மினி லாரி வந்து நின்றது ,
நாலு மாடுகள் ஏற்றும் இடத்தில்
ஏற்றப்பட்டன ஒரு டஜன் ,
அடைக்கப்பட்டன் நெருக்கமாக ,
கட்டப்பட்டன் மிக இறுக்கமாக ,
தலைகள் எல்லாம் கீழ் நோக்கி
தொங்கும் நிலையில் பரிதாபம் .
மினி லாரி நகர்ந்தது .
சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு பவனி
மாடுகள் உடல்கள் உரச
வாயிலிருந்து நுறை வழிய
புஸ் புஸ்ஸென்று பெரும் மூச்சு
ஒரு பிரேக்கில் அவைகளின் நிலைமை
பார்க்க இயலாது இந்தக் கொடுமை .
நாம் என்ன மிருகங்களா?
இல்லை மனிதர்களா?
ஈவு இறக்கம் எங்கே போனது?
மனித நேயம் எங்கே மறைந்தது ?
வெட்டப்பட்டுச் சாகத்தான் போகிறது.
சாகும் வரை நிம்மதி பெறட்டும்
தேவையா இந்தச் சித்ரவதை ,,,,,
அன்புடன் விசாலம்
Tuesday, July 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment