எந்த மொழியை எடுத்துக்கொண்டாலும் ஒவ்வொரு இடத்தில் பேசும்விதம் மாறுபட்டுவிடுகிறது நாம் ஹிந்தியை எடுத்துக்கொண்டால்தில்லியில் ஒரு விதம் மும்பையில் ஒருவிதம் அலஹாபாத்தில் ஒருவிதம் லக்னவில் ஒருவிதம் என்று சற்று மாறுபட்டு இருக்கும் .திரு கமல்ஹசன் ஏக் தூஜேகே லியேவில் மிகச்சரளமாக பலவிதமாகாண இந்தியைப் பேசிக் காண்பிப்பார் ,இதே போல் தமிழ் நாட்டிற்கு வந்தாலும் பலவிதமாக தமிழ்ப்பேச்சுகேட்க நேரிடுகிறது .முதன் முதலில் நான் மதராஸ் வந்த போது{அப்போது அது சென்னை ஆகவில்லை} ரயிலில் ஒரு குரல் கேட்டது ."எப்டி கீரே " நான் திரும்பிப்பார்த்தேன் எனக்குக்கீரை என்றால்ரொம்பப்பிடிக்கும் அவன் கீரை விற்ப்வன் போலிருக்கு என்று எண்ணி அந்தக்கீரைக்காரனைக்கூப்பிட வாயெடுத்தேன். ஆனால் அந்த ஸ்டேஷனில் ஒருவரும் தென்படவில்லைநான் நின்றபடி எட்டி எட்டிப்பார்த்தேன் . என் அருகில் இருந்தபெண்மணி " யாரைத் தேடறே நீ " என்றாள்"கீரை விற்பவனை ,,,,,,,சற்று முன்பு "எப்டி கீரே" என்று ஒரு குரல் கேட்டதே!அவள் சிரித்தபடி " அவன் கீரை விக்கல ,,,,,,அவன் நண்பனை எப்படி இருக்கே " என்று விசாரித்தான் " என்றாள்" அட ராமா தமிழ் பேசுபவளுக்கே தமிழ் புரியவில்லையே !என்ன இந்த ஊர் இப்படிமாறிவிட்டது " என்று எண்ணினேன் இந்த இடத்தில் சில நாட்கள் தங்க மேலும் சில புரியாதத்தமிழ் சொற்றொடர்கள் காதில் விழுந்தன உம் "என்ன மச்சான் என்ன இஸ்துக்குனு போனே""எம்மாதூண்டு தார்ரே இன்னும் கொஞ்சம் போட்டுக்கொடு""அட கஸ்மாலம் என்னா துன்ன தார்ரே நீ எதனாச்சும் இருக்கா""அட சோமாரி என்ன தபாய்க்ரே""நீ ரீல் விட்டா நான் அத நம்பனுமா "" படு அறுவைடா மச்சான் "இந்தப்பேச்சுக்கள் போல் பல கேட்டுப் புரியாமல் முழித்தேன் இன்றும் சென்னையில் சிலர் பேசும் தமிழில் சில இடங்கள் புரிவதில்லை இதுவே கோயம்பத்தூர் போனால் "அங்குப்போய் வந்தாப்ல "என்ன சொல்லிபுட்டு வந்தாப்ல"என்று எல்லாவற்றுக்கும் ஒரு "ப்ல்" என்று சேர்த்துப்பேசுகிறார்கள் மக்கள் ,ஏன் இப்படி "ப்ல "என்று சேர்க்கிறார்கள்?யாருக்காவது தெரியுமா?பாலக்காட்டுத்தமிழில் ஒவ்வொரு வாக்கியம் முடியும் போது நீண்டு ராகம் போல் வரும் .இவர்கள் தமிழ்ர்கள் தான் ஆனால் மலையாள் நாட்டில் பல வருடங்கள் வாழ்ந்துவருவதால் மலையாள் மொழியுடன் தமிழ்சம்பந்தப்பட்டிருக்கிறது உம் ,"என்ன பாருகுட்டி.... அம்மை எஙகே போனாள்/ஏ,,,,,,,,,நான் கண்டிட்லையே அம்மைய ..... சரி காப்பி குடிச்சாயோ"என்ன ! பஞ்சாரை போட்டுட்டில்லை ?கொரைச்சு போடு ,,மதி மதி '
தஞ்சாவூர் குமகோணம் வந்தால் அங்கும் பேச்சில் வித்தியாசம் .மனைவி கணவரை அழைக்கிறாள் ."ஏன்னா இங்க சித்த வாங்கோன்னா""ஏண்டி கூப்படறே எனக்கு ஏகப்பட்ட வேலை கிடக்கு 'இல்லன்னா எப்போ சாப்பிட வரேள் ?கணவர் ஒரு சாஸ்திரிகளுடன் பேசுகிறார்
" என்ன ஓய் கணபதி சாஸ்திர்கள்வாள் நீர் எந்தப்பக்கம் இங்கே ?'பொண்டாட்டி புள்ளைகள் சௌக்கியந்தானே ?உங்க தம்பி கிச்சாவை வரசொல்லப்டாதோ ,,,பாத்து ரொம்ப நாளாச்சே"
அவர்கள் பேசுவதில் சொற்களுடன் "காணும்" என்ற சொல்லும் சேர்ந்து வருகிறது" நீர் சும்மா இருங்காணும் ""என்னங்காணும் நான் இப்போ என்னத்தச்சொல்லிட்டேன் மூஞ்சியைத்தூக்கிண்டிருக்கேள்
"ஐயங்கார் தமிழில் கூப்பிடும் போது பெரியவர்களை "ஸ்வாமி " என்றேஅழைப்பதைப்பார்த்திருக்கிறேன் அவர்கள் பெருமாளுக்குப்படைப்பதை "திரு "என்ற அடைமொழியுடன்அழைக்கிறார்கள் கேட்கவே நன்றாக இருக்கிறது,ஒரு கோயிலில் கேட்டது ,,,,,,"ஏழ் ஏழ,,,,,,, சேவிச்சுக்கிறேன் ஸ்வாமி "ஸ்வாமி ஏன் தாமதம்""எம்பெருமான் கிருபை அடியேன் நன்றாக இருக்கேன்
"இங்கேயே சாட்டுட்டு போலாமே "திருக்கண்ணமுது , சாத்துமது தத்யோன்னம் புளியோதரை எல்லாம் பெருமாளுக்கு தயார்செஞ்சிருக்கோம்"அப்பொ அடியேன் உத்தரவு வாங்கிக்கிறேன் ஸ்வாமிகளே உத்தரவு தாரும் தண்டனிட்டு சேவிக்கறேன் "இது போன்ற பல கேட்க முடிந்தது,,,, பெருமாள் கோயிலில் பல சொற்கள் எனக்குப்புதிதாக இருந்தன ,அவர்கள் நெற்றியில் நாமம் என்று சொல்வதில்லை அழகாக்திருமண் காப்பு என்கின்றனர் குளிப்பதை" தீர்த்தமாடி வருவது என்கின்றனர் ஸ்வாமியின் பாதத்தைத் திருவடி என்கின்றனர் பல சம்ஸ்கிருத மொழிச்சொற்களும் உபயோகிக்கின்றனர் தமிழ் நாட்டில் மற்ற பல இடங்கள் நான் போயிருந்தாலும் தங்கி ஒரு மாதம்போல் இருக்க வாய்ப்பு கிடைக்கவில்லை ,கன்யாகுமரி வரைச்சென்று விட்டேன் இந்த தமிழ்மொழி மாறுவதைவைத்து ரிசர்ச் கூட செய்யலாம் அத்தனை விதங்கள்கிடைக்கின்றன , இதை வைத்து ரிசர்ச் செய்யலாமோ என்று நானேயோசிக்கிறேன் , எல்லாம் அதனதன் இடத்தில் இனிமையாகவும் ரசிக்கும்படியும் இருக்கிறது , எல்லாம் தெரிந்திருக்க மனம் விழைகிறதுஆனால் சரீரம் ஒத்துழைப்பதில்லையே
,அன்புடன் விசாலம்
Thursday, November 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment