மஹாலட்சுமி ,மஹாசரஸ்வதி , மஹாகாளியின் ஸ்வரூபமாக சேர்ந்து மஹேச்வரியாக
காட்சி அளித்தார் ,அந்த மஹேச்வரியின் படம் வீட்டில் இருநதால் மிகவும் நல்லது
என்கிறார்கள் அன்னையின் பக்தர்கள் ,

"ஆனந்தமயீ சைத்தன்யமையீ சத்யமயீ " என்று அன்னையை அழைப்பபர்கள் . இதைப்பார்க்க பேரானந்தம் கிடைப்பது என்பது மனதிற்குள்
இருக்கும் ஒளியை க்கண்டுப்பிடித்து சத்தியத்தின் பாதியில் நடப்பதும் அதனால் வரும் இன்பமென்று தோன்றுகிறது .

கட்டுவோம் நம் இதயத்தில் ஓர் ஆலயம்

ஷீரடி பாபாவின் தலையணை ஒரு செங்கல். அந்த்ச்செங்கல் தான், ஷீரடிபாபா அந்தக்கிராமத்தில் கால் வைத்த தினத்திலிருந்து அதை உபயோகித்தார் ,
அவர் மறைவுக்குக்கொஞ்சம் நாள் முன் அந்தச்செங்கல் உடைந்துப்போய் அவரது
சித்தியடையும் வேளையைக்குறிப்பிட்டது போலும் ,

துவாரகாமாயிக்குள் நுழைந்த ஒரு சிறுவன் மிகவும் சாக்கிரதையாக அந்த இடத்தைச்சுத்தம் செய்துக்கொண்டிருந்தான் மேலே தூசியைத்தட்ட கீழே தூசிகள்
விழுந்தன .பாபாவின் தலையணையான அந்தச்செங்கல் அங்கு இருந்தது .அதில்
தூசி குப்பைகள் விழாதிருக்க அதை வேறு இடத்தில் வைக்க அதைத்தூக்கினான்.
ஆனால் நடந்தது என்ன! கைத்தவறி அது கீழே விழுந்து பாதியாக உடைந்துவிட்டது

பாபா வெளியிலிருந்து துவாரகாமாயி திரும்ப நடந்ததை அறிந்தார் .அந்தப்பையன்
மாதவ் போஸ்லே மனம் வருந்தி அழுதான் ,பாபா அந்தச்செங்கல் உடைந்ததும்
தானும் ஒரு சாதாரண மனிதன் தான் என்று காட்டவோ என்னவோ மிகுந்த
கோபம் வந்தாற்போல் கண்கள் சிவந்தன .

"உடைந்தது என் இதயம் உடைந்தது போல் ஆகிவிட்டது , உடைந்தது செங்கல் இல்லை .உடைந்தது என் கர்மாவே" என்றார்.

அவர் முடிவு நெருங்கி விட்டது என்பதைச் சூசகமாகச்சொன்னாரோ?

பல தடவைகள் அவர் முடிவுக்காலம் நெருங்குவதை உணர்த்தினார் .

"இந்த உடம்பு சாஸ்வதமில்லை இது அழிவு பெறக்கூடியது ,ஆன்மாவே நிலைத்து
நிற்பது " என்றும் அவர் கூறி தன் முடிவைத் தெரிவித்தார் ,

1916ல் விஜயதசமி தினம் வழக்கம் போல் வீதியில் ஊர்வலம் வந்துக்கொண்டிருந்தது .
அதற்கு மராட்டியில் சீமோலங்கன் என்று பெயர் சீமா என்றால் எல்லை உல்லங்கன்
என்றால் தாண்டுவது என்று இங்கு அர்த்தம் அதாவது எல்லையைத் தாண்டுவது ,
அழகாக் வந்துக்கொண்டிருந்த பாபா அவர்கள் திடீரென்று கோபத்தால் கண்கள் சிவக்க
தன் உடைகளைக்கிழித்துக்கொள்ள ஆரம்பித்தார் .அங்கு எரிந்துக்கொண்டிருந்த
துனி என்ற நெருப்பில் உடைகளைப்போட்டார் தன்னுடைய கைக்கம்பினால்
அந்த மசூதியின் தரையை "டபார் டபார்" என்று அடித்தார் பின் கத்த ஆரம்பித்தார்.

"நான் இந்த எல்லையைத்தாண்டிப்போகப்போகிறேன் "

ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை ஏதோ நடக்கப்போகும் ஒன்றைச்சொல்கிறார்
என்று மட்டும் ஒரு சிலருக்குப்புரிந்தது .பின் சில் நிமிடங்களுக்க்பிற்கு சாயிபாபா தன் நிலைக்கு வந்தார் பின் பக்தர்கள் அளித்த உடைகளையும் தலையில் கிரீடத்தையும்
அணிந்துக்கொண்டு சாவடிக்குத்தயாரானார்
இவர் சொன்னது போல்வே 1918 சரியாக இரண்டு வருடங்கள் கழித்து அதே விஜயதசமி
அன்று 2 -30 க்கு அவரது கடைசி மூச்சாக இருந்தது .


அவருக்கு இலேசாக சுரம் கண்டது அப்போது கூட ஒருவரும் அவர் அவர்களை
விட்டுப்போய்விடுவார் என்று எண்ணவில்லை .

அந்த்ச்செவ்வாய்க்கிழமையை மற்க்க முடியுமா?

துவாரகாமாயி யில் அவர் உடன் இருக்கும் இருவரை அவர் சூசகமாக வெளியில் ஒரு
காரியமாக அனுப்பிவிட்டார் அவருடன் நிழல் போல் இருந்த ஸ்ரீலட்சுமி பாயிக்கு
கொடுக்க வேண்டிய ஒன்பது ரூபாய்க்களை முதலில் ஐந்தும் பின் நாலுமாகக்கொடுத்தார். பாசத்தின் காரணமாக இதைக்கொடுத்ததாக பலர் நினைத்தனர் ,
பின் ஒவ்வொருவராக எல்லோரையும் அனுப்பிவிட்டார் பின் தன்னிடம் பயாஜி கோதே
என்பரை மட்டும் வைத்துக்கொண்டார்
பின் அவர் காதில் "என்னைத் "தகடி வாடா" என்னும் இடத்திற்கு அழைத்துச்செல் "
என்றார்
அங்கு அழைத்துச்சென்றபின் அவர் மடியில் சாய்ந்தார் உட்க்கார்ந்த நிலையிலேயே
அவர் சித்தியடைந்து விட்டார்

முப்பத்தாறு மணி நேரம் அவரது உடல் வைக்க்ப்படிருந்தாலும் அந்த உடல் விரைத்துப்போகவில்லை .அவரது கப்fனி உடை மிகவும் எளிதாகக்கழட்டப்பட்டது துணியைக்கிழிக்கும் நிலைமை
ஏற்படவில்லை உடல் நன்கு வளைந்துகொடுத்ததாம்

பாபாவின்ஸ்தூல உருவம் நம்க்கு இப்போது தெரியாவிட்டாலும் அவர் பூத உடலில் இருக்கும் போது எப்படி பக்தர்களுக்கு அருள் வழங்கினாரோ
அதேபோல் இன்றும் வழங்கி வருகிறார் ,பாபாவின்
படத்தைப்பார்த்தாலே நம் மனதில் ஒரு அமைதி
கிடைக்கிறது
நம் இதயங்களில் {பக்தர்கள்} அவரது ஆலயம் இருக்கிறது அந்த ஆலயத்தில் அருள் என்ற
பிரசாதம் நம்க்குக்கிடைத்த வண்ணம் இருக்கிறது

இந்த விஜயதசமி தினத்தில் பாபாவின் சாவடி ஊர்வலமும் படித்து அவரை நினைவுக்கொண்டு
அவர் அருளைப்பெறுவோமாகுக் .

புதிய கலாச்சாரங்கள் புகுவது ஏன்?

நமது கலாச்சாரம் தொன்றுத்தொட்டு வரும் ஒன்று . ஆனால் இன்றைய காலக்கடடத்தில் அவை பெருமளவு குறைநது வருவதைக்காண்கின்றேன்.
முன்பு மாஹாளய தினங்களிலும் மற்றபடி அமாவாசை கிரஹணம் போன்ற தினங்களில் மனமொப்ப சிரத்தையாக முன்னோர்களை நினைத்து அதற்குத்தகுந்தாற்போல் புரோகிதர்களை வரவழைத்து தர்ப்பணம் செய்து அவர்களது ஆசிகளைப்பெறுவார்கள். ஆனால் இப்போது இருக்கும் இயந்திர யுகத்தில் எல்லாம் "ஷார்ட்கட்"ஆகிவிட்டது .பலர் இந்த நாட்களை அனுசரிப்பதையே விட்டுவிட்டனர் ,ஒரு பெண் க்ல்லூரிக்குப்போகாமல் லீவு எடுத்திருந்தாள் .நான் அவளிடம் கேட்டேன்,

"என்ன கல்பனா காலேஜ் போகவில்லையா?வீட்டில் மஹாளய தர்ப்பண நாளா?
அவள் பதில் சொல்ல்த்தெரியாமல் திணறினாள்
பின் கேட்டாள் " அப்படின்னா என்ன ஆன் டி ?"
நான் இதைப்பற்றிச்சொன்னேன் அவள் தன் வீட்டில் இது போல் எதுவும் செய்து பார்த்ததில்லை என்றாள் .சடங்குகள் செய்வதும் செய்யாமல் இருப்பதும் தனிப்பட்டவரின் சுதந்திரம் தான் .

ஆனால் வேடிக்கை என்னவென்றால் வெளிநாட்டில் இதேபோல் செய்யும் ஒன்றை "காபி" செய்து மகிழ்கின்றனரே மக்கள் !

இதுதான்" ஹாலோவீன் ' என்ற திருநாள் ..எது வெளிநாடுகளிலிருந்து வந்தாலும் அது இந்தியர்களுக்கு "அல்வா" மாதிரிதான் . இசையுடன் யோகா செய்வது .
அவர்கள் செய்யும் மெடிடேஷன் என்ற தியானம் { பிராணாயாமம் .தியானம் எல்லாம நமதுதான்}
போன்ற்வைகள் அமெரிக்கா கானடா போன்ற தேசங்களிலிருந்து வந்தால் பலர்
பல ஆயிரங்கள் கொடுத்து கற்றுக்கொள்கின்றனர் ,இவை எல்லாம் நம்து இந்தியாவின் சரக்குகள் தான் ,

நாம் கண்திருஷ்டி ஏவல் தீயசக்திகள் அண்டாமல் இருக்க பூஷிணிக்காயில்
பெரிய மீசை வரைந்து ஒரு ராட்சசன் போன்ற உருவத்தை புது வீட்டின் முன் கட்டுகிறோம்

ஹாலோவீன் போதும் மக்கள் டர்னிப் என்ற காயிலும் பூஷிணி அல்லது பரங்கிக்காயிலும் பலவிதமான உருவங்கள் வரைந்து தேவைப்பட்டால் அழகாகக் செதுக்கி அதை சன்னல் அருகில் தொங்க விடுகின்றனர் ,

நாம் இறந்த மூதாதைர்களுக்காக சில சடங்குகள் செய்து அன்னதானமும் செய்கிறோம் இந்த ஹாலோவீன் நாளிலும் வெளிநாட்டவர்கள் இறந்தவர்களை நினைத்து அவர்களுக்கு மரியாதை செய்கிறார்கள்,இந்தத்தினத்தில் பலர் பலதரப்பட்ட பிசாசுகளின் உருவங்களை முகமூடிகளாகத் தயாரித்து அவைகளை அணிகின்றனர் .இதன் காரணம் என்னவென்றால் அன்றையதினத்தில் வரும் தீய சக்திகள் இந்த முகமூடி பிசாசுகளைப்பார்த்து மறைந்துவிடுமாம்

ஸ்காட்லாந்தில் ஆண்கள் வெள்ளை உடையுடன் இந்த அரக்கன் போன்ற முகமூடிகளை அணிந்தோ அல்லது முகம் முழுவதும் கறுப்பு வண்ணம் பூசியபடியே பயமுறுத்துவார்களாம்
நாம் ஹோமம் வளர்பது போல் இவர்களும் நெருப்பை முட்டி அதைச்சுற்றி அமர்ந்து நடனம் ஆடுகிறார்கள் ,
இந்த நாளை மனதில் கொண்டுதான் "டிராகுல்லா "தி மம்மி படங்கள் தயாரிக்கப்பட்டு மிகவும்"ஹிட்"டானது

இன்றைய தினத்தை மேலும் பயமாக்க செயற்கைப்பொருடகள் தயாரிக்கின்றன்
அதில் பெரிய எட்டுக்கால் பூச்சி எலும்புக்கூடு செயற்கை மயானபூமி
கறுப்புப்பூனை ரப்பரால் ஆன பிசாசு போன்றவைகள் தயாரித்து கம்பெனிகளும்
லாபம் பெறுகின்றனர்
பள்ளிசிறுவர்களும் பூதம் போல் வேஷம் போட்டுக்கொண்டு வீடுகளுக்குச்சென்று
விருந்து கேட்கின்றனர்

ஆப்பிளை ஒரு பெரிய தொட்டியில் மிதக்கவிட்டு பற்களால் கவ்வி எடுக்கும் விளையாட்டும் உண்டு

நம் கிராமங்களில் இருந்து வரும் மூடநம்பிக்கைகள் போல் அங்கும் இருக்கின்றன
ஸ்காட்லாந்தில் இந்த நாளில் திருமணமாகாதவர் ஆப்பிள் பழத்தின் தோலை மெல்லியதாகச்சீவி தோளில் போட அது எந்த உருவத்தின் எழுத்தில் அமைகிறதோ அந்த எழுத்தின் ஆரம்பம் தான் அவள் மணக்கப்போகும் மாப்பிளையின் பெயராம் ,
தவிர இன்னொரு பழக்கமும் இருக்கிறது கன்னிப்பெண் ஒரு இருட்டு அறையில்
ஹலோவீன் நாளில் இரவை கழிக்க அவளது வருங்கால கண்வரின் முகம்
மறுநாள் அங்கிருக்கும் கண்ணாடியில் தெரியுமாம் திருமணம் இல்லாமல் வேறு அபசகுனமாக இருந்தால் எலும்புக்கூடு தெரியுமாம் .
நம் நாட்டிலும் வெற்றிலையில் கறுப்பு தடவி இறந்த காலம் நிகழ்காலம் எல்லாம் சொல்லும் ஜோசிய மேதைகள் இருப்பதைக் கேள்விப்படிருக்கிறேன் .

சிலர் இந்த நாளில் பரிசாக வாங்கும் ஆப்பிள் கேக்கின் உள்ளே தங்கக் காசு
மோதிரம் போன்றவை ஒன்று இரண்டில் வைத்து விற்பார்கள் .இதனால் அவரது
விற்பனை அதிகமாகும்

கொஞ்சம் கொஞ்சமாக வெளிநாட்டின் பல
கலாச்சாரங்களை இளைஞர்கள் எடுத்துக்கொள்கின்றனர் .இது போல் வந்ததுதான்
"valentine day " காதலர் தினம் ,
இப்போது இந்த ஹாலோவீன் நாளும் இந்தியாவில் முக்கிய நகரங்களில் வந்துவிட்டது
சென்னை அதற்கு விதிவிலக்கல்ல
கல்லூரி மாணவிகள் இதற்கென்று தயாரித்த
பயங்கரமான பிசாசு முக மூடியை அணிந்துக்கொண்டு வலம் வருகிறார்கள் இதைத்தயாரிக்கும் மனிதனும் இதனால் பணம்
கொள்ளை அடிக்கிறான் . .
நமது கலாச்சாரத்துடன் வெளிநாட்டு கலாச்சாரமும் சேர்ந்தால் நல்லதுதான் ஆனால்
நம் சம்பிரதாயங்கள் சடங்குகள் எல்லாம் மூட்டைக்கட்டிவிட்டு வெளிநாட்டுக்கலாச்சாரத்தில்
நாட்டம் கொள்ள பெற்றதாயை உதறித்தள்ளுவது
போல் ஒரு பிரமை தோன்றுகிறது ,
வெளிநாடுகளில் சுத்தம், ச்ட்டத்தை மீறாமல் இருப்பது போன்ற்வைகள் நம்மைக்கவருகின்றன

இந்த நல்ல அம்சங்களை நாம் எடுத்துக்கொள்ளலாமே !

"அன்ன கூட்"

தீபாவளி முடிந்த மறு நாள் "கோவர்த்தன பூஜை " மிகவும் உற்சாகமாக பீஹார் உத்தர்பிரதேசம் ஹரியானா ராஜஸ்தான் போன்ற மாகாணங்களில் நடக்கும் .விழாவன்று எல்லோரும் இரவு முழுவதும் தூங்காமல் ஆட்டத்திலும் பஜன்களிலும் பங்கு ஏற்று தங்களையே மறப்பார்கள். கோ என்றால் பசு வர்தனா என்றால் ஊட்டம் தருவது என இருக்கலாம் . ,ஆடுமாடுகளுக்கு வேண்டிய சக்தியைக்கொடுக்கும் புற்கள் நிறைந்த நிலங்கள் சூழ்ந்த இடம் தான் இது .

கிருஷணர் பால பருவத்தில் ஓடிவிளையாடிய இடம் தான் இந்த விரஜபூமி .இந்த இடத்தில் தான் கோவர்தன மலை வந்து அமர்ந்தது ,இந்தக்கோவர்தன மலை வந்து அமர்ந்ததற்கு வடநாட்டில் சொல்லும் புராணக்கதை என்னவென்று தெரியுமா?

துரோணாசலம் என்ற அரசன் சத்யயுகத்தில் ஆண்டு வந்தான் இவன் மலைகளின் அரசன் . அவனது மகனின் பெயர் கிரிராஜன் .ஒருநாள் புலஸ்தியமுனிவர் அரசனிடம் வந்தார்
"அரசே நான் காசிக்குப்போகிறேன் .என்னுடன் தங்கள் மகன் கிரிராஜனையும் அனுப்பி வைக்க அனுமதி தாருங்கள் " என்றார் .

"இது என் பாக்கியம் அழைத்துச்செல்லுங்கள் கிரிராஜா கிரிராஜா இங்கே வா ."

"என்ன தந்தையே நான் என்ன செய்யவேண்டும் ?'

"கிரிராஜா நீ இந்தப்புலஸ்திய ரிஷியுடன் காசிக்குச்சென்று வரவேண்டும் இது அவர் வேண்டுகோள்"

"அப்படியே செய்கிறேன் தந்தையே ஆனால் ......

"ஆனால் என்ன?

"முனிவர் என்னைத்தூக்கிச்செல்ல வேண்டும் கீழே இறக்கினால் நான் அங்கேயே அமர்ந்துவிடுவேன் இதற்கு சம்மதம் என்றால் நான் அவருடன் போகிறேன் "

புலஸ்திய ரிஷி யோசித்தப்பின் ஒப்புத்துக்கொண்டார் .

இருவரும் மதுராபுரி வந்தவுடன் கிரிராஜன் வேண்டுமென்று தன் உடலைப் பெருக்கிக்கொண்டான்,
ரிஷிக்கும் இவனைத்தூக்க முடியாமல் சிரமம் ஏற்பட கீழே இறக்கிவிட்டார்.
ஆனால் த்ன்னை இப்படி ஏமாற்றியதற்கு சாபம் கொடுத்தார்.

"உன் உருவம் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையட்டும் " ஆனால் அவசரத்தில் அவர் சாபமிட்டது தவறு என்று அவர் மனதில் தோன்ற " அன்பு கிரிராஜா துவாபரயுகத்தில் உனனை எல்லோரும் பூஜை செய்வார்கள் புகழுவார்கள் போற்றி வணங்குவார்கள் ." என்று மனதார வாழ்த்தினார்.


த்ரேதாயுகம் வந்தது ராமரின் அவதாரம் ....ராமர் வனவாசம் பின் சீதாஹரணம் என்று போய் ஸ்ரீராமர் இலங்கைக்குப்போக, கடலைக்கடக்க ,பாலம் அமைக்க ,கற்கள் சேகரிக்க கிரிராஜனை அழைத்து அனுமன் இந்த வேலையை அவனிடம் ஒப்புவித்தார் .ஆனால் அந்தப்பணியை நள்ன் முடித்துவிட கிரிராஜன் வருத்தமுற்றான்
ஸ்ரீராமர் அவன் வருத்த்தைப்போக்க " கிரிராஜனே வருந்தாதே . நான் துவாபரயுகத்தில் கிருஷணனாக அவதாரம் எடுப்பேன் அப்போது நானே உன்னை வழிபடுவேன் " என்றார்

கண்ண்ன் பிறந்தான் வளர்ந்தான் விரஜபூமிக்கு வந்து இராஸலீலையில் ஈடுபட்டான் ஒவ்வொரு வருடமும் அங்கு இந்திரபூஜை நடக்கும் ஆனால் இந்த மாயக்கண்ணன் அதை மாற்றினான் கோமாதாவுக்கும் கால்ந்டைகளுக்கும் உணவைக்கொடுக்கும் கிரிராஜனை வணங்க வைத்தான் கண்ணன் சொல்லே மந்திரமாக ஏற்றுக்கொண்டு அவன் வார்த்தையில் கட்டுண்ட விரஜவாசிகள் இந்திரனை மறந்து அந்தமலையைப்பூஜிக்கத் தொடங்கினார்கள் அவ்வளவுதான் இந்திரனுக்கு வந்தது கோபம் .திடீரென்று இடி இடித்து கனமழையை உண்டாக்கினான் .பசுக்கள் விரஜவாசிகள் ,கோபியர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர் .

புன்னகையுடன் வந்தான் மாதவன் .தன் சுண்டுவிரலால் அந்த மலையைத்தூக்கி அதனடியில் தன் மக்களுக்குப்புகலிடம் கொடுத்து காத்தான் . இந்திரனும் பின்னால் கண்ணனிடம் மன்னிப்புக்கோரினான் ,

"கோவர்த்தன மலையைக்குடைப்பிடித்த கண்ணனாம் "என்ற பாடலும் உண்டு
இந்த ஞாபகமாக ஒரு சின்ன மலையைச் சாணத்தினால் உண்டாக்கி அதற்கு மலர்மாலைச் சார்த்திப்பின் அழகான ரங்கோலி என்ற வண்ணக்கோலம் இட்டு அதை கோவர்த்தனகிரியாக வழிபடுவார்கள் அந்த ஊர் மக்கள்.பின் கண்ணனுக்குப்பிடித்த பலவகை இனிப்புக்கள் முக்கியமாக பால் தயிர் சேர்த்த பலகாரங்கள் அன்னம் .பருப்பு,என்று 56 வகைகள் நைவேத்தியம் செய்ய எடுத்துவந்து அதையும் மலைப்போல் குவிப்பார்கள் .
இதை "அன்னகூட்" என்கிறார்கள் ,

சில மக்கள் சாதம் வடித்து அதையே மலைப்போல் ஆக்கி நைவேத்தியம் செய்கிறார்கள்

அண்ணாமலை கிரிவலம் வருவது போல் இந்த மலையையும் கிரிவலம் வருகிறார்கள் பகீரதன் பூமிக்குக்கொண்டு வந்த கங்கையைப்போல் இங்கும் ஒரு கங்கை இருக்கிறது இதன் பெயர் "மானஸ கங்கை"
கண்ணன் தன் மனதினால் உற்பத்திச்செய்த கங்கை இது .அதனால் "மானஸ கங்கை"என்று பெயர் வந்தது ,
இந்த மலை ஆரம்பத்தில் 30 கிமீ உயரம் இருந்ததாம் இப்போது 80 அடி உயரம்தான் இருக்கிறது என்று சொல்லிக்கொள்கிறார்கள் ,
இந்த மலையில் அங்கப்பிரதக்ஷிணமும் செய்கிறார்கள் ,இந்த கோவர்த்தனபூஜை செய்ய பாபங்கள் நீங்கி வாழ்க்கை வளமுறும்,

Sunday, October 3, 2010

பித்ருகர்மா

தருமபுத்திரரை யக்ஷன் ஒரு கேள்வி கேட்டான்

"உலகத்தோரால் கொண்டாடப்பட்டாலும் எவன் உயிரற்றவன் போலாவான்?"
தருமபுத்திரர் நிதானமாக யோசித்தார் ,பின் கூறினார்

"தெய்வம் , அதிதி பணியாட்கள் பித்ருக்கள் ஆகியோருக்கும் ஆத்மாவுக்கும்
எவன் திருப்தி செய்யவில்லையோ அவன் மூச்சு விட்டாலும் உயிரற்றவன் போலவான்
"

இந்தப்பதில் சரியானதாக இருக்க யக்ஷன் திருப்தி அடைந்தான்

ஆடி மாத அமாவாசை தை மாத அமாவாசை மாஹாளய பக்ஷம்
அமாவாசை போன்ற நாட்களில் பித்ருக்களைத்திருப்தி படுத்துவது
அவசியம் .இதை தர்மசாஸ்திரமும் தெளிவாக கூறுகிறது
இறந்த முன்னோர்களை நினைத்து அவருக்கு நன்றி தெரிவிப்பது நமக்கு
விதிக்கப்பட்ட கடமைகளில் மிக முக்கியமான ஒன்று

கோயிலுக்குச்செல்லாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் ஒவ்வொருவரும்
இறந்த தமது பெற்றோர்களுக்குச்சிரார்தம் செய்வது மிகமிக அவசியம்
இவைகளைக்கைவிட்டால்தான் பித்ருதோஷம் என்று ஒன்று ஏற்பட்டு
வம்சத்தையே பாடுபடுத்துகிறது அவர்களைத்திருப்தி செய்யாவிட்டால்
பித்ரு சாபம் "என்று ஒன்று வந்து சேர்கிறது

இந்து மதத்தில் குடும்பத்திற்கு மிக முக்கியத்வம்
கொடுக்கப்பட்டிருக்கிறது.
பெற்றோர்கள் தங்கள் உயிரையும் கொடுத்து தாங்கள் பெற்ற செல்வங்களுக்கு
கல்வி ,நற்பண்புகள் சொல்லிக்கொடுத்து வளர்த்து ஆளாக்குகிறார்கள்
இதைச்செய்யும் போது பல தியாகங்களையும் செய்கிறார்கள் அப்படிப்பட்ட
அவர்களைக் கடைசிக்காலத்தில் நன்கு கவனிப்பதோடுமல்லாமல் இறந்தப்பின்னும்
சாஸ்திரப்பிரகாரம் , சிரார்த்தம் தவறாமல் செய்ய வேண்டும் செய்வதில் ஒரு
சிரத்தையும் இருக்க வேண்டும் அப்படி செய்தால
பித்ருக்கள் மகிழ்ந்து போக பித்ரு தேவதைகள் நமக்கு நற்பலனை
அளிப்பார்கள் .ஒவ்வொருவரும் விடாமல் செய்ய வேண்டிய கர்மா இது

Saturday, October 2, 2010

வினோதமான பிரார்த்தனை

தில்லியில் ஒரு சமயம் என்னை ஒரு புத்தமத கூட்டத்திற்கு அழைத்திருந்தார்கள் ,அதில் எல்லோரும் பிரார்த்தனை , தியானம் பின் அவர்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வது என்று நேரத்தைப்பிரித்துநிகழ்ச்சியைத் தயார் செய்திருந்தார்கள் .
அதன் பின் செவிக்கு ரசமான உணவு அதாவது பாஸிடிவ் சிந்தனைகொண்ட பாடல்கள்
பின் நடனம் என்று பல அம்சங்கள் அதில் சேர்க்கப்பட்டும் இருந்தன . என்னை அவர்கள் வயலின் வாசிக்க அழைத்திருந்தனர் அதன் பாட்டு "ஹே மாலிக் தெரே பந்தே ஹம் -சரி நமக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்ததே என்று மகிழ்ந்து முதன் முதலாக அந்தப் புத்தமத கூட்டத்திற்குப்போனேன்


,ஒரு அறையில் அழகான் அலமாரி .
பர்மா தேக்கினால் ஆனது. அதில் பலவிதமான வேலைப்பாடுகள் கண்களைக்
கவர்ந்தன. ஊதுவத்தியின் நறுமணம் ஊரைத் தூக்கியது ,அந்த அலமாரியின் உள்ளே எதோ பாலி மொழியில் ஒரு மந்திரம் போல் எழுதி இருந்தது. ஒரு தலைவி ஒரு சேகண்டி எடுத்து ,மூன்று முறை டண் டண் டண் என்று தட்டினாள் பின் ஒர் கிண்டிபோல் உள்ளதிலிருந்து தெளிவான சற்று நறுமணமுள்ளத் தீர்த்தம் எடுத்துத் தெளித்தாள் சங்கு முழங்கியது.
நிறைய பழங்கள் வைக்கப்பட்டிருந்தன .பின் எல்லோரும் கண்களை மூடிக்கொண்டனர் தியானம் ஆரம்பமாகியது .

பின் அவர்கள் ஒரே குரலில் மந்திரம் சொல்ல ஆரம்பித்தனர் ,ஆஹா வண்டுகள் ரீங்காரம் செயவது போல் ஓம் என்ற சத்தம் என் காதில் கேட்டது ,அந்த ஹால்
முழுவதும் தென்றல் வீசுவது போல் அந்த மந்திர ஒலி வரிசையாக அடுக்கடுக்காய் வந்தது அவர்கள் சொன்ன மந்திரம்

"நம்யோஹோ ரெங்கே க்யூ ,,,,,இதைச் சற்று மூக்கால்
சொல்லுகிறார்கள் ,,நானும் கூடச் சொன்னேன் இதை தினமும் ஜபித்தால் எல்லா வித்ததிலும் வெற்றிதான் என்கிறார்கள் மன அமைதி கிடைக்கவும் இதைச் சொல்கிறார்கள் இதுவே வேகம் குறைவாகவும் பின் வேகமாகவும் மொழிகிறார்கள்
அவர்களுக்கு இதற்கென்று சில எண்ணிக்கைகள் இருக்கின்றன ,அதன் பிரகாரம் செய்கிறார்கள்,


இந்த இயக்கத்தின் தலைவர் மாகிகுச்சி Makiguchi ,,nikko shonan joshe Toda
பின் கடைசியில் அவர்கள் தங்கள் குருமார்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு முடிக்கிறார்கள்.


ஷோய் ஷோஹோ ந்யோஸீஸோ nyo ze so
ந்யோஸீ ஷோ ந்யோ ஸோதாய் ,
ந்யோ ஸீரீகீ ந்யோஸீ ஸா
ந்யோ சீ இன் ந்யோஸீ என் ,,
ந்யோ ஸீகா ந்யோஸீ ஹோ
ந்யோ ஸீ ஹான் மக் காக்யோ டோ

சேகண்டியால் மூன்று தடவை டண் டண் டண் ,,,,என்று அடித்து முடிவு பெறுகிறது அந்த ஹாலில் நற்றலைகள் பரவி என் உடலுக்குள் ஊடுருவிச் செல்வதை நான்
உணர்ந்தேன் ,,,,புத்தம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
தம்மம் சரண கச்சாமி ,,,,

அங்கு இருந்த சலவைக்கல்லினால் ஆன புத்தரின் சிலையின் சாந்தமும் கண்கள்மூடிய நிலையில் அமைதியும் புன்னகையில் ஒரு ஆனந்தமும் கிடைக்கப் பெற்றேன் .

பின் சிலர் தங்கள் பிரச்சனைகளை பிரார்தனை மூலம் சபை முன் வைத்தனர் சில பிரார்தனை நியாயமாக இருந்தது ஆனால் சில மிகவும் மிகவும் வருத்தப்படும்படியாக இருந்தது

ஒரு பென்மணியின் பிரார்த்தனை " என் மாமியார் கூடிய சீக்கிரம்
எங்களை விட்டுப்போய்விடவேண்டும் அப்போதுதான் வீட்டில் நிம்மதி "இப்படி ஒரு பிரார்த்தனை கேட்க அதிர்ச்சியாக இருந்தது எத்தனைக்கொடுமை மாமியாரானாலும் ஒரு மகனுக்குத் தாயல்லவா?

இன்னொரு பிரார்த்தனை வேடிக்கையாக இருந்தது அப்போது கிரிக்கெட் விளையாட்டு நடந்துக்கொண்டிருந்தது இந்திய அணி படு தோல்வியைத்
தழுவிக்கொண்டிருந்தனர் ஆனால் ஸ்ரீலங்காஅணி மிகப்பிரமாதமாக
ஆடியது இதை மனதில் கொண்டு ஒரு பெண்மணி பிரார்த்தனையில்
ஸ்ரீலங்கா தோல்வி அடைந்து இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று
வேண்டச்சொல்கிறாள்

இதெல்லாம் பார்த்தால் ஒருமாதிரியாக இருந்து மனம் அங்கு ஒப்பவில்லை
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே பிரார்த்தனைக்கு
ஆதாரம் சர்வே ஜனானாம் சுகினோ பவந்து " என்றே பல இடங்களில்
ஆன்மீகக்கூட்டம் முடிவடையும் இங்கு வேண்டிய பல அபத்தமான
பிரரர்த்தனனயில் அதிக சுயநலமே கண்டேன் ஒரு சமயம் நான் போயிருந்த
இடத்தில் அப்படி நடந்திருக்கலாம் அதனால் எல்லா இடங்களிலும் இப்படித்தான் இருக்கும் என்று முடிவு கட்டுவது நியாயமில்லை ஆகையால் அங்கு நடந்த மந்திரங்கள் பஜனைப்பாடல்கள் பின் வயிறுக்கும் விருந்து இவைகளில் திருப்திக்கொண்டு வீடு வந்துச்சேர்ந்தேன்

விரதம்

ஆவணி மாதம் வந்தாலே விரதங்களும் கூட வந்துவிடும் இதில் பெண்களின் சௌபாக்கியத்திற்கும்
சுமங்கலிகளுக்கென்று ஒரு விரதமும் மிகவும் சிறப்பாக பெண்களால் செய்யப்டுகின்றன

ஸ்ரீவரலட்சுமி விரதம் ஜன்மாஷ்டமி விரதம் மங்களாகௌரிவிரதம் நாகபஞ்சமி விரதம் கருடபஞ்சமி விரதம் ,வினாயகசதுர்த்தி விரதம் என்று ஆவணியை பல விரதங்கள் அணைக்கின்றன

விரதம் இருப்பதால் நம் மன உறுதி மேலும் பலப்படுகிறது மனவலிமையால் செய்யமுடியாத காரியங்கள் தான் உண்டோ?
இந்த விரதத்தை சம்ஸ்கிருதத்தில் உபவாசம் என்கின்றனர் வாசம் என்றால் இருத்தல்
உபவாசம் என்றால் பக்கத்தில் இருத்தல் என்று பொருள் கொள்ளலாம் யார் பக்கத்தில் ?
நிச்சியமாக இறைவன் அருகில் தான் .....இது எப்படி சாத்தியமாகிறது ? ஆம் எப்போது மனம் ஒருமுகமாக ஒரே சிந்தனையுடன் ஒரே காரியத்தில் ஈடுபடும்போது அது இறைவன் சமீபம் போகும் சக்தி பெறுகிறது
மனம் சிதற உணவும் ஒரு காரணமாக அமைகிறது உணவிலும் சத்வ உணவு ரஜசு தமசு என்ற உணவுகள் இருக்கின்றன .கபம் பித்தம் வாதம் என்ற பிரிவிகள் நம்முடலில் எத்தனைத்தேவையோ அந்த அளவு தான் இருக்க வேண்டும் இவை குறைவோ கூடியோ இருக்க நோய் வருகிறது ஆயுர்வேதம் இதைக்கொண்டு தான் செயல்படுகிறது

உபவாசம் வரும் தினங்களில் துளசி தீர்த்தம் மட்டும் எடுப்பது மிக உன்னத முறையாகும் சிலருக்குச் சர்க்கரை நோய் இருக்குமானால் ஒரு வேளை மட்டும் கஞ்சியோ சேர்த்துக்கொள்ளக்கூடிய பழங்களோ வயதானவர்கள் எடுத்துக்கொள்ளலாம்
இந்த விரதங்கள் கடைப்பிடிக்க ஒரு கட்டுப்பாடு நம்மால் மிக எளிதாக உருவாக்க முடிகிறது
வயிற்றுப்பசி விரதத்தன்று வராமல் இருக்க மனதை ஒரேநிலையாக வைத்து மனப்பசியை வளர்க்க
வேண்டும் மனதில் கூட பசிக்குமா? ,,மனப்பசி என்பது இறைவனின் சான்னித்யம் பெறுவதே .
அதுவே ஒரே இலக்காக இருந்தால் வயிறு பசிக்காது வடநாட்டில் வசந்த நவராத்திரியின் போது
வெறும் தண்ணீர் மட்டும் குடித்து இரவில் ஒரு வாழைப்பழம் மட்டும் எடுத்து அமாவாசையிலிருந்து
நவமி வரை விரதம் இருப்பவர்கள் பலர் சிலர் பள்ளி ஆசிரியர்கள் நான் இதைப்பற்றிக் கேட்டபோது எங்களுக்குப் பசி தெரிவதில்லை என்று சொன்னார்கள்

விரதத்தின் போது சூரியோதயம் முன் எழுந்து பல்துலக்கி பின் குளித்தல் வேண்டும் இதுவே புண்ணிய நதிகளோ ஆறுகளோஇருந்து அதில் குளிக்க ஒரு புத்துணர்ச்சி ஏற்படும் மனம் நாமஜபத்தில் இருக்க , பூஜை செய்ய சங்கல்பம் செய்துக்கொள்ள வேண்டும்
விரத்த்தன்று பகலில் தூங்கவோ வேறு ரசாபாசங்களிலோ ஈடுபடக்கூடாது மனதைத்தத்தளிக்கச்செயுயும் விஷயங்களிலிருந்து தூர விலகுவது நல்லது ஆன்மீகப்புத்தகங்கள் படிக்கலாம் அல்லது ஈச்வர நாமாக்களை எழுதலாம் .இதனால் புறத்தூய்மை அகத்தூயமை கிடைக்கவும் எல்லா நிலைகளிலும் சமபாகமாக எண்ணும் சக்தியும் கிடைக்கிறது
விரதம் அனுசரிப்பதால் தானாகவே தியான நிலை வருகிறது எப்படி என்றால்
பிரசாதம் செய்கிறோம். மனம் முழுவதும் இந்த மோதகம் பிள்ளையாருக்கே என்ற எண்ணமும்
அது நன்றாக அமையவேண்டும் என்ற சிரத்தையும் அந்தச்சிரத்தையால் வரும் கவனமும் தான் . இதெல்லாம் ஒரு யோகம் தான், தியானம் தான் . கோயிலின் பிரசாதம் சுவைக்க இதுவும் ஒரு காரணம் என்று தொன்றுகிறது . விரதத்தினால் ஈகோ அழிந்து மனித நேயம் வளர்கிறது பணிவும் தொடர்கிறது


நம் உடல் ஒரு இயந்திரம் தான்.அது தொடர்ந்து வேலை செய்துக்கொண்டிருக்கிறது அந்த மசீனுக்கு ஒரு மாதத்தில் ஒரு நாளாவது ஓய்வு வேண்டாமா ?

ஆகையால் விரதம் என்பது நம் உடலுக்கும் உள்ளத்திற்கும் மிகவும் இன்றியமையாத ஒன்று .

Friday, October 1, 2010

முடிவிலாக்கீர்த்தி பெற்றாய்

இங்கிலாந்தில் ஒரு நாள். . காந்திஜிக்கு ஒரு விருந்துக்கு அழைப்பு வந்திருந்தது .அதை
தருபவர்கள் இந்திய சங்கத்தின் அங்கத்தினர்கள் .மாலை 6 மணிக்கு ஆரம்பம் ,
காந்திஜி நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார் ஆகையால் நேரம் தவறாமல்
குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே ஆஜராகிவிடுவார் .ஆனால் அன்று ஆறு மணி நெருங்கியும் இவர் வரவிலை . இது போல் ஒரு நாளும் நடந்தது இல்லையே என்று
குழம்பினார் சங்கத்தலைவர் . பலர் விருந்துக்குத்தேவையான ஏற்பாடுகளைச்செய்தபடி
இருந்தனர் ,
சங்கத்தலைவர் கிச்சனுக்குள் எல்லாம் எந்த அளவு தயாராகி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ள போனார் அப்படியே அதிர்ந்துப்போய் நின்றார் .
அங்கு காந்திஜி அங்கு வேலைச்செய்த பலருடன் சேர்ந்து சமையல் வேலையை
கவனித்துக்கொண்டிருந்தார்
தலைவர் வேகமாக அவரை நெருங்கி 'என்ன பாபுஜி நீங்கள் இங்கேயா?
நீங்கள் அல்லவா சிறப்பு விருந்தினர் நீங்களே சமையல் வேலையைச்செய்யலாமா?
வாருங்கள் போகலாம் "

"சகோதரா நானோ சுத்த சைவம் இருக்கும் இடமோ இங்கலாந்து இங்கு சைவ உணவு
தயாரிப்பது கடினம் அதுவும் எனக்குத்தேவையான உணவு அவர்களுக்குத்தெரியாது
ஆகையால் நான் மாலை நாலு மணிக்கே இங்கு வந்து விட்டேன் இப்போது முடிந்து விட்டது ஆறுமணி விழாவுக்கு நான் ரெடி " என்றார்

அப்போதுதான் அங்கு வேலைப்பார்த்தவர்களுக்கு தங்களுடன் இருந்தவர் காந்திஜி
என்று தெரிய வந்தது அவரது எளிமையைப்பார்த்து வியந்து நின்றனர் அவர்கள் .

காந்திஜி எப்போதும் தன் பொக்கை வாயைக்காட்டியபடி இருப்பார்.அதாவது எப்போதும்
அவர் முகம் சிரித்த முகமாகவே இருக்கும் .மலர்ந்த முகம் என்றால் அவர் முகத்தைச்
சொல்லலாம்
ஒரு நாள் ஒருவர் அவரிடம் " பாபூஜி நாட்டில் இத்தனைப்பிரச்சனைகள் இருந்தும்
இத்தனைப்பொறுப்புக்கள் இருந்தும் உங்களால் எப்படி மலர்ந்த முகத்துடன் இருக்க
முடிகிறது தினமும் பல கவலைகள் சூழும்படி சந்தர்ப்பமும் அமைகிறது ஆனாலும்
எப்படி புன்னகையுடன் அமைதியாக இருக்கிறீர்கள்?

"இந்த மன அமைதியும் மகிழ்ச்சியான மனமும் தான் என்னைக்காப்பாற்றி வருகின்றன,
இவை இல்லாவிட்டால் நாட்டின் நிகழ்வுக்கும் எனக்குள்ள பொறுப்புக்கும் கவலைகளின்
மூட்டைக்கும் எப்போதோ என் வாழ்க்கை முடிந்திருக்கும்"

என்று பதிலுறைத்தார் . இதிலிருந்து ந்ம் எல்லோருக்கும் தெரிவது புன்னகை என்ற
மருந்து தான் உடல் நலத்துக்கு மிக முக்கியமான ஒன்று

மஹாத்மா காந்திஜியின் பிறந்த நாளில் அவரை நினைத்து வணங்குகிறேன்
"

Tuesday, September 28, 2010

தை தை தயாரே தையா

ஆகஸ்டு மாதம் வந்தாலே கேரளத்தில் ஓடங்கள் கப்பல்கள் எல்லாம்
பழுதுகள் சரியாக்கப்பட்டு , புதுசாக்கப்பட்டு ,வர்ணங்கள் பூசப்பட்டு
தயாராகி விடும். எதற்கு இந்த அலங்காரங்கள் என்றால் " வெள்ளம் களி"அதாவது
போட் ரேஸுக்குத்தான் ,ஓணம் வர இந்த ஓடப்போட்டியும் கூட வந்து அமர்க்களப்படும்.
இதைச் சுந்தன் வள்ளம்"என்றும் சொல்வார்கள்
ஏன் என்றால் இது பாம்பு போல் இருக்கும் .இதன் நீளம் சுமார் 60 மீட்டர்
இதில் சுமார் நூறு பேர்கள் துருப்புடன் ஓட்ட அமரலாம் .நடுவில் ஒரு சின்ன மேடை
உண்டு ,அதில் பாடுபவர்கள், வாத்தியம் கொட்டுபவர்கள் அமருவார்கள்,இந்தப்
பாடலுக்கு வஞ்சிப்பாட்டு எனப்பெயர் "செம்மீன் "படத்தில் மிக அழகாக
இந்தக்காட்சியைப் படம் பிடித்திருக்கிறார்கள்.
"தையரே தையா தையாரே தையா தை தை ,,,,தைதைதை ,,,என்று ரிதமுடன் பாட
அந்தக்காட்சி மிக அழகு ,இயற்கைச் சூழலில் இந்தக் காட்சியைக்காண பலர்
வெளியூர்களிலிருந்தும் வந்து களிப்பார்கள் .இதில் மிக முக்கியமான ரேஸ் "நேஹ்ரு டிராபி ரேஸ், இது ஆலப்புழாவில் புன்னமடை ஏரியில் நடக்கும் . ஆலப்புழா இந்தியாவின் வெனிஸ் என்று பெயர் வாங்கியுள்ளது

பண்டித் நேஹ்ருஜி ஒருமுறை இதைப் பார்க்க வந்து மனம் மகிழ்ந்து போனார்
{1952 ல் }
திரும்ப தில்லி போன பின் ஒரு வெள்ளி டிராபி பெரிய நீள பாம்பு போல
ஜயித்தவருக்கு அனுப்பிவைத்தார் அதிலிருந்து அவர் பெயரில் இந்த ஓடப் போட்டி
நடக்கிறது இது சுமார் மூன்று மணி நேரம் வரைச் செல்லும் ,டிக்க்ட் முதலிலேயே வாங்க
வேண்டும் ,ப்ல ஆயிரம் மக்கள் டூரிஸ்டுகள் கூடி இருப்பார்கள் இந்த ஓடப்போட்டி
"உத்திரட்டாதி வள்ளம் களி "என்றழைக்கப்பட்டு
ஆரன்முலா என்ற இடத்தில் கடைசியில் நடந்து நிறைவு பெறும் ,இந்தக்
கண்கொள்ளாக்காட்சியைக் காண ஆலப்புழா அவசியம் செல்ல வேண்டும்

Sunday, September 26, 2010

நாரியல் பூர்ணிமா

நாரியல் பூர்ணிமா என்பது தான் மராட்டியி நாராலி பூர்ணிமா ஆனது
ஹிந்தியில் நாரியல் என்றால் தேங்காய் கேரளாவின் ஓணம் தமிழர்களின்
யக்ஞோபவீததாரணம் அதாவது ஆவணியாவட்டம்
அத்துடன் வடநாட்டின் ராக்கித்திருநாள் பின் கடற்கரையோரம் வசிக்கும்
மீனவர்களுக்கு இந்த நாரியல்
பூர்ணிமா எல்லாம் அநேகமாக ஒரே நாளில் வரும் அதாவது ஆவணி மாத
பௌர்ணமியில் ,,,,

மும்பய் தாதர் கடற்கரைப்பக்கமோ அல்லது சௌப்பாதி கடற்கரைபக்கமோ போனால் பல

வண்ணங்களில் படகைப்பார்க்கலாம் நாம் மாட்டுப்பொங்கலுக்கு கொம்புகளில் வர்ணம் அடிப்பது
போல் மீனவர்கள் படகுகளுக்கு வர்ணம் அடித்து அதற்கு மாலைகளால்
அலங்காரமும் செய்திருப்பார்கள்.
எல்லா படகுகளும் புது மாப்பிள்ளைப்போல் மிளிரும் வடக்கில் உள்ள அதுவும்
மேற்கு திசையில் இருக்கும் எல்லா மீனவர்களும் இதைக்கொண்டடுகின்றனர்
தமிழ் நாட்டு மீனவர்கள் இதைக்கொண்டாடுகிறார்களா எனத்தெரியவில்லை

மீனவர்களுக்கு கடலே கோயில் கடலரசனே தெய்வம் அவர்கள் வயிற்றை நிரப்புவது
அந்தக்கடல்தான்
கடலுக்குள் சென்று மீன் பிடித்தால்தான் ஜீவனம் அதுவும் மே மாதத்திலிருந்து சுமார் செப்டம்பர்
வரை கடும் மழை நீடித்திருக்கும். தென் மேற்குப்பருவமழையின் காரணமாக
மீனவர்கள் இந்த மாதங்களில் நித்ய கண்டம் பூரண ஆயுசு என்பதுபோல் மன உறுதியுடன்
மீன் பிடிக்கப்போயாக வேண்டும்

ஒவ்வொரு நாள் இயற்கையின் சீற்றத்தினால் போகாமலும் இருக்கும்
சந்தர்ப்பங்களும் வரும்
ஆகையால் இந்த ஆவணி மாதம் வர இனி கடும் மழை குறைந்து இனி தன் வியாபாரம்
நன்றாக அமைய மீனவர்கள் கடல் தெய்வத்தை வேண்டிக்கொண்டு தினமும் கடல் தங்கள்
வாழ்க்கைக்குப்படி அளப்பதால் அதற்கும் நன்றியை பூஜை செய்து தெரிவிப்பார்கள் அத்துடன் வருண பகவானுக்கும் பூஜை செய்வார்கள்

பிரசாதம் நாரியல் அதாவது தேங்காய் சமபந்தப்பட்டே இருக்கும் தேங்காய்
சாதம் தேங்காய் பர்பி என்று செய்து எல்லோருக்கும் வினியோகிப்பார்கள் தவிர பூஜை முடிந்தவுடன் மட்டைத்தேங்காயை கடலுக்கு சமர்ப்பிப்பார்கள் ஆஹா அருமையான காட்சி தான்
அப்படியே அலைகளில் இரண்டு தடவைகள் மேலும் கீழுமாக வந்து பின் அலை அதை
இழுத்துக்கொண்டுப்போய்விடும் ,ஒரு தேங்காயா இரண்டுத்தேங்காயா ! ஆயிரக்கணக்கில்
தேங்காய் எல்லாம் எங்கே போகும் ? இதேபோல் பிள்ளையார் சதுர்த்தி
முடிந்த பததாம் நாள் எல்லா மண் பிள்லையார்களும்
கடலில் விடப்படுவார்கள் இதே போல் பெங்காலிகள் துர்கைச்சிலைகளை நவராத்திரி முடிந்தவுடன்
கடலில் வீசிவிடுவார்கள் .இந்தச்சிலைகள் மண்ணால் செய்ததால் கரைந்து போய்விடலாம்
ஆனால் இத்தனை மட்டைத்தேங்காய் என்ன ஆகும் என்ற கேள்வி என்னுள் எழும் .
கடற்பிராணிகள் தேங்காயை முழுங்கி விடலாம்


இந்தத்திருநாளன்று மாலையில் பார்ட்டிதான் ,எல்லோரும் புதிய உடைகளுடன்
மின்னுவார்கள்.
ஆண்கள் கட்டம் போட்ட லுங்கிகளை உடுப்பார்கள் முன் பக்கம் முக்கோணம் போல்
இருக்கும்
மீனவப்பெண்மணிகளின் புடவைக்கட்டு மிகப்பிரமாதமாக இருக்கும். அத்துடன்
அவர்கள் தலைக்கொண்டையும் கொண்டையில் வேணி என்ற பூ அலங்காரமும் மிகவும்
அழகாக இருக்கும்
அந்த வேணியின் அருகில் மருதாணிபூக்கள் பெரியக்காம்புகளுடன்
சொருகப்பட்டிருக்கும்

ஒரு படத்தில் மாதுரி தீட்சித் மீனவப்பெண்மணியாக வருவார்.நெற்றியில்
கால் சந்திரன் போல் பச்சையில்
பொட்டு வைத்திருப்பார் .அவரைப்பார்த்தால் எனக்கு இந்தத்திருநாள் ஞாபகம்
வரும் அவர்கள் நடனமும் மிக வேகமாக இருக்கும் . உடலில் நிறைய சக்தி இருந்தால் தான் இந்த நடனத்தை ஆடமுடியும்

கடல் நீருக்கு என்றுமே நெகடிவ் என்ற வேண்டாத சக்தியை எடுக்கும் சக்தி
உண்டு உப்பு கலந்த நீராயிற்றே! ஆடி அமாவாசை தை அமாவாசைப்போன்ற
தினங்களில் சமுத்திர ஸ்னானம் செய்கிறார்கள்
அத்துடன் கிரகணம் விட்டப்பின்னும் ஸ்னானம் செய்கிறார்கள் இந்த நெகடிவ்
விஷயமும் சம்பந்தப்ப்ட்டத்தாக இருக்கலாமோ என்று எனக்குத் தோன்றுகிறது
திருஷ்டி சுற்றிப்போடுவதிலும் இந்தக்கல்லுப்பு முக்கியப்பங்கு
வகிக்கிறது

சரி இப்போது தேங்காய்க்கு வருவோம் மீனவர்கள் தேங்காயை ஏன் தேர்ந்தெடுக்க
வேண்டும்
தேங்காயை அனுபவிக்க முதலில் அதன் மட்டைகளைப்ப்பிய்க்க வேண்டும்.
பின் அதன் அழுத்தமான ஓட்டை உடைக்க வேண்டும் ,பின் தான் உள்ளே இருக்கும்
கனியைப்பெறமுடியும்
அதையும் அப்படியே தின்ன முடியாது .கீறல் போட்டோ அல்லது துருவியோ எடுக்க
வேண்டும்
மீனவர்கள் வாழ்க்கையும் காலையில் கடுமையான உழைப்பு இருக்க மாலையில்
தான் அதன் பலன் கிடடக்கிறது இதை வெளிப்படுத்துகிறதோ இந்தத் தேங்காய்
தேங்காய் நமக்கு வாழ்க்கை எடுத்த உத்தேசத்தைத்தெரிவிக்கிறது உள்ளே
இருக்கும் இனிப்பான கடவுளைக் காண முதலில் ஆன்மீகப்பாதையில் கடுமையான உழைப்பும் பல போராட்டங்களும் சந்திக்க வேண்டும்

மனம் தளராமால் அந்த ஓட்டை உடைத்து எறிய வேண்டும் பின் தெரிவார் அந்த
முக்கண்ணன் நமக்கு.
தேங்காயிலேயே மூன்று கண்கள் இருக்கின்றனவே !

மீனவர்களுக்கு என் வாழ்த்துகள்

வாலறுந்த அனுமான்

ராமேஸ்வரத்தில் மூன்று சிவலிங்கங்களைத் தொழ வேண்டும் அதிலும் அனுமார் ஸ்தாபித்த லிங்கங்களை
முதலில் தொழுதப்பின்னரே ஸ்ரீ ராமர் பிரதிஷ்டைச்செய்த ராமேஸ்வர லிங்கத்தைத்தரிசனம் செய்ய
வேண்டும் அனுமார் கொண்டு வந்த லிங்கங்கள் இரண்டு .
அனுமாருக்கு யார் இரண்டு லிங்கங்களைக்கொடுத்தார் ? அவருக்கு எப்படி இது கிடைத்தது ?
ஸ்ரீராமர் கடலைக்கடக்க பாலம் அமைக்கும் முன் விக்னமில்லாமல் இருக்க ஒரு கணபதியை
உருவாக்கி கூடவே நவகிரஹங்களும் அமைத்து பூஜை செய்தார் அத்துடன் ஒரு சிவலிங்கத்தையும்
அங்குத் தன பெயரில் பிரதிஷ்டைச்செய்ய அனுமனைக் காசிக்கு அனுப்பி ஒர் லிங்கம் பெற்று வர
நினைத்தார் அனுமனை அழைத்தார்
"
"அனுமன் வேகமாக்ச் சென்று சங்கர பகவானிடம் ஒரு சிவலிங்கம் பெற்று ஒரு முகூர்த்த நேரத்திற்குள்
வந்துவிடு " என்றார்

என்ன ! என்னைப்பார்த்து ஒரு முகூர்த்த நேரத்துக்குள் வந்துவிடு என்கிறாரே ஸ்ரீராமர் இது எனக்குத்தெரியாதா? என்று ஒரு எண்ணம் அவருக்கு வந்ததாம் .
ஒரு நொடிப்பொழுதில் காசிக்குப்போய்விட்டார் அங்கு சிவபெருமானிடம் நடந்ததைச்சொல்லி
சிவலிங்கம் கேட்டார்.
சிவபெருமானும் "வாயு குமரா நானும் தெற்குப்பக்கம் செல்லவேண்டும் ஏனென்றால் அகஸ்தியர்
விந்தியமலையைத் தாழ்த்த இங்கிருந்து சென்று விட்டார் அவருக்கு என்னைப்பிரிந்த துக்கம்
தாங்கமுடியவில்லை நான் அவரைப்பார்க்கப்போகிறேன் இந்தா இரண்டு சிவலிங்கங்கள்.
ஒன்று ஸ்ரீராமருக்கும் மற்றொன்று என் பெயரிலும் ஸ்தாபிக்கப்படட்டும் " என்றவாறே
இரண்டு லிங்கங்களை அனுமனிடம் கொடுத்தார்.
ஒரு லிங்கத்திற்குப்பதில் இரண்டு லிங்கம் அதுவும் சிவபெருமானிடமிருந்து எனநினைக்கும்
போதெல்லாம் சிறிய கர்வம் தலைத்தூக்கியது ,

எல்லாம் அறியும் ஸ்ரீராமருக்கு அனுமாருக்குத்தோன்றிய இந்தக்கர்வத்தை முளையிலேயே
கிள்ளி எறிய திட்டம் கொண்டார்
முகூர்த்த நேரம் நெருங்க அனுமனைக்காணாமல் ஸ்ரீ ராமர் ரிஷிகளின் உத்தரவின் படி
தானே மணலைச்சேர்த்து ஒரு சிவலிங்கம் ஆக்கினார் அதைச்ஸதாபித்தார்,
பின்னர் கௌஸ்துமணியை நினைக்க அதுவும்வந்து சேர்ந்தது .அதை வைத்துக்கொண்டு பசுமாடுகள்
ஆடைகள் குதிரைகள் ஆபரணங்கள் எல்லாம் வரவழைத்தார் .இதை வைத்து ரிஷிகளை
உபசரித்தார் .எல்லோருக்கும் ராஜோபசர்ரம் தான் எல்லா ரிஷிகளும் திருப்தியுடன் வீடு திரும்பினர்.
வழியில் வேகவேகமாக அனுமன் வந்தார் ,
வரும் பெரியோர்களுக்கு வண்க்கம் தெரிவித்தப் பின் "மதிப்புக்குரிய பெரியோர்களே
நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?' என்று வினவினார்
அவர்களும் ஸ்ரீராமபிரான் சிவலிஙகப்பிரதிஷ்டை நடத்தி தங்களை உபசரித்ததையும் சொன்னார்கள்,

அனுமாருக்கு கோபம் வந்தது இந்த் ஸ்ரீராமர் என்னை ஏன் இது போல் அலைக்கழிக்க வேண்டும்
என்று நேராகவே அவரிட்ன் சென்றார்.
அவர் முகம் வாடி இருந்ததைப்பார்த்த ராமர் "ஏன் அனுமனே முகம்
வாடி இருக்கிறது?" என்று கேட்டார்

"சுவாமி நான் இலங்கைச்சென்று சீதாப்பிராட்டியைப்பார்த்து வந்ததற்கு
இது தான் பரிசா?காசிக்குப்போய் சிவலிங்கம் கொண்டுவரசொல்லிப்பின்
வருவதற்குள் நீங்கள் ஒரு லிங்கத்தைப்பிரதிஷ்டைச்செய்துவிட்டீர்களே!
என்னை ஏளனப்படுத்திவிட்டீர்களே !

கருணை மிக்க ராமன் புன்னைகைப்புரிந்தார் பின் தொடர்ந்தார்
"என் அருமை வாயு மைந்தனே நடந்தது நடந்துவிட்டது பரவாயில்லை
நான் பிடித்த இந்த மணல் லிங்கத்தை அகற்றி அதில் நீ கொண்டு வந்த
லிங்கங்களை வைத்து ஸ்தாபித்துவிடுகிறேன் ,"

அனுமனின் முகத்தில் மகிழ்ச்சி ,

"இதோ இப்பொழுதே அதை எடுத்துவிடுகிறேன் என்று அந்த மணல்
லிங்கத்தைப்பிடித்திழுக்க அது அசைந்துக்கொடுக்கவேயில்லை .
பின் தன் வாலில் அதைச்சுற்றி இழுக்க அந்த லிங்கம் அசையாமல் நின்றது
தன் வாலில் இன்னும் வேகம் செலுத்தி இழுக்க வால் அறுந்துப்போய்
சோர்ந்துப்போய் கீழே விழுந்தார் .மூர்ச்சையானார் ,
அங்குக்கூடியிருந்த வானரர்கள் சிரித்தார்கள் இத்தனை வீரம் பொருந்திய
அனுமானுக்கா இந்த நிலை?
அனுமன் மெள்ள க்ண் விழித்தார் அவர் கொண்டிருந்த கர்வம் போயிருந்தது,
தன் தவறை உணர்ந்தார் ,இராமனின் பாதாரவிந்தங்களில் விழுந்தார்
தம்மை மன்னிக்கும்படி பிரார்த்தித்தார் ,
ஸ்ரீ ராமன் தான் சரணாகத வதசலன் ஆயிற்றே. தன் ஆப்த நண்பன் பக்தன்
அனுமானிடம் தோன்றிய கர்வத்தை முளையிலேயே கிள்ளி எறிய ஆசைக்கொண்டுதான் இப்படி ஒரு நாடகம் நடத்தினார் ,

ஆனால் அவர் அனுமார் கொண்டு வந்த இரண்டு லிங்கங்களையும் ஸதாபித்து பின் சொன்னார் " ராமேஸ்வரம் போன முழு பலன் வேண்டுமானால் இந்த இரண்டு காசிவிஸ்வ்நாத லிங்கங்களைத் தரிசித்தப்பின்னர்தான் நான் பிரதிஷ்டைச்செய்த ரமேஸ்வர லிங்கத்தை
பூஜைசெய்ய வேண்டும் அனுமானும் வாலருந்த நிலையிலேயே பாதங்கள்
மறைந்தபடியே காட்சித்தந்து அருள் புரிவார் "
அதே போல் தான் இன்றும் மக்கள் முதலில் அனுமன் கொண்டுவந்த
லிங்கங்களைப்பிரார்தித்து பின் மணலால் பிடித்த லிங்கத்தைக்காண வருகிறார்கள்,

இது ஆனந்த இராமயணத்தில் இருக்கிறது





.

Saturday, September 25, 2010

கண்ணன் பொற்பாதம் கண்ட ஸ்தலங்கள்



பாலகிருஷணன் சம்பந்தப்பட்ட எல்லா இடங்களுமே மிகப்புனிதமாகவும் புண்ணியஸ்தலமாகவும் இருக்கின்றன கண்ணன் பிறந்த இடமும் வளர்ந்த இடமும் எல்லோருக்கும் தெரிந்ததே !
ஜன்மாஷ்டமி நாளில் மதுரா விருந்தாவனில் எங்குத்திரும்பினாலும் ஒரு திவ்ய ஒலி தென்றல் வழியாக நம் காதில் வந்து மோதும்
.அதுவே "ஸ்ரீ ராதே கிருஷணா" ராதா இல்லாமல் அங்கு கிஸன் இல்லை
ஆத்மா பரமாத்மாவின் சேர்க்கை என்று கருதப்படுகிறது காற்றில் வந்து பின் தென்றலில் கலந்து
மிதந்து நம் காதில் செல்லும் இந்த ஒலி நம் உடலில் ஊடுறுவிப்பாய்ந்து நம்மைச்சிலிர்க்கவைக்கிறது.

திரு கண்ணதாசன் அவர்களின் "கங்கை கரைத்தோட்டம் கன்னிப்பெண்கள் கூட்டம் என்ற பாட்டில்
ராதையின் சிறப்பும் கண்ணன் வருகைக்காக ஏங்கும் கோபியர்கள் பற்றியும் நன்றாக விளக்கப்ப்ட்டிருக்கிறது

கண்ணனின் சுருள்முடி அழகே அழகு அதுவும் சில சுருள் முடிகள் நெற்றியில் விழ சில காதின் பக்கத்தில் விழுந்து முகத்தின் அழகை மேலும் அதிகரிக்க அப்படியே கண்ணனை
அள்ளிக்கொள்ளத்தோன்றும்.

ஆனால் அந்தச்சுருள் முடியையும் தெய்வத்துக்குச்சமர்ப்பிக்கும் சம்ஸ்காரம் யாதவர்களிடமிருந்தது

ராஜஸ்தானில் மவுன் ட் அபுவிற்கு அருகில் அரசூர் என்ற அம்பிகை கோயில் ஒன்று இருக்கிறது .
இங்குதான் கண்ணனின் முடி இறக்கும் வைபவம் நடந்தது இன்றும் பலர் இங்கு முடியிறக்குகிறார்கள்.

இதே போல் மற்றொரு புண்ணியஸ்தலம் தான் குஜராத்தின் டாங்கோர் துவாரகா
இங்கு ஒரு கிருஷணன் கோயில் உள்ளது அங்கு ஒரு தராசையும் காணலாம்
இது என்ன கோயிலில் தராசு ...அதுதான் துலாபாரம் நடந்த இடம்
ஒரு சம்யம் கண்ணனும் நாரதரும் துளசியின் மகிமையை வெளியில் கொண்டுவர நடத்திய நாடகம் ,,
ராதை ருக்மிணி சம்மதத்துடன் ஒரு சமயம் சத்தியபாமா கண்ணனை நாரதருக்குக்கொடுக்கும்படியான
சந்தர்ப்பம் ஏற்பட்டது நாரதரும் கண்ணனைப்பெற்றார் ஆனால் என்ன தோன்றியதோ கண்ணனை
அவர்களிடமே கொடுத்துவிட்டு கண்ணனின் எடைக்குத்தகுந்த பொருள் கேட்டார்
அவர்களும் இதற்கு சம்மதித்தனர் பின் ஒரு தராசு கொண்டுவரப்பட்டு அதில் ருக்மிணி தன் தங்க வைர நகைகளையும் வேறு பொருள்களையும் வைத்தாள் தராசு அப்படியே இருந்தது சத்தியபாமாவும் நவரத்தினகற்கள் ,மேலும் பல ஆபரணங்களை வைத்தும் தராசு அசையவில்லை
பின் ராதையிடம் இதைப்பற்றிச்சொல்லி அவள் உதவியை நாடினர் ராதை நெஞ்சு முழுவதும் கண்ணன் தான் நிறைந்திருந்தான் அவள் கண்ணனைப்பிரார்த்தித்தபடி ஒரு துள்சி இலையைத் தராசில் வைக்க அந்தத்தட்டு தாழ்ந்தது .
கண்ணன் அமர்ந்திருக்கும் தட்டு உயர்ந்தது

இந்த நிகழ்ச்சி நடந்த இடம் மிகவும் புண்ணியமாகக் கருதுகிறார்கள் இங்கு துளசியின் பூஜையும் நடக்கிறது

பிருந்தா அல்லது விருந்தா என்ற பெயர் பலருக்கு வைக்கப்படுகிறது

இப்போது சொல்லப்போகும் இடம் மிகச்சிறந்த இடம் அதுதான் குருக்ஷேத்ரா
கண்ணன் விஸ்வரூபமாகக் காட்சியளித்த இடம் இந்த விசுவரூபத்தைக் கண்டவர்கள் அர்சுனன் கர்ணன் பீஷமர்.
கீதைப்பிறந்த இடமும் இதுதான் எல்லா வைஷ்ணவகோயிலில் தினமும் ஒலிக்கப்படும் விஷ்ணு
சஹஸ்ரநாமம் பிறந்த இடமும் இதுதான்
பீஷ்மர் அம்பால் வீழ்த்தப்பட்டு அம்பால ஆனப்படுக்கையில் படுத்துக்கிடக்கிறார் அவருக்குத்தன்
உயிரை தன் இஷடப்படி விடும் சக்தி இருந்தது அதனால் உத்த்ராயணம் வரைக்காத்திருந்தார்
அவர் படுத்தபடுக்கை அருகே பிரும்மனால் உண்டாக்கப்பட்ட ஏரியும் இருந்தது.இதனால் அந்த இடத்தில் இறப்பு நிகழாது .
இந்த நேரத்தில் கன்ணன் பீஷ்மர் முன் தோன்றினான வெறும் கண்ணனாக அல்ல சங்கு சக்ரகதாபாணியுடன் அந்த மகாவிஷ்ணுவாகவே தோன்றினான் உடனே பீஷ்மர் மெய்மறந்தார் அவர் வாயிலிருந்து சஹஸ்ர நாமங்கள் விஷ்ணுவைக்குறித்து பொலபொலவென்று கொட்டின .
ரதசப்தமி வரை உயிருடன் இருந்து பின் அஷ்டமி அன்று தன் உயிரை விட்டார்
இதுவே பீஷ்மாஷ்டமி இன்றையதினம் சஹஸ்ரநாமம் சொல்ல மிகவும் உயர்ந்த நிலை எய்யலாம்

கண்ணன் இதுபோல் காலடி வைத்த இடம் பல வடநாட்டில் உள்ளன எழுத எழுத திகட்டாது தேன் போல் இனிக்கும்

ஜன்மாஷ்டமி வாழ்த்துகள்

வந்துவிட்டது புரட்டாசிமாதம்

வந்து விட்டது புரட்டாசி மாதம் .எங்கும் கோவிந்தா என்ற ஒலி முழங்கும் அதுவும் இந்த மாதத்தின் சனிக்கிழமை மிகவும் விசேஷம் .நான் திருப்பதி போனபோது அந்த கோவிந்தாவின் தரிசனம் சரியாக கிடைக்கவில்லை அப்போது அவரிடம் மனதுக்குள் பாடிய பாட்டு இது உன் கமலக் கண்களைப் பார்க்க வந்த எனக்கு பெரிய் நாமத்தைப் போட்டு ஏன் மறைத்திருக்கிறாய்?ஆவலுடன் தரிசிக்க வந்த என்னை "சருகண்டி ,சருகண்டி "என்றுஏன் தள்ள வைக்கிறாய்?உன்னையே பார்க்க ஒரு வழி தேடி விட்டேன் உன் அருகில் எரியும் குத்துவிளக்காய்என்னைப் படைக்குமப்பா உன்னையே கண்டுக் களிக்கும்அருள் கொடுத்தருளப்பா,,,,,,,,, திருப்பதியில் ஏழுகொண்டலவாடா கோவிந்தா வெங்கட்ரமணா என்று பலவிதமான பக்தி ஒலி கிளம்ப நம்முள் ஒரு மினசாரம் சர்ரென்று உடலுக்குள் புகுந்து நாமும் கோவிந்தா முழக்கத்தில் நம்மையுமறியாமல்சேர்ந்துக்கொள்கிறோம் உடல் சிலிர்க்கிறது கண்களிலிருந்து கண்ணீர் தன்னையும் அறியாமல் வருகிறது எல்லா இடங்களிலும் நவராத்திரியின் போது அம்பாளுக்கு விசேஷமாக பூஜை நடக்கும் ஆனால் திருப்பதியில் பெருமாளுக்குத்தான் பூஜை ,, திருவிழா ஏனென்றால் தன் மனைவி மஹாலட்சுமியைதன் மார்பிலேயே வைத்துகொண்டிருப்பவர் அல்லவோ எம்பெருமான் ஸ்ரீனிவாசா கோவிந்தா ,,,ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா புராண்புருஷா கோவிந்தா ,,,,,என்ற பாட்டு நம்மை ஈர்க்கிறது பாலாஜியை குலதெய்வமாக வைத்திருக்கும் அனைவரும் இந்தப்புரட்டாசி சனிகிழமையன்று சமாரார்தனை என்று பெருமாளுக்கு மாவிளக்குப்போட்டு பூசை செய்வது வழக்கம் .என் பெற்றோர்களுக்கு அருள்மிகு வெங்கடாசலபதியே குல தெய்வம் ஆனதால் அந்தச்சூழநிலையிலேயே நானும் வளர்க்கப்பட்டேன் ஆகையால் மிகுந்த ஈடுபாடு உண்டு வெங்கடாசலபதியின் படத்தை வைத்து அலங்கரித்து ஸஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்து மாவிளக்கும் ஏற்றி எள்ளு அன்னம் பிரசாதம் வைத்து பின் கற்பூர ஆரத்தியுடன் பூஜை முடிவடையும் இங்கு ஒரு சின்ன சம்பவம் என் நினைவுக்கு வருகிறது என் பெரியப்பா சமாரார்தனையின் போது சமைக்கும் அரிசியில் கொஞ்சம் உஞ்சுவிருத்தி அதாவ்து வெளி மனிதர்களிடம் பிட்சை ஏந்தி அரிசியைக்கொண்டு வருவார்காலையில் குளித்து பின் வெளியே சென்று தோளில் இருக்கும் அங்கவஸ்திரத்தில் அரிசியைச்சேகரித்துப்பின் வீட்டிற்கு வருவார் அகத்தில் இருக்கும் அரிசியையும் சேர்த்து பிரசாதம் செய்ய வேண்டும் நாங்கள் முதல் நாளே இவர் வரப்போவதை சில் குடித்தனகாரர்களுக்குஅறிவித்து விடுவோம் அதனால் ஒரு பிரச்சனையுமில்லாமல் அரிசி கிடைத்துவிடும் .பின் வீட்டில் இருக்கும் பெண்மணிகள் அகத்தூயமைபுறத்தூயமையுடன் பிரசாதம் செய்வார்கள் என் பெரியப்பா குளித்து மஞ்சள் நினைத்த வேஷ்டியுடன்தான் யாசிக்க போவார் வீடே பக்தி தூய்மை சுத்தம் என்று விள்ங்கும் ,ஒரு தடவை நடந்த சம்பவம் ஞாபகத்தில் வருகிறது . எப்போதும் அரிசி கொடுப்பவர்கள் ஊருக்குப் போய் விட்டதாலும் என் பெரியப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாததாலும் பிட்சை கேட்காமலே சமைத்துவிட்டார்கள். பூஜை ஆரம்பித்து கற்பூரம் காட்டும் நேரம் வந்ததுபூஜைப்பார்க்க வந்த ஒருவர் பெரிதாக "கோவிந்தா "என்று கத்தினார் திடீரென்று அவர் மேல் அருள் வந்துவிட்டது ",,எங்கேப்பா என் பிட்சை அரிசி ? அதில்லாமல் சமைத்து விட்டாயா ?"என்று கேட்க எல்லோரும் விக்கித்து நின்றோம். அந்த ம்னிதரோ புதியவர் .அவ்ருக்கு வீட்டில் நடந்த விஷயம் ஒன்றும் தெரியாது . அப்படி இருக்க எப்படி அவர் இதைச் சொல்லுகிறார் ? எந்தச்சக்தி அவரை இப்படிச்சொல்ல வைத்தது ? அந்த சம்பவ்ம் என்னால் மறக்க முடியவில்லை .எத்தனைப்புரட்டாசி சனிக்கிழமை வந்தாலும்என் கண்முன் இந்தச்சம்பவம் வந்து விடும் ,எல்லோரும் "கோவிந்தா கோவிந்தா என்று சொல்லியபடியே மன்னிப்பும் கேட்டுக்கொண்டோம் பூஜை மேலே தொடர்ந்தது மறு சனிக்கிழமை திரும்பவும் இந்தப்பூஜை ஒன்றுவிடாமல்பிக்ஷை வாங்கி நடைப்பெற்றது .அந்த இறை சக்தியை நான் பலதடவைகள் உணருகின்றேன் .ஒம் நமோ நாராயணாய

Wednesday, May 19, 2010

என்று மகளிர் தினம்?

என்று மகளிர் தினம்?


மகளிர் செல்லட்டும் இரவினிலே
மனப்பயமின்றி சுதந்திரமாய் தனிமையிலே,
நெஞ்சில் கலக்கம் இல்லாமல்,,,,,,,
அன்றுதான் நம்க்கு "மகளிர் தினம்'

பெண் சிசு அழிக்கும் நிலைப் போகட்டும்
ஆண்களின் சர்வாதிகாரம் ஒழியட்டும்
சமநிலைப் பாங்கு தோன்றட்டும்
அன்றுதான் நமக்கு "மகளிர் தினம்

கற்புநிலை இருவருக்கும் ஒன்றே
உணர்வுகளும் மதிப்பும் ஒன்றே
என்று இந்த ஏற்றத்தாழ்வு மாறுமோ,?
அன்றுதான் நமக்கு "மகளிர் தினம் "


தாயும் ஆகிறாள் காதலியும் ஆகிறாள்
விண்வெளியிலும் பறக்கிறாள்
அதிகாரியாகவும் ஆகிறாள்,
விளையாட்டிலும் முன் நிற்கிறாள்

எத்துறையிலும் திறமை
அதுவே நமக்குப் பெருமை
அடக்கம் அவ்ளுக்குத் தேவை
ஆனால் அடிமைநோக்கு ஏன் ?

மகனைக் காணத் துடிக்கும் தாய்
இருப்பதோ முதியோர் இல்லம்
என்று இந்நிலை மாறுமோ?
அன்றுதான் நமக்கு "மகளிர் தினம்

மாட்டுப்பொங்கல் போல் ஒருநாள்.
மாலைப் போட்டு வர்ணம் பூசி
வயிறு புடைக்க்த் தீனி வைத்தால்
மாட்டின் உழைப்புத்தான் மாறுமா ?
அதன் உண்மை நிலை மறந்து போகுமா?



எங்கும் வண்ணங்கள் எங்கும் உற்சாகம்

ஹோலி ,,இந்தப்,பெயரைக் கேட்டாலே வண்ணங்களும் பிச்காரி என்ற த்ண்ணீர்
பீச்சும் குழாயகளும், வண்ணப்பொடிகளும் கறுப்பு பெயின் டும்
ஒருவர்கொருவர் அன்புடன் தழுவலும் தான் ஞாபகம் வருகிறது ம்ஹராஷ்ட்ராவில்
இது மிகப் பிரமாதமாகக்
கொண்டாடுவார்கள் அதை ரங்க பஞ்சமி என்பார்கள்,,வசந்தக்காலத்தின்
நுழைவு நாள் இது சிவராத்திரியுடன் "சிவசிவா "என்று குளிர் போய்ப் பின்
வசந்த காலம் அழகுடன் பூக்களுடன் அழகாகக்கோலமிடும்,
,,இதில் செம்படவர்கள் அதிகம் பங்கேற்று தங்களை மறந்துக் களிப்பார்கள்
எல்லோரும் ஒவ்வொரு நடு சந்தியிலும் மேலே சுமார் 6அல்ல்து ஏழுமாடி
உயரத்தில் ஒரு பெரியப் பானையில் சில ஆயிரம் ரூபாயகள் வசூல் செய்து மேலே
தனியாகக்கட்டிவிடுவர்கள் இதேப்போல் தான் ஜன்மாஷ்டமியன்றும் நடக்கும்,
பானைக்குள் தயிர் அல்லது மோர் இருக்கும் இதை உடைக்க ஒரு "டோலி"என்ற குமபல் வரும்
அவர்களுக்கு முதலிலேயே பயிற்சி அளிக்கப்படும் . பாட்டு பாடிக்கொண்டு "கோவிந்தா
ஆலா ரே என்று கொட்டு கொட்டிக்கொண்டும் வருவதைப் பார்த்தால் நம் உடலும்
சிலிர்க்கும்
பின் ஒருவர்க்கொருவர் பிடித்துக் கொண்டு முக்கோணம் போல் மேலே ஏறி அதை
எட்டிப் பிடித்து உடைப்பார்கள் அவர்களை ஏற்விடாமல் த்ண்ணீர் அவர்கள்
மேல் கொட்டுவதும் உண்டு
,,அவர்கள் சாமர்த்தியமாக எடுத்தால் அந்த
ரூபாய்கள் அவர்களுக்கே ,,,,

ஜீஜா பாய் லக்கூஜிஜாதவ் மஹராஜின் பெண்,,அவள் தன் ஐந்து வயதில்
விளையாட்டாக எல்லோர் மேலேயும் வண்ணக் கலர் தண்ணீரில் கலந்து தெளிக்க
சிறு பையன் "சாஹூஜி 'மேல் பட்டுவிட அவனது தந்தை மலாஜி ராவ் பாவ்லே
தன் மகனுக்கும் ஜீஜாபாயிற்கும்
திருமணம் நிச்சியம் செய்து விட்டார் பின் சில காலம்ம்கழித்துத் திருமணம்
நடைப்பெற பின் வீர சிவாஜி பிறந்தார்
மஹராஷ்டாராவும் பிறந்தது இதைக் கொண்டாடும் வகையிலும் இந்த ஹோலி காரண்மாகிறது
பிரஹ்லாதனை எப்போதும் நராயணா என்றே சொல்ல அவந்து தந்தை
ஹிரண்யகசிபு கோபத்தின் உச்சிக்குச்சென்றுவிட்டான் ஆகையால் அவனைக்கொல்ல
பலவிதமாக முயன்றான் மலையிலிருந்து கீழே தள்ளிவிட்டான் யானைக்காலால
மிதிக்கும்படி செய்தான் ஆனாலும் நாராய்ணன பிர்ஹ்லாதனைக்காப்பாற்றி
விட்டார் இதனால் ஹோலிகா என்ற சகோதரியை அழைத்து அக்னி மூட்டி அதன்
நடுவில் பிர்ஹ்லாதனை மடியில் வைத்துகொள்ள அழைத்தாள் ஹோலிகா .
பிரஹ்லாதன் அதன்படியே செய்தான் அவன் வாய் மட்டும் நாராயணா என்று சொன்னபடி
இருக்க ஹோலிகா மடியில் அமர்ந்தான் ஹோலிகா நெருப்பும் தன்னைப்பாதிக்காமல்
இருக்கும் வரம் பெற்றிருந்தாள்
அனால் அந்த நாராயணா என்ற நாமம் பிரஹ்லாதனைக்காப்பாற்றிவிட்டது
ஆனால் ஹோலிகா அக்னியில் மடிந்தாள் இதனால் சோட்டி ஹோலி என்ற நாளில்
வடக்கில் பல குச்சிகள் கட்டைகள் சேர்த்து மலைப்போல் குவித்து
அதை எரிப்பார்கள்
இந்த நாளில் தான் சிவபெருமானால் மன்மதனும் எரிக்கப்பட்டான் ஆகையால்
மன்மத தகனம் என்றும் சில மாகாணங்களில் கொண்டாடுகின்றனர் தமிழ் நாட்டிலும்
மன்மத தகனம் கொண்டாடி கூத்து என்ற பெயரில் இரவில் நாடகம் நடத்துவார்கள்

காமதகனத்தைக்குறித்து தமிழ் நாட்டிலும் சில இடங்fகளில் கொண்டாடப்படுகின்றன ,

மதுரா பிருந்தாவன் ,,,இங்கு ஹோலி ராதா கிருஷ்ண பாவத்துடன்
கொண்டாடப்படுகிறது
ஒரு சமயம் ராதாவின் அழகைப் பார்த்துக் கண்ணன் தன் அம்மா ய்சோதையிடம் சென்று"அம்மா
நான் மட்டும் ஏன் கருப்பு ராதா மட்டும் ஏன் இவ்வள்வு சிவப்பு என்கிறார்
..யசோதைக்கு
பதில் சொல்லத்தெரியவில்லை அப்போது கிருஷ்ணர் ஒரு கருப்பு வர்ணம் குழைத்து
ராதாவின் அழ்கியமுகத்தில் பூசி அவளையும் கருப்பாக்கினாராம் ,இது
ராதாவின் எண்ணம்
ஆக இருந்ததாம் அதை அவர் அறிந்து இந்த மாதிரி விளையாடினார் என்கிறார்கள் .
அதனால் அங்கு ஹோலி கலர் ஒருவருக்கொருவர் முகத்தில் பூச ராஸலீலா என்ற
நடனமும் ஆடுகிறார்கள் பிஹாரி என்ற க்விஞர் ஹிந்தியில் இது பற்றி கவிதை
எழுதி
இருக்கிறார் மிகவும் மட்டமாக ஹோலி களிப்பது பிஹாரில் தான் ,தண்ணீருக்கு
பதில் சாணம்
கரைத்து ஊற்றுவார்கள் பஸ்ஸின் சன்னலினுள் சாணி உருண்டையும் வீசி எறிவார்கள்
நான் ஒரு தடவை "கயா "போன போது தப்பித்து வந்தது பெரும் புண்ணியம் ஆனது
வெளியில் நடந்தால் சாணம்கரைத்து தலையிலும் விடுவார்கள்
சிலர் இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று பெண்களின் மேல் நீரைக்கொட்டி
பின் கலரைக் கைக்குவந்த இடத்தில் கன்னத்தில் தடவிவிடுவார்கள்.
அன்று போலீஸும் ஒன்றும் செய்யமுடிவதில்லை தவிர "பாங்"என்ற சரக்கு வேறு
{ஊமத்தம்பூவின் சாரோ } உள்ளே போயிருக்கும் ,

ஜெய சிவசங்கர் என்ற ஹிந்தி சினிமாப்பாடல் இதை ஊர்ஜிதப்படுத்துகிறது நான்
தில்லியில் ஹோலியின் போது கதவை அடைத்தபடி
உள்ளே உட்க்கார்ந்தாலும் தபதப என்று ஒரு பட்டாளமே உள்ளே வந்துவிடும் ஐயோ
எனக்குக்கலர் அலர்ஜி என்று அலர பின் போவார்கள்

எல்லோருக்கும் என் ஹோலி வாழ்த்துக்கள் அன்பைக் கொடுப்போம் அன்பினை வளர்ப்போம்

யார் உயர்ந்தவர்?

இந்தக்கால சூழ்நிலையில் ஒருவர் சொன்ன இந்தக்கதையைச் சிந்திக்கத்தோன்றுகிறது
ஒரு கானகத்தில் ஒரு முனிவர் குடிசையில் வாழ்ந்து வந்தார் ,குருகுலம்
நடத்தி பல சிஷ்யர்களைச்சேர்த்துக்கொண்டார் எவ்வளவு
தூரம் தன் புகழ் பரவுகிறது என்று தினமும் நினைத்து அதில் மகிழ்ச்சியும்
அடைந்தார் ,தன் புகழுக்காகவும்
இதனால் வரும் செல்வத்தினாலும் அகமகிழ்ந்துப்போனார் புகழும் செல்வமும்
சேரச்சேர நற்சிந்தனைகள் மறைய ஆரம்பித்தன ஆசைகளின் வலையில் விழுந்தார்

இதே காட்டில் ஒரு வேடன் இருந்தான் . அவனை நம்பி ஒரு குடும்பம் இருந்தது
,அவனுக்குப்படிப்பறிவு
இல்லாததால் மிருகங்களை வேட்டையாடி அதில் தான் குடும்பத்தின் வயிறை
நிரப்பி வந்தான் வேட்டையாடுமுன்னும் அந்த இறைவனை நினைப்பான்
வேடையாடியப்பின்னும் அந்த இறைவனுக்கு மனதாலே அதைப்படைப்பான்
அவனுக்குக்கோயில் தெரியாது செய்யும் தொழில்தான் தெய்வம்
மனம் முழுதும் எப்போதுமே நற்சிந்தனை இருக்கும் பலருக்கு ஓடிச்சென்று உதவுவான் ,

காட்டில் சன்யாசியின் ஆஸ்ரமம் வருபவர்கள் அந்த வேடனைப்பார்த்து இப்படி
மிருகங்களைக்கொன்று இழிவான வாழ்க்கை வாழவேண்டுமா ?இது தேவையா ?என்று
ஏளனமாகச் சிரிப்பார்கள் ,ஆனால் அவன் ஒன்றும் கண்டுக்கொள்ளாமல் கடமையிலேயே
மனம் ஒன்றி செயல்ப்பட்டு வந்தான் , அவனால்அந்தப்பெரிய
குடும்பம் காக்கப்படவேண்டும் என்ற சிந்தனதான்


கால்ச்சக்கரம் சுழன்றது வேடனும் மரணமடைந்தான் சன்யாசியும் மரணத்தைத்தழுவினார்
வேடனின் உறவினர்கள் மனம் வருந்தி அழுது பின் கடவுள் சித்தம் அதுவே என்று
தங்கள் வேலைகளை
கவனிக்கத்தொடங்கினர்
சன்யாசியோ சொத்து பல சேர்த்து வைத்திருந்தார் அவரது திதியையும் பிரமாதமாக
சீடர்கள் கொண்டாடினர்

இருவரது ஆவியும் யமதர்ம ராஜனிடம் சென்றது முதலில் சன்யாசிக்கு
நரகதண்டனையைகொடுத்தார் யமராஜன்
பின் வேடனுக்கு சுவர்க்கத்தைக்கொடுத்தார் ,
சன்யாசியின் ஆவி பேசியது "யமதர்மராஜனே இது ஞாயமா ? இது பெரிய
அநீதி இல்லையா? துறவறமும், வேதத்தின் சாரமும் த்த்துவ உபதேசமும்
என்னை எப்போது சூழ புகழ் பெற்றேன் இதற்கா நரக தண்டனை ?
ஒரு கண்ணில் சுண்ணாம்பும் இன்னொரு கண்ணில் தேனுமாக பார்த்திருக்கிறீர்கள்.
அந்த வேடன் படிக்காத முட்டாள் மிருகங்களைக்கொன்று வயத்தை
வளர்ப்பவன் அவ்னுக்கு சுவர்கமா? இது நியாயமா?"

யமதர்மர் பதிலுரைத்தார் "துறவியே நீக்கள் புகழுக்கும் பணத்திற்கும்
ஆசைப்பட்டீர்கள் வெளியாரை ஈர்த்து புகழும் பெருமையும் சேர்க்கச்செய்த
செயலகள் இதில் உண்மையான இறைச்சக்தியை நீங்கள் எண்ணவில்லை இதில் பொறாமை
புகழ காமம் பெருமை என்ற பல வேண்டாத குணங்கள்
கலந்திருந்தன .
ஆனால் வேடனோ கடமை உணர்ச்சி மிக்கவனாகவும் தன் தொழிலையும்
ஒரு தெய்வப்பணியாகவே எண்ணி நடத்தி வந்தான் இவன் மனம் நேர்மையிலும்
தெய்வச்சிந்தனையிலும் எப்போதும் சென்றுக்கொண்டிருந்தது உடலால் புரியும்
செயலைவிட உள்ளத்தின்
சுத்தம் தான் முக்கியம் .இதனால் உங்களை விட அந்த வேடன் உயர்ந்தவனாகிறான்
அதனால் தண்டனை சரியே" என்றார்

சன்யாசியும் மனம் தெளிந்தார் ,
உள்ளம் சுத்தமாக இருப்பது மிக மிக முக்கியம் . இதனால்தான்
அகத்தூய்மை என்றும் அகத்தாய்வு என்றும் தியானத்தில் அடிக்கடி
சொல்லப்படுகிறது ,

பார்வையில் கோளாறு

"அப்பப்பா ரொம்ப தலைவலி ,,,,யார் அங்கே ,? சேவகனை உள்ளே வரச்சொல் " தலைவலியுடன் கத்தினார் அந்த அரசர் .
சேவகனும் உள்ளே வந்தான் ,
"உடனே அரண்மணை வைத்தியரை அழைத்து வரச்சொல் " ஆணையிட்டார் அரசர்
வைத்தியரும் வந்துப்பார்த்தார் மருந்தும் கொடுத்தார் குணமாகவில்லை பின் பல வைத்தியர்கள்
குணமாக்க முயற்சி செய்தனர் ஒன்றும் பலனில்லை
அப்போது அங்கு ஒரு ரிஷி வந்தார் .
"மன்னா நீங்கள் எப்போதும் ஒரே வர்ணத்தைப்பார்த்தபடி இந்த அறையில் இருக்க தலைவலி அதிகமாகும் நீங்கள் பச்சை வர்ணம் இருக்குமிடத்தில் செல்லுங்கள் அந்த நிறத்தைக்கவனியுங்கள்
பச்சை நிறம் கண்களுக்குக் குளிர்ச்சி,,"இதைத்தெரிவித்தபடியே ரிஷி நகர்ந்தார்
மன்னன் எல்லா இடத்தையும் பச்சை நிறமாக மாற்றச்செய்தான் அதே போல் வர்ணம் பூசுபவர்கள்
எல்லா இடத்தையும் பச்சை வர்ணத்தால் பூசி வைத்தனர்
சிலநாட்கள் கழித்து ரிஷி திரும்ப மன்னரைப்பார்க்க வந்தார்
வர்ணம் பூசுபவர்கள் ரிஷியைச்சூழ்ந்துக்கொண்டு "உங்களுக்கும் பச்சை வரணம் பூச வேண்டும் அப்போதுதான் எங்கள் மன்னரைப்பார்க்க் முடியும் எங்கள் மன்னர் எல்லாவற்றையும் பசுமையாகத்தான்
பார்க்க விரும்புவார் " என்றனர்
ரிஷி அவர்களிடம் " நான் உள்ளே போய் மன்னரிடம் பேசிவிட்டு வந்து பிறகு இதைப்பற்றிச்சொல்கிறேன்"
என்றுச்சொல்லிவிட்டு ராஜாவைக்காணச்சென்றார் ,
"மன்னரே நீங்கள் எத்தனைப்பெரிய முட்டாள் எல்லாவற்றையும் பச்சைஆக்க செல்வத்தை வாரிறைத்து
இப்படி நஷ்டமாக்கி இருக்கிறீரே:உங்கள் பார்வையை மாற்றினாலே போதுமானதே!"
"பார்வையை எப்படி மாற்றிக்கொள்வது முனிவரே"?
"ஒரு பச்சை வண்ணக்கண்ணாடியைபணிந்தால் அத்தனையும் பச்சையாகத்தெரியாதா என்ன?
இதற்கு இவ்வளவு சில்வு செய்ய வேண்டுமா?
அரசனுக்குப்பதில் சொல்லத்தெரியவில்லை வெட்கத்தினால் தலைக்குனிந்தான்
இதே போல் இந்த உலகைப்பார்க்கும் நம் பார்வையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும் இந்த உலகம்
முழுவதும் உள்ளுணர்வின் வெளிப்பாடுகள் தான் ஆகையால் ஒவ்வொருவரும் நற்சிந்தனைகளை
வளர்த்துக்கொள்ள வேண்டும் {சாயிபாபா சொன்ன கதை }

Saturday, March 20, 2010

ஆண்டவன் வாசல் திறக்கட்டும்

அன்பெனும் வாசலை மூடாதே .
பின் ஆண்டவன் வாசலும் மூடிவிடும்
உலகெக்கெல்லாம் அது ஆதாரம்
அதில்லாமல் வாழ்க்கை சேதாரம் ,
அன்பெனும் இலக்கில் கப்பல் விடு
வாழ்க்கைக்கடல் கடக்கும், கவலைவிடு.
அன்பு என்ற எழுது கோல் பிடி
படைப்புக்கள் அதைக்கொண்டு வடி .
இன்பக்கேணி சுரக்கட்டும்
பகை ஓடி மறையட்டும்
மனித நேயம் வளரட்டும்
சாதிமதபேதம் ஒழியட்டும்

இன்றைய காலம் ,
தவிக்கும் காலம்
பல மாற்றங்கள் காணும் காலம்
அன்பு மறைந்துப்போன காலம்
சத்தியம் ஒளிந்துக்கொண்ட காலம்
சுயநலமே தங்கும் காலம்
அன்பு நெறியை மறந்த காலம்
பிழைகள் பல மலிந்த காலம்
ஆனாலும் மனம் கலங்காதே
என்று மாறுமோ என்று வருந்தாதே
அன்பெனும் மாத்திரை சிறந்த மருந்து.
மன்னிப்போம் தவறை மனம் திறந்து
இறைவன் தாளைப்பணிவோம் என்றும்,
அவனருளில் தஞ்சமடைவோம் ,,,,,,.
தெலுங்கு கன்னட அன்பர்களுக்கு வரும் வருடபிறப்புடன் மராட்டியருக்கும்
சிந்தி பேசுபவருக்கும் இதே நாளில்
வருடபிறப்பு வருகிறது மராட்டியர்கள் இதை குடிபட்வா என சொல்கின்றனர்
,புராணக்கதைபடி பிரும்மா பூமியைச்சிருஷ்டித்த தினம். என்கிறார்கள்
இவர்கள் அத்துடன் தசாவதாரத்தில் மத்ஸ்ய அவதாரமாக எடுத்த நாள் இது என்றும்
சொல்கிறார்கள் .
ஒரு கலசம் போன்ற பித்தளை அல்லது செம்புபாத்திரத்தை எடுத்து
அதில் ஸ்வஸ்திக் போன்று சிவப்பு கலரில் வரைந்து பின் ஒரு பட்டுத்துணியில்
சுற்றி ஒரு கம்பில் கவிழ்த்து வைப்பது மராட்டியர்களின் வழக்கம் இதனால்
சுபீக்ஷம் வருவதாகவும் வெற்றி கிடைப்பதாகவும் ஒரு நம்பிக்கை ,இன்றைய
தினத்தில் தான் சிவாஜி மகராஜ் போரில் மகத்தான வெற்றி பெற்று
திரும்பினாராம்

நாம் செய்வது போல் இவர்களும் "பஞ்சாங்க சிரவணம் "செய்கிறார்கள்
பட்வா என்பது சம்ஸ்கிருத மொழியிலிருந்து வந்தது தான்யம் என்று பெயர் "
விவசாயிகள் தான்யங்களை
அறுவடைச்செய்ய ஆரம்பிப்பார்கள் மஹாராஷ்டிராவில் மே மாதத்திலிருந்தே மழை
ஆரம்பித்து
செப்டம்பர் வரை இருக்கும்
நாம் செய்வது போலவே இவர்களும் வெல்லப்போளி செய்கின்றனர் இதை பூரன்போளி
என்கின்ற்னர்
பின் பச்சடியும் உண்டு
அறுசுவைகல்ந்த ஒரு பச்சடி வேப்பம்பூ வெல்லம் மாங்காய் புளி
பச்சைமிளைகாய் உப்பு என்று எல்லாம் கலந்த பச்சடி உண்டு வாழ்க்கையில்
இதுபோல் பல வநதாலும் எல்லாம் சமபாவமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று
சொல்லாமல் சொல்லும் பச்சடி இது
தெலுங்கு கன்னடக்காரர்களும் இது போல் தித்திப்பு போளியும் பச்சடியும் செய்கின்றனர்


இப்போது வருவோம் சிந்திநதிக்கு ,,,,,,


"சேத்தி சாந்த ஜ்யோ லக்லக் வதாயும் அதவ " இது சிந்திகளின் வாழ்த்து

" தோஹான் கெ பீ " {உங்களுக்கும் }" வாழ்த்துக்கு பதில்

இவர்களது பூஜை கொஞ்சம் வித்த்யாசமாக இருக்கிறது சப்ரிமலை போகும்
பக்தர்கள் 40 விரதம் வைப்பதுப்போல் இவர்களும் வைத்துக்கொள்கின்றனர்
சிந்து நதியில் குளித்து ஒரே உடையைத்துவைத்து
பின் காயவைத்துக்கட்டுகின்றனர் ,தாடி வளர்க்கின்றனர் சோப்பு எண்ணெய்
தேப்பதில்லை இவர்களின் இஷ்ட தெய்வம் "ஜூலேலால " இவர்கள்
தண்ணீரைப்பூஜிக்கின்றனர் வருணபகவானைப்பூஜிக்கின்றனர்
தங்களுக்கு நிம்மதி மனசாந்தி பின் அந்த இறைசக்க்தியின் அருளும் கிடைக்க
வேண்டிக்கொள்கின்றனர்
இந்த விரதம் முடித்தப்பின் நன்றி தெரிவிக்கும் நாள் என்றும் கொண்டாடுகின்றனர் ,
அன்று விள்கேற்றி சர்க்கரை மிட்டாய் எடுத்து பின் கலசத்தில் ஏலக்காய்
சேர்த்து தேங்காயுடன் விளக்கேற்றி அந்த ஜோதியுடன் வலம் வந்து அவர்களின்
கடவுளையும் கும்பிடுகின்றனர்
பூஜ்ய ஜூலேலால் தேவ்தா வை கோஷ்மிட்டு ஜெய்ஜெய்காரம் எழுப்புகின்றனர்

இன்றைய தினத்திலிருந்து வசந்த நவராத்த்ரி ஆரம்பிக்கிறது
உத்தரபிரதேசத்தில் .தில்லியில் பலர்
ஒன்பது நாட்களும் பட்டினி கிடந்து
சக்தியைப்பூஜிப்பதைப்பார்த்திருக்கிறேன் அஷ்டமி அன்று எட்டு
கன்னிகைகளுக்கு பூஜை செய்து வளைகள் அடுக்கி மருதாணி இட்டு பின் பூரியும்
சொஜ்ஜிபோன்ற இனிப்பையும் வழ்ங்குவார்கள் நான் இருந்த பள்ளியில் பலர் இந்த
விரதம் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்
ஆனால் அந்தத்தேவியின் சக்தியோ என்னமோ அவர்களுக்குப்பசியேதெரியாது
ஸ்ரீராமர் யுத்தத்தில் வெற்றி பெற சக்தியைப்பூஜித்தாராம் அதையே இந்த
நாட்களில் ஜண்டேவாலா மாதா என்ற கோயில் சென்று
சிற்ப்பாகக்கொண்டாடுகின்றனர் அத்துடன் மெஹ்ரோலி என்ற இடத்தில் இருக்கும்
காத்யாயினி கோயிலும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும் அந்தத்தேவியின்
அழகைச்சொல்லமுடியாது
24 கைகள் எல்லாமே ஸ்வர்ண மயம் ,,,,,,, சிங்கத்தின் மேல்
அமர்ந்திருக்கிறாள் ,,,,என் கண் முன்னால்
அவள் இன்றும் நிற்பது தெரிகிறது

எல்லா அனப்ர்களுக்கும் குடிபட்வா வின் வாழ்த்துகள்






|




பூக்களின் பாடம்

மலரே! பூக்கிறாய் ஒரு புன்னகை ,
அகமலர்ந்து மலருகிறாய் ,
வண்ணங்களை உதிர்க்கிறாய்,
மனம் விரிய மகிழ்விக்கிறாய்,
எட்டிப்பார்க்கும் வசந்தம்1
பூத்துக்குலுங்கும் ஆனந்தம்
நீ இல்லாமல் ஒரு கோயிலுமில்லை
உன் துணையில்லாமல் மண்ப்பெண்ணுமில்லை ,
பிறக்கும் போதும் வருகிறாய்
இறக்கும் போதும் அமருகிறாய்
நீ சொல்லாமல் சொல்வதை நான் உணர்ந்தேன்,
அதன் பொருளையும் நான் கண்டுக்கொண்டேன்

" போகும் வரை நீ மலர்ந்திரு
கள்ளமிலா மனம் திறந்திரு
தன்னலமற்ற சேவை
கடைசி வரை தேவை "

நீ கற்பிக்கும் பாடமிது
உன்னிடமுள்ள சிறப்புமிது,

Sunday, March 14, 2010

மாசிக்கயிறு பாசிப்படரும்

காதல் அந்தக்காலத்திலும் இருந்திருக்கிறது ,ஆனால் அது மிகப்புனிதமான
ஒன்றாகவும் சுயநலமில்லாததாகவும்
இருந்தது அது இதயத்தினில் கலந்துவிட்ட ஒன்று
சாவித்திரி ஒரு ராஜகுமாரி தந்தை அசுவபதி ,,, ஒருநாள் தன் தோழிகளுடன்
வனத்திற்குச்சென்றாள்
அழகான நீர்வீழ்ச்சியைக்கண்டு மனம் பரவசம் அடைந்தாள் கூடவே ஒரு
சுந்தரமுகமும் தெரிய ஆவலுடன்
அந்தத்திசையில் நோக்கினாள் ஒரு அழகான வாலிபன் அவள் மனதைக்கொள்ளைக்கொண்டான் ,
அந்த நிமிடமே அவனே தன் புருஷன் என்று தீர்மானமும் கொண்டாள்,
மாளிகைக்குத்திரும்பி வந்து தன் தந்தையிடம் தன்
விருப்பத்தைத்தெரிவித்தாள்,அந்தச்சமயம் "நாராயணா நாராயணா"
நாரதர் நுழைந்து பின் விவரம் அறிந்து அந்த வாலிபன்
"சத்தியவான்" எனவும் அவன் இன்னும் ஒருவருடத்தில் மரணம் அடைவான் என்றும்
குறிப்பிட்டு பின் எச்சரிக்கிறார் சாவித்திரி
இதில் மிக உறுதியாக இருந்ததால் அரசர் தன் மகளைச்சத்த்ய்வானுக்குத்
திருமணம் செய்துக்கொடுத்தார்

அரண்மனை வாசம் போய் காட்டின் அருகில் ஒரு சின்ன வீடு ,,மாளிகைவிட்டு வந்த சாவித்திரி
அதிலும் இன்பத்தைக்கண்டாள் தன் புருஷனின் உயிரைக்காக்க பார்வதி செய்த
விரத்ததை மேற்கொண்டாள்
அங்குக்கிடைத்த நெல்லிருந்து அரிசியைப்பொடியாக்கி அதில் காராமணியும்
சேர்த்து அடைப்போல் தட்டி
வெண்ணெயுடன் நைவேத்தியம் செய்தாள் , பின் மஞ்சள் சரடை சுமங்கலியாக
இருக்கப்பிரார்த்தித்து கட்டிக்கொண்டாள் .
அந்த நாளும் வந்தது சத்தியவான் விற்கு வெட்டும் போது பாம்பின் ரூபமாக
யமன் வந்தான் , அவனைக்கொட்டினான் தள்ளாடியபடியே அவன் கீழே சாய
சாவித்திரி அவனைத்தாங்கிக்பிடித்தாள்
கற்பின் சக்தியால் யமனும் அவள் கண்ணில் பட்டான் அவன் உயிரைக்கொடுக்கும்படி
வாதித்தாள் கதறி அழுதாள் பின் தொடர்ந்தாள் அவள் கண்ணீர் அவன் மனதை நெகிழ வைத்தது
'சாவித்திரி நான் என் கடமையைத்தான் செய்கிறேன் அவன் உயிரைத்தவிர வேறு
என்ன வரம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன் " என்றான்

" யமராஜனே என் வம்சம் வாழையடியாகத்தழைத்து வளர வேண்டும் "

" சரி அப்படியே ஆகட்டும் தந்தோம் " என்று சற்றும் யோசிக்காமல் வரம் வழங்கினான்
" உங்கள் வரம்படி சத்தியவான் இல்லாமல் குலம் எப்படித்தழைத்து ஒங்க
முடியும் "என்று பதிலுக்கு
சாவித்திரி கேட்க வேறு வழியில்லாமல் யமதர்மராஜன் சத்தியவானின்
உயிரைத்திரும்பிக்கொடுத்தான்

சாவித்திரியின் பக்தியும் அன்பும் கற்பும் யமனையும் வென்று தன்
புருஷனை மீள வைத்தன ,

இந்தக்கதை சாதாரணமாக எல்லோருக்கும் தெரியும் இது போல ஒன்றை வடநாட்டில்
கரவாசௌத் என்ற
பெயரில் கொண்டாடுகிறார்கள் காலையிலிருந்து தண்ணீர் கூடக்குடிக்காமல்
இரவில் சந்திரனைப்பார்த்தப்பின்னர் தான் சாப்பிட்டு விரதத்தை
முடிக்கிறார்கள் ,என் மருமகள் வடநாட்டில் இருந்து
பழக்கப்பட்டதால் அந்த நோம்பும் செய்ய என் மகனும் அன்று முழுவதும்
பட்டினி கிடப்பான் ,
பெண்களுக்குத்தானா புருஷன் முக்கியம் ஆண்களுக்கும் இதே உணர்வு உண்டே
"என்று சொல்லும்போது
இது போல் ஆண்களுக்கும் எதாவது விரதம் இருந்திருக்கலாமோ என்று
தோன்றுகிறது ,ஆனால் அந்த நோன்பு தீபாவளிக்குப்பின் வரும் என்ற ஞாபகம்

நம் நோன்பு மாசிமாதம் பங்குனி மாதம் கூடும் நேரத்தில் வரும் "
மாசிக்கயிறு பாசிப்படியும்" என்று
சொல்வார்கள் ஆகையால் மாசி முடியும் தருவாயிலேயே இதை அனுஷ்டித்துவிடுவது வழக்கம்

என் அம்மா இந்த நோம்பு செய்யும் போது " உருகாத வெண்ணையுக் ஓரடையும் நான் வைக்க
என் கண்வன் என்னைவிட்டு என்றும் பிரியாமல் இருக்கவேணும் " என்று
சொல்லியபடியே சரட்டை அணிந்துக்கொள்வார் அதே போல் எங்களையும்
அணியச்சொல்வார்
" அம்மா எங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே " என்றால் " எங்கேயாவது
பிறந்திருப்பானே"
என்று முடிப்பார்
எனக்கு ஒரு ச்ந்தேகம் இருந்தது " அந்த வெண்ணெய் எப்படி உருகாமல் இருக்கும் "?
இதை என் அம்மாவிடம் கேட்டபோது அந்தக்கால பதிவிரதையால கற்புக்கரசியினால்
இது சாத்தியமாகும்
என்றார் ,,,

எல்லாமே உலகத்தில் அன்பும் பாசத்திற்கும் கட்டுப்பட்டு உறவுகள்
பின்னப்ப்டுகின்றன ,,,,,,, இந்தக்கால்த்தில் தாலிக்கு இத்தனை மதிப்பு
கொடுக்கபடுகிறதா ? அல்லது இருமனம் ஒருமனம் ஆனாலே போதும் என்று
நினைக்கப்ப்டுகிறதா ? விஜய் டிவியில் "நீயா நானா "வில் இதுவும்
அலசப்பட்டுவிட்டது

காமாட்சி அம்மன் விரதம்

மாசி மாதம் முடிவு பங்குனி மாதம் தொடக்கத்தில் காரடை நோம்பு வருகிறது
பெண்மணிகள் தங்கள் கணவர் சுக
க்ஷேமத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பிரார்த்தித்து விரதம் நோற்பது
வழக்கம் இதன் பிண்ணனியில் சாவித்திரி
சத்தியவானின் கதை வருகிறது தன் மன உறுதியினாலும் கற்பினாலும்
யமனிடமிருந்து தன் புருஷன் சத்தியவானை இறந்தப்பின்னும்
உயிர்பிழைக்கச்செய்யும் உத்தமியின் கதை இந்த விரதம் ஏற்று இந்தக்கதையும்
படிக்க பெண்களுக்கு "சர்வமங்கள மாங்கல்யே "என்றஸ்லோகத்திற்கேற்ப
வாழ்க்கை அமைகிறது
இந்த விரதம் சாவித்திரி செய்தது இதன் ஆரமபம் பார்வதி தேவியினால் ஏற்பட்டது

கயிலைமலையில் பரமேஸ்வரன் தியானத்தில் இருக்க பார்வதி விளையாட்டிற்காக
தன் பஞ்சுக்கரத்தினால்
மென்மையாக சிவனாரின் கண்களைப்பொத்தினாள். இந்த விளையாட்டு எததனை விபரீதமானது !
ஈஸ்வரனின் கண்கள் மறைய உலகமே இருண்டது எல்லா சீவராசிகளும் த்வித்தன ,
கோபம் வராமல் இருக்குமா? முக்கண்ணனாருக்குக் கோபம் வந்துவிட்டது ,
"பார்வதி என்ன காரியம் செய்தாய் ?உன்னால் உலகமே இருண்டுப்போய் விட்டதே !
இதன் பிராயச்சித்தமாக
நீ பூலோகத்தில் பிறந்து தவம் இருக்கக் கட்டளை இட்டார்

பார்வதி தேவியும் மாங்காட்டில் காமட்சியாக ஒரு ஊசிமேல் நின்று தவமிருந்து
பின் காஞ்சிபுரத்திற்குச்செல்கிறார். பின் கம்பா நதியின் கரையில் அந்த
மணலைக்கொண்டு சிவலிங்கம் செய்து பூஜை செய்து வருகிறாள் ஒரு நாள் கமபா
நதியில் வெள்ளம் பெருகெடுத்து ஓடிவர தன் மண்ல் லிங்கம்
சேதமாகாமல் இருக்க தன் இரு கைகளாலும் அதை மறைத்து சிவபெருமானிடம் மனமுருக
வேண்டுகிறாள்
உடனே வெள்ளம் இரு பிரிவுகளாகப்பிரிந்துச்செல்ல பரமேஸ்வரனும் காட்சி
அளித்து அவளைத்தன்னுடன்
சேர்த்துக்கொள்கிறார் ,இதுவே தான் காமாட்சி விரதம் இந்தவிரதத்தைதான்
சாவித்திரி கடைப்பிடித்து
யமனையும் வென்றாள் ,பிரசாதமாக காரடையும் வெண்ணையும் வைத்ததால் அதுவே தொடர்ந்து
இன்றும் செய்யப்படுகிறது ,இன்று சிவராத்திரியில் அதுவும் சனிப்பிரதோஷமும்
சேர அம்மனின் இந்த விரதம்
அனுஷ்டிக்க மிகவும் விசேஷமான பலன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கைத்தான்
இன்று சாவித்திரி சத்திய்வான கதைப்படித்தாலும் நல்ல பலன் ,,
ஸ்ரீ அரவிந்தர் தன் சாவித்திரி காவ்யத்தில் இந்தக்கதையை நம் உடலுடனும்
ஆன்மாவுடனும் ஒப்பிட்டு
சைத்தனய சக்தியின் வெளிப்பாடே எமனுடன் போராடிபெற்ற வெற்றி என்கிறார் ,பல
போராட்டங்கள்
உலகில் இருக்கும் மாயை ஆசாபாசங்கள் என்று கருதப்படுகிறது அவர் அதை
ஆங்கிலத்தில் எழுதியிருக்கிரார்
புரியாமலே படித்தாலும் அதன் பலன் உண்டு என்றும் கருதப்படுகிறது
ஒருவருக்குப்பக்கவாதம் வந்து
பல வைத்தியங்கள் பார்த்தப்பின்னர் மனமொடிந்து பின் சாவித்திரி காவ்யம்
படித்தார் இரவில்
அவர் காலருகில் அன்னை வெள்ளைப்புடவையுடன் வந்து அவரது கட்டிலில் அமர்ந்து
அவரது காலை
வருடினார் பின் மறைந்துப்போனார் மறுநாள் அவர் நடந்ததைப்பார்த்து
டாக்டர்கள் எல்லாருமே வியந்தனர்
இதை நான் நேரில் பாதிக்கப்பட்டவ்ர் பேசியத்தைக்கேட்டேன் ,,அந்தக்கூட்டம்
"சாவித்திரி" யின் மகிமை
பற்றியது ஸ்ரீகர்மயோகியின் மகன் திரு அசோகன் வந்திருந்தார் ,
நேரம் கிடைக்க ஒரு பக்கமாவது சாவித்திரியப்படிக்கலாமே ! பெண்மணிகளுக்கு
காரடை நோம்பின்
நல்வாழ்த்துகள்
அன்புடன்விசாலம்

ஆண்டவன் வாசல் திற்க்கட்டும்

அன்பெனும் வாசலை மூடாதே .
பின் ஆண்டவன் வாசலும் மூடிவிடும்
உலகெக்கெல்லாம் அது ஆதாரம்
அதில்லாமல் வாழ்க்கை சேதாரம் ,
அன்பெனும் இலக்கில் கப்பல் விடு
வாழ்க்கைக்கடல் கடக்கும், கவலைவிடு.
அன்பு என்ற எழுது கோல் பிடி
படைப்புக்கள் அதைக்கொண்டு வடி .
இன்பக்கேணி சுரக்கட்டும்
பகை ஓடி மறையட்டும்
மனித நேயம் வளரட்டும்
சாதிமதபேதம் ஒழியட்டும்

இன்றைய காலம் ,
தவிக்கும் காலம்
பல மாற்றங்கள் காணும் காலம்
அன்பு மறைந்துப்போன காலம்
சத்தியம் ஒளிந்துக்கொண்ட காலம்
சுயநலமே தங்கும் காலம்
அன்பு நெறியை மறந்தக் காலம்
பிழைகள் பல மலிந்தக்காலம்
ஆனாலும் மனம் கலங்காதே
என்று மாறுமோ என்று வருந்தாதே
அன்பெனும் மாத்திரை சிறந்த மருந்து.
மன்னிப்போம் தவறை மனம் திறந்து
இறைவன் தாளைப்பணிவோம் என்றும்,
அவனருளில் தஞ்சமடைவோம் ,,,,,,.

Friday, January 22, 2010

பீஷ்மாஷ்டமி

நாட்டு நலனுக்காகவே வாழ்ந்து தன் வாழ்க்கையில்பிரும்மசாரி விரதம் கடைப்பிடித்து தன் தந்தைக்காக திருமண எண்ணமே இல்லாமல் அரசையும் துறந்தபெரிய மகான் , ..உலகத்தில் சாதரணமாக எல்லோருமே இறக்கும் போது மகன்அருகில் இருக்க அவன் கையால் தகனம் கிடைக்கும்பாக்கியம் வேண்டும் என்று எண்ணுவர் ,தவிர அந்தப்பிள்ளை வழியாகச்செய்யும்கர்மாவும் போகும் வழிக்குப்புண்ணியம் சேர்க்கும் என்ற கொள்கையுடன்இருப்பது நமது ஹிந்து மதம்,இதனால் தானோ ஆண் மகன் பிறக்க பலர் வேண்டுகிறார்கள்.சர்தார்ஜி குடும்பத்தில் ஆண் மகன் பிறக்க லோஹ்ரி என்றபண்டிகையை மிக விமரிசையாகக் கொண்டாடுவார்கள் ,அதாவது நமதுபோகிப்பண்டிகையின் போது அவர்களது லோஹ்ரி சிலர் இதை லோடி என்பார்கள் இதுவே பெண்குழந்தையாக இருந்தால் அத்தனைவிமரிசையாக நடத்தமாட்டார்கள்.சர்தார்ஜிகுடும்பத்துடன் மிகவும் நெருக்கமான தொடர்ப்பு இருந்ததால்நான் இதை அறிவேன் ,பீஷ்மர் இறைவனடி சேர்ந்த நாள் ரதசப்தமி அந்த மகானின் நினைவாக அர்க்கியம்விடுவது வழக்கம் மாக மாதம் என்றுசொல்லும் தை 12லிருந்து மாசி பத்து வரை மாக ஸ்னானம்செய்வது வழக்கம் ,பீஷ்ம நிர்யாணம் அஷ்டமி நாளாகக்கொண்டுபீஷ்மாஷ்டமி என்றும் சொல்லப்படுகிறதுமகாபாரத யுத்தம் மார்கழியில் அமாவாசையில் தொடங்கியதுபீஷ்மர் கௌரவப்படைக்குத்தலைமையேற்றார் அர்சுனன் அம்புகள்அவர் உடல் முழுவதும் துளைத்தன ஆனாலும் தனக்கு அப்போதுமரணம் வேண்டுமோ அப்போதுதான் மரணம் சம்பவிக்கும் என்றவரம் அவர் தந்தை சந்தனு கொடுத்ததால் அவர் உயிரைப்பிடித்தபடி 58 நாட்கள்உயிரோடு கிடந்தார் அவருக்கென்றுஅம்புகளால் படுக்கை அமைத்துக்கொடுத்தான் அர்சுனன் ,அவரது தாய் கங்கா தேவி அவருக்குத்தாக சாந்தி செய்யபூமியின் அடியில் போய் பாதாள கங்கையாக மேலே பீய்ச்சடித்துஅவர் தாக்த்தைத் தீர்த்தாள் தாயல்லவா ,,,,மகன் இந்த நிலையில் இருக்கஎப்படிச்சகிப்பாள்?தட்சியாயணம் என்பது தேவர்களுக்கு இரவு ,பீஷ்மர் இந்தக்கால்த்தில்மரணத்தைத் தழுவ விரும்பவில்லை தேவர்கள்விழித்து வரும் நாளான உத்த்ராயணக்காலம் வரை அம்புபடுக்கையில் இருந்தார் அந்த நேரத்தில் தான் தருமருக்குஅறங்கள் பற்றி உபதேசித்தார் , இந்தச்சந்தர்ப்பத்தில் தான் பிறந்ததுஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம் "இவர் இந்த மாதிரி பிறந்து பிரும்மசாரியாக வாழ்ந்த காரணம்என்ன ?பிரும்மலோகத்திற்கு ஒரு முறை கங்கை சென்றாள் ,அந்த நேரத்தில் மன்னன்மஹாபிஷக் கங்கையின் அழகில் மயங்கி மோகம் கொண்டான் ,பிரும்மா இதைக்கண்டுஇருவரையும் பூமியில் பிறக்க சபித்தார் இந்த மஹாபிஷக் தான்சந்தனுவாகப்பிறந்தார்வ்சிஷ்ட முனிவரிடம் காமதேனு பசு இருந்தது கேட்டதெல்லாம்கொடுக்கும் பசு ,,,, அனலன் அணிலன்ஆபத்சலன் சோமன் தரன், த்ருவன், பித்யூஷன், பிரபாசன்,என்பவர்கள் அஷ்ட வசுக்கள் என வழங்கப்பட்டனர் அதில்பிரபாசனின் மனைவி தன் தோழிக்காக காமதேனுவின்பாலைக்கேட்க அஷ்ட வசுக்கள் அதைத்திருட முற்பட்டனர் ,ஆனால் வசிஷ்டர் இதை அறிந்து பூமியில் பிறக்கஇவர்களுக்குச்சாபம் கொடுத்தார் ,பிரகாசனால்தான் இந்த ஏற்பாடு நடந்ததால் அவன் மனைவி சொல் கேட்டு குற்றம்புரிய நினைத்தால் அவனுக்கு திருமணஇன்பம் என்பதே இல்லாமல் போக வேண்டும் என்று சபித்தார்அஷ்ட வசுக்கள் கங்கையிடம் வந்து தாங்கள் அவளுக்கு மகன்களாகப்பிறக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டனர் ,இதை நிறைவேற்ற கங்கை அஸ்தினாபுரத்து மன்னன் பிரதீபனைக்கண்டு மயங்கி தன்னை அவர்து வலது தொடையில் அமர்த்திமனைவிஸ்தான்ம் கொடுக்கும்படி வேண்டிக்கொண்டாள் ,ஆனால் பிரதிபனோ வலது தொடைமகளுக்கு உரியது ஆதலால் அவளை ஏற்ற்க்கொள்ள இயலாது என்றார் பின்னர் தன்மகன் சந்தனுவுக்குமனைவியாகும்படி அனுப்பி வைத்தார் ,கங்கையும் ஒரு நிபந்தனை போட்டது எல்லோருக்கும் தெரியும்தான் செய்யும் எந்தச்செயலைப்பற்றியும் கேட்கவோ கோபித்துக்கொள்ளவோகண்டுக்கொள்ளவோ கூடாது என்பதேநிபந்தனைவரிசையாக ஆண்குழந்தைகள் ஏழையும் பிறந்த் உடனேயே கங்கை ஆற்றில் வீசினாள்இவர்கள் தான் அந்த ஏழு வசுக்கள்எட்டாவது பிறந்தது ,சந்தனுவுக்கு மனது கேட்கவில்லைஅவள் ஆற்றில் போட வந்த போது சந்தனு தடுத்தார் அவ்வளவுதான் கங்கை இனிசந்தனுவுடன் இருக்க முடியாது என்றும் குழந்தையைத்தான் வளர்த்து சரியானநேரத்தில் கொண்டு தருவதாகவும் சொல்லிச்சென்றுவிட்டாள் இந்த எட்டாவது மகன் தான் அஷ்ட வசுக்களில் பிரபாசன் என்பவன் ,கங்கைமகனானதால் காங்கேயன் ,தேவவிரதன் என்ற பெயரில் அஸ்தினாபுரத்தில் பின் வந்தார்மனைவியைப்பிரிந்ததால் சந்தனு செம்படவன் மகள்சத்தியவதியைக் கண்டு மோகித்து அவளது தந்தையிடம் பெண் கேட்டார் ,அவரோசத்தியவதியின் பிள்ளைகளே அரசபதவி அடைய வேண்டும் என்று கட்டளை இட்டார்இதனால் மனம் கலங்கி சந்தனு வரவே தன் தந்தையின் கலக்கத்தை தேவவிரதன்அறிந்து தான் நைஷ்டிகபிரும்மசாரியாக இருக்கப்போவதாக்வும் தனக்குராஜ்யபதவி வேண்டாம் என்றும் எந்தப்பெண்ணையும்மனதால் கூட நினைக்க மாட்டேன் என்றும் சத்தியம் செய்து கொடுத்தார் ,அஸ்தினாபுர வாரிசு ஒரே மகன் அரசகுமாரன் தன் தந்தையின்சந்தோஷத்திற்காக மணவாழ்க்கை அரசபதவி இரணடையும்துறந்ததைப்பார்த்து தேவர்கள் மலர்கள் சொரிந்தனர் "பீஷ்ம "என்று வாழ்த்தினர்இதைக்கண்டு மனம் நெகிழ்ந்து சந்தனு இரண்டு வரம் அளித்தார்எப்போது தேவவிரதன் மரணத்தை விரும்புகிறானோ அப்போதுதான் மரணம் சம்பவிக்கும்பீஷ்மர் மகாவீரர் உத்தமர் சத்தியசீலர் எல்லாகலைகளையும்கற்றவர் ,தாய் தந்தையை தெய்வமாகப்போற்றி வணங்கியவர் ,கடைசிவரை பிரும்மசாரியாகவே இருந்தார் இத்தனைச்சிறப்பு பெற்ற அவருக்கு பீஷ்மாஷ்டமி அன்று அர்க்கியம் விடபாவங்கள் விலகும் என்ற நம்பிக்கை .அத்துடன் சந்ததியர்கள் சிறப்பாக வாழ்வார்களாம்

ஓடி வந்தேன் உனைக்காண

உன்னைக்காண ஓடி வந்தேன்
,நீ கண்டுக்கொள்ளாதது ஏன் ?
உன் முகத்தில் ஒரு புன்னகை,
எப்போதுமே அது இயற்கை,
உன் அழகில் மயங்கி நின்றேன்
நீயோ க்வனிக்காமல் இருப்பதேன்?
ஒரு கை திரையை மூடுகிறது
அது என்னை வாட்டுகிறது ,
அசையாமல் நிற்கிறேன்
,உன் திசையைப்பார்த்து நிற்கிறேன்,
என்னை ஏன் இப்படிப் படுத்துகிறாய்,?
மனக்கஷ்டம் கொடுக்கிறாய்?
என்றும் நீ என் மனதில் தானே!
நான் வருவதும் உன்னைக்காணத்தானே !
பல நிமிடங்கள் போனது
திரையும் விலகியது ,
ஆஹா என்ன அழகு அவள்!
என் மீனாட்சித்தாய் அவள்.
அலங்காரத்தில் மின்னுகிறாள்.
அருள் பார்வை வீசுகிறாள்
மந்திரங்களின் முழக்கம்
நம் கலாச்சாரப்பழக்கம்
கற்பூர ஒளியில் அவள் முகம்
காணக்கிடைக்காதத்திருமுகம்
என்கண்களால் அவளைக்காண்கிறேன்.
அணுஅணுவாய் அவளை ரசிக்கிறேன் ,
என் கண்கள் திறந்து என்ன பயன் ?
என் அகக்கண்கள் அல்லவா திறக்கவேண்டும் !

என்னைக்கவர்ந்த ஜி என் பி

பம்பாய் ஷண்முகானந்தசபாவில் முதல் வரிசையில் அமர்ந்திருந்தேன் .அன்றுநடக்கப்போகும் கச்சேரி திரு ஜி.என் பிஎன்ற பாலசுப்பிரமண்யம் அவர்கள். அதோ வந்து மேடைமீது அமருகிறார் எப்போதுமே சரியான நேரத்திற்கு ஆஜராகிவிடுவார் வெள்ளை வெளேரென்ற ஜிப்பா , வேஷ்டியுடன் காதிலும் பளீரென்ற கடுக்கன் மின்ன முகத்தில் ஒரு தேஜஸ் நெற்றியில் அழகான பொட்டு ,ஆங்கிலத்தில்ஹேண்ட்ஸம் என்று சொல்வார்களே அது இவருக்கு மிகப்பொருந்தும் .தீர்க்கமானஎடுப்பான நாசி , நல்ல அகலமான நெற்றி . .சுருதியுடன் "ஸா,,,"என்றுசேர்த்துக்கொள்ள சபை களைக்கட்டுகிறது ஒரு சரிகைஅங்கவஸ்தரம் இருந்தாற்போல் ஞாபகம் ,சுருதியைப்பலதடவைச்சரிப்பார்க்கிறார் ,பின் ஆரம்பமாகிறது கச்சேரி"வலசி வாச்சி யு னா ,,,என்ற நவாவர்ணம் கேதாரத்தில் ஆரம்பித்து,"பின்பேகடா கலயாணி என்று பலராகங்கள் தொடர மிக அருமையான வர்ணம் ,,,, பின் யோசனாஎன்ற தர்பார் ராகக்கீர்த்தனை தொடர்ந்தது ,பின் காம்போஜி விஸ்தாரமாகப்பாடதொடர்ந்து வந்தது நளினகாந்தி ,,பல வருடங்கள் ஆனாலும் அந்தக்கச்சேரி என்மனதில் பதிந்து இருக்கிறது கடைசியில் பாடிய "சொன்னதைச்செய்திட"என்றபாடலும் சிந்தை அறிந்து வாடி ",பிருகுமுகுந்தேகி ரஸனே "சிந்துபைரவியில்ஹிந்துஸ்தானி பஜன் போல் ஒரு பாடலும் மிக அருமையாக இருந்தன"திக்குத்தெரியாதகாட்டில்"பாடலைத்தான் மற்க்கமுடியுமா? ,அவரது கம்பீரமான தோற்றம் அவரது அருமையான குரல் பிருகாக்கள் கொண்ட ராகங்கள்தன்க்கென்று தனி பாணியை வகுத்துக்கொண்ட விதம் எல்லாம்என் மனதில் இன்றும் அப்படியே பசுமையாக நிற்கிறதுஅவருக்குப்பிடித்த ராகங்கள் தோடி, கலயாணி , பஹுதாரிஆந்தோளிகா ,ஆனந்தபைரவி பெஹாக் போன்ற ராகங்கள்என நினைக்கிறேன் ,படிப்பிலும் இவர் BA{Hons} தவிர கலைகளில் இயல் இசை நாடகம் என்றுமூன்றிலும் ஈடுபட்டு சாதனைப்புரிந்தார்இவர் இயற்றிய புதிய ராகங்கள் பாடலகள் இன்றும் பாடப்படுகின்றன. உம்சிவசக்தி அம்ருதபெஹாக் சோமகாதம்பரி ,இவர் பாடல்கள் பல அம்பாளை ஆராதிப்பதாக இருந்தன ஸ்ரீராஜராஜேஸ்வரியே இஷ்ட தெய்வம் என கேள்விப்பட்டேன் ,.தவிரஇவர் தமிழ் ,சம்ஸ்கிருதம் தெலுங்கு போன்ற மொழிகளில் இயற்றிருக்கிறார் இவர் இயற்றிய பாடல்களைக்கச்சேரியில் பாடினதில்லையாம் எல்லாம் இவரதுசிஷ்யர்கள் தான் பாடிப்பரப்பினார்கள். இத்தனைச்சிறப்புப்பெற்றிருந்தாலும்துளிக்கூட கர்வமில்லாமல் எல்லோரிடமும் அன்புட்ன் பழகி பலருக்கு பலஉதவிகளைச்செய்வார் என்று அவரை நன்கு அறிந்தவர்கள் கூறுகின்றனர் ,தவிரசினிமாவிலும்{பாமாவிஜயம் சகுந்தலை சதிஅனுசுயா ,உதயணன் வாசவதத்தை} நடித்திருக்கிறார்இவர் வடநாட்டிலும் பல ஹிந்துஸ்தானி பாடகர்களுடன் நட்புகொண்டு அவர்களின் ஹிந்துஸ்தானி ஸ்டைலையும் சில ராகத்தில் சேர்த்துபாடுவார் ,ப்டேகுலாம் அலி அவர்கள் இவருடைய பரம நண்பர் இவரது ரசிகர் இவரதுஹிந்தோளம்ஸாமஜவரகமனா" என்பதைக்கேட்டு தனது மால்கோசுடன்ஜுகல் பந்திப்போல் பாடுவாராம் இருவ்ரும் மூன்றுகாலங்களிலும்ஸ்வரங்கள் ராகாஅலாபனைப்போன்றவைகள் பாட கேட்டவர்கள்ஆனந்தத்தை அனுபவித்தனராம்இதேபோல் திரு பாலகந்தர்வா திரு பியாரிலால சாஹேப் போன்றவர்களும் இவரின்நண்பர்கள் ஆனார்கள் ,,ஒருதடவை இவர் டிஆர் மாலியின் புல்லாங்குழலைக்கேட்டப்பின்"என் பாட்டு இதன் முன் ஒன்றுமே இல்லை ,நல்லவேளையாக படிப்பு என் வசம்இருப்பதால் எதாவது வேலைத்தேடிக்கொள்வேன் என்று விளையாட்டாகச்சொல்லசெம்மங்குடி திரு ஸ்ரீனீன்வாசய்யர் அவர்களும்" ஆமாம் என்ன வாசிப்பு !நானும் என் நிலத்தைப்பார்த்துக்கொள்ளப்போய்விடுவேன் "என்றாராம்திரு ஜி என் பி எல்லோரையும் வாய்விட்டுப்புகழுவார் அவருக்குகொஞ்சம் கூட பொறாமையோ பேரசையோ இருந்ததில்லை ,இவர் முதல் கச்சேரி மைலாப்பூர் கோயிலில் நட்நதது ஒரு பெரிய பாட்கர்கச்சேரி பாட வரமுடியாத நிலையில் இருந்ததால் இவரைப்பாடச்சொன்னார்களாம்அன்றையக்கச்சேரியிலிருந்துஅவர் மேலே உயர்ந்துக்கொண்டே போனார் ,இவரது பாடும் விதம்,,,,,,,, தன்க்கென்று ஒரு பாணி அமைத்துக்கொண்டுபிருக்காக்களுடன் டெம்போ குன்றாமல்அப்படியே கடைசிவரை நீடிக்கும் ,,,,,குரலும் கணீரென்று இருக்கும்கீழ்ப்பஞ்சமும் மேல்பஞ்மும் மிகவும் எளிதாகத்தோட்டு நிற்கும்ஒரு தட்டிலிலேயே 16 ஸ்வரங்கள் மேலேயே பிருகாவுடன் போகமுடியும்,இவரது கல்பனா ஸ்வரம் மிகவும் அருமைசண்டவரிசையின் பிரயோகங்கள் வரும் ,சிலகீர்த்தனைகளுக்குசிட்டஸ்வரங்கள் இய்ற்றியிருக்கிறார் ,இவரது வாசுதேவயனி பாடலும் அந்த கலயாணி ராகமும்மறக்கமுடியாது அதேபோல் ரஞ்சனி நிரஞ்சனி என்ற ரஞ்சனி ராகக் கீர்த்தனையும்வசந்தபைரவி யில் நீதயராதாவும் இன்றும் என் மனதில் பதிந்திருக்கிறது,இவரது செல்வங்கள் இந்த இசைக்கலையில் முன்னுக்கு வரவில்லை .எனநினைக்கிறேன் ஆனால் இவரது சிஷ்யர்கள்புகழ்பெற்ற எம் எல்வி என்ற வசந்தகுமாரிதிரு திருச்சூர் ராமசந்திரன் திருமதி ராதா திருமதி ஜெயலட்சுமிதஞ்சாவூர் திரு கல்யாணராமன் திருமதி பூஷணி கல்யாண்ராமன்திரு டிஎஸ்பாலசுப்பிரமண்யன் மிகவும் உன்னதநிலையைஅடைந்திருப்பது மிகப்பெருமையாக இருக்கிறது ,இவர்பெற்ற உயர்ந்த பதவிகள் ஆஸ்தான வித்துவான் திருவனந்தபுரம்ஆஸ்தான வித்துவான் எட்டயப்புரம்சங்கீதகலாநிதி , பிரசிடண்ட் அவார்டு {டாக்டர் எஸ் ராதாகிருஷணன்அவர்களால் வழங்கப்பட்டது }ஆல் இந்தியா ரேடியோவில் deputy chief producer , principalof swathithirunal collegeஇவரைப்பெற்ற புண்ணிய தம்பதிகள் திரு ஜிவி நாராயணஸ்வாமிதிருமதி விசாலாக்ஷிஇவரது குரு திரு குருஸ்வாமி பாகவதர் மதுரை சுப்பிரமண்யர்எத்தனைக்காலம் ஆனாலும் இவரது இசை எல்லோர் மனதிலும்ஒரு பரவ்சத்தை அளிக்கும் என்பது உண்மை இந்த இசை மகானைத்தலை வணங்குகிறேன்

Thursday, January 21, 2010

என்னைக்கவர்ந்த ஜி.என் பி

பம்பாய் ஷண்முகானந்தசபாவில் முதல் வரிசையில் அமர்ந்திருந்தேன் .அன்றுநடக்கப்போகும் கச்சேரி திரு ஜி.என் பிஎன்ற பாலசுப்பிரமண்யம் அவர்கள். அதோ வந்து மேடைமீது அமருகிறார்எப்போதுமே சரியான நேரத்திற்கு ஆஜராகிவிடுவார் வெள்ளை வெளேரென்ற ஜிப்பா , வேஷ்டியுடன் காதிலும் பளீரென்ற கடுக்கன்மின்ன முகத்தில் ஒரு தேஜஸ் நெற்றியில் அழகான பொட்டு ,ஆங்கிலத்தில்ஹேண்ட்ஸம் என்று சொல்வார்களே அது இவருக்கு மிகப்பொருந்தும் .தீர்க்கமானஎடுப்பான நாசி , நல்ல அகலமான நெற்றி . .சுருதியுடன் "ஸா,,,"என்றுசேர்த்துக்கொள்ள சபை களைக்கட்டுகிறது ஒரு சரிகைஅங்கவஸ்தரம் இருந்தாற்போல் ஞாபகம் ,சுருதியைப்பலதடவைச்சரிப்பார்க்கிறார் ,பின் ஆரம்பமாகிறது கச்சேரி"வலசி வாச்சி யு னா ,,,என்ற நவாவர்ணம் கேதாரத்தில் ஆரம்பித்து,"பின்பேகடா கலயாணி என்று பலராகங்கள் தொடர மிக அருமையான வர்ணம் ,,,, பின் யோசனாஎன்ற தர்பார் ராகக்கீர்த்தனை தொடர்ந்தது ,பின் காம்போஜி விஸ்தாரமாகப்பாடதொடர்ந்து வந்தது நளினகாந்தி ,,பல வருடங்கள் ஆனாலும் அந்தக்கச்சேரி என்மனதில் பதிந்து இருக்கிறது கடைசியில் பாடிய "சொன்னதைச்செய்திட"என்றபாடலும் சிந்தை அறிந்து வாடி ",பிருகுமுகுந்தேகி ரஸனே "சிந்துபைரவியில்ஹிந்துஸ்தானி பஜன் போல் ஒரு பாடலும் மிக அருமையாக இருந்தன"திக்குத்தெரியாதகாட்டில்"பாடலைத்தான் மற்க்கமுடியுமா? ,அவரது கம்பீரமான தோற்றம் அவரது அருமையான குரல் பிருகாக்கள் கொண்ட ராகங்கள்தன்க்கென்று தனி பாணியை வகுத்துக்கொண்ட விதம் எல்லாம்என் மனதில் இன்றும் அப்படியே பசுமையாக நிற்கிறதுஅவருக்குப்பிடித்த ராகங்கள் தோடி, கலயாணி , பஹுதாரிஆந்தோளிகா ,ஆனந்தபைரவி பெஹாக் போன்ற ராகங்கள்என நினைக்கிறேன் ,படிப்பிலும் இவர் BA{Hons} தவிர கலைகளில் இயல் இசை நாடகம் என்றுமூன்றிலும் ஈடுபட்டு சாதனைப்புரிந்தார் இவர் இயற்றிய புதிய ராகங்கள் பாடலகள் இன்றும் பாடப்படுகின்றன. உம்சிவசக்தி அம்ருதபெஹாக் சோமகாதம்பரி ,இவர் பாடல்கள் பல அம்பாளை ஆராதிப்பதாக இருந்தது ஸ்ரீராஜராஜேஸ்வரியே இஷ்ட தெய்வம் என கேள்விப்பட்டேன் ,.தவிர
இவர் தமிழ் ,சம்ஸ்கிருதம் தெலுங்கு போன்ற மொழிகளில் இயற்றிருக்கிறார்இவர்இயற்றிய பாடல்களைக்கச்சேரியில் பாடினதில்லையாம் எல்லாம் இவரதுசிஷ்யர்கள் தான் பாடிப்பரப்பினார்கள். இத்தனைச்சிறப்புப்பெற்றிருந்தாலும்துளிக்கூட கர்வமில்லாமல் எல்லோரிடமும் அன்புட்ன் பழகி பலருக்கு பலஉதவிகளைச்செய்வார் என்று அவரை நன்கு அறிந்தவர்கள் கூறுகின்றனர் ,தவிரசினிமாவிலும்{பாமாவிஜயம் சகுந்தலை சதிஅனுசுயா ,உதயணன் வாசவதத்தை} நடித்திருக்கிறார்இவர் வடநாட்டிலும் பல ஹிந்துஸ்தானி பாடகர்களுடன் நட்புகொண்டு அவர்களின் ஹிந்துஸ்தானி ஸ்டைலையும் சில ராகத்தில் சேர்த்துபாடுவார் ,ப்டேகுலாம் அலி அவர்கள் இவருடைய பரம நண்பர் இவரது ரசிகர் இவரதுஹிந்தோளம்ஸாமஜவரகமனா" என்பதைக்கேட்டு தனது மால்கோசுடன்ஜுகல் பந்திப்போல் பாடுவாராம் இருவ்ரும் மூன்றுகாலங்களிலும்ஸ்வரங்கள் ராகாஅலாபனைப்போன்றவைகள் பாட கேட்டவர்கள்ஆனந்தத்தை அனுபவித்தனராம்இதேபோல் திரு பாலகந்தர்வா திரு பியாரிலால சாஹேப் போன்றவர்களும் இவரின்நண்பர்கள் ஆனார்கள் ,,ஒருதடவை இவர் டிஆர் மாலியின் புல்லாங்குழலைக்கேட்டப்பின்"என் பாட்டு இதன் முன் ஒன்றுமே இல்லை ,நல்லவேளையாக படிப்பு என் வசம்இருப்பதால் எதாவது வேலைத்தேடிக்கொள்வேன் என்று விளையாட்டாகச்சொல்லசெம்மங்குடி திரு ஸ்ரீனீன்வாசய்யர் அவர்களும்" ஆமாம் என்ன வாசிப்பு !நானும் என் நிலத்தைப்பார்த்துக்கொள்ளப்போய்விடுவேன் "என்றாராம்திரு ஜி என் பி எல்லோரையும் வாய்விட்டுப்புகழுவார் அவருக்குகொஞ்சம் கூட பொறாமையோ பேரசையோ இருந்ததில்லை ,இவர் முதல் கச்சேரி மைலாப்பூர் கோயிலில் நட்நதது ஒரு பெரிய பாட்கர்கச்சேரி பாட வரமுடியாத நிலையில் இருந்ததால் இவரைப்பாடச்சொன்னார்களாம்அன்றையக்கச்சேரியிலிருந்துஅவர் மேலே உயர்ந்துக்கொண்டே போனார் ,இவரது பாடும் விதம்,,,,,,,, தன்க்கென்று ஒரு பாணி அமைத்துக்கொண்டுபிருக்காக்களுடன் டெம்போ குன்றாமல்அப்படியே கடைசிவரை நீடிக்கும் ,,,,,குரலும் கணீரென்று இருக்கும்கீழ்ப்பஞ்சமும் மேல்பஞ்மும் மிகவும் எளிதாகத்தோட்டு நிற்கும்ஒரு தட்டிலிலேயே 16 ஸ்வரங்கள் மேலேயே பிருகாவுடன் போகமுடியும்,இவரது கல்பனா ஸ்வரம் மிகவும் அருமை
சண்டவரிசையின் பிரயோகங்கள் வரும் ,சிலகீர்த்தனைகளுக்குசிட்டஸ்வரங்கள் இய்ற்றியிருக்கிறார் ,இவரது வாசுதேவயனி பாடலும் அந்த கலயாணி ராகமும்மறக்கமுடியாது அதேபோல் ரஞ்சனி நிரஞ்சனி என்ற ரஞ்சனி ராகக் கீர்த்தனையும்வசந்தபைரவி யில் நீதயராதாவும் இன்றும் என் மனதில் பதிந்திருக்கிறது,இவரது செல்வங்கள் இந்த இசைக்கலையில் முன்னுக்கு வரவில்லை .எனநினைக்கிறேன் ஆனால் இவரது சிஷ்யர்கள்புகழ்பெற்ற எம் எல்வி என்ற வசந்தகுமாரிதிரு திருச்சூர் ராமசந்திரன் திருமதி ராதா திருமதி ஜெயலட்சுமிதஞ்சாவூர் திரு கல்யாணராமன் திருமதி பூஷணி கல்யாண்ராமன்திரு டிஎஸ்பாலசுப்பிரமண்யன் மிகவும் உன்னதநிலையைஅடைந்திருப்பது மிகப்பெருமையாக இருக்கிறது ,இவர்பெற்ற உயர்ந்த பதவிகள் ஆஸ்தான வித்துவான் திருவனந்தபுரம்ஆஸ்தான வித்துவான் எட்டயப்புரம்சங்கீதகலாநிதி , பிரசிடண்ட் அவார்டு {டாக்டர் எஸ் ராதாகிருஷணன்அவர்களால் வழங்கப்பட்டது }ஆல் இந்தியா ரேடியோவில் deputy chief producer , principalof swathithirunal collegeஇவரைப்பெற்ற புண்ணிய தம்பதிகள் திரு ஜிவி நாராயணஸ்வாமிதிருமதி விசாலாக்ஷிஇவரது குரு திரு குருஸ்வாமி பாகவதர் மதுரை சுப்பிரமண்யர்எத்தனைக்காலம் ஆனாலும் இவரது இசை எல்லோர் மனதிலும்ஒரு பரவ்சத்தை அளிக்கும் என்பது உண்மை இந்த இசை மகானைத்தலை வணங்குகிறேன்

ஏழுசை வள்ளல்

அந்த மாணவன் தன் வீட்டிலிருந்து கபில நதி வழியாகச்சென்றுகொண்டிருந்தான் நடுவில் நின்று தன் காபிநோட்டை எடுத்துப்பார்த்தான்,அந்த நேரம் அவனது ஆசிரியர் அங்கு வந்தார் ," என்ன இங்கு நின்று என்ன செய்கிறாய் ? உனக்குத்தான் படிப்பு வரவில்லையே! கொண்டா அதை ,"என்றபடி அவனது நோட்டைகிழித்து நதியில் வீசி எறிந்தார்"போ உன் வீடு திரும்பிப்போ உனக்குத்தான் சங்கீதம் நன்னா வரதேஅதைப்பிடிச்சுக்கோ இன்மேல் பள்ளிக்கு வராதே "ஸ்கூலுக்குக்போனமகன் உம்மென்ற முகத்துடன் திரும்பி வந்தான் ,அவன் அம்மாவிஷயம் அறிந்தாள் ,அவரே பெரியஇசை மேதை தான் ,அவனை பக்கண்ணா என்ற ஒன்றுவிட்ட சகோதரரிடம் இசைப்பயிலஅனுப்பிவைத்தார் ,குறுகிய காலத்துக்குள்ளேயே அந்த மாண்வன் எங்கேயோ போய்விட்டான் ,,,எங்கேதன்னையும் மிஞ்சிவிடப்போறானே என்ற எண்ணத்தினால் குறுகிய மனப்பான்மையுடன்ஒரு ஜோசியரை வரவழைத்தார் ,அந்த ஜோசியர் அஹோபிலமட பண்டித் ,,,அவரும் வந்தார் சினிமாவில் வருவதுப்போல் கையைப்பார்த்துவிட்டு "இந்தப்பையனுக்கு இசையே வராது வந்தாலும் முன்னுக்கு வரமுடியாதபடிகிரகங்கள் இருக்கே" என்றார்இதுதான் இந்த மாண்வனின் வெற்றிக்கு முதல் படி ,எப்படியும்உச்சியை எட்டிவிடவேண்டும் என்று மனதிலே வீம்பு கொண்டார்தன் மாமாவின் உதவியால் பிடாரம் கிருஷ்ணப்பாவிடம் இசைப்பயிலகுருகுலமாகச்சேர்ந்தார் , அவரது 16 வயத்லிருந்து ஆரம்பித்து சுமார் 21வருடங்கள் வெற்றிபடிகளிலேயேஏறினார் பட்டங்கள் குவிந்தன ,,முதன் முறையாக ஏழு தந்திகள் கொண்டவயலினைக்கண்டுப்பிடித்து தன் லட்சியத்தை அடைந்தார்,இப்போது தெரிந்திருக்கும் இவர் யாரென்று ?.........வயலின் மேதை மைசூர் திரு சௌடையா தான் இவர் ,இவர் சாதகத்தைச்சொல்லிமுடியாது ஒரு நாளைக்கு 14 மணி நேரம் அசுர சாதகம்செய்வாராம் தவிர பிராணயாமம் யோகாதியானம் உடற்பயிற்சி குருசேவை என்று பலவற்றில் ஈடுபடுவார் ,இவர் தினமும் அதிக பயிற்சி செய்வது சரளிவரசை சண்டவரிசை அலங்காரம்,,,,,,,,அதனால் அஸ்திவாரம் மிகவும்பலமாக இருந்தது ஆரம்பத்தில் ஒரு கச்சேரியில் இவரது கைப்பிசற கொஞ்சம்
அபஸ்வரம் கேடக குரு அந்த இடத்திலேயேகன்னத்தில் அறைந்துவிட்டாராம் ,இவரது வயலினில் சுருதி பிசகாமல் இருக்க ஏழு தந்திகள் கொண்டவயலினைக்கண்டுப்பிடிக்கும் எண்ணம் கொண்டார்தன் குருவின் ஆசிகளுடன் சப்தஸ்வர தேவதைகள் ஆசிகளுடன் மைசூர் ரங்கப்பாஉதவியுடன் ஏழு தந்திகள் கொண்ட வயலின் இவர் கைகளில் ஏறி தோளைஅலங்கரித்தது ,இந்த வயலின் மேதையைபெற்ற தம்பதிகள் திரு அகஸ்தியகௌடா திருமதி சுந்தரம்மாஇவர் எல்லா பிரபல வித்வான்களுக்கும் பக்கவாத்தியம் வாசித்திருக்கிறார்மதுரை மணிஅய்யர் , மகராஜபுரம் அவர்கள்ஆலத்தூர் பிரதர்ஸ் செம்மங்குடி ,அரியக்குடி செம்பை ,,என்ற பலர் இதில் இடம் பெறுவர்தவிர இவர் சொந்த சாஹித்யமும் இயற்றிருக்கிறார் ,இவர் வாங்கிய அவார்டுகள் பட்டங்கள் பலசங்கீத மணி , வாத்ய ரத்னாகரா ,, ஏழிசை வள்ளல்தந்திரி விலாஸ் இன்னிசை நாதமணி நாத சுதார்ணாசங்கீத சூடாமணி கலைமாமணி நாதயோகீஸ்வராசுஸ்வர் சுகலய சங்கீதா நாதக்கனல் வயலின் கலாநிதி சங்கீத சுதா பிரவாஹா மதுரை கலாபிரவீண்சங்கீத கலாநிதி ,,,,,,

இவர் பெயரில் சௌடையா மெமோரியல் ஹால் என்று 1980ல் வயலின் உருவத்தில் ஒரு பெரிய கட்டடம் கட்டப்பட்டதுசுமார் ஆயிரம் பேர் அமரலாம் இன்றும் அங்குப்பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன்அங்கு ஒரு தெருவின் பெயர் சௌடையா தெரு எனச்சூட்டப்படிருக்கிறதுசங்கீத ரதன சௌடையா ம்யூசிக் அவார்டு கொடுக்கப்டுகிறதுஇவர்து பிரதமசிஷ்யர் வி சேதுரமய்யா அவர்கள் இவரது மற்றொரு சிஷ்யர் ராமரத்னம் சங்கீத கலாரத்னா மைசூர் இசைக்கல்லூரியில்முதல்வர்.

இவர் திருமகூடலூவில் 1895ல் பிறந்தார் 19 ஜனவரி 1967ல்மறைந்தார்இந்தக்கட்டுரை எழுத மூலகாரணம் ரேடியோவில் அவர்து இசைக் கேட்டது தான் தோடியில் ஏராநாபை வர்ணம் ,,,எனக்கு,,,,,அவரது ஞாபகங்கள்:வரிசையாக வந்தன ,,,,,,,அந்த இசைஞானிக்கு என் வந்தனம்