சந்த் துக்காராம் பாட்டுரங்க விட்டல் மீது உயிரையே வைத்திருந்தார்,அவருடையபக்தியைக்குறிப்பிடும் ஒரு சம்பவம் ஒரு மராட்டியர் என்னிடம் தெரிவித்தார் ,சந்த் துக்கராமின் பெண்ணிற்கு ஒருமகன் இருந்தார். அவர் பெயர் ஸ்ரீ வாசுதேவபாவா.துக்காராமுக்குப்பின் இந்தப்பேரன் அவரைபற்றி சொற்பொழிவாற்றுவார் . பக்தவிஜயம் என்றபுத்த்கத்தைப்படிப்பார் கூட பாடல்களும் பாடுவார் . அப்போது அங்கு ஒருமுஸ்லிம் பாதுஷா அரசு செய்து வந்தார் அவர் இந்தச்சொற்பொழிவுக்கு நாள் தவறாமல் வந்து மன மகிழ்ந்துப்போவார். இந்த வாசுதேவ பாவாவும் பல சிறப்பான"அபங்க்" என்று சொல்லப்படும் மராட்டிப்பக்திப்பாடல்களைப் பாடி எல்லோரையும் அசர வைப்பார் கதை முடிக்கும் நாள் வந்தது ,வாசுதேவ பாவாவும்" "இப்படியாக என் தாத்தாவான ஸ்ரீதுக்காராம் தன் பூத உடலுடன் விண்ணகம் சென்றார் " என்று முடித்தார் ,பாதுஷா இதை நம்பவில்லை ."ஹாஹா ஹா யாராவது உடலுடன் வானீல் போக முடியுமா?இதை யாராவது பார்த்தீர்களா? இந்தசபையில் பார்த்தவர்இருக்கிறார்களா? "
இரு வயதானவர்கள் எழுந்தனர் ."அரசே நாங்கள் அப்போது சிறுவர்களாக இருந்தோம். நாங்கள்அந்தக்காட்சியைக்கண்டோம் ""என்ன இது கதை? நான் இதை நம்பவில்லை "என்றார் அரசர்பேரன் எழுந்தார் .. பின் பேசினார்
"அரசே இதைப்பற்றி என் தாய்க்கு நன்கு தெரியும் இருங்கள் நான் உள்ளே போய்கேட்டுவருகிறேன் "உள்ளே போனவர் வழியில் ஒருவரைக்கண்டார் ,அவர் தான் தினமும் பிரவசனம் கேட்க வருவதாகவும் தானேதுக்காராம் என்றும் கூறி தன் சுய உருவத்தைக்காட்டினார் .உடனே தன் தாயை அழைத்துவந்து"அம்மா இங்கே நின்றுகொண்டிருக்கும் இவர்தான் உங்கள் தந்தையா?''அப்ப்டியே மகள் தந்தையின் காலில் விழுந்து வணங்கி"ஆம் வாசுதேவா இவர்தான் உன் பாட்டனார் ஸ்ரீதுக்காராம் அவர்கள்"என்றாள் பின் அந்தபேரன் "நான் இதை அரசரிடம் எப்படிச்சொல்லி நம்பவைப்பேன் .ஒரு வழிசொல்லுங்கள் " என்று கேட்க துகாராம் "அப்பா வாசுதேவா நான் என் தம்பூராவைத்தருகிறேன்,இதைச்சபையில் காட்டி " என் தாத்தா இந்த பூத உடலோடு விண்ண்கம் சென்றது உண்மையானால் இந்தத்தம்பூராவும் அந்தரத்தில் பறந்து செல்லட்டும் என்றுச் சொல்லி வீசி எறிந்துப்பார் " என்று கூறி மறைந்துவிட்டார் ,அதேபோல் அரச சபைக்கு வந்தார்
"அரசே உங்கள் கேள்விக்கு இந்தத்தம்பூரா பதில் சொல்லும் ,தம்பூராவே! இறைவா, விட்டலா என் தாத்தா உடலுடன் விண்ணுலகம் சென்றது உண்மையானால் இந்தத்தம்பூராவும் பறந்து செல்லட்டும் "என்று கூறியபடி ஆகாயத்தை நோக்கி வீசினார் தம்பூராவில் ஓங்கார நாதம் எழு கூடவே துகாராம் அவர்களின்குரலும் விட்டல விட்டல என்று ஒலித்தது . அந்தக்குரலைஅரசரும் கேட்டார் , அப்படியே கீழே விழுந்து வணங்கினார்
விட்டல விட்டல பாண்டுரங்க விட்டல் பணடரிநாத விட்டலா,,,,,,
No comments:
Post a Comment