சமையல் அறை ,ஒரு மூலை ,
ஒரு கறச்ட்டியில் நீ ...........
நீர் விட்ட அமுது நீ,
முதல் நாள் வைத்த அமுது நீ ,
மறு நாள்........
என் அம்மாவின் பக்குவத்தில் நீ
அவள் அன்பில் கட்டுண்டாய் ..
தயிறும் பாலும் சேர்க்கப்பெற்றாய் ,
சுவையான அழகு உருவம் பெற்றாய் ,
கறுவேப்பலையுடன் நீ தொடக்கம்
வெள்ளரி, மாங்காய் உன்னிடம் அடக்கம்
தாளித்தக்கடுகும் உன்னிடம் கொஞ்சும்
வறுத்த மோர்மிளகாயும் உன்னிடம் தஞ்சம்
இதோ நீ தயார் ,,
உன்னருகில் என் தாயார் ,
வரிசையாக அமரும் செல்வங்கள்
அன்பைப்பரிமாறும் உள்ளங்கள்
எடுத்தது மோகினி அவதாரமோ
கொடுப்பது அங்கு அம்ருதமோ .
முத்ல் பிடி அன்புடன் என் கையில்
நடுவில் குழித்தது என் கட்டைவிரல்
உள்ளே சொட்டியது வற்றல் குழம்பு
என் தாயின் முகத்தில் புன்னகை அரும்பு
தொட்டுக்கொள்ள ஒரு மாவடு,
வாசனைத்த்தூக்கும் அந்த வடு
அன்புடன் கொடுத்தாள் பொறுமையுடன் இருந்து
மகிழ்ச்சியுடன் இது குடுமபத்திற்கு ஒரு விருந்து
அன்புடன் விசாலம்
,
Sunday, June 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment