Thursday, November 19, 2009

பெருமாள் செய்யும் சிரார்த்தம்

கயாவுக்குப்போய் சிரார்த்தம் செய்த பலன் அடைய ஒரு கோயில்....,,,,அந்தக்கோயிலில் எல்லோருக்கும் அருள் புரிபவர் ஸ்ரீலட்சுமிநாராயணப்பெருமாள் ,இந்தக்கோயிலை ஆராதிப்பவர் வைகானஸமகான்கள்.பூஜை முடிந்தவுடன் அவர்களுக்கே முதலில் தீர்த்தம் பிரசாதம்வழங்கப்படுகிறது இந்தப்பெருமாள் மீது அளவுகடந்த பக்தி வைத்த ஒரு திவான் பெருமாளிடம் "பிள்ளை இல்லாதவ்ர்கள் ,அநாதைகள் இறந்தால் அவர்களுக்கு ஸ்ரார்த்தம் செய்யஒருவரும் இருப்பதில்லை ஆகையால் தாங்களே அவர்களுக்கு ஸ்ரார்த்தம் செய்து அவர்களைக் கரையேற்றவேண்டும் .இதை நிறைவேற்றுவீர்களா?'என்று மனமுருக யாசித்தான் பெருமாளும் அதற்கு ஒப்புக்கொண்டார் , அதன்படி திதியன்று பக்தர்கள் இங்கு வந்து தினமும் நடக்கும் பூஜையில் தங்கள் பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்துக்கொண்டு பெருமாளிடம் சம்ர்ப்பிக்கிறார்கள் , இதை "ஸ்ரார்த்த ஸம்ரக்ஷ்ணம்"என்று சொல்கிறார்கள் பகல் 12 லிருந்து 1 மணிவரை பெருமாளும்ஒருகாலம் ஆராதனை மட்டும் ஏற்கிறார் பின் விரதம் இருக்கிறார்பிரண்டையுடன் எள் சேர்த்த துவையல் வெண்பொங்கல் தயிர்சாதம் பிரசாதமாகத் தரப்படுகிறது இதை "ஸ்ரார்த தளிகை "என்கின்றனர் பிரண்டையும் எள்ளும் சிரார்த்திற்கு மிக முக்கியம்,அமாவாசை , ஏகாதசி நாட்களில் பெருமாள் மூலம் சிரார்த்த திதி செய்ய கயைசென்ற பலனைத்தருகிறதுஅருகில் ஸ்னானம் செய்து வர புஷ்கரிணி ஜீயர் குளம் உள்ளதுஇந்தக்கிராமத்தை "பிண்டம் வைத்த நல்லூர் "என்கின்றனர் இதன் முதல் பெயர் "புண்டரீக நல்லூர்" என்பதாம் . கோயில் உள்ளே நுழைந்ததும் மூலவரைத்தரிசிக்கிறோம்மூலவரை ஸ்ரீ லட்சுமி நாராயண்ப்பெருமாள்" என்கின்றனர்உதசவர் பெயர் மாறிவிடுகிறது அவரை "ஸ்ராத்த ஸம்ரக்ஷணநாராயணன் "என்று அழைக்கின்றனர் .பல குடும்பத்தில் வியாதியினாலும் மன உளைச்சல்களினாலும்மனநிம்மதி இழந்து கண்கலங்குவார்கள் ஜோதிடர்கள் பித்ரு தோஷம் என்றுகூறுவது உண்டு அந்த மாதிரி நிலையில் ஒவ்வொரு அமாவாசையிலும் இந்தகோயிலுக்கு வந்துபெருமாளைச்சேவிக்க தோஷ நிவிருத்தி ஏற்படும்பெருமாள் சன்னிதிக்கு அருகில் மகாலட்சுமியும் தன் கடைக்கண் பார்வையால்அருள் புரிகிறாள் ,ஒவ்வொரு வெள்ளியும் இங்கு வந்து மஹாலட்சுமிஅஷ்டோத்திரம் ஸ்ரீசூக்தம் சொல்ல வாழ்வில்வளம் உண்டாகி ஐஸ்வர்யம் பெருகும்இந்தகோயில் செங்கல்பட்டு அருகே நென்மேலி என்னும் கிராமத்தில் இருக்கிறது ,

விட்டல் விட்டல் பாண்டுரங்க விட்டல்

சந்த் துக்காராம் பாட்டுரங்க விட்டல் மீது உயிரையே வைத்திருந்தார்,அவருடையபக்தியைக்குறிப்பிடும் ஒரு சம்பவம் ஒரு மராட்டியர் என்னிடம் தெரிவித்தார் ,சந்த் துக்கராமின் பெண்ணிற்கு ஒருமகன் இருந்தார். அவர் பெயர் ஸ்ரீ வாசுதேவபாவா.துக்காராமுக்குப்பின் இந்தப்பேரன் அவரைபற்றி சொற்பொழிவாற்றுவார் . பக்தவிஜயம் என்றபுத்த்கத்தைப்படிப்பார் கூட பாடல்களும் பாடுவார் . அப்போது அங்கு ஒருமுஸ்லிம் பாதுஷா அரசு செய்து வந்தார் அவர் இந்தச்சொற்பொழிவுக்கு நாள் தவறாமல் வந்து மன மகிழ்ந்துப்போவார். இந்த வாசுதேவ பாவாவும் பல சிறப்பான"அபங்க்" என்று சொல்லப்படும் மராட்டிப்பக்திப்பாடல்களைப் பாடி எல்லோரையும் அசர வைப்பார் கதை முடிக்கும் நாள் வந்தது ,வாசுதேவ பாவாவும்" "இப்படியாக என் தாத்தாவான ஸ்ரீதுக்காராம் தன் பூத உடலுடன் விண்ணகம் சென்றார் " என்று முடித்தார் ,பாதுஷா இதை நம்பவில்லை ."ஹாஹா ஹா யாராவது உடலுடன் வானீல் போக முடியுமா?இதை யாராவது பார்த்தீர்களா? இந்தசபையில் பார்த்தவர்இருக்கிறார்களா? "

இரு வயதானவர்கள் எழுந்தனர் ."அரசே நாங்கள் அப்போது சிறுவர்களாக இருந்தோம். நாங்கள்அந்தக்காட்சியைக்கண்டோம் ""என்ன இது கதை? நான் இதை நம்பவில்லை "என்றார் அரசர்பேரன் எழுந்தார் .. பின் பேசினார்

"அரசே இதைப்பற்றி என் தாய்க்கு நன்கு தெரியும் இருங்கள் நான் உள்ளே போய்கேட்டுவருகிறேன் "உள்ளே போனவர் வழியில் ஒருவரைக்கண்டார் ,அவர் தான் தினமும் பிரவசனம் கேட்க வருவதாகவும் தானேதுக்காராம் என்றும் கூறி தன் சுய உருவத்தைக்காட்டினார் .உடனே தன் தாயை அழைத்துவந்து"அம்மா இங்கே நின்றுகொண்டிருக்கும் இவர்தான் உங்கள் தந்தையா?''அப்ப்டியே மகள் தந்தையின் காலில் விழுந்து வணங்கி"ஆம் வாசுதேவா இவர்தான் உன் பாட்டனார் ஸ்ரீதுக்காராம் அவர்கள்"என்றாள் பின் அந்தபேரன் "நான் இதை அரசரிடம் எப்படிச்சொல்லி நம்பவைப்பேன் .ஒரு வழிசொல்லுங்கள் " என்று கேட்க துகாராம் "அப்பா வாசுதேவா நான் என் தம்பூராவைத்தருகிறேன்,இதைச்சபையில் காட்டி " என் தாத்தா இந்த பூத உடலோடு விண்ண்கம் சென்றது உண்மையானால் இந்தத்தம்பூராவும் அந்தரத்தில் பறந்து செல்லட்டும் என்றுச் சொல்லி வீசி எறிந்துப்பார் " என்று கூறி மறைந்துவிட்டார் ,அதேபோல் அரச சபைக்கு வந்தார்

"அரசே உங்கள் கேள்விக்கு இந்தத்தம்பூரா பதில் சொல்லும் ,தம்பூராவே! இறைவா, விட்டலா என் தாத்தா உடலுடன் விண்ணுலகம் சென்றது உண்மையானால் இந்தத்தம்பூராவும் பறந்து செல்லட்டும் "என்று கூறியபடி ஆகாயத்தை நோக்கி வீசினார் தம்பூராவில் ஓங்கார நாதம் எழு கூடவே துகாராம் அவர்களின்குரலும் விட்டல விட்டல என்று ஒலித்தது . அந்தக்குரலைஅரசரும் கேட்டார் , அப்படியே கீழே விழுந்து வணங்கினார்

விட்டல விட்டல பாண்டுரங்க விட்டல் பணடரிநாத விட்டலா,,,,,,

சிறுவர் தினம்

அன்பர்கள் எல்லா வீட்டுச்சுட்டிகளுக்கும் என் இனியகுழந்தைத்தின வாழ்த்துகள் ".குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில்"இல்லையா ? அன்பு என்ற ஒரு இனிப்புக்குஅவர்கள் கட்டுபடுவார்கள் .சில பெற்றோர்கள் மிகவும் கறாராக இருந்து அந்தக்குழந்தையை வளர்ப்பார்கள் ,அந்தக்குழந்தையும் எல்லா வேலையும் சரியாகத்தான் செய்யும் ஆனால் அந்த வேலை பயத்தினால் செய்யப்படுகிறது ,இந்த நிலை உருவாக்காமல் அன்பாலேயே ஒழுங்கு முறைகளைக்கற்றுக்கொடுக்க பெற்றோர்கள் முயல வேண்டும் உங்கள் சுட்டிகளுக்கு ஒருபடைப்பு என் ஆசிகளுடன்....

ரகு நாலு வயது சிறுவன் தன் தாயுடன் பேசிக்கொண்டிருக்கிறான் தாய் சமையல் செய்வதில் பிசியாக இருக்கிறாள்"அம்மா இன்னிக்கு எனக்கு லீவும்மா மஜாதான் ,,""எதுக்கு லீவுன்னு தெரிமா ரகு ?""ஓ தெரியுமே ,இன்னிக்கு குழந்தைகள் தினம்""குழந்தைகள் பிறந்த தினம் அம்மா"" எந்தக்குழந்தைப்பிறந்தது ? தெரியுமா உனக்கு ?"" அத ஒத்தரும் எங்கிட்ட சொல்லவேயில்லையே!""அதுவா நான் சொல்றேன் தெரிஞ்சுக்கோ . இந்தத்தினம் முன்னாள்பிரதமர் சாச்சா நேருவோட பர்த்டே ,, அதான் பிறந்த தினம் "" அம்மா எனக்கு ஒரு சந்தேகம் ! ஸ்ரீராமர் பிறந்த தினத்தைஸ்ரீர்ரமநவமின்னு சொல்றா ,கண்ணன் பிறந்த தினத்தை கோகுலாஷ்டமின்னு சொல்றாஆனா இந்த சாச்சாநேருஜி பிறந்த தினத்தை நேரு தினம்னுனா சொல்லணும் எதுக்குகுழந்தைகள் தினம் னு சொல்றா?ஆமாம் சாச்சான்னா என்ன்?"சாச்சான்னா சித்தப்பான்னு அர்த்தம்""அப்ப சித்தப்பா தினம்னு சொல்லாமே ஏன் குழந்தைகள் தினம் ?

'"அடராமா இது பார் உன்னோடு பேசிண்டே சாம்பாருக்கு போடும் உப்பைப் பாலில்போட்டுட்டேன் 'போ போ உன் அப்பா சும்மா தான்பேபருக்குள் மூழகி இருக்கிறார் .அங்குப்போய் எல்லாம் கேளு

""போம்மா சந்தேகம் கேட்டா சொல்லாம என்னைத்திட்டறயே!சரி நன் அப்பாட்ட எல்லாம் கேட்டு தெரிஞ்சுக்கிறேன் "

"வாடா ரகு செல்லமே வா நான் எல்லாம் உனக்குச்சொல்றேன் இந்த நேருமுன்னாள் பிரதமர் , பெரிய பங்களாவில் பிறந்து வளர்ந்தாலும் எளிமையை விரும்பினார் .சுதந்திர போராட்டத்திலும்பங்கு பெற்றார் , அவருக்குக்குழந்தைகள்னா உயிர் , அவர் பிறந்தநாளின் போது பல குழந்தைகள் மத்தியில் இவர் நட்னமாடுவார் பலூன் ஊதுவர் குழந்தைகளுடன் அளவளாவுவார் , குழந்தைகளும் சாச்சா என்று அவரிடம் ஒட்டிக்கொள்ளும் ஹிந்தியில் சாச்சா என்றால்சித்தப்பா ,,,,,,,குழந்தைகள் மேலிருக்கும் அன்பினால் தான்அவரது பிறந்தநாளை குழந்தகைகள் தினமாகச்செய்துவிட்டார்,அவருக்கு சிவப்பு ரோஜா ரொம்பப்பிடிக்கும் அதை தன் நீள அங்கியில் சொருகிவைத்திருப்பார் ,பார்த்தால் ராஜகுமாரன் போல் நல்ல களையுடன் இருப்பார் இன்று உனக்கு அவரது சரித்திரத்தின்சிடி போட்டுக்காட்டறேன் சரியா?"சரி அப்பா நானும் இன்று அவர் மாதிரியே டிரெஸ் செய்துக்கொண்டு ரோஜாப்பூசொருகி கொள்ளுவேன் சரியா ?" சரிடா செல்லம் "அப்பா அவனது உடையில் மூவர்ணக்கொடியை குண்டூசியால் குத்திகையில் பலூன்களும் கொடுக்கிறார் ,அந்தப்பிஞ்சுமுகம் மலர்ந்தது

கங்கையும் கவேரியில் குளித்தாள்

கங்காதேவியின் முகம் வாடி இருந்தது ,மனதுக்குள் ஒரு வருத்தம் தன்னை மறந்து தியானம் செய்தபடி பிரும்மாவை நினைத்தாள் பிரும்மாவும் அங்கு தோன்றினார்"கங்கா தேவி, உன் முகத்தில் ஏன் இந்த வாட்டம் ? பரமேஸ்வரனின் சிரசில் இருக்கும் பாக்கியம் அல்லவா உனக்குக்கிடைத்திருக்கிறது .உன் சரணமடைந்து ஸ்னானம் செய்ய எல்லா பாபங்களும் விலகுகின்றனவே,அத்தனைப்புனிதமாளவள் ஆயிற்றே ! ஏன் இந்த வருத்தமான முகம்

""ஸ்வாமி என் கவலையும் அது தான் என்னை அடைந்து பாபங்களைப்போக்க பல மக்கள் ஸ்னானம் செய்து போகின்றனர் ,அந்தப்பாப மூட்டைகளை நான் சுமக்கிறேன் என் இந்தப்பாப மூட்டைகளை எங்கேகொண்டு அழிப்பது ? நானும் இந்தப்பாபச்சுமைகளைக் களைய எதேனும் வழிசொல்லுங்கள்"

"பிரும்மா தன் கண்களை மூடியபடியே யோசித்து பின்"கங்கா தேவியே உன் பாபங்களைக்க்ழிக்க ஒரு வழி இருக்கிறது ஒவ்வொரு வருடமும் துலாமாதம் கடைசி நாளன்று மயிலாடுதுறை சென்று அங்குஇருக்கும் காவேரியில் முழுகி ஸ்னானம் செய்ய உன் பாபங்கள் கறைந்து விடும் உன்னைப்போல் இருக்கும் மற்ற புண்ணிய நதிகளான யமனை நர்மதா சிந்து போன்ற நதிகளும் இந்தத்தினத்தில் அங்கு வந்து முழுக்கு போடும் ,மக்களும் இன்று இங்குக்குளிக்க பாபங்கள் நீங்கப்பெறுவார்கள் இப்போது மகிழ்ச்சிதானே !

"" நன்றி சிருஷ்டிகர்த்தாவே இதோ இப்போதே அங்குப்போகிறேன் என் பாபங்களைப்போக்கிக் கொள்கிறேன் "

கங்கையும் மற்ற புண்ணிய நதிகளுடன் வந்து காவேரியில் கலந்தாள் ,"ஆஹா நான் என்ன தவம் செய்தேன் இன்று எல்லா புண்ணிய நதிகளும் என்னிடன்வந்துசேர்ந்தனவே .இன்று என்னிடம் வந்துஸ்னானம் செய்ய எல்லாப்புண்ணிய நதிகளில் ஸ்னானம் செய்த பலன் கிடைக்கும்பாப விமோசனம் கிடைக்கும் "என்று எண்ணி மனமகிழ்ந்து காவேரி பொங்கிக்குதித்தபடி சலசல வென்று ஓடத்தொடங்கினாள் ,ஐப்பசிமாதம் கடைசி நாள் காவேரியில் போடும் முழுக்கு ஆதலால் "கடைமுழுக்கு" என் பெயர் வந்தது இதக்கடைமுழுக்குடன் இன்னொரு முழுக்குவும் சமபந்தப்பட்டிருக்கிறது அதுதான் "முடவன் முழுக்கு "பெயரிலேயே தெரிகிறது ஒரு முடவன் காவேரியில் வந்துமுழுக்கு போட்டிருப்பான என்று ,,,,,,ஆம் ஒரு முடவன் எல்லா வருடங்களும் ஐபபசி மாதம் கடைசி நாள் மாயவரம் வந்து காவேரியில் குளித்து அருள்மிகு மயூர்நாதரைப்பூஜிப்பான் .,வயதாக அவனது தெம்பும் திடமும் குறைந்து வர அவனால் வேகமாக நடக்க முடியாத நிலை வந்தது தவிர முடவனாக இருந்ததால் வேகமாக நடக்கவும் முடியவில்லை ஒரு சமயம் அவன் ஐப்பசி மாதம் கடை முழுக்குவிற்குக் கிளம்பினான் ,ஆனால் வழியில் நடைத்தளர்ந்து அவனால் அந்தச்சமயத்திற்கு அங்குப்போகமுடியவில்லை,உடல் சோர்ந்து உள்ளமும் சோர்ந்து மனம் வருந்தி அழ ஆரம்பித்தான் பின் மயூர நாதரிடம் " என் தெய்வமே நான் இன்று அங்கு வர நினைத்தும் வேகமாக நடக்கமுடியாமல் போய் என்னால் கடைமுழுக்கு செய்யமுடியவில்லையே ,பாபச்சுமை சேர்ந்துவிடுமே ! எனக்கு நீங்கள் தான் அருள்புரிய வேண்டும்"அவன் இதைச்சொல்லி முடித்தவுடன் ஒரு அசரீரி கேட்டது"பகதா கண்கலங்காதே நாளை கர்த்திகை முதல் தேதி அன்றும் நீ வந்து காவிரியில் நீராடு உனக்கு ,முழுமாதம் ஸ்னானம் செய்தபலன் அளிக்கிறேன் , உனக்கு பாபவிமோசனம் கிட்டும் "

,அந்த மயூர நாதரே பேசியதைக்கண்ட முடவன் மகிழ்ச்சியுடன் மாயவரம் போய் முழுக்குப்போட்டான் இதுவே முடவன் முழுக்கு என்று .ஆயிற்று .கார்த்திகை முதல் தேதியில் இங்குவரும் பக்தர்களின் எண்ணிக்கை சொல்ல இயலாது முன்பெல்லாம் காவேரி ஆற்றில் நீர் நிரம்பி இருக்கும் இப்போது மழை வாராமல் போனால் நிலைமையே வேறு , ,இந்த முழுக்கு போட்டப்பின் மயூரநாதரின் தரிசனம்செய்ய மனதிற்குள் அப்படி ஒரு அமைதி ,,நிம்மதி கிடைக்கும் . எல்லா புண்ணிய நதிகள் சேர்ந்து இருந்து அதில் குளிக்கவும் கொடுத்து வைக்கவேண்டும் ,,,,,,

மொழி ஒன்றுதான் பேசுவதோ பலவிதம்

எந்த மொழியை எடுத்துக்கொண்டாலும் ஒவ்வொரு இடத்தில் பேசும்விதம் மாறுபட்டுவிடுகிறது நாம் ஹிந்தியை எடுத்துக்கொண்டால்தில்லியில் ஒரு விதம் மும்பையில் ஒருவிதம் அலஹாபாத்தில் ஒருவிதம் லக்னவில் ஒருவிதம் என்று சற்று மாறுபட்டு இருக்கும் .திரு கமல்ஹசன் ஏக் தூஜேகே லியேவில் மிகச்சரளமாக பலவிதமாகாண இந்தியைப் பேசிக் காண்பிப்பார் ,இதே போல் தமிழ் நாட்டிற்கு வந்தாலும் பலவிதமாக தமிழ்ப்பேச்சுகேட்க நேரிடுகிறது .முதன் முதலில் நான் மதராஸ் வந்த போது{அப்போது அது சென்னை ஆகவில்லை} ரயிலில் ஒரு குரல் கேட்டது ."எப்டி கீரே " நான் திரும்பிப்பார்த்தேன் எனக்குக்கீரை என்றால்ரொம்பப்பிடிக்கும் அவன் கீரை விற்ப்வன் போலிருக்கு என்று எண்ணி அந்தக்கீரைக்காரனைக்கூப்பிட வாயெடுத்தேன். ஆனால் அந்த ஸ்டேஷனில் ஒருவரும் தென்படவில்லைநான் நின்றபடி எட்டி எட்டிப்பார்த்தேன் . என் அருகில் இருந்தபெண்மணி " யாரைத் தேடறே நீ " என்றாள்"கீரை விற்பவனை ,,,,,,,சற்று முன்பு "எப்டி கீரே" என்று ஒரு குரல் கேட்டதே!அவள் சிரித்தபடி " அவன் கீரை விக்கல ,,,,,,அவன் நண்பனை எப்படி இருக்கே " என்று விசாரித்தான் " என்றாள்" அட ராமா தமிழ் பேசுபவளுக்கே தமிழ் புரியவில்லையே !என்ன இந்த ஊர் இப்படிமாறிவிட்டது " என்று எண்ணினேன் இந்த இடத்தில் சில நாட்கள் தங்க மேலும் சில புரியாதத்தமிழ் சொற்றொடர்கள் காதில் விழுந்தன உம் "என்ன மச்சான் என்ன இஸ்துக்குனு போனே""எம்மாதூண்டு தார்ரே இன்னும் கொஞ்சம் போட்டுக்கொடு""அட கஸ்மாலம் என்னா துன்ன தார்ரே நீ எதனாச்சும் இருக்கா""அட சோமாரி என்ன தபாய்க்ரே""நீ ரீல் விட்டா நான் அத நம்பனுமா "" படு அறுவைடா மச்சான் "இந்தப்பேச்சுக்கள் போல் பல கேட்டுப் புரியாமல் முழித்தேன் இன்றும் சென்னையில் சிலர் பேசும் தமிழில் சில இடங்கள் புரிவதில்லை இதுவே கோயம்பத்தூர் போனால் "அங்குப்போய் வந்தாப்ல "என்ன சொல்லிபுட்டு வந்தாப்ல"என்று எல்லாவற்றுக்கும் ஒரு "ப்ல்" என்று சேர்த்துப்பேசுகிறார்கள் மக்கள் ,ஏன் இப்படி "ப்ல "என்று சேர்க்கிறார்கள்?யாருக்காவது தெரியுமா?பாலக்காட்டுத்தமிழில் ஒவ்வொரு வாக்கியம் முடியும் போது நீண்டு ராகம் போல் வரும் .இவர்கள் தமிழ்ர்கள் தான் ஆனால் மலையாள் நாட்டில் பல வருடங்கள் வாழ்ந்துவருவதால் மலையாள் மொழியுடன் தமிழ்சம்பந்தப்பட்டிருக்கிறது உம் ,"என்ன பாருகுட்டி.... அம்மை எஙகே போனாள்/ஏ,,,,,,,,,நான் கண்டிட்லையே அம்மைய ..... சரி காப்பி குடிச்சாயோ"என்ன ! பஞ்சாரை போட்டுட்டில்லை ?கொரைச்சு போடு ,,மதி மதி '
தஞ்சாவூர் குமகோணம் வந்தால் அங்கும் பேச்சில் வித்தியாசம் .மனைவி கணவரை அழைக்கிறாள் ."ஏன்னா இங்க சித்த வாங்கோன்னா""ஏண்டி கூப்படறே எனக்கு ஏகப்பட்ட வேலை கிடக்கு 'இல்லன்னா எப்போ சாப்பிட வரேள் ?கணவர் ஒரு சாஸ்திரிகளுடன் பேசுகிறார்
" என்ன ஓய் கணபதி சாஸ்திர்கள்வாள் நீர் எந்தப்பக்கம் இங்கே ?'பொண்டாட்டி புள்ளைகள் சௌக்கியந்தானே ?உங்க தம்பி கிச்சாவை வரசொல்லப்டாதோ ,,,பாத்து ரொம்ப நாளாச்சே"
அவர்கள் பேசுவதில் சொற்களுடன் "காணும்" என்ற சொல்லும் சேர்ந்து வருகிறது" நீர் சும்மா இருங்காணும் ""என்னங்காணும் நான் இப்போ என்னத்தச்சொல்லிட்டேன் மூஞ்சியைத்தூக்கிண்டிருக்கேள்

"ஐயங்கார் தமிழில் கூப்பிடும் போது பெரியவர்களை "ஸ்வாமி " என்றேஅழைப்பதைப்பார்த்திருக்கிறேன் அவர்கள் பெருமாளுக்குப்படைப்பதை "திரு "என்ற அடைமொழியுடன்அழைக்கிறார்கள் கேட்கவே நன்றாக இருக்கிறது,ஒரு கோயிலில் கேட்டது ,,,,,,"ஏழ் ஏழ,,,,,,, சேவிச்சுக்கிறேன் ஸ்வாமி "ஸ்வாமி ஏன் தாமதம்""எம்பெருமான் கிருபை அடியேன் நன்றாக இருக்கேன்
"இங்கேயே சாட்டுட்டு போலாமே "திருக்கண்ணமுது , சாத்துமது தத்யோன்னம் புளியோதரை எல்லாம் பெருமாளுக்கு தயார்செஞ்சிருக்கோம்"அப்பொ அடியேன் உத்தரவு வாங்கிக்கிறேன் ஸ்வாமிகளே உத்தரவு தாரும் தண்டனிட்டு சேவிக்கறேன் "இது போன்ற பல கேட்க முடிந்தது,,,, பெருமாள் கோயிலில் பல சொற்கள் எனக்குப்புதிதாக இருந்தன ,அவர்கள் நெற்றியில் நாமம் என்று சொல்வதில்லை அழகாக்திருமண் காப்பு என்கின்றனர் குளிப்பதை" தீர்த்தமாடி வருவது என்கின்றனர் ஸ்வாமியின் பாதத்தைத் திருவடி என்கின்றனர் பல சம்ஸ்கிருத மொழிச்சொற்களும் உபயோகிக்கின்றனர் தமிழ் நாட்டில் மற்ற பல இடங்கள் நான் போயிருந்தாலும் தங்கி ஒரு மாதம்போல் இருக்க வாய்ப்பு கிடைக்கவில்லை ,கன்யாகுமரி வரைச்சென்று விட்டேன் இந்த தமிழ்மொழி மாறுவதைவைத்து ரிசர்ச் கூட செய்யலாம் அத்தனை விதங்கள்கிடைக்கின்றன , இதை வைத்து ரிசர்ச் செய்யலாமோ என்று நானேயோசிக்கிறேன் , எல்லாம் அதனதன் இடத்தில் இனிமையாகவும் ரசிக்கும்படியும் இருக்கிறது , எல்லாம் தெரிந்திருக்க மனம் விழைகிறதுஆனால் சரீரம் ஒத்துழைப்பதில்லையே
,அன்புடன் விசாலம்

Wednesday, July 22, 2009

பூரி தேரோட்டம்

பூரி தேரோட்டம்
பூரி ஜகன்னாத் என்றாலே மறக்க முடியாத விமரிசையானத் தேரோட்டம் தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும் .எல்லா ஆலயங்களிலும் ஒரு அர்த்தச்செறிவோடு திருவிழாக்கள் நடத்துகிறார்கள்..தெப்பம் ராம்லீலா ,சூரசம்ஹாரம் போன்ற் திருவிழாககள்
மக்கள் மனதில் ஒரு விதமான பக்தி பாவமும் ஒரு ஆன்மீக உணர்வும் தோன்றி பரவசப்
படுத்துகின்றன .இந்தத் திருவிழாக்களில் முக்கிய அம்சமாக விளங்குவது தேரோட்டம் .
அது அசைந்து அசைந்து ஆடி ஆடி வரும் அழகே அழகு . “தேர்ப் போல் அசைந்து வருகிறாயே”
என்று மெள்ள நடந்து வருபவர்களைச் சொல்வதுண்டு. அந்தச் தேரின் சக்கரமே மிகப்
பெரியதாக இருக்கும் .,அந்தத் தேரை மிகப் பருமனான தாம்புக் கயிற்றால் இழுக்க, இழுக்க அது மேலே நகரும். இறைவன் தன் இறைவியுடன் தன் வாகனத்தில் பல அலங்காரங்களுடன், ஆபூஷணங்களுடன் பூமாலைகள் மணமணக்க கோவிலிலிருந்து கிளமபி
.நாற்புற வீதிகளில் வரும் அழகே அழகு. .அதைக் காண கண் கோடி வேண்டும் , அதற்கு பாக்கியம் செய்திருக்கவும் வேண்டும ..நம்மையும் அறியாமல் ஒரு ஆனநதம் ஏற்படுகிறது. தவிர ஆயிரக்கணக்கான கைகள் வடம் பிடித்து இழுக்கின்றன .கைகளிலிலும்
எத்தனை விதமான கைகள்.சாதி பேதமில்லாமல் ஒரே பக்தி உணர்வுடன் இழுக்கின்றன.
எல்லோர் வாயிலும் ஒரே நாம ஸமரணைதான் .சிவனோ ,முருகனோ அம்பாளோ கோவிந்தனோ யார் இருந்தால் என்ன ?அந்த நேரத்தில் எல்லோர் மனமும்
ஒரே நோக்கோடு ,ஒரே எண்ண்த்தோடு செயல்பட்டு அந்தப் பிரும்மாண்டத் தேரை இழுக்க
முயலுகின்ற்ன .இதுவும் ஒரு தியானம் தான்

தேரோட்டத்தில் தான் எத்தனைப் பலன்கள் உயர்வு தாழ்வு போன்ற எண்ணம் இல்லை . அந்தக் காரியத்தைச் சிறந்த முறையில் முடிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம் ,அதனால்
மனதை ஒருமைப் படுத்தும் சக்தி ,,எல்லோரும் ஒன்றே என்ற உணர்வு ,ஏழை,பண்க்காரர்
என்ற பேதமில்லாத நிலை , இப்படி பல நற்சிந்த்னைகள் உண்டாகின்றன ,மக்கள் கூடினால்
வலிமை மிகும் .இதில் எல்லோரும் பங்கு பெற தேசிய ஒருமைப்பாடு ஏற்படுகிறது ,
“கூடி வாழ்ந்தால் கோடி நனமை “என்பது போல் மக்கள் கூடி ஒரே எண்ணத்துடன் மன
வலிமைப் பெற்றால் எதையும் சாதிக்க இயலும் என்றும் தெரிகிறது .ஒருவர்க்கொருவர்
அன்பும், பாசமும் கூடுகிறது தேர் என்றாலே பல வேலை வாய்ப்பு கிடைக்கும் ,தேரைச்
செப்பனிட ,புதுப்பிக்க,பல விதமான பொம்மைகள் அமைக்க .சிலைகள் செய்ய .வண்ணத்
துணிகள்,.கொடிகள்,செய்ய ,என்று பல பேர்கள் சிறுதொழில்களில் ஈடுபடுகின்றனர் .
சிலர் ரோட்டில் கடைகள் வைத்து தன் குடும்பதைக் காப்பாற்றுகின்றனர்..இதைப் பார்க்க பலநாட்டு
மக்கள் வருவதால் நம் பாரத கலாச்சாரம் பரவுகிறது .தவிர அந்த இடத்திற்கு மந்திரிகளும்
முக்கியப் பிரமுகர்களும் வர இருப்பதால் பல இடங்கள் சுத்தப்படுத்தப் படுகின்றன .
எப்போதுமே சுத்தமாக வைத்துக் கொள்ளும் உணர்வு தோன்ற வேண்டும் இந்தத் தேர் திருவிழா மூலம் சுகாதார இலாகா சற்று விழித்துக் கொண்டு வேலைச் செய்ய
முன் வருகின்றன்ர் ,மக்களின் விழிப்புணர்ச்சியும் இதில் மிகவும் தேவை .வாழைப் பழத்
தோலை அந்த இடத்திலேயே போட்டால் அவர்களுக்கேதான் ஆபத்து,

தேர்த்திருவிழா என்றால் திருவாரூர்த்தேரும் ,பூரி ஜ்க்ன்னாத் தேரும் நம் கண்முன்னால் உடனே வரும் , ஜூலை மாதம் வரும் அமாவாசைக்கு இரண்டு நாள் கழித்து பிரம்மாண்டமான
தேரோட்டம் பூரியில் நடைப் பெறும் . ஜன சமுத்திரம் என்றால் மிகையாகாது..ஒரு பத்து
நாட்கள் முன்பே கல்யாணக்கோலம் கொள்ளும் .எங்கும் பிரகாசமான விள்க்குகள். முக்கிய
வீதிகளில் கலர் விளக்குகள் அணைந்து அணைந்து எரியும் விளக்குகள். வண்ண வண்ண
விளக்குகள் கண் சிமிட்டும் விளக்குகள் என்று நம் மனதைக் கொள்ளைக் கொள்ளும் ,
வீதியின் இரு புறமும் பலவிதமானக் கடைகள் செப்புப் பாத்திரங்கள்,கற்சிலைகள்
பொம்மைகள் பூஜைக்கு வேண்டிய சாமானகள் வளைகள் ,,மணிகள். ஸ்வாமி படங்கள்
என்று எது கேட்டாலும் கிடைக்கும் .இரவு ப்கல் என்றே தெரியாமல் அந்த இடம் சுறுசுறுப்பாகிறது

மூன்று தேர்கள் அலங்காரத்துடன் தயாராக நிற்கின்றன.
அருள்மிகு ஜகன்நாதர் .அருள்மிகு பலராமர் .அருளைப்
பொழியும் சுபத்திராதேவி அதில் பவனி வர ஏற்பாடுகள்
நடக்கின்றன .ஜே ஜே என்று சுமார் பத்து லட்சம் பேர்கள்
கூடுகின்றனர் ,தேர் வரும் வீதிகள் தண்ணீரால் அல்ம்பப்
படுகின்றன எல்லா ஹோட்டல்களிலும் தங்க வசதிகள்
தவிர சத்திரத்திலும் இலவச அறைகள் தயாராகின்றன ,
வாத்திய கோஷ்டிகள் நகராக்கள் தாரைத் தம்பட்டங்கள்
துந்துபிகள் முழக்கத்துடன் விழா தொடங்குகிறது இந்த விழாவிற்கு சில முக்கியப் பிரமுகர்களும் வருகைத்
தருகிறார்கள் .இந்த ஆலயத்தில் கற்சிலைகள் இல்லை
மரத்தால் ஆன முழுமைப் பெறாத பொம்மைகள் தான்
உள்ளன . பகவான் ஜகன்நாதர் பலராமர் சுபத்திரா மூவருமே
மரத்தால் ஆனவர்தான்.இங்கு சாதி மத பேதமில்லை ,உள்ளே
யார் வேண்டுமானாலும் போகலாம் .ஒருவிதமானக்
கட்டுப்பாடும் இல்லை .எல்லோருக்கும் சமமாக பிரசாதம்
கிடைக்கிறது .பிரசாதம் செய்பவரே தாழ்ந்த சாதியினர்தான்
என்கிறார்கள்.முதலில் பல பிரதம் பூசாரிகள் வருகின்றனர்
பின் அந்த அரச்க் குடும்பத்தினரின் மூத்தத்தலைவர்
பஞ்சக்கச்சத்துடன் ,தலைப்பாகையுடன் தேரின் உள்ளே நுழைந்து ஒரு துடைப்பத்தால் கூட்ட பின்னால்
புனித நீரும் தெளிக்கப்பட்டு சுத்தமடைகிறது.,பின்
பகவான் ஜகன்நாதர் வருகிறார் ,அவரைக் கொஞ்சம்
கொஞ்சமாகத் நகர்த்தி த் தேருக்குள் அமர வைக்கின்றனர்.
இது மிக முக்கிய காட்சி .ஏன் என்றால் சில நேரம் அவர்
மிக எளிதாக உள்ளே நுழைந்து விடுகிறார் .சில நேரம்
பல மணி நேரம் போரடினாலும் அசைந்துக் கொடுப்பத்தில்லை. உள்ளே அமர மறுக்கிறார் ,அந்தச்
சமயத்தில் பிரதம பூசாரி திரும்பவும் குளித்து ஏதாவது
தவறு இருந்தால் அதற்கு மன்னிப்புக் கேட்டு பின் எல்லோரும் சேர்ந்து
மனம் ஒன்றி உள்ளே நாமங்கள் கூறி
அந்தச்சிலையை நகர்த்துகிறார்கள் அப்போது ”கிடுகிடு “
உள்ளே ஏறும் அதிசயம் சொல்ல இயலாத ஒன்று ,
இதைப் பார்க்கும் நமக்கு மயிர்க்கூச்ச்ல் ஏற்படுகிறது ,
இதே போல் பலராமர் ,சுபத்திரையும் தேருக்குள்ளே
அமர எல்லோரும் ஒரே நேரத்தில் குரலை உயர்த்த,
பகவான் நாமாவின் முழக்கம் விண்ணைத் தொட
பட்டாசு வெடிகள் வெடிக்க ,வாண வேடிக்கைக் கிளமப
சங்கு ஊத தாரைகள் முழங்க .நாதஸ்வரம் ,ஷெனாய்
ஒலி பரவ , மூன்று தேர்களும் அசைந்து அசைந்து ப்வனி வர ,,ஆஹா அந்தக் காட்சியைக் காணக்
கொடுப்பினை வேண்டும் .காணக்கண் கோடி வேண்டும் .
எல்லோரும் தேர் வடத்தை முழு ம்ஊச்சுடன் இழுக்க ஆடி அசைந்து வருகிறார் இறைவன் .அருகில்
தொங்கும் தோரணங்கள் ஆடி அழகைப் பெருக்குகின்றன.
குஞ்சலங்கள் ஆடுகின்றன ..இறைவன் நம்மையும்
ஆட்டுகின்றான் .நாமும் ஆடுகின்றோம் வேதங்கள்
ஓதும் கூட்டம் ,பஜனைச் செய்யும் கூட்டம் ,அதன் பின்னால் ஆடல் பாடல்கள் .என்று எங்கும் மகிழ்ச்சியின்
அலை மோத , ஜன சமுத்திரத்தில் தேர்கள் கப்பல் போல்
அசைந்து ஆடி செல்லுகின்றன. பலவிதமான
மணிகளின் “டிங் டிங்” என்று ஒலி நம்மை பரவசம்
அடையச் செய்கிறது ,இத்துடன் பல சின்னத் தேர்களும்
வந்து சேர்ந்து ஊர்வலம் போகின்றன ,மக்கள் கூட்டத்தை
மேலிருந்து பார்த்தால் ஒரே கடுகு சிதறியது போல் தோற்றமளிக்கிறது. அத்தனைத் தலைகள் ,இடம் போதாமல் மரம் உச்சி ,மொட்டைமாடி போன்ற
இடங்களிலும் ரொம்பி வழிகிறது ,பூசாரி எல்லோருக்கும்
பிரசாதம் கொடுத்தபடி வருகிறார் .போலீஸ் படைகளும் தங்கள் கடமையைச் சிறப்பாக செய்கின்றனர் நடுநடுவே
தண்ணீர்ப்பந்தல் நீர்மோர் சர்பத் என்று பலர் தானம்
செய்கிறர்கள்.முடிவில் ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும்
தேர்கள் வந்து நிற்கின்றன .எல்லோரும் அந்தக் கமலக்
கண்ணனை ஜகன்நாதனை ,ஜனார்த்தனனை வீட்டுப்
போக ம்னது இல்லாமல் அவன் அருளை வேண்டி
வணங்குகின்றனர் .ஜன்ம சாபல்யம் எனபது இதுதானோ!
இந்த இடத்தில் ஆறு நாட்கள் இருந்துவிட்டு பின் தன் கோவிலுக்கு திரும்புகின்றன தேர்கள்,இந்தியாவிலேயே
பல மக்கள் கலந்து கொள்ளும் மிகப் பெரிய தேர்த் திருவிழா இந்த “ஜகன்நாத் யாத்ரா “

பகவான் பாபா சொல்கிறார், ” ஆலய விழாவாகத் தேர் இழுப்பதை நமது உடம்பை ஒட்டிய வாழ்க்கைக்கு
ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் .தேரின் நடுவில் இறைவன் இருப்பதுப்போல் நம்க்குள்ளும் ஆன்மா ஒரு இறைவன் ,
தேரை இழுப்பதுப்போல் ஆசாபாசங்கள் நம்மையும்
இழுக்கின்றன தேருக்கும் முன்னால் செல்லும் இசை
ஆடல் பாடல் நம் வாழ்க்கையில் வரும் விழாக்கள்
ஊர்வலம் முடிந்தவுடன் இறைவன் ஆலயத்தின்
கர்ப்பககிரஹத்திர்குள் நுழைந்து விடுவது நம் வாழ்க்கை முடிவடைந்து ஆத்மா அதுவரை வாழ்ந்த நிலை விட்டு வந்த இடத்திற்கே திரும்புகிறது “

தேர்த் திருவிழாவை வளர்ப்போம் அந்த இறைவனின்
திருவருளைப் பெறுவோம்

Monday, June 29, 2009

அன்பே தெய்வம்

June 24, 2009
உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு ” நடத்தும் சிறுகதை போட்டி ,,,,……………………….அன்பே தெய்வம் ……………….
“ட்ரிங் டிரிங் ” … டெலிபோன் மணி ஒலித்தது ,”இந்தப்போன்

பால் காச்சும் போதுதான் வரும், இரு இரு வரேன்” என்று ஒரு குழந்தைப்போல் சொல்லிக்கொண்டு ராஜம் போனை எடுத்தாள். “ஹலோ ஹலோ யார் பேசறது “?

“நான் தான் சுப்பிரமண்யன்”

“”நமஸ்காரம் இருங்கோ. இதோ எங்காத்து மாமாவைக் கூப்படறேன்”………டெலிபோனைப்பொத்தியபடி, “ஏன்னா இந்தாங்கோ நம்ம சம்பந்தி…. கூப்பிடறார் உடனே வாங்கோ”என்று தன் கணவர் சிவராமனைக் கூப்பிட்டாள் . பாதி ஷவரம் செய்த முகத்துடன் அவரும் வந்தார் “ஹலோ நமஸ்காரம் சௌக்கியமா? எப்போ முகூர்த்தத்தை வச்சுக்கலாம் ?

“அதுதான் சொல்ல வந்தேன். இந்தச்சம்பந்ததம் நடக்காது மன்னிக்கணும் , நீங்கள் நிச்சியதார்த்தம் அன்று போட்ட பொருட்கள் எல்லாம் திருப்பித் தந்துவிடுகிறோம், வந்து எடுத்துங்கோ.

“ஏன் என்ன ஆச்சு ? எல்லாம் நன்னாத்தானே நடந்தது இப்ப என்ன திடீர்னு …”

மேலே ஒண்ணும் சொல்லறதுக்கில்லை வச்சுடறேன்”

ராஜம் கேட்டாள் “என்ன ஆச்சு ?ஏன் இப்படி இடிஞ்சுப்போய் நிக்கறேள் ?

“நம்ம சம்பந்தம் வேண்டாம்னு சொல்றா …. நம்ம பையனுக்கு என்ன குறைச்சல் …ராஜா மாதிரி இருக்கான் சி ஏ வேறு …….கை நிறைய சம்பளம் ….அவாளுக்கு என்ன….. கசக்கறதா?சரி, விடு இந்தப்பெண் இல்லேன்னா எத்தனையோ பெண்கள்……..”ராஜத்திற்கு மனம் உளைச்சல் கண்டது . ஓடிப்போய் தன் தங்கையிடம் போனில் தெரிவித்தாள் பின் திருவாரூரில் இருக்கும் தன் அப்பாவைக்கூப்பிட்டாள்

,ஹலோ ஹலோ ,யாரு அப்பாவா…..’

“ஆமாம் ராஜமா …என்ன மோஹனுக்கு முகூர்த்ததேதி பார்த்தாச்சா”?

அதுதாம்பா சொல்ல வந்தேன் கல்யாணம் நின்னுபோயிடுத்து ,என்னகாரணம்னு தெரிலை நீங்கள் தான் துப்பறியும் சாம்பு போல் கண்டுபிடிக்க வேண்டும் பெண்ணோட தாத்தாவும் திருவாரூர்தானே….”

சரி ராஜம் நான் விஜாரிச்சு பின் சொல்றேன் ,கவலப்படாதே”

.அப்பாடி… இப்போத்தான் ராஜத்திற்கு மூச்சு வந்தது. உள்ளே போனாள்.

,” அப்துல் தும் கஹான் ஹோ?’ {அப்துல் நீ எங்குஇருக்கிறாய் “? என்று இந்தியில் பேச அப்துல் “அபி ஆயா{இதோவந்துவிட்டேன் } என்று பதில் சொன்னான் “சாப்பிட்டாயா …. அப்துல் …..நம்ம மோஹன் கல்யாணம் நின்றுவிட்டது தெரிமா”?

தெரியும் மாஜி ” என்று அவனும் தமிழில் பேச முயன்றான் அவன் கண்கள் கலங்கின.

தில்லியில் ஜனக்புரி என்ற இடத்தில் தான் சிவராமன் குடும்பம் இருந்தது. இரு மகன்கள் …..மூத்தவன் மோஹன்…. தம்பி சுரேஷ் ,,,பின் யார் இந்த அப்துல் “? இது தெரிய பத்து வருடங்களுக்கு முன்னால் நாம் போக வேண்டும். எப்போதும் தனக்கென்று ஒரு ரிக்க்ஷா வாலாவை ராஜம் தன் சிறு பிரயாணத்திற்கு அமர்த்திக்கொள்வாள். ஒருநாள் அவனைக்கூப்பிடப் போன போது ஒரு ஐந்து வயது சிறுவன் அங்கு அழுதுக்கொண்டிருந்தான். அவன் தான் ரிக்க்ஷாக்காரன் சலீமின் குட்டித்தம்பி அப்துல் …..ராஜம் அவன் ஏன் அழுகிறான் என்று கேட்க அவனும் தன் பெற்றோர்கள் இறந்துவிட்டதால் இந்தக்குட்டி அப்துலைத் தான் பார்த்துக்கொள்வதாகவும் வேலைக்குப்போக மிக கஷ்டமாக இருப்பதாகவும் கூறினான் தவிர வறுமை வேறு …..ராஜம் இயல்பாகவே இளகிய மனம் படைத்தவள் ஆதலால் அவனிடம் “சலீம் நான் இவனை வளர்த்து படிக்க வைக்கிறேன் அனுப்புகிறாயா ?”என்று கேட்டாள் கரும்பு தின்னக்கூலியா ? உடனேயே அவனை அனுப்பி வைத்தான். அப்துல் வயிறு ஒடுங்கி ஒல்லிக்குச்சியாய் ராஜத்தைத் தொடர்ந்தான். அன்று வந்தவன் தான் அப்துல் “மாஜி மாஜி “என்று அன்பைக்கொட்டினான். ராஜமும் அவனைப்பள்ளிக்கு அனுப்பித்தாள் . தமிழ் கற்றுக்கொடுத்தாள் விதவிதமான உடையும் வாங்கிக்கொடுத்தாள். அவனும் வளர்ந்தான். வீட்டுவேலையும் செய்துபின் படிப்பிலும் கவனம் செலுத்தினான். மொத்தத்தில் ராஜத்தின் வலது கையானான் ராஜத்தின் பிள்ளைகள் ஒரு வேலையும் செய்யாமல் அப்துலை வேலை வாங்குவார்கள். இது ராஜத்திற்கு மிக வருத்தம் உண்டாக்கும். அப்துலுக்கு அந்த வீட்டில் தனிச்சலுகை என்று இரண்டாவது மகன் மனம் வெம்பினான் பொறாமை வேறு அவனை ஆட்கொண்டது ஒருநாள் ராஜம் தலைவலியால் துடித்தாள் .அவள் மகன் சுரேஷ் காலேஜிலிருந்து வந்தான் ,”அம்மா என்ன திங்க வச்சிருக்கே எடுத்துக்கொடு”

“சுரேஷ் கண்ணா எனக்குத் தலைவலிடா….. நீயாகவே உள்ளே போய் தோசை எடுத்துக்கோ”

அப்போது அப்துலும் அங்கு வந்தான்.

“மாஜி என்ன ஆச்சு ?உங்கல்கு ,,,,,தலவலியா? இதோ நானு வரேன் ” என்று தனக்குத்தெரிந்தத்தமிழில் பேசித் தலைவலி பாம் கொண்டு வந்து தடவினான் ,பின் உள்ளே போய் தோசையும் கொண்டு வந்து “மாஜி இந்தா.. வாயைக்காட்டு,, தோசை சாப்பிடு” என்று ஆசையாகச் சொன்னான். ராஜம் மனம் நெகிழ்ந்தாள் அப்படியே அவனை அணைத்துக்கொண்டாள். இதையெல்லாம் பார்த்த சுரேஷுக்குக் கோபம் கோபமாக வந்தது “இந்த அம்மா என்ன இத்தனை மாறி விட்டாள் எப்போ பாத்தாலும் அப்துலையே கொஞ்சறாளே”

“ஏண்டா சுரேஷ் என்ன செய்யறே “என்று கேட்டபடி மோகன் அங்கு வந்தான் “ஒன்றுமில்லை அண்ணா… இந்த அப்துல் அம்மாவை என்ன மக்கன்{வெண்ணெய்} வைத்தானோ நன்னா மயக்கி வைத்திருக்கிறான் .அன்று நான் கிரிக்கெட் பார்க்கும் நேரத்தில் அம்மா அவனுக்காக இராமயணம் சானல் மாற்றினாள்”

ஆமாம் என்னிடமும் அம்மா அன்னிக்கு சொன்னாள் “இந்த அப்துல் எனக்குக்கால் பிடிச்சு விடறான், பாத்திரமும் அலம்பித்தருகிறான், ரொம்ப அன்பாக பழகுகிறான் நீங்கள்வருவதும் தெரிவதில்லை ஆபீஸ் போவதும் தெரிவதில்லை. என்ன பிள்ளைகள்டா நீங்கள் என்றாள்” இப்படிச்சொல்லும்போதே ராஜம் அங்கு வர பேச்சு நின்றுவிட்டது இந்த நிலையில் தான் மூத்தவன் மோஹனுக்கு பெண் பார்த்து அவர்கள் போபாலிலிருந்து வருவதாகச்சொன்னார்கள் அவர்கள்தில்லிக்கு ஒரு கல்யாணத்திற்கு வருவதாகவும் அப்போது பிள்ளையும் பெண்ணும் பார்த்து விடட்டும் ,என்று தீர்மானிக்கப்பட்டது வாசலில் வண்டி வந்து நின்றது “அப்துல் வாசலில் அவர்கள் வந்துவிட்டார்கள் போய் அழைத்துவரலாம் என்று அப்துலையும் அழைத்து வந்தாள் “ஆமாம் யார் இந்தப்பிள்ளை ‘? என்று கேட்டாள் பெண் சுமதியின் தாய் “இவன் தான் அப்துல என் பிள்ளை என்று அவனை அணைத்துக்கொண்டாள் ராஜம். பெண்ணின் தாய் முகம் சுளித்தாள் .பின் ராஜம் அந்த அப்துல் கையில் டிபன் காபி எல்லாம் கொடுத்து அனுப்பினாள் ..பெண்ணின் அம்மா ஆசாரம் இல்லை என்றாலும் அப்துல் பூஜை அறை கிச்சன் என்று நுழைவது அவளுக்குப் பிடிக்கவில்லை. பெண் சுமதியும் மோஹனும் தனியாகப் பேசிக்கொண்டு பின் ஒகே சொல்லி விட்டார்கள் .நிச்சியதார்த்தம் மிக நன்றாக நடந்தது ……………
.”போஸ்ட் என்று தபால்காரன் ஒரு கடிதத்தைப்போட ராஜம் அதை எடுத்துப்படித்தாள். அவள் அப்பா எழுதியிருந்தார்.அதில் அப்துலால் கல்யாணம் நின்றுவிட்டதாகவும் இரு மகன்கள் ராஜாப்போல் இருக்க இந்த அப்துலை ஏன் வளர்க்க வேண்டும் இந்தப்பையனுக்கும் அந்தக்குடுமபத்திற்கும் எதாவது சம்பந்தம் இருக்குமா என்ற சந்தேகம் வந்துவிட்டது அவர்களுக்கு என்றும் எழுதியிருந்தார்.

அவசரம் அவசரமாகப்போனை அடித்தாள்தன் அப்பாவுக்கு…….

“அப்பா லெட்டர் வந்தது. என்ன இது இப்படி அபாண்டமாகப்பழி….
,,,”"நீ ஏன் அந்த அப்துல் பயலை வளைய வர விட்டாய் அதுதான்கல்யாணமே நின்று விட்டது இப்போ ..பார்த்தாயா ?அதன் விளைவை ……”

“என்ன அப்பா…நீங்க ! அம்மா அப்பா இல்லாத ஒரு பிள்ளையைவளர்ப்பது தப்பா”?

“அதுசரி ராஜம்…. இப்போ என்ன செய்யப்போறே “?

வேறு வரன் வராமலா போய்விடும்? கடவுள் விட்ட வழி “

பேச்சு முடிந்தது .

,காலம் உருண்டது. வேறு பெண் மோஹனுக்கு நிச்சியம் ஆயிற்று

“சுரேஷ் அந்த அப்துலை என் கல்யாணத்திற்கு அப்புறம் வரசொல்” என்றான் மோஹன் .

“அம்மா அந்த அப்துல் பயலை கிட்நேப் செய்து கல்யாணம் ஆனபின் கொண்டுவிடுகிறேன் “என்று கிண்டல் அடித்தான் சுரேஷ்மோஹனும் சுரேஷும் தமிழர்கள் ஆனாலும் இந்தியில் பேசிக்கொண்டார்கள். ஆனால் அப்துலோ தமிழ் நன்றாகப்பேசினான். கல்யாணம் ஆனவுடனேயே மோஹன் தனிக்குடித்தனம் போய் விட்டான். இரண்டாவது மகனோ பூனாவில் வேலை சேர்ந்து விட்டான். சிவராமனும் ராஜமும் தனித்து விடப்பட்டனர். ஆனால் பிளைக்குப்பிள்ளையாக அப்துல் இருந்து காலேஜையும் முடித்தான்வேலையும் தேடினான் .

கொரியர் சர்விசில் ஒரு நல்ல வேலைக்கிடைத்தது .
அன்று முதல் சம்பளத்தை வாங்கி வீடு வந்து “மா..ஜி ஆசீர்வாதம்செய்யுங்கோ “என்று அவள் காலிலும் சிவராமன் காலிலும் விழுந்தான் தன் சம்பளத்தை அவள் கையில் கொடுத்தான்.

அடுத்த வீட்டிலிருந்து ஒரு இந்திபஜன் கேட்டது

“பிரேம் ஈஸ்வர் ஹை ஈஸ்வர் பிரேம் ஹை” {அன்பே கடவுள் கடவுளே அன்பு },,,,,ராம் ரஹீம் புத்த கரீம் …..கோயீ பி நாம் ஜபோ ரெ மனுவா ஈஸ்வர் ஏக்ஹை {ராம் என்று சொன்னாலும் ரஹீம் புத்தர் கரீம் என்று எந்தப்பெயர் சொன்னாலும் எல்லாமே ஒன்றுதான் ஈஸ்வரன் ஒன்றுதான் ,,,,,,

ராஜம் அப்துலை அணைத்தாள் . சொந்த மகன்கள்

எங்கேயோ இருக்க இந்த வளர்ப்பு மகன்

அதுவும் பீஹாரைச்சேர்ந்த முஸ்லிம் இப்படி அன்பைப்பொழிகிறான். அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது அங்கு அன்பே தெய்வமானது.
அன்புடன் விசாலம்

Sunday, June 28, 2009

அன்பே தெய்வம்

உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு ” நடத்தும் சிறுகதை போட்டி ,,,,………………………

.அன்பே தெய்வம் ……………….

அவசரம் அவசரமாகப்போனை அடித்தாள் தன் அப்பாவுக்கு…….

“அப்பா லெட்டர் வந்தது. என்ன இது இப்படி அபாண்டமாகப்பழி….
,,,”"நீ ஏன் அந்த அப்துல் பயலை வளைய வர விட்டாய் அதுதான்கல்யாணமே நின்று விட்டது இப்போ ..பார்த்தாயா ?அதன் விளைவை ……”

“என்ன அப்பா…நீங்க ! அம்மா அப்பா இல்லாத ஒரு பிள்ளையைவளர்ப்பது தப்பா”?

“அதுசரி ராஜம்…. இப்போ என்ன செய்யப்போறே “?

வேறு வரன் வராமலா போய்விடும்? கடவுள் விட்ட வழி “

பேச்சு முடிந்தது .

,காலம் உருண்டது. வேறு பெண் மோஹனுக்கு நிச்சியம் ஆயிற்று

“சுரேஷ் அந்த அப்துலை என் கல்யாணத்திற்கு அப்புறம் வரசொல்” என்றான் மோஹன் .

“அம்மா அந்த அப்துல் பயலை கிட்நேப் செய்து கல்யாணம் ஆனபின் கொண்டுவிடுகிறேன் “என்று கிண்டல் அடித்தான் சுரேஷ்மோஹனும் சுரேஷும் தமிழர்கள் ஆனாலும் இந்தியில் பேசிக்கொண்டார்கள். ஆனால் அப்துலோ தமிழ் நன்றாகப்பேசினான். கல்யாணம் ஆனவுடனேயே மோஹன் தனிக்குடித்தனம் போய் விட்டான். இரண்டாவது மகனோ பூனாவில் வேலை சேர்ந்து விட்டான். சிவராமனும் ராஜமும் தனித்து விடப்பட்டனர். ஆனால் பிளைக்குப்பிள்ளையாக அப்துல் இருந்து காலேஜையும் முடித்தான்வேலையும் தேடினான் .

கொரியர் சர்விசில் ஒரு நல்ல வேலைக்கிடைத்தது .
அன்று முதல் சம்பளத்தை வாங்கி வீடு வந்து “மா..ஜி ஆசீர்வாதம்செய்யுங்கோ “என்று அவள் காலிலும் சிவராமன் காலிலும் விழுந்தான் தன் சம்பளத்தை அவள் கையில் கொடுத்தான்.

அடுத்த வீட்டிலிருந்து ஒரு இந்திபஜன் கேட்டது

“பிரேம் ஈஸ்வர் ஹை ஈஸ்வர் பிரேம் ஹை” {அன்பே கடவுள் கடவுளே அன்பு },,,,,ராம் ரஹீம் புத்த கரீம் …..கோயீ பி நாம் ஜபோ ரெ மனுவா ஈஸ்வர் ஏக்ஹை {ராம் என்று சொன்னாலும் ரஹீம் புத்தர் கரீம் என்று எந்தப்பெயர் சொன்னாலும் எல்லாமே ஒன்றுதான் ஈஸ்வரன் ஒன்றுதான் ,,,,,,

ராஜம் அப்துலை அணைத்தாள் . சொந்த மகன்கள்

எங்கேயோ இருக்க இந்த வளர்ப்பு மகன்

அதுவும் பீஹாரைச்சேர்ந்த முஸ்லிம் இப்படி அன்பைப்பொழிகிறன் அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது அங்கு அன்பே தெய்வமானது.
அன்புடன் விசாலம்

Sunday, June 21, 2009

கறப்கத்தரு

நிலவாக உன்னை நினைத்தாலோ,
காலை.. காணாமல் போய்விடுவாய்
மலராக உன்னை நினைத்தாலோ
ஒரு நாளில் நீ உதிர்ந்துவிடுவாய்,
வானவில்லாக உன்னை நினைத்தாலோ
கணநேரத்தில் நீ மறைந்து விடுவாய் ,
பனித்துளியாக உன்னை நினைத்தாலோ
வெயில் பட மறைந்து விடுவாய் ,
அலைகளாக உன்னை நினைத்தாலோ
காலை முத்தமிட்டு ஓடி விடுவாய் ,
மலையாக உன்னை நினத்தாலோ
கல்மனம் போல் நீ மாறிவிடுவாய்.
நீராக உன்னை நினைத்தாலோ
பனிக்கட்டிப்போல் உறைந்து விடுவாய் ,
உன்னை நான் ஒன்றும் நினைக்க்வில்லை
எனக்கு நீ நீயாகவே இரு
என்றுபோல் நீ ஒரு கற்பகத் தரு

குறைவான சுமை நிறைவான வாழ்க்கை

வாழ்க்கை எனும் ரயில் பாரு
குறைந்த சுமையுடன் அதில் ஏறு
அதிக சுமைகள் தாங்காது ,
உள்ளே இடமும் போதாது .
சுமைகள் பத்திரமாகக் காத்தல்
வரும் மனதில் உளைச்சல் .
சுமைகளால் வரும் பிரச்சனைகள்,
ஆசைகளே அதன் காரணங்கள் .
இலேசான சுமைகள் தூக்கவது சுலபம்
சுமைகள் இல்லையெனில் அதைவிட லாபம்
பந்தபாசச்சுமை கனத்த எடை ,
மேலே ஏற அது ஒரு தடை ,
பேராசை சுமைகளை வளர்க்கும்
ஆன்மீக வளர்ச்சியைத் அது தளர்க்கும்
மனசுமைகள் இறக்க வேண்டும் ஒரு கூலிக்காரன்
ஆன்மீக நிலையத்தில் நிற்கும் ஒரு கூலிக்காரன்
கூப்பிட்டவுடன் நம் முன் தோன்றுவான்
நம் சுமையை அவன் தாங்குவான்
அவன் தலையில் நம் சுமைகள் அமர்த்தி
பெறுவோம் நாம் முழு நிம்மதி ,
நம்பிக்கையுடன் சுமையைக் கொடுப்போம்
நம்பிக்கையுடன் அவன் பின் செல்வோம் .

சனிப்பிரதோஷம்

பிரதோஷ விரதம் மிகச்சிறந்த ஒன்று .அதுவும் சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் மிகவும்
முக்கியமாகவும் சிறப்பாகவும் கருதப்படுகிறது ஏனென்றால் பாற்கடலைக்கடைந்தவுடன் வாசுகி
நாகம் கக்கிய விஷத்தை உலக நன்மைக்காக சிவபெருமான் எடுத்து உண்டது சனிக்கிழமை, மாலை நேரம் . அதனால் சனிப்பிரதோஷம் மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிற்து

ஊத்துக்கொட்டை அருகில் சுருட்டுப்பள்ளி என்ற ஒரு ஊரில் சனிப்பிரதோஷம் மிகச் சிறப்பாக
நடைப்பெறுகிறது இந்த ஊரில் என்ன சிறப்பு அம்சம் ? ......எல்லா சிவன் கோயில்களிலும்
லிங்கம் பிரதானமாக இருக்கிறது ஆனல் இந்த ஊரில் சிவன் விஷ்ணுப் போல் பள்ளிக்கொண்டிருக்கிறார் சயன கோலம் ,,, அதுவும் பார்வதியின் மடியில் தலை வைத்துக்கொண்டு படுத்திருக்கிறார் பகதர்களைக்காக்க் விஷத்தை விழுங்கிய சிவன் மயக்க நிலையில் படுக்க தேவர்கள் ரிஷிமுனிகள்
எல்லா கணங்கள் அவரைத்தொழுகின்றனர். முக்கியமாக நந்தித்தேவன் அவரை வணங்குகிறார் ..ஆகையால் இந்தச் சனிப்பிரதோஷத்தில் நாம் சிவன் கோயிலுக்குச்சென்று பிரதோஷவிரதம் முறையுட்ன் வழிபட சகல பாக்கியங்களும் மனசாந்தியும் அடைவோம் மாங்கல்ய பாக்கியம்
புத்திர பாக்கியம் கிடைக்கும்
இந்தக்கோயிலில் வால்மீகி முனிவர் பூஜித்த வால்மீகேஸ்வரர் சுயம்புவாக இருக்கிறார்
ராமரும் இங்கு லிங்கத்தை வழிபட, ராமலிங்கேஸ்வரரும் இருக்கிறார்
தவிர தக்ஷிணாமூர்த்தியும் அருள் பாலிக்கிறார் சனிப்பிரதோஷ பூஜை செய்ய கோயிலுக்குப் போகலாமே .

சோம வார அமாவாசை

குருக்ஷேத்ரா போர் முடிந்தது யுதிஷ்டிரர் மிகவும் யோசனையில் இருந்தார் இந்தப்பாண்டிய
வம்சம் பல இழப்புக்களைப் போரில் இழந்துவிட்டது இந்த வம்சம் மேலும் தழைத்து சிறப்பாக
ஆட்சி செய்து, வரும் தலைமுறைகளும் சிறப்பாக மகிழ்ச்சியாக அமைதியாக நாட்டை ஆள
வேண்டுமே ,,,,, இந்த யோசனையுடன் பீஷ்மரின் அறிவுரையையும் கேட்கலாம் என்று தோன்றி
அவரிடம் சென்றார். பீஷ்மர் அவரின் கலக்கம் அறிந்து பின் இதற்குப் பரிகாரமாக சோமவார அமாவாசை விரதம் கடைப்பிடிக்கச்சொன்னார் இந்த நாளில் பக்தர்கள் புனித நீரில் ஸ்னானம் செய்ய வேண்டும் உம்....கங்கை காவிரி கிருஷ்ணா நர்மதை கோதாவரி காசி திருவேணி பிரயாக் போன்ற நதிகள்.இதன பலன் அளவிடமுடியாதது குழந்தைப்பாக்கியம் ,மன அமைதி வளமான வாழ்க்கை உண்டாகும் .

சோமவார அமாவாசை என்றாலே நம் முன் அரசமரம் தோன்றும் இந்த நன்நாளில் அரசமரத்தை 108 பிரதக்ஷிணம் செய்ய வேண்டும் ஒவ்வொரு பிரதக்ஷண முடிவில் ஒரு பழமோ இனிப்போ சமர்ப்பிக்க வேண்டும் பிறகு பூஜை முடிந்தவுடன் தூப தீபம் காட்டி
பூஜை செய்துவைத்தவருக்கும் நம்மால் முடிந்தவரை தக்ஷிணைக் கொடுக்க வேண்டும்
இதுபோல் சோமவார அமாவாசை விரதம் மூன்றாண்டுகளாவது செய்ய கைமேல் பலன் கிடைக்கும் பித்ருக்களை வழிபட்டு அவர்கள் ஆசிகள் பெற சோம்வார அமாவாசை மிகசிறந்த ஒரு நாள் வடநாட்டில் அரசமரத்தை வெள்ளை நூலினல் 108 சுற்று சுற்றி வருவார்கள்,நம் தமிழ் நாட்டில் இது போல் நான் பார்க்கவில்லை ,

அரச மரத்திற்கு அத்தனைச் சக்தியா? சம்ஸ்கிருதத்தில் அஸ்வத்தம் என்பது அரசமரம்

அரச மரக்குச்சிகள் இல்லாத ஹோமம், யாகமில்லை இதன் கிளையிலிருந்து உண்டாகும் அக்னியே அக்னிஹோத்ரத்திற்குப் பயன் படும்
அரச மரத்தை வெட்டவோ எரிக்கவோ கூடாது
அரசமரத்திற்கு அரணி என்ற பெயரும் உண்டு அசுவம் என்றால் குதிரை ,,, இந்த அரச மரத்திற்கும் குதிரைக்கும் ச்ம்பந்தம் இருக்கிறது ஒரு சமயம் அக்னி பகவான் தேவசபையிலிருந்து மனம் வெதும்பி வெளியேறினார் ,அக்னியின் கோபம் என்ன என்று தெரியாமல் அவரைச் சமாதானம் செய்ய தேவர்கள் அவரை நோக்கி வந்தனர் அப்போது
அக்னி குதிரை வடிவில் தன்னை மாற்றிக்கொண்டு ஒரு அரச மரத்தில் மறைந்துக்கொண்டார். அசுவம் {குதிரை} அங்குச்சென்று மறைந்ததால் அசுவத்தவிருக்ஷம்
என்று பெயர் பெற்றது அரச மரம் பின் பிரும்மா தோன்றி எல்லா மரங்களை விட இது தனிச்சிறப்பைப் பெறும் என்று வாழ்த்தினார் .
பிப்பலாதர் என்ற முனிகுமாரர் அரச மரத்தின் பூஜ பலனால் தோன்றினார் ,
இவரது தந்தை அரக்கர்களால் கொல்லப்பட்டார் அதனால் மனம் நொந்துப்போய் கோபம் கொண்டு கிருத்த்யா என்ற தேவதையை அரசமரத்தின் அடிப்பாகத்தில் உண்டாக்கினார் பின்
அந்த அரக்கனைக்கொல்ல ஏவினார் அந்தத்தேவதையோ எல்லா அரக்கர்களையும் அழித்து
விட்டது இதனால் பிரும்மா அத்தேவதையை சமுத்திரத்தின் மத்தியில் எரியச்செய்தார்
இந்தத் தேவதை அரசமரத்தின் அடிப்பாகத்தில் தோன்றியதால் அரசமரத்தின் அடிப்பாகத்தைத் தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டு வணங்குகிறோம் ,
மழலைச்செல்வம் கேட்க அரசமரவழிபாடு போல் வேறு எதுவும் இல்லை..சனிக்கிழமையில் அரசமரத்தின் எல்லா பாகங்களும்
வணங்கலாம் .அரசமரமும் வேப்பமரமும் சேர்ந்து வளர அங்கு
அம்மன் கோயில் வந்துவிடும். அரசமரம் வேப்பமரம் மாமரம் வளர்க்க வாஸ்துவிற்கும் நல்லதாக அமைகிறது அரசமரம் வழிப்பட்டுப் பிறந்த குழந்தைக்கு அச்வத்த நாராயணன் என்று
பெயர் வைப்பார்கள் இரண்டு அரசமரங்கள் வளர்த்து அதற்கு கல்யாணம் செய்துவைப்பார்களாம் அப்படிச்செய்ய பல ஆண்டுகள் குழந்தை இல்லாதவர்களுக்குக்கூட
குழந்தை பாக்கியம் உண்டாகுமாம் ,,

பழைய அமுது

சமையல் அறை ,ஒரு மூலை ,
ஒரு கறச்ட்டியில் நீ ...........
நீர் விட்ட அமுது நீ,
முதல் நாள் வைத்த அமுது நீ ,

மறு நாள்........
என் அம்மாவின் பக்குவத்தில் நீ
அவள் அன்பில் கட்டுண்டாய் ..
தயிறும் பாலும் சேர்க்கப்பெற்றாய் ,
சுவையான அழகு உருவம் பெற்றாய் ,
கறுவேப்பலையுடன் நீ தொடக்கம்
வெள்ளரி, மாங்காய் உன்னிடம் அடக்கம்
தாளித்தக்கடுகும் உன்னிடம் கொஞ்சும்
வறுத்த மோர்மிளகாயும் உன்னிடம் தஞ்சம்

இதோ நீ தயார் ,,
உன்னருகில் என் தாயார் ,
வரிசையாக அமரும் செல்வங்கள்
அன்பைப்பரிமாறும் உள்ளங்கள்
எடுத்தது மோகினி அவதாரமோ
கொடுப்பது அங்கு அம்ருதமோ .
முத்ல் பிடி அன்புடன் என் கையில்
நடுவில் குழித்தது என் கட்டைவிரல்
உள்ளே சொட்டியது வற்றல் குழம்பு
என் தாயின் முகத்தில் புன்னகை அரும்பு
தொட்டுக்கொள்ள ஒரு மாவடு,
வாசனைத்த்தூக்கும் அந்த வடு
அன்புடன் கொடுத்தாள் பொறுமையுடன் இருந்து
மகிழ்ச்சியுடன் இது குடுமபத்திற்கு ஒரு விருந்து

அன்புடன் விசாலம்
,

Thursday, June 18, 2009

அன்பே தெய்வம்

உரையாடல் சமூககலை இலக்கிய அமைப்பு " நடத்தும் சிறுகதை போட்டி ,,,,............................அன்பே தெய்வம் ...................

"ட்ரிங் டிரிங் " ... டெலிபோன் மணி ஒலித்தது ,"இந்தப்போன்

பால் காச்சும்போதுதான் வரும், இரு இரு வரேன்" என்று ஒரு குழந்தைப்போல் சொல்லிக்கொண்டு ராஜம் போனை எடுத்தாள். "ஹலோ ஹலோ யார் பேசறது "?

"நான் தான் சுப்பிரமண்யன்"

""நமஸ்காரம் இருங்கோ. இதோ எங்காத்து மாமாவைக் கூப்படறேன்".........டெலிபோனைப்பொத்தியபடி, "ஏன்னா இந்தாங்கோ நம்ம சம்பந்தி.... கூப்பிடறார் உடனே வாங்கோ"என்றுதன் கணவர் சிவராமனைக் கூப்பிட்டாள் . பாதி ஷவரம் செய்த முகத்துடன் அவரும் வந்தார் ,"ஹலோ நமஸ்காரம் சௌக்கியமா? எப்போ முகூர்த்தத்தை வச்சுக்கலாம் ?

"அதுதான் சொல்ல வந்தேன். இந்தச்சம்பந்ததம் நடக்காது மன்னிக்கணும் , நீங்கள் நிச்சியதார்த்தம் அன்று போட்ட பொருட்கள் எல்லாம் திருப்பித் தந்துவிடுகிறோம், வந்து எடுத்துங்கோ.

"ஏன் என்ன ஆச்சு ? எல்லாம் நன்னாத்தானே நடந்தது இப்ப என்ன திடீர்னு ..."

மேலே ஒண்ணும் சொல்லறதுக்கில்லை வச்சுடறேன்"

ராஜம் கேட்டாள் "என்ன ஆச்சு ?ஏன் இப்படி இடிஞ்சுப்போய் நிக்கறேள் ?

"நம்ம சம்பந்தம் வேண்டாம்னு சொல்றா .... நம்ம பையனுக்கு என்ன குறைச்சல் ...ராஜா மாதிரி இருக்கான் சி ஏ வேறு .......கை நிறைய சம்பளம் ....அவாளுக்கு என்ன..... கசக்கறதா?சரி, விடு இந்தப்பெண் இல்லேன்னா எத்தனையோ பெண்கள்........"ராஜத்திற்கு மனம் உளைச்சல் கண்டது . ஓடிப்போய் தன் தங்கையிடம் போனில் தெரிவித்தாள் பின் திருவாரூரில் இருக்கும் தன் அப்பாவைக்கூப்பிட்டாள்

,ஹலோ ஹலோ ,யாரு அப்பாவா.....'

"ஆமாம் ராஜமா ...என்ன மோஹனுக்கு முகூர்த்ததேதி பார்த்தாச்சா"?

அதுதாம்பா சொல்ல வந்தேன் கல்யாணம் நின்னுபோயிடுத்து ,என்னகாரணம்னு தெரிலை நீங்கள் தான் துப்பறியும் சாம்பு போல் கண்டுபிடிக்க வேண்டும் பெண்ணோட தாத்தாவும் திருவாரூர்தானே...."

சரி ராஜம் நான் விஜாரிச்சு பின் சொல்றேன் ,கவலப்படாதே"

.அப்பாடி... இப்போத்தான் ராஜத்திற்கு மூச்சு வந்தது. உள்ளே போனாள்.

," அப்துல் தும் கஹான் ஹோ?' {அப்துல் நீ எங்குஇருக்கிறாய் "? என்று இந்தியில் பேச அப்துல் "அபி ஆயா{இதோவந்துவிட்டேன் } என்று பதில் சொன்னான் "சாப்பிட்டாயா .... அப்துல் .....நம்ம மோஹன் கல்யாணம் நின்றுவிட்டது தெரிமா"?

தெரியும் மாஜி " என்று அவனும் தமிழில் பேச முயன்றான் அவன் கண்கள் கலங்கின.

தில்லியில் ஜனக்புரி என்ற இடத்தில் தான் சிவராமன் குடும்பம் இருந்தது. இரு மகன்கள் .....மூத்தவன் மோஹன்.... தம்பி சுரேஷ் ,,,பின் யார் இந்த அப்துல் "? இது தெரிய பத்து வருடங்களுக்கு முன்னால் நாம் போக வேண்டும். எப்போதும் தனக்கென்று ஒரு ரிக்க்ஷா வாலாவை ராஜம் தன் சிறு பிரயாணத்திற்கு அமர்த்திக்கொள்வாள். ஒருநாள் அவனைக்கூப்பிடப் போன போது ஒரு ஐந்து வயது சிறுவன் அங்கு அழுதுக்கொண்டிருந்தான். அவன் தான் ரிக்க்ஷாக்காரன் சலீமின் குட்டித்தம்பி அப்துல் .....ராஜம் அவன் ஏன் அழுகிறான் என்று கேட்க அவனும் தன் பெற்றோர்கள் இறந்துவிட்டதால் இந்தக்குட்டி அப்துலைத் தான் பார்த்துக்கொள்வதாகவும் வேலைக்குப்போக மிக கஷ்டமாக இருப்பதாகவும் கூறினான் தவிர வறுமை வேறு .....ராஜம் இயல்பாகவே இளகிய மனம் படைத்தவள் ஆதலால் அவனிடம் "சலீம் நான் இவனை வளர்த்து படிக்க வைக்கிறேன் அனுப்புகிறாயா ?"என்று கேட்டாள் கரும்பு தின்னக்கூலியா ? உடனேயே அவனை அனுப்பி வைத்தான். அப்துல் வயிறு ஒடுங்கி ஒல்லிக்குச்சியாய் ராஜத்தைத் தொடர்ந்தான். அன்று வந்தவன் தான் அப்துல் "மாஜி மாஜி "என்று அன்பைக்கொட்டினான். ராஜமும் அவனைப்பள்ளிக்கு அனுப்பித்தாள் . தமிழ் கற்றுக்கொடுத்தாள் விதவிதமான உடையும் வாங்கிக்கொடுத்தாள். அவனும் வளர்ந்தான். வீட்டுவேலையும் செய்துபின் படிப்பிலும் கவனம் செலுத்தினான். மொத்தத்தில் ராஜத்தின் வலது கையானான் ராஜத்தின் பிள்ளைகள் ஒரு வேலையும் செய்யாமல் அப்துலை வேலை வாங்குவார்கள். இது ராஜத்திற்கு மிக வருத்தம் உண்டாக்கும். அப்துலுக்கு அந்த வீட்டில் தனிச்சலுகை என்று இரண்டாவது மகன் மனம் வெம்பினான் பொறாமை வேறு அவனை ஆட்கொண்டது ஒருநாள் ராஜம் தலைவலியால் துடித்தாள் .அவள் மகன் சுரேஷ் காலேஜிலிருந்து வந்தான் ,"அம்மா என்ன திங்க வச்சிருக்கே எடுத்துக்கொடு"

"சுரேஷ் கண்ணா எனக்குத் தலைவலிடா..... நீயாகவே உள்ளே போய் தோசை எடுத்துக்கோ"

அப்போது அப்துலும் அங்கு வந்தான்.

"மாஜி என்ன ஆச்சு ?உங்கல்கு ,,,,,தலவலியா? இதோ நானு வரேன் " என்று தனக்குத்தெரிந்தத்தமிழில் பேசித் தலைவலி பாம் கொண்டு வந்து தடவினான் ,பின் உள்ளே போய் தோசையும் கொண்டு வந்து "மாஜி இந்தா.. வாயைக்காட்டு,, தோசை சாப்பிடு" என்று ஆசையாகச் சொன்னான். ராஜம் மனம் நெகிழ்ந்தாள் அப்படியே அவனை அணைத்துக்கொண்டாள். இதையெல்லாம் பார்த்த சுரேஷுக்குக் கோபம் கோபமாக வந்தது "இந்த அம்மா என்ன இத்தனை மாறி விட்டாள் எப்போ பாத்தாலும் அப்துலையே கொஞ்சறாளே"

"ஏண்டா சுரேஷ் என்ன செய்யறே "என்று கேட்டபடி மோகன் அங்கு வந்தான் "ஒன்றுமில்லை அண்ணா... இந்த அப்துல் அம்மாவை என்ன மக்கன்{வெண்ணெய்} வைத்தானோ நன்னா மயக்கி வைத்திருக்கிறான் .அன்று நான் கிரிக்கெட் பார்க்கும் நேரத்தில் அம்மா அவனுக்காக இராமயணம் சானல் மாற்றினாள்"

ஆமாம் என்னிடமும் அம்மா அன்னிக்கு சொன்னாள் "இந்த அப்துல் எனக்குக்கால் பிடிச்சு விடறான், பாத்திரமும் அலம்பித்தருகிறான், ரொம்ப அன்பாக பழகுகிறான் நீங்கள்வருவதும் தெரிவதில்லை ஆபீஸ் போவதும் தெரிவதில்லை. என்ன பிள்ளைகள்டா நீங்கள் என்றாள்" இப்படிச்சொல்லும்போதே ராஜம் அங்கு வர பேச்சு நின்றுவிட்டது இந்த நிலையில் தான் மூத்தவன் மோஹனுக்கு பெண் பார்த்து அவர்கள் போபாலிலிருந்து வருவதாகச்சொன்னார்கள் அவர்கள்தில்லிக்கு ஒரு கல்யாணத்திற்கு வருவதாகவும் அப்போது பிள்ளையும் பெண்ணும் பார்த்து விடட்டும் ,என்று தீர்மானிக்கப்பட்டது வாசலில் வண்டி வந்து நின்றது "அப்துல் வாசலில் அவர்கள் வந்துவிட்டார்கள் போய் அழைத்துவரலாம் என்று அப்துலையும் அழைத்து வந்தாள் "ஆமாம் யார் இந்தப்பிள்ளை '? என்று கேட்டாள் பெண் சுமதியின் தாய் "இவன் தான் அப்துல என் பிள்ளை என்று அவனை அணைத்துக்கொண்டாள் ராஜம். பெண்ணின் தாய் முகம் சுளித்தாள் .பின் ராஜம் அந்த அப்துல் கையில் டிபன் காபி எல்லாம் கொடுத்து அனுப்பினாள் ..பெண்ணின் அம்மா ஆசாரம் இல்லை என்றாலும் அப்துல் பூஜை அறை கிச்சன் என்று நுழைவது அவளுக்குப் பிடிக்கவில்லை. பெண் சுமதியும் மோஹனும் தனியாகப் பேசிக்கொண்டு பின் ஒகே சொல்லி விட்டார்கள் .நிச்சியதார்த்தம் மிக நன்றாக நடந்தது ...............

."போஸ்ட் என்று தபால்காரன் ஒரு கடிதத்தைப்போட ராஜம் அதை எடுத்துப்படித்தாள். அவள் அப்பா எழுதியிருந்தார்.அதில் அப்துலால் கல்யாணம் நின்றுவிட்டதாகவும் இரு மகன்கள் ராஜாப்போல் இருக்க இந்த அப்துலை ஏன் வளர்க்க வேண்டும் இந்தப்பையனுக்கும் அந்தக்குடுமபத்திற்கும் எதாவது சம்பந்தம் இருக்குமா என்ற சந்தேகம் வந்துவிட்டது அவர்களுக்கு என்றும் எழுதியிருந்தார்.

அவசரம் அவசரமாகப்போனை அடித்தாள்தன் அப்பாவுக்கு.......

"அப்பா லெட்டர் வந்தது. என்ன இது இப்படி அபாண்டமாகப்பழி....

,,,""நீ ஏன் அந்த அப்துல் பயலை வளைய வர விட்டாய் அதுதான்கல்யாணமே நின்று விட்டது இப்போ ..பார்த்தாயா ?அதன் விளைவை ......"

"என்ன அப்பா...நீங்க ! அம்மா அப்பா இல்லாத ஒரு பிள்ளையைவளர்ப்பது தப்பா"?

"அதுசரி ராஜம்.... இப்போ என்ன செய்யப்போறே "?

வேறு வரன் வராமலா போய்விடும்? கடவுள் விட்ட வழி "

பேச்சு முடிந்தது .

,காலம் உருண்டது. வேறு பெண் மோஹனுக்கு நிச்சியம் ஆயிற்று

"சுரேஷ் அந்த அப்துலை என் கல்யாணத்திற்கு அப்புறம் வரசொல்" என்றான் மோஹன் .

"அம்மா அந்த அப்துல் பயலை கிட்நேப் செய்து கல்யாணம் ஆனபின் கொண்டுவிடுகிறேன் "என்று கிண்டல் அடித்தான் சுரேஷ்மோஹனும் சுரேஷும் தமிழர்கள் ஆனாலும் இந்தியில் பேசிக்கொண்டார்கள். ஆனால் அப்துலோ தமிழ் நன்றாகப்பேசினான். கல்யாணம் ஆனவுடனேயே மோஹன் தனிக்குடித்தனம் போய் விட்டான். இரண்டாவது மகனோ பூனாவில் வேலை சேர்ந்து விட்டான். சிவராமனும் ராஜமும் தனித்து விடப்பட்டனர். ஆனால் பிளைக்குப்பிள்ளையாக அப்துல் இருந்து காலேஜையும் முடித்தான்வேலையும் தேடினான் .

கொரியர் சர்விசில் ஒரு நல்ல வேலைக்கிடைத்தது .

அன்று முதல் சம்பளத்தை வாங்கி வீடு வந்து "மா..ஜி ஆசீர்வாதம்செய்யுங்கோ "என்று அவள் காலிலும் சிவராமன் காலிலும் விழுந்தான் தன் சம்பளத்தை அவள் கையில் கொடுத்தான்.

அடுத்த வீட்டிலிருந்து ஒரு இந்திபஜன் கேட்டது

"பிரேம் ஈஸ்வர் ஹை ஈஸ்வர் பிரேம் ஹை" {அன்பே கடவுள் கடவுளே அன்பு },,,,,ராம் ரஹீம் புத்த கரீம் .....கோயீ பி நாம் ஜபோ ரெ மனுவா ஈஸ்வர் ஏக்ஹை {ராம் என்று சொன்னாலும் ரஹீம் புத்தர் கரீம் என்று எந்தப்பெயர் சொன்னாலும் எல்லாமே ஒன்றுதான் ஈஸ்வரன் ஒன்றுதான் ,,,,,,

ராஜம் அப்துலை அணைத்தாள் . சொந்த மகன்கள்

எங்கேயோ இருக்க இந்த வளர்ப்பு மகன்

அதுவும் பீஹாரைச்சேர்ந்த முஸ்லிம் இப்படி அன்பைப்பொழிகிறானே! அவள் கண்களிலிருந்து கண்ணீர்

பெருகியது ,இதுதான் ஆனந்தக்கண்ணீரோ .அங்கு அன்பே

தெய்வமானது ........

அன்புடன் விசாலம்

Friday, April 3, 2009

நமக்குள் ஒரு ராமாயணம்

நமக்குள்ளே ராமாயணம் ,,,,,,நமது காலசக்கரத்தையும் கர்ம சக்கிரத்தையும்ஓட்டுவது நமது புத்தி .இது விவேகத்தின் உதவியாலும் வைராக்கியத்தின்உதவியாலும் ஓட்டப்படுகிறது அந்தச்சக்கிரம் அன்பு என்ற வட்டத்தினாலும்உள்ளே இருக்கும் கம்பியின் வரிசைகள் தர்மத்தினாலும் செய்யப்பட்டு கர்த்தவினாலேயே ஓட்டப்படுகிறது இது நேராக ஓட சத்தியம் என்றஅச்சும் சாந்தி என்ற வழியும் தேவை ,,,,,ராமா என்ற புருஷன் பிருகிருதியை ஏற்கிறான் சீதை என்ற சைத்தன்யம் நம்உடலில் இருக்கும் பிரும்மனை தட்டி எழுபுகிறது .மாயையில் விழுந்துவிட்டால் பிரும்மஞானம் காணாமல் போக ரரமா என்ற புருஷன்காட்டில் அலைகிறான் சீதை என்ற சைத்தனயத்தைத் தேடுகிறான் .லக்ஷ்மணர்தான் நம் மனது ,எப்போதும் ராமபுருஷனுடன் இருக்கிறான் .வாலி என்பவன் தான் பலஇந்திரியங்களின் அடங்காதன்மை ,அதை அடக்க சுக்கிரீவன் என்ற விவேகம் உதவிக்கு வருகிறது ஹனுமான் தான் மனோதிடம் தைரியம் அசைக்க முடியாத நம்பிக்கை சமர்ப்பணம் ,இந்த ஹனுமான் என்ற திடம் அஞ்சா நெஞ்சம் இருளைக் கிழித்து வெளிச்சத்திற்குநம்மை அழைத்துப் போகிறது பெரிய கடல் தாண்டுவது மாயை என்ற கடலைத் தாண்டுவது .அரக்கர்களை வெல்வது நம்மிடம் இருக்கும் தமோகுணத்தைவெல்வது .முக்கியமாக கும்பகர்ணனை அழிப்பது .ரஜோகுணத்தை வெல்வது ராவணனை அழிப்பது விபீஷணனுக்கு முடிசூட்டுவது சத்வகுணாவின் வெற்றி அனுபவஞானத்துடன் பிரும்மஞானமும் சேர நடப்பது பட்டாபிஷேகம் ராமர் தசரதரின் மகன் , தசரதர் என்றால் பத்து தேர்கள் அந்தப்பத்து தேர்கள் நம் உடலில் ,,,ஐந்து கர்மேந்திரியங்கள் ஐந்து ஞானேந்திரியங்கள் ,நாலு மகன்கள் ,,,சத்யம் என்ற ராமர் பரதன் என்ற தர்மம் லக்ஷ்மணர் என்ற அன்பு ,சத்ருக்னர் என்றசாந்தி ,,,இந்த உடலில் இருக்கும் ராமாயணத்தை கொஞ்சம் கொஞ்சமாக அலசிப்பார்த்தால் நாமஸ்மரணத்தினால் பலப்படுத்தினால் ராமாமிருதத்தைப் பருகலாம் ராமாய ராமபத்ராய் ராமசந்திராய வேதஸே ரகுநாதாய் நாதய சீதாய பதயே நம: அன்புடன் விசாலம்

Wednesday, January 7, 2009

"கல்லை உடைக்கும் நீ"

கடும் வெயில் உனக்கு நிலவானதா?
இல்லை இல்லை !
உன் வயிற்றின் பசி அக்னி
ஆதவனையும் அமுக்கியதா?
காலிலோ செறுப்புமில்லை
,காலும் கல்லானதா?
மலைக்கு நடுவில் நீ
உன் மனமே பறையானதா?
கல்லை உடைக்கும் உன் கையும்
உடைத்து உடைத்து இரும்பானதா?
கருமமே கண்ணாகியதா?
மனமும் ஒடிந்து போனதா?
ஓ பாட்டாளியே! கடும் வெயில் உனக்கு நிலவானதா?

Tuesday, January 6, 2009

"நீ வருவாயென "

அன்பு மகனேஏன் இந்தக் கோபம் ?

ஏன் இந்தத் தாபம் ?

இதில் என்ன லாபம் ?

மரத்தின் பின்னே நீ,ஒளிந்திருந்திருப்பது ஏன் ?

என்ன தான் செய்கிறாய்?அசையாமல் நின்றபடி,,,,,

காணத்துடிக்கும் நான்காத்து நிற்கும் நான் ,

உன் பசியை நான் அறிவேன் .

அன்புப் பாலைச் சுரப்பேன்,

மா என்று அழைப்பாயே!துள்ளி ஓடி வருவாயே

!வந்துபுட்டான் பாவி மனுசன்

பால் கறக்கும் சின்னசாமி

பாலை ஒட்டக் கறந்து புட்டான்

,என் கண்ணீர் வடிவது தெரியலயா !

என் மன நிலை நீ அறியலயா ?"

பால் குவளையும் கையுமாய்நடந்தான்

மரத்தடிக்கு சின்னசாமி ,

அலாக்காகத் தூக்கினான் கன்றை ,

வைக்கோல் சிதறி விழுந்தது

அம்மா "என்ற ஆசைக் குரலுமில்லை

,பசுவின் அலறல் மட்டும்

காற்றில் கலந்து அழுதது .

சக்தியைச் சேமிப்போம்

டிசம்பர் 14 சக்தியைச் சேமிக்கும் நாள் energy conservation dayஇந்த நாளை நாம் மிக முக்கியமான நாளாகக்கொண்டு நம்மால் முடியும் வரைசக்தியைச் சேமிக்க வேண்டும் இந்த பூமியிலேயே நமக்குத் தேவையான சக்திகள் அனைத்தும் உள்ளன நீர்மின்சக்தி ,,அணுமின்சக்தி என அனைத்தையும் உருவாக்கியது மனித ஆற்றல் என்ற சக்திதான் ,இல்லத்தரசிகள் கேஸ் அடுப்பை தேவைக்கு அதிகமாக உபயோகிக்காமல்சேமிக்கலாம் சிலர் தண்ணீரைக் கொதிக்க வைத்துவிட்டு டிவி கீழ் அமர்ந்துவிடுவார்கள் அது கொதித்து பாதி ஆனவுடன் பின் வந்து அணைப்பார்கள் சிலர்தோசை வார்க்கும் தவாவை பெரிய அளவில் வைத்து அதில் சிறிய தோசை வார்ப்பார்கள் ,சின்ன தவாவைத்தாலே தேவையான சூடு பரவும் ,பர்னரின் அளவு இருந்தால் நன்றாக இந்தச் சக்தியைச் சேமிக்கலாம்,சில ஆண்கள் ஷேவிங் செய்த்துக்கொள்ள குழாயைத் திறந்து விட்டபடிதொடருவார்கள் ,அத்துடன் செல்லிலும் பேசுவார்கள் தண்ணீர் போனபடி இருக்கும் ,,,,,,,இதே போல் பலதடவைகள் குழாய் திறந்துவிட்டபடி வந்து பக்கெட் ரொம்பி வழிந்துக்கொண்டிருக்கும் போது ஞாபகம்வந்து மூடுவார்கள் ,,,சிலர் மேலே தண்ணீர் ஏற மோட்டார் போட்டு விட்டுபின் அந்த டேங்க் ரொம்பி வழிந்து கீழே கொட்ட பின் முழித்துக்கொள்வார்கள்சில தெருவில் பகலிலும் விளக்கு எரியும் ,,அதை அணைக்க மறந்து இருக்கலாம் இதே போல் மனிதர்கள் இல்லாத அறையிலும் சுழல் காற்றாடிசுழன்றுக்கொண்டிருக்கும் ,கணினியோ கேட்கவே வேண்டாம் அதை சிலர் அணைப்பதேஇல்லை. மைக்ரோஅவனில் தேவையானஅளவுடன் கண்ணாடி பாத்திரம் வைக்க நிறைய சக்தி சேமிக்கலாம் ,வீட்டு வாசலில் மரங்கள் இருந்தால் நல்ல காற்று வருவதால் மினசாரச் சக்தி சேமிக்கலாம் ,தில்லியில் பஹுவாய் மந்திர் கட்டிருக்கும் வித்ம் மிக வியப்பைத்தருகிறது தாமரை மலர் போன்று அமைப்பு ஒரு இடத்திலும்மின்சாரம் இல்லை சுற்றி வாய்க்கால் போன்று நீரோடடம் ,,,,,உள்ளே தியானம் செய்ய ஏற்ற இடம் உள்ளே மிகவும் சில்லென்று ஏசிபோட்டாற்போல் இருக்கிறது இது நல்ல வெயில்கால்த்திலும் தான் ,,,,,,,,,,எங்கும் பச்சைப்பசேர் என்ற புல் வெளிஇந்தச் சக்தியைச் சேமிக்கும் போது நம்மிடம் இருக்கும் சக்தியையும்
சேமிக்கலாமே படபடவென்று பேசி சக்தியை இழக்கிறோம் கோபத்தில் சக்தியைஇழக்கிறோம் ,காமத்தில் சக்திஅதிகமாக போகிறது ,அதிக மௌனமாக இருந்தால் அதில் சக்தி சேமிக்கப்பட்டு பலநல்ல விஷயங்களுக்கு வழி உண்டாகிறது,ஜே.வி செர்னே சொல்கிறார்"ஆற்றல் சக்தியை நாம் பயன்படுத்தி வெற்றிபெற் வார்த்தைகள்வாகனங்களாக உள்ளன . "செய்து முடிப்பேன்" என்ற வாகனத்தில்ஏறிக்கொண்டால் அடக்கமுடியாத ஆர்வத்துடன் கூர்ந்து செயல்வடிவில் ஒவ்வொரு நாளும் இலட்சியத்தை நோக்கிச் செல்லலாம் வானத்தைத் தொட்டுவிடலாம் "சக்தியைச்சேமிப்போம்

அருள் புரிவாயே மாருதி

அருள் புரிவாய் மாருதியேஅருள் புரிவாய் மாருதியே

அல்லல் களைவாய் மாருதியே

வீரம் ஞானம் வெற்றி தந்துமன உறுதி வழங்கும் மாருதியே அசோக வனத்தில் அன்னையைக் கண்டாய்

அவள் சோக மனதில் ஆறுதல் தந்தாய்

ஸ்ரீ ராமனுடைய தூதனும் ஆனாய்

,எண்ணியதை முடித்தும் வைத்தாய் மாருதியே

இராம நாமத்தில் மூழ்கிப்போனாய் ,

சீதைக்கு கணையாழியும் கொடுத்தாய்

வாயு வேகத்தில் சஞ்சீவி கொண்டு

இலக்குவன் உயிரைக்காத்து நின்றாய் .

அஞ்சனையின் குமாரா மாருதியே

சிறிய திருவடி மாருதியே

சிரஞ்சீவிப் பட்டம் பெற்ற மாருதியே

பஞ்ச முகமான மாருதியே ,

ஈரேழுத்தலமும் புகழ்ந்து வணங்கும மாருதியே

செங்கமலத்திருவின் திருவருள் பெற்ற மாருதியே

காமனை வென்றவனே!காலத்தை வென்றவனே

காத்தருள்வாய் , நின் தாள் பணிந்தேன் அனுமானே

அன்புடன் விசாலம்

பிருந்தாவன துவாதசி

கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசியின் மறு நாள் பிருந்தாவன துவாதசி ,மஹாராஷ்ட்ராவில் இதை மிகப் பிரபலாமாக துளசி விவாஹமாகக் கொண்டாடுவார்கள்,அவர்கள் பெண்களுக்கும்பிருந்தா துளசி விருந்தா என்ற பெயர்கள் வைப்பார்கள் தனி வீடு இருந்தால்நிச்சியம் துளசி மாடம் இருக்கும் ,அதற்கு காவிப் பூசி கோலம் போட்டு வாழைமரங்கள் நட்டு பின் மாலைகளுடன் அலங்கரித்து வழிபடுவார்கள் துளசியுடன் கூட நெல்லிமரத்தின் சிறுகொம்பையும் நட்டு வைப்பார்கள் இன்றைய நாளில் தான் துளசி திருமாலைமணந்துக்கொண்டதாக ஐதீகம் பெண்களுக்கு மங்கலப்பொருட்கள் தந்து இனிப்புப்பண்டங்களும் வழங்குவார்கள். கர்நாடகாவிலும் இந்த வழிபாடு உண்டு ,துளசி துதிகள் சொல்லியப்பின் கற்பூரம் காட்டி வழிபடுவார்கள் ஒரு துளசி ஸ்லோகம் "ஜகத்தாத்ரி நமஸ்துப்யம் விஷ்ணோச்ச பிரியவல்லபேய்தோ பிரஹ்மாதயோ தேவா: ஸ்ருஷ்டிஸ்தித்யந்த காரிண:நமஸ்துளசி கல்யாணி நமோ விஷ்ணு ப்ரியே சுபேநமோ மோக்ஷப்பிரதே தேவி நமஸ்ஸம்பத் பிரதாயினீ துளசி தேவி பலப்பிரதே நமஸ்தே த்ரிஜகத் வந்த்யே நமஸ்தே லோக ரக்ஷிகே" திருவிண்ணகர் என்ற ஒப்பிலியப்பன் கோயில் துளசி வனமாக இருந்தது ,அந்தவனத்தில் ஸ்ரீ மார்க்கண்டேய மகரிஷி தனக்கு மகாலட்சுமியே பெண்ணாகஅவதரிக்க வேண்டும் என்று வரம் கோரி தவம் இருந்தார் ,துளசியும் தனக்குத்திருமகள் போல் திருமாலுடன் இருக்கும் பாக்கியம் வேண்டும் என்று வேண்டினாள் .இருவரது கோரிக்கையும் ஒப்பிலியப்பன் தலத்தில் நிறைவேறியது மார்க்கண்டேயருக்குப் பூமிதேவியாக ஒரு துளசிச்செடியின் கீழ் குழந்தை உருவில் கிடைக்கப்பெற்றாள்.திருமாலும் துளசியை தனக்கு உகந்தப்பொருளாக ஆக்கிக்கொண்டதால் திருமால்திருமேனியை எப்போதும் அலங்கரிக்கும் பாக்கியம் துளசிக்குக்கிடைத்தது ,துளசிசெடியின் கீழ்தான் ஆண்டாளும் அவதரித்தாள் ,அவளும் பூமி தேவியின் அம்சம்தான் துளசிச்செடியில் மும்மூர்த்திகளும் வாசம் செய்கிறார்கள்,துளசி செடிவாசலில் வைக்க பாம்பு போன்ற ஜந்துக்கள் உள்ளே நுழையாது துளசியைப்பூஜிக்கஅந்த வீட்டில் என்றும் மங்களம் உண்டாகும் ,,துளசி இலைகளை மாலையில்பறிக்கக்கூடாது ,,,