தெலுங்கு கன்னட அன்பர்களுக்கு வரும் வருடபிறப்புடன் மராட்டியருக்கும் சிந்தி பேசுபவருக்கும் இதே நாளில் வருடபிறப்பு வருகிறது மராட்டியர்கள் இதை குடிபட்வா என சொல்கின்றனர் ,புராணக்கதைபடி பிரும்மா பூமியைச்சிருஷ்டித்த தினம். என்கிறார்கள் இவர்கள் அத்துடன் தசாவதாரத்தில் மத்ஸ்ய அவதாரமாக எடுத்த நாள் இது என்றும் சொல்கிறார்கள் . ஒரு கலசம் போன்ற பித்தளை அல்லது செம்புபாத்திரத்தை எடுத்து அதில் ஸ்வஸ்திக் போன்று சிவப்பு கலரில் வரைந்து பின் ஒரு பட்டுத்துணியில் சுற்றி ஒரு கம்பில் கவிழ்த்து வைப்பது மராட்டியர்களின் வழக்கம் இதனால் சுபீக்ஷம் வருவதாகவும் வெற்றி கிடைப்பதாகவும் ஒரு நம்பிக்கை ,இன்றைய தினத்தில் தான் சிவாஜி மகராஜ் போரில் மகத்தான வெற்றி பெற்று திரும்பினாராம் நாம் செய்வது போல் இவர்களும் "பஞ்சாங்க சிரவணம் "செய்கிறார்கள் பட்வா என்பது சம்ஸ்கிருத மொழியிலிருந்து வந்தது தான்யம் என்று பெயர் " விவசாயிகள் தான்யங்களை அறுவடைச்செய்ய ஆரம்பிப்பார்கள் மஹாராஷ்டிராவில் மே மாதத்திலிருந்தே மழை ஆரம்பித்து செப்டம்பர் வரை இருக்கும் நாம் செய்வது போலவே இவர்களும் வெல்லப்போளி செய்கின்றனர் இதை பூரன்போளி என்கின்ற்னர் பின் பச்சடியும் உண்டு அறுசுவைகல்ந்த ஒரு பச்சடி வேப்பம்பூ வெல்லம் மாங்காய் புளி பச்சைமிளைகாய் உப்பு என்று எல்லாம் கலந்த பச்சடி உண்டு வாழ்க்கையில் இதுபோல் பல வநதாலும் எல்லாம் சமபாவமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லாமல் சொல்லும் பச்சடி இது தெலுங்கு கன்னடக்காரர்களும் இது போல் தித்திப்பு போளியும் பச்சடியும் செய்கின்றனர் இப்போது வருவோம் சிந்திநதிக்கு ,,,,,, "சேத்தி சாந்த ஜ்யோ லக்லக் வதாயும் அதவ " இது சிந்திகளின் வாழ்த்து " தோஹான் கெ பீ " {உங்களுக்கும் }" வாழ்த்துக்கு பதில் இவர்களது பூஜை கொஞ்சம் வித்த்யாசமாக இருக்கிறது சப்ரிமலை போகும் பக்தர்கள் 40 விரதம் வைப்பதுப்போல் இவர்களும் வைத்துக்கொள்கின்றனர் சிந்து நதியில் குளித்து ஒரே உடையைத்துவைத்து பின் காயவைத்துக்கட்டுகின்றனர் ,தாடி வளர்க்கின்றனர் சோப்பு எண்ணெய் தேப்பதில்லை இவர்களின் இஷ்ட தெய்வம் "ஜூலேலால " இவர்கள் தண்ணீரைப்பூஜிக்கின்றனர் வருணபகவானைப்பூஜிக்கின்றனர் தங்களுக்கு நிம்மதி மனசாந்தி பின் அந்த இறைசக்க்தியின் அருளும் கிடைக்க வேண்டிக்கொள்கின்றனர் இந்த விரதம் முடித்தப்பின் நன்றி தெரிவிக்கும் நாள் என்றும் கொண்டாடுகின்றனர் , அன்று விள்கேற்றி சர்க்கரை மிட்டாய் எடுத்து பின் கலசத்தில் ஏலக்காய் சேர்த்து தேங்காயுடன் விளக்கேற்றி அந்த ஜோதியுடன் வலம் வந்து அவர்களின் கடவுளையும் கும்பிடுகின்றனர் பூஜ்ய ஜூலேலால் தேவ்தா வை கோஷ்மிட்டு ஜெய்ஜெய்காரம் எழுப்புகின்றனர் இன்றைய தினத்திலிருந்து வசந்த நவராத்த்ரி ஆரம்பிக்கிறது உத்தரபிரதேசத்தில் .தில்லியில் பலர் ஒன்பது நாட்களும் பட்டினி கிடந்து சக்தியைப்பூஜிப்பதைப்பார்த்திரு கன்னிகைகளுக்கு பூஜை செய்து வளைகள் அடுக்கி மருதாணி இட்டு பின் பூரியும் சொஜ்ஜிபோன்ற இனிப்பையும் வழ்ங்குவார்கள் நான் இருந்த பள்ளியில் பலர் இந்த விரதம் இருப்பதைப் பார்த்திருக்கிறேன் ஆனால் அந்தத்தேவியின் சக்தியோ என்னமோ அவர்களுக்குப்பசியேதெரியாது ஸ்ரீராமர் யுத்தத்தில் வெற்றி பெற சக்தியைப்பூஜித்தாராம் அதையே இந்த நாட்களில் ஜண்டேவாலா மாதா என்ற கோயில் சென்று சிற்ப்பாகக்கொண்டாடுகின்றனர் அத்துடன் மெஹ்ரோலி என்ற இடத்தில் இருக்கும் காத்யாயினி கோயிலும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும் அந்தத்தேவியின் அழகைச்சொல்லமுடியாது 24 கைகள் எல்லாமே ஸ்வர்ண மயம் ,,,,,,, சிங்கத்தின் மேல் அமர்ந்திருக்கிறாள் ,,,,என் கண் முன்னால் அவள் இன்றும் நிற்பது தெரிகிறது எல்லா அனப்ர்களுக்கும் குடிபட்வா வின் வாழ்த்துகள் ![]() ![]() ![]() ![]() ![]() |
Saturday, March 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment