Sunday, January 6, 2008

புத்தாண்டு சங்கல்பம்

எல்லோரும் புத்தாண்டு சங்கல்பம் எடுத்துக்கொள்கின்ன்றனர் ஆனால் அது மூன்று மாதம்
வந்தாலே அதிகம் ,பின் குறைந்து அது விட்டுப் போய்விடுகிறது ஏன்?அதற்கு நாம் அவ்வளவு மதிப்பும் ,முக்கியத்துவமும் கொடுப்பதில்லை ,அன்பு ஷைலஜாவின் வலையில் விழுந்த மீன்களில் நானும் ஒருவள்.வங்கக்கடலில் அழுத்தம் இருந்து மழையும் புயலும் இருந்தும் கடலுக்கு வந்து வலையும் வீசி இருக்கும் வீர ஷைலஜா,
சரி நான் என்ன சங்கல்பம் எடுப்பது ,,எளிதான ஒன்றாக எடுபோம் என்று எண்ணி
யோசித்தேன்.,,ஒ,,கிடைத்துவிட்டது ஐடியா மாதம் ஒரு நாலு முறையாவது என்
வலைப்பதிவில் ஏதாவது ஆக்கப்பூர்வமான படைப்புகளை இடவேண்டும் ,,,,,,
இது என்னால் முடியும் .கடவுள் அருளுடன் ,,,,,,,

2 பலர் தன் மகன்களை விட்டு பிரிந்து தூரம் வாழ்ந்து வருகிறார்கள்,சிலர் முதியவர்
இல்லத்திலும் இருக்கிறார்கள் அவர்களுக்கு பணத்தைவிட அன்பும் ஆதரவும் தேவை
ஆகையால் தனியாக இருக்கும் வயதானவர்களிடம் சென்று அன்புடன் பேசி அவர்களுக்கு
இசை அல்லது வேறு அவர்களுக்கு பிடித்த் விஷயத்தில் பேசி ஒரு ஆரோக்கிய
சந்திப்பை ஏற்படுத்த வேண்டும் இதில் வம்பு..மற்ற வீட்டு விஷயங்களில் தூபம்
போடாமல் இருக்க வேண்டும் அவர்களுடன் பல்லாங்குழி ,,போன்ற விளையாட்டுக்கள்
விளையாடலாம் ,நாட்டின் நடப்பு பற்றியும் ஆன்மீக விஷ்யமும் அலசலாம் .
அவர்களைப் பாடவும் வைக்கலாம் ,இதற்கு முதியவர் இல்லம்தான் போக வேண்டும் என்பதில்லை எத்தனையோ பேர்கள் நம் வீட்டில் அருகிலேயே இருப்பார்கள்,,,,,,,,
இதைச்செய்ய நானும் சங்கல்பம் எடுத்துள்ளேன் ,

3,என் வீட்டுக் குழந்தைகளுக்கு {பேரன் பேத்தி] தமிழ் பேச கற்றுக்கொடுக்க வேண்டும்
எப்போது அவர்களிடம் பேசினாலும் அவர்களுக்கு புரிந்தாலும் ஆங்கிலம் அல்லது ஹிந்தியே பதிலாக வருகிறது இல்லாவிட்டால் "what do u mean?" என்று அவர்கள்
கேட்கும் போது எனக்கு மிக வருத்தம் ஏற்பதுகிறது ஆகையால் என் மகனிடமும் இந்தச்
சங்கல்பத்தை எடுக்கச் சொல்லி இருக்கிறேன் நானும் எடுத்திருக்கிறேன் இந்த
வருடத்திற்குள் அவர்கள் சரளமாக தமிழ் பேச வேண்டும் ,,,,
அப்பா,,,,,,இந்த மூன்று போதும் ,,,,,,,என்னால் முடியும்,,,,தம்பி.......,

அன்புடன் விசாலம்

Saturday, January 5, 2008

அன்பு குழந்தைகளே டிசம்பர் 25 என்றாலே உங்கள் எல்லோருக்கும் எசுபிரான் பிறந்தநாள்
என்று தெரியும் அவருடைய அறிவுறைக் கொண்ட ஒரு கதையைப் பார்க்கலாமா?

ஜான் என்ற பையன் தன் தாயுடன் இருந்தான் .அவனுக்குத் தந்தை இல்லை அவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தனர் தினப்படி சாப்பாடுக்கே வழி இல்லாமல் இருந்தது
அன்று ஞாயிற்றுக்கிழமை ,ஜானுக்கு மிகவும் பசி எடுத்தது தன் தாயிடம் காலைச்சிற்றுண்டி
கேட்டான் அவன் அம்மாவுக்கோ வீட்டில் ஒன்றுமில்லாததால் கொடுக்க முடியவில்லை
"அம்மா ,,எனக்கு கேக்கும் ஸ்வீட் பன்னும் தாருங்கள்"
"ஜான் நீ முதலில் சர்ச்சுக்குப் போய் பிரார்த்தனைச் செய் அப்போது வேண்டியதைக் கேள்"

"அம்மா அப்படி நான் கேட்டால் ஜீஸஸ் கொடுப்பாரா?"

"நிச்சியம் கொடுப்பார் ,,மனம் ஒன்றி பிரார்த்தனைச்செய்தால்,,,சரியா?"

"இதோ இப்பொழுதே போகிறேன் ,,நான் போய் கேக் கேட்கிறேன்"

ஜானும் நேராக சர்ச்சுக்குப் போனான் முட்டி இட்டு உட்க்கார்ந்தான் பின் கண்மூடி பிரரர்த்தனைச் செய்தான் பின் ஜீஸஸிடம் பேசினான் ,"ஏசுபிதாவே எனக்குப் பசிக்கிறது
கேக்கும் ஸ்வீட் பன்னும் வேண்டும் தருவீர்களா?என் அம்மா உங்களிடம் கேட்க சொன்னாள்
என்று மிகவும் சத்தமாகக் கேட்டான் ,

அவன் அருகில் ஒரு பணக்காரப் பெண்மணி அமர்ந்திருந்தாள் அவளும் இந்தப்பையனின்
வேண்டுகோளைக் கேட்டாள் மனம் மிகவும் வருத்தமானது அவள் மகனுக்குப் பிறந்த நாள்
அதற்கு என்று ஸ்பெஷல் கேக்கும் வாங்கி வைத்திருந்தாள் இந்தப்பையன் ஜான் கேட்டதைக் கேட்டு உடனே ஓடி கடைக்குச் சென்றாள் ஜான் கேட்டதை இன்னும் கூடுதலாகவே
வாங்கிக் கொண்டாள்,பின் ஜான் வீடு தேடி அதை அவன் தாயிடம் கொடுத்துவிட்டுச்
சென்றாள் ஜான் வருத்தமாக வீடு திரும்பினான் "என்ன இத்த்னைப்பிரார்த்தனைச் செய்தும்
ஏசுநாதர் நமக்கு ஒன்றும் கொடுக்கவில்லையே "என்று ஏங்கினான் வீடு வந்தாலோ
ஒரே ஆச்சரியம் ,,அவன் கேட்டதுடன் இன்னும் பல கூடவே இருந்தன ,,அம்மா,,ஏசுநாதர்
கேட்டதைக் கொடுத்துவிட்டார் "என்று ஆனந்தக்கண்ணீர் விட்டான் ,,,
முழுநம்பிக்கையுடன் சுய முயற்சியுடனும் இறைவனை அணுக நம் வேண்டுகோள் நிச்சியம்
நிறைவேறும் ,,,,,

அன்புடன் அம்மம்மா


கிருஸ்துமஸ் என்றாலே கிருஸ்த்மஸ் மரம் நம் கண் முன் வரும் பச்சை பசேரென்று
செழிப்பாக அதில் செர்ரி பழங்கள் தொங்க பல சாக்கலேட் பல பரிசுகள் தொங்க
சின்னச் சின்ன வண்ண விளக்குகள் மின்ன அந்த மரமே ஒரு அழகைக் கொடுக்கும்
வட அமெரிக்கா ஜெர்மனி ஐரோப்பிய நாடுகளில் கிருஸ்துமஸ் பண்டிகையின் அடையாளம்
{சிம்பல் }இந்த மரம்தான் வாழ்க்கை முழுதும் பசமையாக இருக்க வேண்டும் என்கிறது இந்தமரம் தவிர அதில் இருக்கும் இனிப்புக்களைப் போல் தித்திக்க வேண்டும் என்றும்
பொருள் தருகிறது ,,ஊசி இலை மரம் {fir tree } பைன் மரத்திலிருந்து ஒரு பகுதியைக்
கொண்டு வந்து அவர்கள் க்லை நுட்பத்திற்கு ஏற்ப அழகு படுத்துவார்கள்

இந்தக் கிருஸ்துமஸ் ட்ரீ வந்தக் கதை என்ன ?
ஒரு சமயம் ஞானி போனிfஏஸ் {saint Boniface} பிராயணம் செய்து வரும் பொது ஒரு
பாகன் என்று குழுவினர் கூட்டாமாகச் சேர்ந்து பாடிக்கொண்டிருந்தனர் நடுவில்
நெருப்பு வளர்த்திருந்தனர் ஒக் {oak } என்ற மரத்தைச் சுற்றி அமர்ந்திருந்தனர் அவர்கள்
ஒரு சிறுவனை அவர்கள் கடவுளுக்கு பலிக்கொடுக்க அழைத்து வந்திருந்தனர் இதைப்
பார்த்த அந்தப் பெரியவருக்கு கோபம் வந்து அந்த பெரிய மரத்தை தன் கையால்
வேகமாக ஒரு அடி கொடுக்க அது அப்படியே சாய்ந்தது அவர்கள் இதை நிறுத்திவிட்டு
அந்த ஓக் மரம் அவர்களது தெய்வம் என்றனர் அப்போது அந்த இடத்திலிருந்து ஒரு ஊசி
இலை மரம் கிளம்பியதாம் ,, அந்தபபையனும் காப்பாற்றப்பட்டான் ஜெர்மனியில் எல்லோரும் புதிதாக சின்ன கன்றை நடுகிறார்கள்

இன்னுமொரு கதை ,,,ஒரு மரம் வெட்டி ஒரு நாள் தன்
வேலைச் செய்ய போய்க்கொண்டிருந்தான். அன்று கிருஸ்த்மஸ் திருநாளின் முதல் நாள்,அங்கு பசியால் தவிக்கும் ஒரு ஏழைப் பையனைப் பார்த்தான் அவனுக்கு
தன்னால் முடிந்த உணவும் உடையும் தங்க இடமும்
கொடுத்தான் .மறு நாள் அவன் வீட்டு வாசலில் அழகான
மரம் பசுமையாக ஒளியுடன் பிரகாசித்தது அவன் புரிந்துக்
கொண்டான் .ஏழைப் பையனாக வந்தது ஏசுவே ,,,,அவரே இந்த மரவெட்டியின் அன்பு மனத்திற்குப் பரிசாக இந்த
ஜுவலிக்கும் மரத்தைத் தந்திருக்கிறார் ,,,,,இதனால் கிருஸ்துமஸ் போது கிருஸ்துமஸ் ட்ரீ "செய்து வைக்கும்
பழக்கம் ஏற்பட்டதாம் ,,,,,,,
என்ன குழந்தைகளே நீங்களும் நல்ல கிருஸ்துமஸ் மரம் வைத்து அதை அலங்கரித்து ஜமாயுங்கள் பார்க்கலாம் ,,,

கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் ,,

கிருஸ்துமஸ் மெசெஜ்

அன்பு குழந்தைகளே டிசம்பர் 25 என்றாலே உங்கள் எல்லோருக்கும் எசுபிரான் பிறந்தநாள்
என்று தெரியும் அவருடைய அறிவுறைக் கொண்ட ஒரு கதையைப் பார்க்கலாமா?

ஜான் என்ற பையன் தன் தாயுடன் இருந்தான் .அவனுக்குத் தந்தை இல்லை அவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தனர் தினப்படி சாப்பாடுக்கே வழி இல்லாமல் இருந்தது
அன்று ஞாயிற்றுக்கிழமை ,ஜானுக்கு மிகவும் பசி எடுத்தது தன் தாயிடம் காலைச்சிற்றுண்டி
கேட்டான் அவன் அம்மாவுக்கோ வீட்டில் ஒன்றுமில்லாததால் கொடுக்க முடியவில்லை
"அம்மா ,,எனக்கு கேக்கும் ஸ்வீட் பன்னும் தாருங்கள்"
"ஜான் நீ முதலில் சர்ச்சுக்குப் போய் பிரார்த்தனைச் செய் அப்போது வேண்டியதைக் கேள்"

"அம்மா அப்படி நான் கேட்டால் ஜீஸஸ் கொடுப்பாரா?"

"நிச்சியம் கொடுப்பார் ,,மனம் ஒன்றி பிரார்த்தனைச்செய்தால்,,,சரியா?"

"இதோ இப்பொழுதே போகிறேன் ,,நான் போய் கேக் கேட்கிறேன்"

ஜானும் நேராக சர்ச்சுக்குப் போனான் முட்டி இட்டு உட்க்கார்ந்தான் பின் கண்மூடி பிரரர்த்தனைச் செய்தான் பின் ஜீஸஸிடம் பேசினான் ,"ஏசுபிதாவே எனக்குப் பசிக்கிறது
கேக்கும் ஸ்வீட் பன்னும் வேண்டும் தருவீர்களா?என் அம்மா உங்களிடம் கேட்க சொன்னாள்
என்று மிகவும் சத்தமாகக் கேட்டான் ,

அவன் அருகில் ஒரு பணக்காரப் பெண்மணி அமர்ந்திருந்தாள் அவளும் இந்தப்பையனின்
வேண்டுகோளைக் கேட்டாள் மனம் மிகவும் வருத்தமானது அவள் மகனுக்குப் பிறந்த நாள்
அதற்கு என்று ஸ்பெஷல் கேக்கும் வாங்கி வைத்திருந்தாள் இந்தப்பையன் ஜான் கேட்டதைக் கேட்டு உடனே ஓடி கடைக்குச் சென்றாள் ஜான் கேட்டதை இன்னும் கூடுதலாகவே
வாங்கிக் கொண்டாள்,பின் ஜான் வீடு தேடி அதை அவன் தாயிடம் கொடுத்துவிட்டுச்
சென்றாள் ஜான் வருத்தமாக வீடு திரும்பினான் "என்ன இத்த்னைப்பிரார்த்தனைச் செய்தும்
ஏசுநாதர் நமக்கு ஒன்றும் கொடுக்கவில்லையே "என்று ஏங்கினான் வீடு வந்தாலோ
ஒரே ஆச்சரியம் ,,அவன் கேட்டதுடன் இன்னும் பல கூடவே இருந்தன ,,அம்மா,,ஏசுநாதர்
கேட்டதைக் கொடுத்துவிட்டார் "என்று ஆனந்தக்கண்ணீர் விட்டான் ,,,
முழுநம்பிக்கையுடன் சுய முயற்சியுடனும் இறைவனை அணுக நம் வேண்டுகோள் நிச்சியம்
நிறைவேறும் ,,,,,

அன்புடன் அம்மம்மா


கிருஸ்துமஸ் என்றாலே கிருஸ்த்மஸ் மரம் நம் கண் முன் வரும் பச்சை பசேரென்று
செழிப்பாக அதில் செர்ரி பழங்கள் தொங்க பல சாக்கலேட் பல பரிசுகள் தொங்க
சின்னச் சின்ன வண்ண விளக்குகள் மின்ன அந்த மரமே ஒரு அழகைக் கொடுக்கும்
வட அமெரிக்கா ஜெர்மனி ஐரோப்பிய நாடுகளில் கிருஸ்துமஸ் பண்டிகையின் அடையாளம்
{சிம்பல் }இந்த மரம்தான் வாழ்க்கை முழுதும் பசமையாக இருக்க வேண்டும் என்கிறது இந்தமரம் தவிர அதில் இருக்கும் இனிப்புக்களைப் போல் தித்திக்க வேண்டும் என்றும்
பொருள் தருகிறது ,,ஊசி இலை மரம் {fir tree } பைன் மரத்திலிருந்து ஒரு பகுதியைக்
கொண்டு வந்து அவர்கள் க்லை நுட்பத்திற்கு ஏற்ப அழகு படுத்துவார்கள்

இந்தக் கிருஸ்துமஸ் ட்ரீ வந்தக் கதை என்ன ?
ஒரு சமயம் ஞானி போனிfஏஸ் {saint Boniface} பிராயணம் செய்து வரும் பொது ஒரு
பாகன் என்று குழுவினர் கூட்டாமாகச் சேர்ந்து பாடிக்கொண்டிருந்தனர் நடுவில்
நெருப்பு வளர்த்திருந்தனர் ஒக் {oak } என்ற மரத்தைச் சுற்றி அமர்ந்திருந்தனர் அவர்கள்
ஒரு சிறுவனை அவர்கள் கடவுளுக்கு பலிக்கொடுக்க அழைத்து வந்திருந்தனர் இதைப்
பார்த்த அந்தப் பெரியவருக்கு கோபம் வந்து அந்த பெரிய மரத்தை தன் கையால்
வேகமாக ஒரு அடி கொடுக்க அது அப்படியே சாய்ந்தது அவர்கள் இதை நிறுத்திவிட்டு
அந்த ஓக் மரம் அவர்களது தெய்வம் என்றனர் அப்போது அந்த இடத்திலிருந்து ஒரு ஊசி
இலை மரம் கிளம்பியதாம் ,, அந்தபபையனும் காப்பாற்றப்பட்டான் ஜெர்மனியில் எல்லோரும் புதிதாக சின்ன கன்றை நடுகிறார்கள்

இன்னுமொரு கதை ,,,ஒரு மரம் வெட்டி ஒரு நாள் தன்
வேலைச் செய்ய போய்க்கொண்டிருந்தான். அன்று கிருஸ்த்மஸ் திருநாளின் முதல் நாள்,அங்கு பசியால் தவிக்கும் ஒரு ஏழைப் பையனைப் பார்த்தான் அவனுக்கு
தன்னால் முடிந்த உணவும் உடையும் தங்க இடமும்
கொடுத்தான் .மறு நாள் அவன் வீட்டு வாசலில் அழகான
மரம் பசுமையாக ஒளியுடன் பிரகாசித்தது அவன் புரிந்துக்
கொண்டான் .ஏழைப் பையனாக வந்தது ஏசுவே ,,,,அவரே இந்த மரவெட்டியின் அன்பு மனத்திற்குப் பரிசாக இந்த
ஜுவலிக்கும் மரத்தைத் தந்திருக்கிறார் ,,,,,இதனால் கிருஸ்துமஸ் போது கிருஸ்துமஸ் ட்ரீ "செய்து வைக்கும்
பழக்கம் ஏற்பட்டதாம் ,,,,,,,
என்ன குழந்தைகளே நீங்களும் நல்ல கிருஸ்துமஸ் மரம் வைத்து அதை அலங்கரித்து ஜமாயுங்கள் பார்க்கலாம் ,,,

கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் ,,

ராஜபாளையம்

ஸ்ரீகிருஷ்ணதேவராயர் வழிவந்த மன்னர்கள் விஜயநகரில் பல ஆண்டுகள் இருந்தனர்
ஆந்திர வம்சம் ஆக இருந்தனர் ,ஆனால் பலவித போர்களால் ஆட்சி முடிவடைந்து தப்பித்து தமிழகம் நோக்கிப் பிரயணித்தனர் அப்போது அவர்கள் வளர்த்தச் செல்லப்
பிராணிகளும் அவர்கள் கூட வந்தன நடந்து நடந்து திருவாங்கூர் சமஸ்தானப்பகுதியின்
எல்லையில் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தின் கீழ் வந்து அங்கேயே
தங்கவும் ஆரம்பித்தனர் அகதிகள் போல் முதலில் முகாம் இட்டு பின் பக்காவாக வீடு கட்டி
தங்க ஆரம்பித்தனர் சஞ்சீவி மலைப்பகுத்தில் பரவி அங்கேயே அவர்களது சொந்தமாக்கிக்
கொண்டனர் அந்தப்பகுதியே ராஜபாளையம் என்கிறார்கள். அவர்களுடன் வந்த நாயின் ஒரு ஜாதி ராஜபாளையம் என்ற பெயரில் மிகவும் பிரபலமானது
பார்த்தால் அல்சேஷன் அல்லது ஜெர்மன் ஷெப்பர்ட் போன்று பெரிதாக இருக்கும் காவலுக்கு மிகச்சிறந்த நாய் ,அதற்கு பாராமரிப்புச் செலவும் குறைவு ,,சைவம் தான் விரும்பி சாப்பிடும் தயிர் சாதம் பாலுஞ்சாதம் என்று எதுகொடுத்தாலும் சாப்பிடும் இதற்கு மோப்பச் சக்தியும் அதிகம் ,இன்றும் பல போலீசின் படை குற்றம் கண்டுப்பிடிக்க
இந்தவகை நாயை அழைத்துப்போகிறார்கள் இன்றும் பல பங்களாவிலும் எஸ்டேட் பெரிய தோட்டங்கள் போன்ற இடத்தில் இவைகளை வளர்க்கிறார்கள்
டாபர்மென் லெப்ரடார் ஜெர்மன் ஷெப்பர்ட் போன்ற நாய்களுக்கு சமமாக இதுவும் இருக்கிறது மிகவும் விசுவாசமான நாய் ஆனால் யஜமானரின் கட்டளைக்குத்தான் அடிபடியும் .கவ்வினால் பிடி சதை வந்துவிடும் வீட்டைப் பாதுகாக்க மிகச் சிறந்த நாய் .
ஆனால் அனபையும் எதிர்ப்பார்க்கும் ,அதன் கண்கள் காது மிக அழகு ,,மேற்கு பகுதியில் நிறைய இடத்தில் இந்தவகை நாயகளை நான் பார்த்து இருக்கிறேன்
இத்துடன் சிப்பிப்பாறைநாய் என்றும் ஒன்று இருக்கிறது மிகவும் மூளை உள்ளது
வெள்:ளையாக இருக்கும் 4அடி உயரம் 4 அடி நீளம் கூர்மையான் கண்கள் உதடு ரோஜா நிறம் ,,,பார்க்க சாது போல் இருக்கும் ஆனால் யாராவது எதாவது தொட்டால்
அவ்வளவுதான் பிடுங்கிவிடும் ,,,தன்நலமில்லாத அன்பு நாயினுடையது.அதன் தலவன்
எத்தனை அடித்தாலும் அதை மறந்து வாலை ஆட்டிக்கொண்டு திரும்ப அன்பு செலுத்தப் போகும் .மனிதன் மன்னிக்கும் குணம் கொண்டு இதே போல் அனபு காட்டி வந்தால்
உலகம் எத்தனை நன்றாக இருக்கும்
அன்புடன் விசாலம்

இயந்திர வாழ்க்கை

அவள் படிப்பு நின்றது,
பொம்மைகளும் மறைந்தன
தாயில்லை, சித்தி வந்தாள்
பேரம் பேசினாள்
முடித்து வைத்தாள்
அழகி பிமபம் ஆனாள்
படிக்க ஆசைக் கொண்டாள்
வெற்றிலைக் கொதப்ப
தலைவி வந்தாள்.
"நீ என் ராசாத்தி
உனக்கு எதுக்கு படிப்பு
படுக்கையில் கொட்டும் பணம்
மிராசுதார் நல்ல குணம் '
நுழைக்கபட்டாள் தனி உலகம்
இரவில் எடுக்கும் விசுவரூபம்

இந்த ராஜ்ஜியத்தின் ராணி அவள்
உறவு இல்லை நட்பு இல்லை
உணர்ச்சி இல்லை அன்பு இல்லை
இயந்திர வாழ்க்கை
மொழியும் இல்லை
தானம் கொடுத்தாள் உடலை
அவளுக்குத் தேவை ஒரு மழலை
தேவை ஒரு குடும்பம்
காண்பாள் அதிலே இன்பம்
வேண்டும் அன்புடன் மனப்பொருத்தம்
ஓடிப்போகும் அவள் மன வருத்தம்


அன்புடன் விசாலம்

எங்கும் அவர் இசை

டிசம்பர் 11 என் மனதில் தெய்வமாகப் பதிந்து விட்ட திருமதி எம் எஸ் சுப்பலட்சுமி
அவர்கள்து நினைவு நாள் ,அவருக்கு என் காணிக்கையாக இந்தக் கவிதை ,

உன் பிறப்பால் உயர்ந்தது
நம் தேசத்தின் பெருமை
அமுதம் பொழியும் இசையும்
பாடல்களுடன் அருமை
தமிழ்நாடு எம் எஸ்ஸைத் தந்தது
அவரது இசையோ
உலகம் முழுதும் ஒளிர்ந்தது
ஏழுமலையானுக்கும் அவர் சுப்ரபாதம்
பொற்கோயிலிலும் அவர் சீக்கிய கீதம்
திறமையுடன் வந்தது ரவீந்திர சங்கீதம்
மீரா தந்தாள்"காற்றினிலே வரும் கீதம் "
பரம்பொருளின் அவர் வரப்பிரசாதம்
பாடல்களில் கண்டோம் நாதத்தின் சீதனம்
மும்மூர்த்திகளும் நேர்தரிசன்ம் அவர் சங்கீதம்
பக்தி ரசங்களுடன் பாட்லகளும் பிரமாதம்
எல்லா கோயில்களிலும் அவரது இசை
ஸ்லோகத் தென்றல் வீசும் அத்திசை
நம்முன்னால் இருந்த பத்தினி தெய்வம்
சதாசிவமே அவர் வாழ்க்கையின் தெய்வம்
வைரமாக் மின்னினார் நம்மிடை
கொடுத்தார் எல்லாம் நன்கொடை
நற்பணிக்கு ஒரு சேவை
சிகரத்தை எட்டியது ஜீவ யாத்திரை
",பாரதரத்னா எம் எஸ்" ஆனார்
நம் மனதில் நீங்கா இடம் பெற்றார்


அன்புடன் விசாலம்

ராகம்

சங்கீதம் ஒரு மேன்மையான கலை அதைக்கேட்க ஒரு தனி இன்பம் கிடைக்கிறது இதைக்
காந்தர்வ வேதம் என்றும் சொல்லுகின்றனர் நாலு வேதம் தவிர ஆயுர்வேதம் தனுர் வேதம் அர்த்தஸாஸ்திரம் முதலியவைகள் கடவுள் வழிப்பாட்டிற்கு முக்கிய சாதனை
இசை புத்தியினாலும் உழைப்பினாலும் வளர்ந்த ஒன்று உயர்ந்த சங்கீதத்திற்கு முதலில் நல்ல குரல் வேண்டும் அது ஈசனின் அருள்தான் உயர்ந்த இசைக் கேட்க காதின்
நரம்புகளுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது ஆனால் அதுவே அளவுக்கு மீறிய சத்தம்
ஆனால் காது ஜவ்வை நாசமும் படுத்துகிறது மனரஞ்சனமான பாடல் உண்மையாகவே
மனதை அமைதி படுத்துகிறது உள் ஆத்மாவரைத் தொடுகிறது என்று தோன்றுகிறது
என் அக்கா கலயாணி பெரிய பாடகி ,அவள் மூச்சே சங்கீதம் தான் அவள் மிகவும் உடல் குன்றி ஐசியூ வில் சேர்க்கப்பட்டாள் ,நான் பார்க்கப் போயிருந்தேன் அவள் நினைவு
அவளிடம் இல்லை ,கண்கள் மூடி இருந்தன ,நான் டாக்டரிடம் கேட்டு உள்ளே போனேன்

இசைமேல் அவளது ஆசையைச் சொல்லி ஒரு நல்ல அவளுக்குப்பிடித்தப் பாட்டை அவள் காதில் சிடி ப்ளேயரின் மூலம் வைக்கச் சொன்னேன் ,,அவள் கைகள் அந்தப் பாட்டிற்கு சரியான தாளம் போட்டன , அவளுக்கு அதைக் கேட்க முடிந்தது ,
ஆகையால் சங்கீதம் நெஞ்சின் ஆழத்தைத் தொடுகிறது திரு ரமணன் அவர்களின் மாரியம்மனின் இசைக்கேட்டு நான் என்னையே மறந்தேன் கண்களிலிருந்து
கண்ணீர் கொட்டியது உடம்பில் ஒரு நடுக்கம் ஏற்பட்டது ஆகையால் ந்ல்ல இசை மனதின்
ஆழம் வரைப் போய் நம்மை பரவசப்படுத்துகிறது இதனால்தான் சங்கீதமும் ஒரு ஹீலிங்
தெரபி என்று கண் டு பிடித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்
நல்ல சங்கீதம் மனதில் ஒரு ஒழுங்கு,,, நற்குணங்களை வளர்க்கிறது

ராகம் எனபது எந்தத் த்வனி,, ஸ்வரங்களினாலும் வர்ணங்களினாலும் அலங்கரிக்கப்பட்டு
செவிக்கு இனபத்தைத் தருகிறதோ அதுவே ராகம் சரியான ஸ்வரஸ்தானத்தில்
ஆலாபனை விழ கீழ்ஸ்தாயி நடுஸ்தாயி மேல்ஸ்தாயி என்று எல்லா
ஸ்தானங்களிலும் பாடுவது "கானக்கிரியை" ,,, இது ஸ்தாயி ஆரோஹி அவரோஹி ஸஞ்சாரி என் நான்கு வகைப்படும் ஆரோஹி ஸரிகம் ,,என்றால் அவரோஹி மகரிஸ
ஆகும்

நிஷாந்திய ராகம் ,,,,,இதில் நிஷாதத்திற்கு மேல் சஞ்சாரம் இல்லாத ராகம்
அதாவது மேலே நி க்குமேல் போகாது ,
உதாரணம் நாதநாமக்கிரியா ஸ்ரிகமபதநி,,,,,,,,நிதபமகரிஸநி

புன்னாகவராளி நிஸ்ரிகமபதநி நிதபமகரிஸ்நி

ஆடுபாம்பே பாடிப்பார்த்தால் இது புரியும் ,,,,,,,,,,,,,,,

அன்புடன் விசாலம்

வணக்கம்

வணக்கம் என்று கூறுவோம்
அழகுத் தமிழில் வண்ங்குவோம்
இரண்டு கைகள் கூப்புவோம்
பணிவுடன் புன்னகை வீசுவோம்
அக மகிழ்ந்து வாழ்த்தி மகிழ்வோம்
வாழ்த்து அலைகளைப் பரப்புவோம்
சுற்றுச்சூழ்நிலையில் நற்றலைகள்
எந்நிலையிலும் காக்கும் பேரலைகள்
சொல்,, வாய் நிறைய வணக்கம்,
நம் உளமெல்லாம் மணக்கும் .
கும்பிடும் இரண்டு கைகளின் சேர்க்கை
ஆத்மா பரமாத்மாவின் சேர்க்கை
பெருவிரல்கள் திரும்பும் திசையே
உள்ளொளியைக் காட்டும் திசை
அந்த மெய்ப்பொருளை உணர்வோம்
வணக்கத்தின் பெருமையை அறிவோம்
என் பள்ளியில் 9 வது படிக்கும் ஒரு பெண் இருந்தாள் . சுமாராகப் படிப்பாள் 60% கிடைக்கும் அவள் அம்மா அவள் பத்தாவது வந்தால் நல்ல மார்க் கிடைக்க வேண்டும் என்பதால் ஸயின்ஸ் சப்ஜெச்டிற்கு
டியூஷன் வைத்தாள்,அதில் கணக்கிற்கும் இந்த ஆசிரியரை அமர்த்தினாள், அவரும் விடாமல் பாடம் எடுக்கப் போனார்
அவளை 100 மார்குகள் வாங்க வைத்து விடுகிறேன் என்று சவால்
விட்டார் ,இதனால் பல ஆயிரங்கள் அவருக்கு கிடைத்தது எங்க்ள் பள்ளியில் டியூஷன் எடுக்க அனுமதி இல்லை ,இருந்தாலும்
பிழைத்துப் போகிறார் என்று கண்டும் காணாமல் விட்டு விட்டோம்
இவர் பரீடசைக்கு வரும் கேள்வித்தாளை அப்படியே அவளுக்குச்
சொல்லிக் கொடுத்து விட்டார் அந்தப் பெண் மாத பரீட்சியிலிருந்தே
முழு மார்க் வாங்க ஆரம்பித்தாள் எல்லோருக்கும் இந்தத் திடீர்
மாற்றம் தெரிந்தது ,அதேபோல் நட்பு என்ற முறையில் மற்ற
கேள்வித்தாள்களையும் பார்த்து அந்தப் பென்ணிற்குச் சொல்ல அந்தப் பெண் அரைப் பரீட்சையில் முக்கால்வாசி ச்ப்ஜெக்டில் 80க்கு மேல் எடுத்திருந்தாள் 4வது ரேங்க் ,,,,,,எங்களுக்கு இதன் விஷ்யமாக சந்தேகம் வந்தது ,ஒரு நாள் நான் பள்ளிவிட்டு லேட்டாக கிளம்பினேன் அந்தப் பெண்ணின் அம்மா நின்றிருந்தாள்,கொஞ்சம்
குசலம் விஜாரித்து விட்டு அவளின் பெண்ணையும் புகழ்ந்தேன்
psychology application அவள் அம்மாவும் கணக்கு வாத்தியாரினால்தான்
அவர்தான் இரவு 9 வரை பாடு படுகிரார் என்றாள்
பின் அடுத்ததடவை கேள்வி தாள்களை வெளியேதெரியாதபடி ரகசியமாக வைத்தோம் ,,,,,
ராகுதசைப்பிடித்தநாள்,,,,,மாடி ஏறுமிடத்தின் கீழ் இருக்கும் இடம்
இசைக்கருவிகள் வைக்க ஒரு சின்ன அறையாக்கப்பட்டிருந்தது
அதில் ஒரு நாற்காலியில் அவர் அமர்ந்து காப்பிகள் திருத்த அந்தப்
பெண்ணிடம் எல்லாவற்றையும் சேகரித்து தருமபடி கூறினார் அந்தப்பெண்தான் மானிடர் போல் அவருக்கு எல்லாம் ,,,,அந்தப் பெண்ணும் வந்தது ,அறைக்குள் வந்தவுடன் அவருக்கு என்னத்
தோன்றியதோ அவளை அப்படியே தழுவினார் அந்தப் பெண் திமிறி
ஓவென்று அழுதுக்கொண்டு வகுப்பிற்கு வந்தது ,,,அதன் பின்
பின் அது பெரிய விச்வரூபம் எடுக்க அவர் "அந்தப் பெண் தடுக்கி விழப்போனாள் நான் விழாமல் பிடித்தேன் அவ்வளவுதான் என்று
சொல்ல மேலிடம் வரை இது போய்விட்டது பின் அவர் கணக்கு பேபர்
சொன்னதும் வெளிவந்தது. சரியாக ஒருமாதம் அவர் பள்ளியிலிருந்து
நீக்கப்பட்டார் ஆனால் அவருக்கு ரிப்போர்ர்டில் இதுபற்றி எழுதாமல் மனித நேயத்துடன் நல்ல ரிப்போர்ட் கொடுக்கப்பட்டது பாவம் சம்சாரி
பிழைத்துப் போகட்டும் என்று ....அவமானம் பட்டு பள்ளியிலிருந்து விலகுமபடி ஆகிவிட்டது ,,இது கிரஹங்களின்
கோளாறா?மனிதனின் சிந்திக்கும் சக்தி குறைந்ததாலா இல்லை
காம்த்தின் சக்தியா?இல்லை ஜோதிடமா? ஒன்றும் புரியவில்லை

இது எதைச் சேர்ந்தது?முதல் பாகம்

ஜோதிடம் பற்றி திரு தமிழ்த்தேனி எழுதினார் ,அதைப் படித்துவிட்டு என் அனுபவம் எழுதாமல் இருக்க முடியவில்லை ,என் பள்ளியில் நடந்த சம்பவம் ,நான் சிறு வயதிலிருந்தே ஜோதிடம் கைரேகை எண் கணிதம் படிக்க ஆர்வம் கொண்டிருந்தேன் எனக்கு என் அப்பாவே குரு ஆனார் என் அப்பாவின் நெருங்கிய உறவினர் ஒரு மஹாராஜாவின் ஆஸ்தான ஜோதிடராக இருந்தாராம் அந்த வழி வந்ததில் என் அப்பாவும்
நன்கு ஜோதிடம் அறிந்தவர் ,நான் பல பேர்களின் வாழ்க்கையின் அமைப்பையும் பின் ஜாதகத்தையும் பார்த்து என் அறிவை வளர்த்தேன் ,,,,

என் பள்ளியில் ஒரு கணக்கு ஆசிரியர் இருந்தார் அவர் விகஞானம் அதிகமாகப் படித்ததால் ஜோசியத்தில் அறவே நம்பிக்கை இல்லை .என்னைச்சுற்றி பல ஆசிரியைகள்
தங்கள் பிரச்சனைகள் கூறி என்னிடம் அதன் காரணமும் பரிகாரமும் கேட்பார்கள்..
இதெல்லாம் பள்ளியில் நாங்கள் மட்டும் பேபர் திருத்தப்போகும் போது நடக்கும்
மாண்வர்களுக்கு லீவு இருக்கும் இந்த கணக்கு ஆசிரியர் நான் சொல்லுவதைப்பார்த்து
ஒரு கிண்டலாகச் சிரித்தார் ,நான் தலைவி ஆனாலும் எல்லோரும் என்னிடம் சகஜமாக இருப்பார்கள் ,அவர் சிரிப்பதைப் பார்த்து நான் "ஏன் சிரிக்கிறீர்கள்?"என்று கேட்டேன்
இந்த மாடர்ன் யுகத்திலும் இதெல்லாம் போய் நம்பிக்கொண்டு ,,,,இதைப் பார்த்து சிரிப்பு வந்தது ,என்றார்,நானும் ஒரு புன்னகைக் கொடுத்து விட்டு போய்விட்டேன்
ஒருமாதம் பின்னர் அவர் வந்தார் ,, முகம் ஒருமாதிரி இருந்தது ,,சேர்ந்தாற்போல் 4 நாட்கள் லீவு வேறு ,நான் அதைப்பற்றிக் கேட்க" என் வீட்டைக் காலி செய்ய்ச் சொல்லுகிறான் என்ன செய்வது என்று தெரியவில்லை" என்றார் பின் அவரே தன்
வருங்காலத்தைப் பற்றிக் கேட்டார் ,எனக்கு ஆச்சரியம் ஆனாலும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை .பின் அவருக்கு நான் சொன்னேன் ,நீங்கள் இந்தப் பள்ளியைவிட்டு போய்விடுவீர்கள்
அவர் சிரித்தார் இந்த நல்லப் பள்ளியைவிட்டு நான் போவதாவது ,,,,,,,ஏன் சொல்லுகிறீர்கள்?

உங்களுக்கு ராகு தசை மேலும் ராகு புக்தி வேறு தவிர பத்தாவ்து இடமும் கெட்டிருக்கிறது என்றேன் ,,,,,
"பார்க்கலாம் இது நடக்குமா என்று" ,,சிரித்தார் நான் ஒரு விக்ஞானி ...,,,,,புதனாவது ,,,
ராகுவாவது ,,,,,,,என்று சொல்லிவிட்டு போனார்
நானும் பதிலுக்கு சிரித்துக்கொண்டே வந்துவிட்டேன்
ஆனால் நான் சொன்னது ஒரு மாதத்திலேயே நடந்தது ,,,,எப்படி?...................இன்னும் வரும்

அன்புடன் விசாலம்

கண்கள் ஜாக்கிரதை

அன்று நீ உன் வீட்டு வாசலில்
என் கவனமோ, உன் மேல்
தாமரைப் போல் முகம் மலர்ந்தாய் ,
என்னைக் கவர்ந்தது அந்தப் பார்வை
உள்ளே போக தடுமாறினாய்
இரும்புக் கம்பியைப் பிடித்தாய்
மனம் பதைப்பதைத்தேன்,,
காதல் வந்ததை உணர்ந்தேன்
வில்லினையொத்தப் புருவம்
அழகான தாமரைக் கண்கள்
ஆனால் பார்க்கும் சக்தி எங்கே?
என் கண்கள் கலங்கியது இங்கே.

ஒருநாள் உன் வீடு ஏற ,
என் காதலை உன்னிடம் கூற
மகழ்வுடன் என்னை ஏற்றாய்
த்டவி என்னைப் பார்த்தாய் ,
கண்ணால் பார்க்க ஆசை என்றாய்
" உயிரையும் கொடுப்பேன் " என்றேன்,,
கைச்சுருக்கி வாய் ஒடுக்கி
அங்கும் இங்கும் அலைந்து
புரட்டினேன் பணம்
நிறைந்தது என் மனம்
அறுவைச்சிகிச்சை நடந்தது
ஒருவாரம் கழிந்தது

அவள் குரலைக் கேட்கச் சென்றேன் ,,
என்னைக்கண்டால் என்ன நினைப்பாள்?
தூரத்தில் நின்றேன் ,
உள்ளே பேச்சுக் குரல்
"டாகடர் அதோ நிற்பவர் யார்?
"உன் காதலன் தான் "
"இவனா? என் காதலன் ,
இத்தனைக்கறுப்பா ?
இத்தனைக் குண்டா "?
திடுக்கிட்டேன் நான் ,
மனம் நொந்தேன் ,
கைத்தடியுடன் அவளிடம் வந்தேன் ,
"என்னுடைய கண்களைப்
பத்திரமாகப் பார்த்துக் கொள்,
என் உருவத்தை வெறுத்தாற்போல்
என் கண்களை வெறுக்காதே"
வேகமாகத் திரும்பினேன்
கைத்தடி துணையுடன்

அன்புடன் விசாலம்

ஆனந்த நடனம்

பாற்கடலில் மகாவிஷ்ணு சயனித்திருக்கிறார்.மகாலட்சுமி அவர் காலடியில் அமர்ந்து
இருக்கிறார் ஆதிசேஷன் ஆனந்தமாக மகாவிஷ்ணுவின் சயனதிற்கு மஞ்சம் கொடுத்து மகிழ்கிறார்
அப்போது திடீரென்று பரந்தாமன் "அத்புதம் அதி அத்புதம் "என்று குரல் ஓங்க சொல்லி
மகிழ்கிறார் ,கூட இருந்த தேவிக்கும் ஆதிசேஷனுக்கும் இது புதிராக இருந்தது ,இதைப்
பற்றி அவர்கள் கேடக மஹாவிஷ்ணு "கண்டேன் ஆனந்தத் தாண்டவம் ,,அந்த ஈசன்
நடேசனாக மாறி நடனம் ஆடுகிறார் ,அதுவும் இன்று மார்கழிமாதம் திருவாதிரை
நட்சத்திரத்தில் ,,,,,என்னே அழகு ,,,"
ஆதிசேஷன் மனதில் தான் அதைப் பார்க்கவில்லையே என்று ஏக்கம் வர அதைக்
கண்ணாடிப்போல் படம் பிடித்து விட்டார் பரந்தாமன் ,"என்ன ஆதிசேஷா உனக்கும் இந்தக்
காட்சி காணவேண்டுமா ? அதற்கு நீ பூலோகம் போக வேண்டும் அநதப் பாக்கியம் உனக்கு
நான் தருகிறேன் என்று அவரைஅனுப்பிவத்தார் ஆதிசேஷன் பதஞ்சலி முனிவராக அவதாரம்
எடுத்தார் இடுப்பிற்குக் கீழ் பாம்புபோல் உடலும் மேலே முனிவராகவும் தோற்றம் இருந்தது
அவர் பல கோயில்களுக்குச் செல்ல அங்கு வியாக்கிர பாதர் என்ற சித்தரிடம் அவருக்கு
மிகுந்த நட்பு ஏற்பட்டது ,வியாக்கிரபாதருக்கு பாதம் புலியைப் போன்றது இருவரும் சேர்ந்து
பல கோயில் தரிசனம் செய்து பின் சிதமபரம் வந்தார்கள்,அன்று திருவாதிரை ,சிவபெருமானிடம்
அவரது ஆனந்த நடனத்தை[ பார்க்கும் ஆவலைத் தெரிவித்தார்கள்.அவரும் அவர்களுக்கு
மட்டும் நடனம் ஆடிக் காட்டினார் " இந்தக் காட்சியைப் பார்க்க மிகவும் பாக்கியம்
செய்திருக்கிறோம் என்று பக்தியினால் கண்ணீர் மல்க நடேசனை வணங்கினர்

களியும் கூட்டும் பிரசாதமாகக் கொண்ட திருவாதிரைத் திருநாளில் ஒம் நமச்சிவாய என்று
சொல்லி வணங்க மன அமைதி கிட்டும்
களிவந்தக் கதை ,,,,,,,சேந்தன் சிவபக்தன் தினமும் சிவனடியாருக்கு படைத்துவிட்டுப்
பின் தான் தான் உணவு உட்கொள்வான் அவன் விற்கு வெட்டி சீவனம் செய்து வந்தான் ஒருநாள் விடாது பலத்தமழைக் கொட்ட அவனால் விற்குகள் விற்க முடியவில்லை
விறகுகள் ஈரமாகி போய்விட்டன அந்தநேரம் பார்த்து ஒரு சிவனடியார் வந்தார்
அவன் மனைவி கொஞ்சம் மாவில் இருக்கும் வெல்லம் போட்டு கிளறி தந்து விடலாம் என்றாள், அந்தக் கிண்டினப் பதார்த்தத்தை அதாவது களியைத் திருப்தியாக சாப்பிட்டுவிட்டுப்
போய்விட்டார் பின் சேந்தனும் அவர் மனனவியும் சிதம்பரத்திற்கு தல்லையமபல
நடராஜனைத் தரிசிக்கப் போனார்கள் அங்கு அவர்கள் கண்ட காட்சி,,,,சிவ சன்னிதியில்
களி சிதறிக்கிடக்க சிவனது வாயிலும் களி இருந்தது ,,,,,,அன்றையதினத்திலிருந்து
தான் திருவாதிரை அன்று வெல்லம் போட்டு களி பிரசாதமாக ஆனது ,,,,,,,,,

கைக்குட்டை

"கைக்குட்டை காதல் கடிதம் இது ஒரு கனவா" இந்தப்பாட்டு யாருக்குத்தான் தெரியாது?
ஆம் ,,கைக்குட்டை ,மிகச் சின்னப் பொருள் தான் ஆனால் அதன் மஹத்துவமோ சொல்லி
முடியாது ,இதை வாங்க அதிகச் சிலவுமில்லை ,இதை வைத்துக்கொள்ள அதிக இடம் தேவையும் இல்லை,அது இல்லாமல் நாமும் இல்லை ,முகம் துடைக்க வேண்டுமா?
உடனே கையில் கைக்குட்டை ,சாப்பிட்டு முடித்தவுடன் எடுப்பது கைக்குட்டை
தும்மல் வந்ததா?கேட்கவே வேண்டாம் கையில் தயாராக வருவது இது ,கொல் கொல்லென்று இருமலா உடனே வாயைப்பொத்திக்கொள்ள வரும் ,சிலர் சேர்ந்தாற்போல் ஐந்து தும்மல் தும்மி விட்டு கிருமிகளைத் தாராளாமாகப் பரவவிட்டு பின் மெதுவாக கைகுட்டையைத் தேடுவார்கள் ,அப்படி ஒரு ரகம் ,,,,கண்வலியா ,அழுகையா ,,,,உடனே
நாம் அடைக்கல்ம் புகுவது இதில்தான் ,
பெண்களுக்கு காரியம் சாதித்துக்கொள்ள உதவும் அஸ்திரம் கண்ணீர் அந்தக் கண்ணீரைக்
கேவிக் கேவி துடைக்க ,பின் ஓரக்கண்ணால் எதிராளியின் முகத்தைப் பார்த்து பின் முகத்தை மூட உதவுகிறது இந்தக்கைகுட்டை சில பெண்மணிகளுக்கு புடவைத்தலைப்பே கைக்குட்டையாகிவிடும் ஒரு சிலர் பிரயாணம் போது ரூபாய்களைக்
கைகுட்டையில் சுருட்டிப் பின் தன் சட்டைக்குள் பத்திரப்படுத்துவார்கள், மிக பத்திரமான
பாதுக்காப்பு. அம்மாக்கள் தன் குழந்தைகளை வெளியில் அழைத்துப்போகும் போது அங்கு மூக்குச்சளியைத் துடைக்க உதவுவது இந்தக்கைக்குட்டை ,

முன காலத்தில் பலர் மூக்குப்பொடி போடுவார்கள் அவர்களுக்கு மிக உதவியாய் இருந்தது இது ,அதன் கலர் வெண்மை இல்லாமல் மூக்குப்பொடி கலரில் இருக்கும்
தனியாகத் துணி வாங்கி தைத்துக் கொள்வார்கள் அந்தக்கைக்குட்டையைத் தோய்ப்பது
ஒரு சவால் தான் ,கைக்குட்டை காதலையும் வளர்க்கிறது,ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பும் போது வேண்டுமென்றே கைக்குட்டையை காதலன் வைத்து
விட்டுச் செல்ல காதலி அதை எடுத்து .அந்த வாசனையய அனுபவித்து பின் அதில் அவன் பெயரை அழகாக வர்ண நூலால் அலங்கரித்து அதை அவன் ஞாபகமாக வைத்துக்
கொள்வாள் சில சமயம் அதை அவனுக்குத் திருப்பிகொடுக்கும் சாக்கில் அவனைப்
பார்க்கச் செல்வதும் உண்டு இந்தக் கைகுட்டையால் பல சந்திப்பு ,,பின் காதல் மலரும்
சில சமயம் கைக்குட்டை காற்றில் பறந்து வந்து தூது விடும் ,சினிமாவில் இதை வைத்து
சில கதைகள் ஓடும்
கிரிமினலிலும் இது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது ,கிட்நேப் செய்யவேண்டுமா கைக்குட்டையில் குலோரோபார்ம் வைத்து குறிப்பிட்ட நபரின் முகத்தில் வைக்க
அவ்வளவுதான் ,,,மயங்க வைத்து குண்டுகட்டாய் காரின் உள்ளே அள்ளிபோட்டுக்
கொண்டு ஓடுலாம் கைக்குட்டையால் கழுத்தை நெரிக்கலாம் பெரியகைக்குட்டையால்
கைக்கால்கள் கட்டலாம் திருட்டுப்பொருட்களை அவசரத்தில் கைக்குட்டையில்
முடிந்து தலைத்தொப்பிக்குள் மறைக்கலாம் ,,கைத்தடயங்களையும் இதைக்கொண்டு
அழிக்கலாம்

விபத்தின் போதும் இது மிக உதவும் இரத்தத்தைதுடைக்க ,எலும்பு முறிநதால்
அந்த நேரத்திற்கு சேர்த்துக்கட்ட ,,பாம்பு கடித்தால் உடனே இரத்தம் மேலே பரவாமல் இருக்க ஒரு கட்டு போட இந்தக்கைக்குட்டை உதவுகிறது
இந்தக்கைக்குட்டையின் பூர்வீகம் என்ன?
இது முதலில் ஆங்கிலத்தில் கோர்டேfப் என்று இருந்தது பிரன்சு மொழியில் குவ்ரேசீப்f
என்று இருந்தது ,இதைத் தலையில் முடியாகாக் கட்டிக்கொண்டார்கள் ஆங்கிலேயர்கள்
முதலில் ரோமன் நோபிள் ஒரு பெரிய லினன் துணியில் சதுர வடிவமாக செய்து
வியர்வைத் துடைக்க உபயோகித்தனர் கிரேக்கர்கள் அதில் ப்லவகையான் வாசனைத்
திரவியமும் தடவி கம்கம்க்க வருவார்கள் இவர்கள் பெரிய செல்வந்தராக இருப்பார்கள்
இதன் பிறகுதான் சிறியக் கைக்குட்டை உபயோகத்திற்கு வந்தது
உடல் தூய்மையைப் பேணி பாதுகாக்க இங்கலாந்தில் இரண்டாம் ரிசர்ர்ட் மன்னர்
இதைக்கண்டுபிடித்தார் .முன்பு போரில் சரண் அடையவும் போர் நிறுத்தவும் வெள்ளைக்
கொடிக்குப் பதிலாக இதை உபயோகித்த்னர் ,வட அமெரிக்காவில் டிஷ்யூ பேபரைக்
கைக்குட்டைக்குப் பதிலாக உபயோகித்தனர் ,சுகாதாரத்திற்கு இதுதான் சிறந்தது
என்றனர் ஜப்பான் சிலோனில் இது மிக நாகரீகமாகக் கருத்தப்படுகிறது

முதன் முதலில் கிளீனெக்ஸ் என்ற கம்பனி முதலில் மேக்கப் சாயங்களைத் துடைத்துப்போட டிஷ்யூ தயாரித்தது பின் மூக்கு சிந்த துணியே சரியாகுமென்று எண்ணி இதுப் போல் ஹேன்கி என்று தயாரித்தனர் "பண்டானா என்ற பெரிய கர்சீப்
தயாரித்தனர் அதில் பளீரென்ற அழுத்தமான வர்ணங்கள் சிவப்பு நீல்ம் பச்சை போன்றது
இருந்தன . இதைத் தலையில் அழகுக்காகவும் மோட்டர்சைகளில் போகும் போதும்
தலை முடி பறக்காமல் இருக்கவும் கட்டிக்கொண்டனர்
சிலர் தங்கள் குழுவின் அடையாளச்சின்னமாக வைத்துக் கொண்டனர் அமெரிக்காவில்
"கிரிப்ஸ்குழு" நீல வர்ணத்த்தில் இதை உபயோகித்தனர்
இதை மடித்து வைத்துக் கொள்ளும் ஸ்டைலும் பலவிதம் ,சதுரத்திலும் முக்கோண்த்திலும் ஒருபக்கம் மட்டும் தெரிவது போலவும் அவரவர் விருப்பப்படி
உபயோகிக்கலாம்
கடற்கரையில் தலையில் முண்டாசு போல் கட்டி சூரிய வெளிச்சம் வாங்கும் பலர்,,,,,,,
கிரிக்கெட்மேட்சில் கைக்குட்டையால் ஊக்கமூட்டும் பல்ர் ,,, கவ்வாலி பாடும் போது
கைகளில் கட்டி கொண்டு பாடுவர் பலர் ,,என்று
கைக்குட்டையின் உபயோகம் எண்ணில் அடங்காது ,
கைக்குட்டையை ஆட்டி பை பை ,,,,,,,,,சொல்வது

அன்புடன் விசாலம்

பக்தன் சிறையில் அனுமான்

ஹம்பி என்ற இடத்தில் ஆஞ்சநேயர் வந்து அமர்ந்தது மிக வியப்பான சம்பவம் தான் ,
மாத்வர்களின் ஆசார்யரான திரு வியாசராயர் மிகப் பெரிய ஆஞ்சநேயபக்தர் மிக அழகாக் வரைபவர் ,எங்கு போனாலும் ஸ்ரீ ஆஞ்சநேயரை வரைய ஆரம்பித்து விடுவார் அவர் கை
ஆஞ்சநேயமூர்த்தியை வரைந்தபடியே இருக்கும் ஒரு நாள் ஒரு இடத்தில் வந்து அமர்ந்து
வழக்கம் போல் மாருதியின் உருவத்தை வரைந்தார் ,மறு நாள் அந்த இடம் சுத்தமாக
அழிக்கப்பட்டிருந்தது அவருக்கு வியப்பும் சந்தேகமும் ஏற்பட்டது மறு நாளும் அதே இடத்தில் ஆஞ்சநேயரின் படம் வரைந்தார் ,அதுவும் மறுநாள் அழிந்திருந்தது இப்படியே பலநாட்கள் நடக்க அவர் ஒரு நாள் அந்த அழிப்பவனைக் கையும் களவுமாய் பிடிக்க
வேண்டும் என்று எண்ணி இரவு தூங்காமல் அங்கேயே நின்று காவல் காத்தார் , அப்போது
ஹனுமானே அங்கு வந்து அவர் படத்தை அழிப்பதைக் கண்டார் ஓடிப்போய் அவரைக்
கட்டிப்பிடித்தார் அவர் கைவிட்டுப்போகும் நிலையில் ராமநாமம் ஜபித்தார் அவர் அதில் மெய்மறந்து கட்டுண்ட போது அவரை ராமநாம ஜப இயந்திரத்திற்குள் அடைத்துவைத்து
விட்டார் ஆஞ்சநேயர் ஓடிப் போகாதபடி அங்கே ஒரு கோயிலும் கட்டிவிட்டாராம் ,
இந்தக் கோயில் கர்ப்பக்கிரஹத்தில் மூல உருவமே யந்திர உருவில் உள்ளது பத்மதளம் ஒன்று இருக்கிறது பின் ஒரு வட்டம் நடுவே ஆறுகோணங்கள் கொண்ட ஒரு யந்திரம் அதன் மத்தியில் ஆஞ்சநேயர் பீஜாட்சமந்திரம் உள்ளன ஒரு தியான ஸ்லோகம் கிரந்தத்தில் ,,வட்டத்தின் உட்புறம் எழுதப்பட்டுள்ளது ,,,, ஸ்ரீஆஞ்சநேயர்
ஜயந்தி அன்று பெங்களூர் அருகில் இருப்பவர்கள் எல்லோரும் இந்தக் கோயிலைத்
தரிசிக்கலாமே ,,,ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு பல கோடி நம்ஸ்காரங்கள் அன்புடன் விசாலம்