Thursday, November 19, 2009
பெருமாள் செய்யும் சிரார்த்தம்
கயாவுக்குப்போய் சிரார்த்தம் செய்த பலன் அடைய ஒரு கோயில்....,,,,அந்தக்கோயிலில் எல்லோருக்கும் அருள் புரிபவர் ஸ்ரீலட்சுமிநாராயணப்பெருமாள் ,இந்தக்கோயிலை ஆராதிப்பவர் வைகானஸமகான்கள்.பூஜை முடிந்தவுடன் அவர்களுக்கே முதலில் தீர்த்தம் பிரசாதம்வழங்கப்படுகிறது இந்தப்பெருமாள் மீது அளவுகடந்த பக்தி வைத்த ஒரு திவான் பெருமாளிடம் "பிள்ளை இல்லாதவ்ர்கள் ,அநாதைகள் இறந்தால் அவர்களுக்கு ஸ்ரார்த்தம் செய்யஒருவரும் இருப்பதில்லை ஆகையால் தாங்களே அவர்களுக்கு ஸ்ரார்த்தம் செய்து அவர்களைக் கரையேற்றவேண்டும் .இதை நிறைவேற்றுவீர்களா?'என்று மனமுருக யாசித்தான் பெருமாளும் அதற்கு ஒப்புக்கொண்டார் , அதன்படி திதியன்று பக்தர்கள் இங்கு வந்து தினமும் நடக்கும் பூஜையில் தங்கள் பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்துக்கொண்டு பெருமாளிடம் சம்ர்ப்பிக்கிறார்கள் , இதை "ஸ்ரார்த்த ஸம்ரக்ஷ்ணம்"என்று சொல்கிறார்கள் பகல் 12 லிருந்து 1 மணிவரை பெருமாளும்ஒருகாலம் ஆராதனை மட்டும் ஏற்கிறார் பின் விரதம் இருக்கிறார்பிரண்டையுடன் எள் சேர்த்த துவையல் வெண்பொங்கல் தயிர்சாதம் பிரசாதமாகத் தரப்படுகிறது இதை "ஸ்ரார்த தளிகை "என்கின்றனர் பிரண்டையும் எள்ளும் சிரார்த்திற்கு மிக முக்கியம்,அமாவாசை , ஏகாதசி நாட்களில் பெருமாள் மூலம் சிரார்த்த திதி செய்ய கயைசென்ற பலனைத்தருகிறதுஅருகில் ஸ்னானம் செய்து வர புஷ்கரிணி ஜீயர் குளம் உள்ளதுஇந்தக்கிராமத்தை "பிண்டம் வைத்த நல்லூர் "என்கின்றனர் இதன் முதல் பெயர் "புண்டரீக நல்லூர்" என்பதாம் . கோயில் உள்ளே நுழைந்ததும் மூலவரைத்தரிசிக்கிறோம்மூலவரை ஸ்ரீ லட்சுமி நாராயண்ப்பெருமாள்" என்கின்றனர்உதசவர் பெயர் மாறிவிடுகிறது அவரை "ஸ்ராத்த ஸம்ரக்ஷணநாராயணன் "என்று அழைக்கின்றனர் .பல குடும்பத்தில் வியாதியினாலும் மன உளைச்சல்களினாலும்மனநிம்மதி இழந்து கண்கலங்குவார்கள் ஜோதிடர்கள் பித்ரு தோஷம் என்றுகூறுவது உண்டு அந்த மாதிரி நிலையில் ஒவ்வொரு அமாவாசையிலும் இந்தகோயிலுக்கு வந்துபெருமாளைச்சேவிக்க தோஷ நிவிருத்தி ஏற்படும்பெருமாள் சன்னிதிக்கு அருகில் மகாலட்சுமியும் தன் கடைக்கண் பார்வையால்அருள் புரிகிறாள் ,ஒவ்வொரு வெள்ளியும் இங்கு வந்து மஹாலட்சுமிஅஷ்டோத்திரம் ஸ்ரீசூக்தம் சொல்ல வாழ்வில்வளம் உண்டாகி ஐஸ்வர்யம் பெருகும்இந்தகோயில் செங்கல்பட்டு அருகே நென்மேலி என்னும் கிராமத்தில் இருக்கிறது ,
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment