அன்பர்கள் எல்லா வீட்டுச்சுட்டிகளுக்கும் என் இனியகுழந்தைத்தின வாழ்த்துகள் ".குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில்"இல்லையா ? அன்பு என்ற ஒரு இனிப்புக்குஅவர்கள் கட்டுபடுவார்கள் .சில பெற்றோர்கள் மிகவும் கறாராக இருந்து அந்தக்குழந்தையை வளர்ப்பார்கள் ,அந்தக்குழந்தையும் எல்லா வேலையும் சரியாகத்தான் செய்யும் ஆனால் அந்த வேலை பயத்தினால் செய்யப்படுகிறது ,இந்த நிலை உருவாக்காமல் அன்பாலேயே ஒழுங்கு முறைகளைக்கற்றுக்கொடுக்க பெற்றோர்கள் முயல வேண்டும் உங்கள் சுட்டிகளுக்கு ஒருபடைப்பு என் ஆசிகளுடன்....
ரகு நாலு வயது சிறுவன் தன் தாயுடன் பேசிக்கொண்டிருக்கிறான் தாய் சமையல் செய்வதில் பிசியாக இருக்கிறாள்"அம்மா இன்னிக்கு எனக்கு லீவும்மா மஜாதான் ,,""எதுக்கு லீவுன்னு தெரிமா ரகு ?""ஓ தெரியுமே ,இன்னிக்கு குழந்தைகள் தினம்""குழந்தைகள் பிறந்த தினம் அம்மா"" எந்தக்குழந்தைப்பிறந்தது ? தெரியுமா உனக்கு ?"" அத ஒத்தரும் எங்கிட்ட சொல்லவேயில்லையே!""அதுவா நான் சொல்றேன் தெரிஞ்சுக்கோ . இந்தத்தினம் முன்னாள்பிரதமர் சாச்சா நேருவோட பர்த்டே ,, அதான் பிறந்த தினம் "" அம்மா எனக்கு ஒரு சந்தேகம் ! ஸ்ரீராமர் பிறந்த தினத்தைஸ்ரீர்ரமநவமின்னு சொல்றா ,கண்ணன் பிறந்த தினத்தை கோகுலாஷ்டமின்னு சொல்றாஆனா இந்த சாச்சாநேருஜி பிறந்த தினத்தை நேரு தினம்னுனா சொல்லணும் எதுக்குகுழந்தைகள் தினம் னு சொல்றா?ஆமாம் சாச்சான்னா என்ன்?"சாச்சான்னா சித்தப்பான்னு அர்த்தம்""அப்ப சித்தப்பா தினம்னு சொல்லாமே ஏன் குழந்தைகள் தினம் ?
'"அடராமா இது பார் உன்னோடு பேசிண்டே சாம்பாருக்கு போடும் உப்பைப் பாலில்போட்டுட்டேன் 'போ போ உன் அப்பா சும்மா தான்பேபருக்குள் மூழகி இருக்கிறார் .அங்குப்போய் எல்லாம் கேளு
""போம்மா சந்தேகம் கேட்டா சொல்லாம என்னைத்திட்டறயே!சரி நன் அப்பாட்ட எல்லாம் கேட்டு தெரிஞ்சுக்கிறேன் "
"வாடா ரகு செல்லமே வா நான் எல்லாம் உனக்குச்சொல்றேன் இந்த நேருமுன்னாள் பிரதமர் , பெரிய பங்களாவில் பிறந்து வளர்ந்தாலும் எளிமையை விரும்பினார் .சுதந்திர போராட்டத்திலும்பங்கு பெற்றார் , அவருக்குக்குழந்தைகள்னா உயிர் , அவர் பிறந்தநாளின் போது பல குழந்தைகள் மத்தியில் இவர் நட்னமாடுவார் பலூன் ஊதுவர் குழந்தைகளுடன் அளவளாவுவார் , குழந்தைகளும் சாச்சா என்று அவரிடம் ஒட்டிக்கொள்ளும் ஹிந்தியில் சாச்சா என்றால்சித்தப்பா ,,,,,,,குழந்தைகள் மேலிருக்கும் அன்பினால் தான்அவரது பிறந்தநாளை குழந்தகைகள் தினமாகச்செய்துவிட்டார்,அவருக்கு சிவப்பு ரோஜா ரொம்பப்பிடிக்கும் அதை தன் நீள அங்கியில் சொருகிவைத்திருப்பார் ,பார்த்தால் ராஜகுமாரன் போல் நல்ல களையுடன் இருப்பார் இன்று உனக்கு அவரது சரித்திரத்தின்சிடி போட்டுக்காட்டறேன் சரியா?"சரி அப்பா நானும் இன்று அவர் மாதிரியே டிரெஸ் செய்துக்கொண்டு ரோஜாப்பூசொருகி கொள்ளுவேன் சரியா ?" சரிடா செல்லம் "அப்பா அவனது உடையில் மூவர்ணக்கொடியை குண்டூசியால் குத்திகையில் பலூன்களும் கொடுக்கிறார் ,அந்தப்பிஞ்சுமுகம் மலர்ந்தது
No comments:
Post a Comment