Saturday, January 5, 2008

எங்கும் அவர் இசை

டிசம்பர் 11 என் மனதில் தெய்வமாகப் பதிந்து விட்ட திருமதி எம் எஸ் சுப்பலட்சுமி
அவர்கள்து நினைவு நாள் ,அவருக்கு என் காணிக்கையாக இந்தக் கவிதை ,

உன் பிறப்பால் உயர்ந்தது
நம் தேசத்தின் பெருமை
அமுதம் பொழியும் இசையும்
பாடல்களுடன் அருமை
தமிழ்நாடு எம் எஸ்ஸைத் தந்தது
அவரது இசையோ
உலகம் முழுதும் ஒளிர்ந்தது
ஏழுமலையானுக்கும் அவர் சுப்ரபாதம்
பொற்கோயிலிலும் அவர் சீக்கிய கீதம்
திறமையுடன் வந்தது ரவீந்திர சங்கீதம்
மீரா தந்தாள்"காற்றினிலே வரும் கீதம் "
பரம்பொருளின் அவர் வரப்பிரசாதம்
பாடல்களில் கண்டோம் நாதத்தின் சீதனம்
மும்மூர்த்திகளும் நேர்தரிசன்ம் அவர் சங்கீதம்
பக்தி ரசங்களுடன் பாட்லகளும் பிரமாதம்
எல்லா கோயில்களிலும் அவரது இசை
ஸ்லோகத் தென்றல் வீசும் அத்திசை
நம்முன்னால் இருந்த பத்தினி தெய்வம்
சதாசிவமே அவர் வாழ்க்கையின் தெய்வம்
வைரமாக் மின்னினார் நம்மிடை
கொடுத்தார் எல்லாம் நன்கொடை
நற்பணிக்கு ஒரு சேவை
சிகரத்தை எட்டியது ஜீவ யாத்திரை
",பாரதரத்னா எம் எஸ்" ஆனார்
நம் மனதில் நீங்கா இடம் பெற்றார்


அன்புடன் விசாலம்

No comments: