பிரதோஷ விரதம் மிகச்சிறந்த ஒன்று .அதுவும் சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் மிகவும்
முக்கியமாகவும் சிறப்பாகவும் கருதப்படுகிறது ஏனென்றால் பாற்கடலைக்கடைந்தவுடன் வாசுகி
நாகம் கக்கிய விஷத்தை உலக நன்மைக்காக சிவபெருமான் எடுத்து உண்டது சனிக்கிழமை, மாலை நேரம் . அதனால் சனிப்பிரதோஷம் மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிற்து
ஊத்துக்கொட்டை அருகில் சுருட்டுப்பள்ளி என்ற ஒரு ஊரில் சனிப்பிரதோஷம் மிகச் சிறப்பாக
நடைப்பெறுகிறது இந்த ஊரில் என்ன சிறப்பு அம்சம் ? ......எல்லா சிவன் கோயில்களிலும்
லிங்கம் பிரதானமாக இருக்கிறது ஆனல் இந்த ஊரில் சிவன் விஷ்ணுப் போல் பள்ளிக்கொண்டிருக்கிறார் சயன கோலம் ,,, அதுவும் பார்வதியின் மடியில் தலை வைத்துக்கொண்டு படுத்திருக்கிறார் பகதர்களைக்காக்க் விஷத்தை விழுங்கிய சிவன் மயக்க நிலையில் படுக்க தேவர்கள் ரிஷிமுனிகள்
எல்லா கணங்கள் அவரைத்தொழுகின்றனர். முக்கியமாக நந்தித்தேவன் அவரை வணங்குகிறார் ..ஆகையால் இந்தச் சனிப்பிரதோஷத்தில் நாம் சிவன் கோயிலுக்குச்சென்று பிரதோஷவிரதம் முறையுட்ன் வழிபட சகல பாக்கியங்களும் மனசாந்தியும் அடைவோம் மாங்கல்ய பாக்கியம்
புத்திர பாக்கியம் கிடைக்கும்
இந்தக்கோயிலில் வால்மீகி முனிவர் பூஜித்த வால்மீகேஸ்வரர் சுயம்புவாக இருக்கிறார்
ராமரும் இங்கு லிங்கத்தை வழிபட, ராமலிங்கேஸ்வரரும் இருக்கிறார்
தவிர தக்ஷிணாமூர்த்தியும் அருள் பாலிக்கிறார் சனிப்பிரதோஷ பூஜை செய்ய கோயிலுக்குப் போகலாமே .
Sunday, June 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
I Like Ur Blogspot,
We are From Tuticorin Dt, Our Temple is "SREE iLLANGUDI SASTHA"..
Now Temple Renovation ongoing.
We want Small Dtls about Sastha,
We need "ALL Sastha's Names and Photos" . If u Have Please Help me...
Post a Comment