"கைக்குட்டை காதல் கடிதம் இது ஒரு கனவா" இந்தப்பாட்டு யாருக்குத்தான் தெரியாது?
ஆம் ,,கைக்குட்டை ,மிகச் சின்னப் பொருள் தான் ஆனால் அதன் மஹத்துவமோ சொல்லி
முடியாது ,இதை வாங்க அதிகச் சிலவுமில்லை ,இதை வைத்துக்கொள்ள அதிக இடம் தேவையும் இல்லை,அது இல்லாமல் நாமும் இல்லை ,முகம் துடைக்க வேண்டுமா?
உடனே கையில் கைக்குட்டை ,சாப்பிட்டு முடித்தவுடன் எடுப்பது கைக்குட்டை
தும்மல் வந்ததா?கேட்கவே வேண்டாம் கையில் தயாராக வருவது இது ,கொல் கொல்லென்று இருமலா உடனே வாயைப்பொத்திக்கொள்ள வரும் ,சிலர் சேர்ந்தாற்போல் ஐந்து தும்மல் தும்மி விட்டு கிருமிகளைத் தாராளாமாகப் பரவவிட்டு பின் மெதுவாக கைகுட்டையைத் தேடுவார்கள் ,அப்படி ஒரு ரகம் ,,,,கண்வலியா ,அழுகையா ,,,,உடனே
நாம் அடைக்கல்ம் புகுவது இதில்தான் ,
பெண்களுக்கு காரியம் சாதித்துக்கொள்ள உதவும் அஸ்திரம் கண்ணீர் அந்தக் கண்ணீரைக்
கேவிக் கேவி துடைக்க ,பின் ஓரக்கண்ணால் எதிராளியின் முகத்தைப் பார்த்து பின் முகத்தை மூட உதவுகிறது இந்தக்கைகுட்டை சில பெண்மணிகளுக்கு புடவைத்தலைப்பே கைக்குட்டையாகிவிடும் ஒரு சிலர் பிரயாணம் போது ரூபாய்களைக்
கைகுட்டையில் சுருட்டிப் பின் தன் சட்டைக்குள் பத்திரப்படுத்துவார்கள், மிக பத்திரமான
பாதுக்காப்பு. அம்மாக்கள் தன் குழந்தைகளை வெளியில் அழைத்துப்போகும் போது அங்கு மூக்குச்சளியைத் துடைக்க உதவுவது இந்தக்கைக்குட்டை ,
முன காலத்தில் பலர் மூக்குப்பொடி போடுவார்கள் அவர்களுக்கு மிக உதவியாய் இருந்தது இது ,அதன் கலர் வெண்மை இல்லாமல் மூக்குப்பொடி கலரில் இருக்கும்
தனியாகத் துணி வாங்கி தைத்துக் கொள்வார்கள் அந்தக்கைக்குட்டையைத் தோய்ப்பது
ஒரு சவால் தான் ,கைக்குட்டை காதலையும் வளர்க்கிறது,ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பும் போது வேண்டுமென்றே கைக்குட்டையை காதலன் வைத்து
விட்டுச் செல்ல காதலி அதை எடுத்து .அந்த வாசனையய அனுபவித்து பின் அதில் அவன் பெயரை அழகாக வர்ண நூலால் அலங்கரித்து அதை அவன் ஞாபகமாக வைத்துக்
கொள்வாள் சில சமயம் அதை அவனுக்குத் திருப்பிகொடுக்கும் சாக்கில் அவனைப்
பார்க்கச் செல்வதும் உண்டு இந்தக் கைகுட்டையால் பல சந்திப்பு ,,பின் காதல் மலரும்
சில சமயம் கைக்குட்டை காற்றில் பறந்து வந்து தூது விடும் ,சினிமாவில் இதை வைத்து
சில கதைகள் ஓடும்
கிரிமினலிலும் இது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது ,கிட்நேப் செய்யவேண்டுமா கைக்குட்டையில் குலோரோபார்ம் வைத்து குறிப்பிட்ட நபரின் முகத்தில் வைக்க
அவ்வளவுதான் ,,,மயங்க வைத்து குண்டுகட்டாய் காரின் உள்ளே அள்ளிபோட்டுக்
கொண்டு ஓடுலாம் கைக்குட்டையால் கழுத்தை நெரிக்கலாம் பெரியகைக்குட்டையால்
கைக்கால்கள் கட்டலாம் திருட்டுப்பொருட்களை அவசரத்தில் கைக்குட்டையில்
முடிந்து தலைத்தொப்பிக்குள் மறைக்கலாம் ,,கைத்தடயங்களையும் இதைக்கொண்டு
அழிக்கலாம்
விபத்தின் போதும் இது மிக உதவும் இரத்தத்தைதுடைக்க ,எலும்பு முறிநதால்
அந்த நேரத்திற்கு சேர்த்துக்கட்ட ,,பாம்பு கடித்தால் உடனே இரத்தம் மேலே பரவாமல் இருக்க ஒரு கட்டு போட இந்தக்கைக்குட்டை உதவுகிறது
இந்தக்கைக்குட்டையின் பூர்வீகம் என்ன?
இது முதலில் ஆங்கிலத்தில் கோர்டேfப் என்று இருந்தது பிரன்சு மொழியில் குவ்ரேசீப்f
என்று இருந்தது ,இதைத் தலையில் முடியாகாக் கட்டிக்கொண்டார்கள் ஆங்கிலேயர்கள்
முதலில் ரோமன் நோபிள் ஒரு பெரிய லினன் துணியில் சதுர வடிவமாக செய்து
வியர்வைத் துடைக்க உபயோகித்தனர் கிரேக்கர்கள் அதில் ப்லவகையான் வாசனைத்
திரவியமும் தடவி கம்கம்க்க வருவார்கள் இவர்கள் பெரிய செல்வந்தராக இருப்பார்கள்
இதன் பிறகுதான் சிறியக் கைக்குட்டை உபயோகத்திற்கு வந்தது
உடல் தூய்மையைப் பேணி பாதுகாக்க இங்கலாந்தில் இரண்டாம் ரிசர்ர்ட் மன்னர்
இதைக்கண்டுபிடித்தார் .முன்பு போரில் சரண் அடையவும் போர் நிறுத்தவும் வெள்ளைக்
கொடிக்குப் பதிலாக இதை உபயோகித்த்னர் ,வட அமெரிக்காவில் டிஷ்யூ பேபரைக்
கைக்குட்டைக்குப் பதிலாக உபயோகித்தனர் ,சுகாதாரத்திற்கு இதுதான் சிறந்தது
என்றனர் ஜப்பான் சிலோனில் இது மிக நாகரீகமாகக் கருத்தப்படுகிறது
முதன் முதலில் கிளீனெக்ஸ் என்ற கம்பனி முதலில் மேக்கப் சாயங்களைத் துடைத்துப்போட டிஷ்யூ தயாரித்தது பின் மூக்கு சிந்த துணியே சரியாகுமென்று எண்ணி இதுப் போல் ஹேன்கி என்று தயாரித்தனர் "பண்டானா என்ற பெரிய கர்சீப்
தயாரித்தனர் அதில் பளீரென்ற அழுத்தமான வர்ணங்கள் சிவப்பு நீல்ம் பச்சை போன்றது
இருந்தன . இதைத் தலையில் அழகுக்காகவும் மோட்டர்சைகளில் போகும் போதும்
தலை முடி பறக்காமல் இருக்கவும் கட்டிக்கொண்டனர்
சிலர் தங்கள் குழுவின் அடையாளச்சின்னமாக வைத்துக் கொண்டனர் அமெரிக்காவில்
"கிரிப்ஸ்குழு" நீல வர்ணத்த்தில் இதை உபயோகித்தனர்
இதை மடித்து வைத்துக் கொள்ளும் ஸ்டைலும் பலவிதம் ,சதுரத்திலும் முக்கோண்த்திலும் ஒருபக்கம் மட்டும் தெரிவது போலவும் அவரவர் விருப்பப்படி
உபயோகிக்கலாம்
கடற்கரையில் தலையில் முண்டாசு போல் கட்டி சூரிய வெளிச்சம் வாங்கும் பலர்,,,,,,,
கிரிக்கெட்மேட்சில் கைக்குட்டையால் ஊக்கமூட்டும் பல்ர் ,,, கவ்வாலி பாடும் போது
கைகளில் கட்டி கொண்டு பாடுவர் பலர் ,,என்று
கைக்குட்டையின் உபயோகம் எண்ணில் அடங்காது ,
கைக்குட்டையை ஆட்டி பை பை ,,,,,,,,,சொல்வது
அன்புடன் விசாலம்
Saturday, January 5, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment