Thursday, November 19, 2009

கங்கையும் கவேரியில் குளித்தாள்


கங்காதேவியின் முகம் வாடி இருந்தது ,மனதுக்குள் ஒரு வருத்தம் தன்னை மறந்து தியானம் செய்தபடி பிரும்மாவை நினைத்தாள் பிரும்மாவும் அங்கு தோன்றினார்"கங்கா தேவி, உன் முகத்தில் ஏன் இந்த வாட்டம் ? பரமேஸ்வரனின் சிரசில் இருக்கும் பாக்கியம் அல்லவா உனக்குக்கிடைத்திருக்கிறது .உன் சரணமடைந்து ஸ்னானம் செய்ய எல்லா பாபங்களும் விலகுகின்றனவே,அத்தனைப்புனிதமாளவள் ஆயிற்றே ! ஏன் இந்த வருத்தமான முகம்

""ஸ்வாமி என் கவலையும் அது தான் என்னை அடைந்து பாபங்களைப்போக்க பல மக்கள் ஸ்னானம் செய்து போகின்றனர் ,அந்தப்பாப மூட்டைகளை நான் சுமக்கிறேன் என் இந்தப்பாப மூட்டைகளை எங்கேகொண்டு அழிப்பது ? நானும் இந்தப்பாபச்சுமைகளைக் களைய எதேனும் வழிசொல்லுங்கள்"

"பிரும்மா தன் கண்களை மூடியபடியே யோசித்து பின்"கங்கா தேவியே உன் பாபங்களைக்க்ழிக்க ஒரு வழி இருக்கிறது ஒவ்வொரு வருடமும் துலாமாதம் கடைசி நாளன்று மயிலாடுதுறை சென்று அங்குஇருக்கும் காவேரியில் முழுகி ஸ்னானம் செய்ய உன் பாபங்கள் கறைந்து விடும் உன்னைப்போல் இருக்கும் மற்ற புண்ணிய நதிகளான யமனை நர்மதா சிந்து போன்ற நதிகளும் இந்தத்தினத்தில் அங்கு வந்து முழுக்கு போடும் ,மக்களும் இன்று இங்குக்குளிக்க பாபங்கள் நீங்கப்பெறுவார்கள் இப்போது மகிழ்ச்சிதானே !

"" நன்றி சிருஷ்டிகர்த்தாவே இதோ இப்போதே அங்குப்போகிறேன் என் பாபங்களைப்போக்கிக் கொள்கிறேன் "

கங்கையும் மற்ற புண்ணிய நதிகளுடன் வந்து காவேரியில் கலந்தாள் ,"ஆஹா நான் என்ன தவம் செய்தேன் இன்று எல்லா புண்ணிய நதிகளும் என்னிடன்வந்துசேர்ந்தனவே .இன்று என்னிடம் வந்துஸ்னானம் செய்ய எல்லாப்புண்ணிய நதிகளில் ஸ்னானம் செய்த பலன் கிடைக்கும்பாப விமோசனம் கிடைக்கும் "என்று எண்ணி மனமகிழ்ந்து காவேரி பொங்கிக்குதித்தபடி சலசல வென்று ஓடத்தொடங்கினாள் ,ஐப்பசிமாதம் கடைசி நாள் காவேரியில் போடும் முழுக்கு ஆதலால் "கடைமுழுக்கு" என் பெயர் வந்தது இதக்கடைமுழுக்குடன் இன்னொரு முழுக்குவும் சமபந்தப்பட்டிருக்கிறது அதுதான் "முடவன் முழுக்கு "பெயரிலேயே தெரிகிறது ஒரு முடவன் காவேரியில் வந்துமுழுக்கு போட்டிருப்பான என்று ,,,,,,ஆம் ஒரு முடவன் எல்லா வருடங்களும் ஐபபசி மாதம் கடைசி நாள் மாயவரம் வந்து காவேரியில் குளித்து அருள்மிகு மயூர்நாதரைப்பூஜிப்பான் .,வயதாக அவனது தெம்பும் திடமும் குறைந்து வர அவனால் வேகமாக நடக்க முடியாத நிலை வந்தது தவிர முடவனாக இருந்ததால் வேகமாக நடக்கவும் முடியவில்லை ஒரு சமயம் அவன் ஐப்பசி மாதம் கடை முழுக்குவிற்குக் கிளம்பினான் ,ஆனால் வழியில் நடைத்தளர்ந்து அவனால் அந்தச்சமயத்திற்கு அங்குப்போகமுடியவில்லை,உடல் சோர்ந்து உள்ளமும் சோர்ந்து மனம் வருந்தி அழ ஆரம்பித்தான் பின் மயூர நாதரிடம் " என் தெய்வமே நான் இன்று அங்கு வர நினைத்தும் வேகமாக நடக்கமுடியாமல் போய் என்னால் கடைமுழுக்கு செய்யமுடியவில்லையே ,பாபச்சுமை சேர்ந்துவிடுமே ! எனக்கு நீங்கள் தான் அருள்புரிய வேண்டும்"அவன் இதைச்சொல்லி முடித்தவுடன் ஒரு அசரீரி கேட்டது"பகதா கண்கலங்காதே நாளை கர்த்திகை முதல் தேதி அன்றும் நீ வந்து காவிரியில் நீராடு உனக்கு ,முழுமாதம் ஸ்னானம் செய்தபலன் அளிக்கிறேன் , உனக்கு பாபவிமோசனம் கிட்டும் "

,அந்த மயூர நாதரே பேசியதைக்கண்ட முடவன் மகிழ்ச்சியுடன் மாயவரம் போய் முழுக்குப்போட்டான் இதுவே முடவன் முழுக்கு என்று .ஆயிற்று .கார்த்திகை முதல் தேதியில் இங்குவரும் பக்தர்களின் எண்ணிக்கை சொல்ல இயலாது முன்பெல்லாம் காவேரி ஆற்றில் நீர் நிரம்பி இருக்கும் இப்போது மழை வாராமல் போனால் நிலைமையே வேறு , ,இந்த முழுக்கு போட்டப்பின் மயூரநாதரின் தரிசனம்செய்ய மனதிற்குள் அப்படி ஒரு அமைதி ,,நிம்மதி கிடைக்கும் . எல்லா புண்ணிய நதிகள் சேர்ந்து இருந்து அதில் குளிக்கவும் கொடுத்து வைக்கவேண்டும் ,,,,,,

1 comment:

சி.பி.சரவணன் வழக்கறிஞர் பக்கங்கள் said...

இது எந்த புராணத்தில் உள்ளது என்பதை தெரிவியுங்கள். நண்றீ