Saturday, January 5, 2008

கண்கள் ஜாக்கிரதை

அன்று நீ உன் வீட்டு வாசலில்
என் கவனமோ, உன் மேல்
தாமரைப் போல் முகம் மலர்ந்தாய் ,
என்னைக் கவர்ந்தது அந்தப் பார்வை
உள்ளே போக தடுமாறினாய்
இரும்புக் கம்பியைப் பிடித்தாய்
மனம் பதைப்பதைத்தேன்,,
காதல் வந்ததை உணர்ந்தேன்
வில்லினையொத்தப் புருவம்
அழகான தாமரைக் கண்கள்
ஆனால் பார்க்கும் சக்தி எங்கே?
என் கண்கள் கலங்கியது இங்கே.

ஒருநாள் உன் வீடு ஏற ,
என் காதலை உன்னிடம் கூற
மகழ்வுடன் என்னை ஏற்றாய்
த்டவி என்னைப் பார்த்தாய் ,
கண்ணால் பார்க்க ஆசை என்றாய்
" உயிரையும் கொடுப்பேன் " என்றேன்,,
கைச்சுருக்கி வாய் ஒடுக்கி
அங்கும் இங்கும் அலைந்து
புரட்டினேன் பணம்
நிறைந்தது என் மனம்
அறுவைச்சிகிச்சை நடந்தது
ஒருவாரம் கழிந்தது

அவள் குரலைக் கேட்கச் சென்றேன் ,,
என்னைக்கண்டால் என்ன நினைப்பாள்?
தூரத்தில் நின்றேன் ,
உள்ளே பேச்சுக் குரல்
"டாகடர் அதோ நிற்பவர் யார்?
"உன் காதலன் தான் "
"இவனா? என் காதலன் ,
இத்தனைக்கறுப்பா ?
இத்தனைக் குண்டா "?
திடுக்கிட்டேன் நான் ,
மனம் நொந்தேன் ,
கைத்தடியுடன் அவளிடம் வந்தேன் ,
"என்னுடைய கண்களைப்
பத்திரமாகப் பார்த்துக் கொள்,
என் உருவத்தை வெறுத்தாற்போல்
என் கண்களை வெறுக்காதே"
வேகமாகத் திரும்பினேன்
கைத்தடி துணையுடன்

அன்புடன் விசாலம்

No comments: