Tuesday, January 6, 2009

பிருந்தாவன துவாதசி

கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசியின் மறு நாள் பிருந்தாவன துவாதசி ,மஹாராஷ்ட்ராவில் இதை மிகப் பிரபலாமாக துளசி விவாஹமாகக் கொண்டாடுவார்கள்,அவர்கள் பெண்களுக்கும்பிருந்தா துளசி விருந்தா என்ற பெயர்கள் வைப்பார்கள் தனி வீடு இருந்தால்நிச்சியம் துளசி மாடம் இருக்கும் ,அதற்கு காவிப் பூசி கோலம் போட்டு வாழைமரங்கள் நட்டு பின் மாலைகளுடன் அலங்கரித்து வழிபடுவார்கள் துளசியுடன் கூட நெல்லிமரத்தின் சிறுகொம்பையும் நட்டு வைப்பார்கள் இன்றைய நாளில் தான் துளசி திருமாலைமணந்துக்கொண்டதாக ஐதீகம் பெண்களுக்கு மங்கலப்பொருட்கள் தந்து இனிப்புப்பண்டங்களும் வழங்குவார்கள். கர்நாடகாவிலும் இந்த வழிபாடு உண்டு ,துளசி துதிகள் சொல்லியப்பின் கற்பூரம் காட்டி வழிபடுவார்கள் ஒரு துளசி ஸ்லோகம் "ஜகத்தாத்ரி நமஸ்துப்யம் விஷ்ணோச்ச பிரியவல்லபேய்தோ பிரஹ்மாதயோ தேவா: ஸ்ருஷ்டிஸ்தித்யந்த காரிண:நமஸ்துளசி கல்யாணி நமோ விஷ்ணு ப்ரியே சுபேநமோ மோக்ஷப்பிரதே தேவி நமஸ்ஸம்பத் பிரதாயினீ துளசி தேவி பலப்பிரதே நமஸ்தே த்ரிஜகத் வந்த்யே நமஸ்தே லோக ரக்ஷிகே" திருவிண்ணகர் என்ற ஒப்பிலியப்பன் கோயில் துளசி வனமாக இருந்தது ,அந்தவனத்தில் ஸ்ரீ மார்க்கண்டேய மகரிஷி தனக்கு மகாலட்சுமியே பெண்ணாகஅவதரிக்க வேண்டும் என்று வரம் கோரி தவம் இருந்தார் ,துளசியும் தனக்குத்திருமகள் போல் திருமாலுடன் இருக்கும் பாக்கியம் வேண்டும் என்று வேண்டினாள் .இருவரது கோரிக்கையும் ஒப்பிலியப்பன் தலத்தில் நிறைவேறியது மார்க்கண்டேயருக்குப் பூமிதேவியாக ஒரு துளசிச்செடியின் கீழ் குழந்தை உருவில் கிடைக்கப்பெற்றாள்.திருமாலும் துளசியை தனக்கு உகந்தப்பொருளாக ஆக்கிக்கொண்டதால் திருமால்திருமேனியை எப்போதும் அலங்கரிக்கும் பாக்கியம் துளசிக்குக்கிடைத்தது ,துளசிசெடியின் கீழ்தான் ஆண்டாளும் அவதரித்தாள் ,அவளும் பூமி தேவியின் அம்சம்தான் துளசிச்செடியில் மும்மூர்த்திகளும் வாசம் செய்கிறார்கள்,துளசி செடிவாசலில் வைக்க பாம்பு போன்ற ஜந்துக்கள் உள்ளே நுழையாது துளசியைப்பூஜிக்கஅந்த வீட்டில் என்றும் மங்களம் உண்டாகும் ,,துளசி இலைகளை மாலையில்பறிக்கக்கூடாது ,,,

No comments: