Tuesday, July 1, 2008
என் பேர் என்ன?
கொள்ளவேண்டும் சரி கதைக்குப் போவோமா?
"என் பெயர் என்ன ?"
ஒரு ஈ பறந்து வளைய வளைய வந்துக் கொண்டிருந்தது திடீரென்று அதன் பெயர் அதற்கு மறந்து விட்டது சரி யாரைப்போய்க் கேட்கலாம் என்று பார்த்தது
அங்கு ஒரு கன்றுக்குட்டி நின்றுக்கொண்டிருந்தது அதனிடம் போய் "கொழு கொழு கன்றே என் பெயர் என்ன?" என்று கேட்டது ,அதற்கு கன்று "எனக்குத்
தெரியாது என் அம்மா பசு அங்கு புல் மேய்ந்து கொண்டிருக்கிறாளவளிடம் போய் கேள்"
பசுவினிடம் ஈ போயிற்று "கொழுகொழு கன்றே கன்றின் தாயே ,,என் பெயர் என்ன?
பசுவும் "எனக்குத் தெரியாது என்னை மேய்க்கும் இடையனிடம் போய் கேள்"
என்றது இதுவும் விர் என்று பறந்து "கொழுகொழு கன்றே கன்றின் தாயே
தாய் மேய்க்கும் இடையா என் பெயர் என்ன"? என்று வினவியது அவனும் சிறிது யோசித்து "உஹூம் எனக்குத் தெரியவில்லை என் கையில் இருக்கும்
கோலைக் கேள் நான் இது மேய்க்க வைத்துக் கொள்வேன் "
ஈ திருமப அவன் கோலிடம் கேட்டது "கொழுகொழு கன்றே கன்றின் தாயே
தாய் மேய்க்கும் இடையா இடையன் கைக்கோலே என் பெயர் என்ன"?
அதுவும் தெரியாமல் "எனக்குத் தெரியாது நான் வளரும் கொடி மரத்தைக்
கேள் "என்றது ஈயும் கொடி மரத்திற்குச் சென்று
கொழுகொழுகன்றே
கன்றின் தாயே தாய் மேய்க்கும் இடையா
இடையன் கைக்கோலே ,,கோல் வளரும் கொடி மரமே என் பெயர் என்ன"?
கொடி மரம் ஒன்றும் புரியாமல் "எனக்குத் தெரியாது என் கீழ் வந்து நிற்கும்
கொக்கைக் கேள் "என்றது ஈயும் கொக்கிடம் சென்றது பின் கேட்டது
"கொழுகொழு கன்றே கன்றின் தாயே தாய் மேய்க்கும் இடையா இடையன் கைக் கோலே கோல் வளரும் கொடிமரமே கொடிமரத்தின் கீழ் கொக்கே
என் பேயர் என்ன"?
கொக்கிற்கும் தெரியவில்லை" நான் தின்னும் மீனுக்குத் தெரிந்திருக்கும்
அதனிடம் கேள்" என்றது
ஈயும் மீனிடம் போய் "கொழுகொழு கன்றே கன்றின் தாயே தாய் மேய்க்கும்
இடையா இடையன் கைக் கோலே கோல் வளரும் கொடி மரமே
கொடி மரத்தின் கீழ் இருக்கும் கொக்கே கொக்கு தின்னும் மீனே என் பெயர்
என்ன"? மீன் ஒன்றும் புரியாமல் "எனக்குத் தெரியாது என்னைப் பிடிக்கும்
வலையனைக் கேள்" என்றது
"கொழுகொழு கன்றே கன்றின் தாயே தாய் மேய்க்கும் இடையா
இடையன் கைக் கோலே கோல் வளரும் கொடி மரமே கொடி மரத்தின் கொக்கே
கொக்கு தின்னும் மீனே மீன் பிடிக்கும் வலையா என் பெயர் என்ன"?
அவனுக்கும் தெரியவில்லை "என் கையில் இருக்கும் கலயத்தினிடம் கேள்
என்றான் அதுவும் கலயத்தைப்பார்த்து கொழுகொழு கன்றே கன்றின் தாயே
தாய் மேய்க்கும் இடையா இடையன் கைக் கோலே கோல் வளரும் கொடி மரமே
கொடி மரத்தின் கொக்கே கொக்கு தின்னும் மீனே மீன் பிடிக்கும் வலையா
வலையன் கைக் கலயமே என் பெயர் என்ன"?
கலயம் ஈயைப் பார்த்து "எனக்கும் தெரியவில்லை என்னைச் செய்யும் குயவனிடம் கேள்"என்றது ஈயும் குயவனிடம் போய்
கொழுகொழு கன்றே கன்றின் தாயே தாய் மேய்க்கும் இடையா இடையன் கைக்
கோலே கோல் வளரும் கொடி மரமே கொடி மரத்தில் இருக்கும் கொக்கே கொக்கு தின்னும் மீனே மீன் பிடிக்கும் வலையா வலையன் கைக்
கலயமே கலயம் செய்யும் குயவா என் பெய்டர் என்ன"?
அவனும் தனக்குத் தெரியாது என்றுச் சொல்லி "நான் கலயம் செய்யும்
மண்ணைக் கேள்"என்றான் அது மண்ணிடம் சென்று தன் பெயரைக் கேட்டது
மண்சொன்னது "உன் பெயர் எனக்குத் தெரியாது என் மேல் வளரும் புல்லைக்
கேள் " என்றது அந்த ஈ பறந்து புல்லிடம் சென்றது "புல்லே என் பெயர் என்ன"
"எனக்குத் தெரியாது என்னைத் திங்கும் குதிரையை கேள் என்றது ஈ
பறந்து குதிரையிடம் சென்றது
"கொழுகொழுகன்றே
கன்றின் தாயே தாய் மேய்க்கும் இடையா
இடையன் கைக் கோலே
கோல் வளரும் கொடி மரமே
கொடி மரத்தின் கொக்கே
கொக்கு தின்னும் மீனே
மீன் பிடிக்கும் வலையா
வலையன் கைக் கலயமே
கலயம் செய்யும் குயவா
குவயவன் கையின் மண்ணே
மண்ணில் வளரும் புல்லே
புல்லைத் தின்னும் குதிரையே ,,,என பெயர் என்ன்"?
குதிரைப் புல்லைத் தின்று விட்டு ஹீஹீ ஹீ என்று கனைத்தது
ஓ ஞாபகம் வந்து விட்டது எனக்கு நீ சொல்லி விட்டாய் என் பெயரை "என்று
மகிழ்ச்சியுடன் பறந்துச் சென்றது ,,
குழந்தைகளே எப்படி இந்தக் கதை ,,,இந்தக் கதையில் பல தடவைகள் வாக்கியங்கள் திரும்பத் திரும்ப
வருவதால் அப்படியே மனப் பாடம் ஆகி விடுகிறது மேலும் கன்றின் தாய் பசுவைப்
பற்றியும் கால நடைகளை மேய்க்கும் இடையன் பற்றியும் அவன் கையில் இருக்கும் கோல் பற்றியும் கொக்குவுக்கு உணவு மீன் என்பது பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது தவிர பல வேலை செய்பவர்கள் குயவன் வலையன்
இடையன் என்பதையும் மண்ணினால் மண்பாண்டம் செய்யலாம் என்றும் மண்ணின் மேல் பல செடி கொடிகள் வளர்கிறது என்றும் குதிரை
புல தின்னும் என்பதும் விளக்கப் பட்டிருக்கிறது சின்ன வேடிக்கைக் கதையினால் அறிவும் அந்தக் காலத்தில் தாத்தா பாட்டிகள் வளர்த்திருக்கிறார்கள் இல்லையா ?எங்கே
இந்தக் கதையைப் படியுங்கள் தனாகவே மனப் பாடம் ஆகிவிடும் எனக்கு 40 வயதில் படித்த சில பாடலக்ளில் சில இடங்கள் மறந்து விட்டன் ஆனால்
ஐந்து வயதில் படித்த பாட்டிச்சொல்லிக் கொடுத்த இந்தக் கதை அப்படியே
ஞாபகம் இருக்கிறது ,,,ஐந்தில் வளையாதது ஐம்பதில் விளையுமா?
ஆகையால் இந்தலீவில் நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொள்ளுங்கள்
அன்புடன் அம்மம்மா
ஆடிசம் குழந்தை
படிப்பு பாட்டு நடனம் என்று எல்லாவற்றிலும் முதலிடம் பெற்று புகழுடன் விளங்கினாள் சர்தார்படேல்வித்யாலயாவில் அவள் பங்கு பெறாத இடமே இல்லை அவள் தம்பியும் பிறந்தான் ஒன்பது வருடம் இடைவெளிக்குப் பின் ,,,கொள்ளை ஆசைதான் அந்தத் தம்பிப்
பாப்பாவின் மேல் ,,நாளாக் நாளாக அந்தக் குழந்தையிடம் நார்மல் குழந்தைப் போல் இல்லாமல் சில மாற்றங்களைக் கண்டாள் அதனின் தாய் ,,குழந்தை நிகிலைக் கைத்தட்டிக்
கூப்பிட அது தன் உலகத்தில் இருந்தது அந்த அம்மா காட்டிய சிவப்புக் கலர் பொம்மையோ அவள் கொஞ்சும் குரலும் நிகிலுக்கு விளங்கவில்லை ஸ்பூனால் பால் கொடுத்தலும் சில சமயம் முழுங்கத் தெரிந்தது சில சமயம் வெளியே வழிந்தது அதன் அக்கா சுகந்தி
"நிகில் குட்டி நான் பாட்டு பாடுவேனாம் நீ கைத்தட்டி சிரிப்பாயாம் என்று பல சினிமா மெட்டுக்களைப் பாட அதன் விழிகள் வேறு எங்கேயோ நிலைதிருந்தது என்ன பரிதாபம் ஒன்பது வருடம் கழித்து வந்த ஆண்குழந்தை ,உணர்ச்சியே இல்லாமல் தனக்கு என்று ஒரு தனி உலகம் செய்து வாழுகிறானே ,,,,,பெற்றோர்கள் மனம் நொந்தனர் டாக்டரிடம் போய்
பரிசோதனைச் செய்ததில் அதற்கு ஆடிசம் இருக்கிறது என்று தெரிய வந்தது மூளைக்குப்
போகும் பல நரம்பு மண்டலங்கள் ந்யூரான்ஸ் அதைக் கொண்டு சேர்க்கும் நரம்புகளும் செல்களும் பழுது பட்டிருக்கின்றன் என்று டாகடர் சொன்னார் அவ்வளவுதான் அந்த முதல்
ரேங்க் வரும் அக்கா மனம் ஒடிந்து படிப்பில் கொஞ்சம் கொஞ்சமாக கவன்ம் இல்லாது
ஏதோ பறிக்கொடுத்தாற்போல் இருக்கிறாள் ,
அந்தக் குழந்தை நிகிலுக்கு வயது 5 ஆகியும் ஒரு மாற்றமும் இல்லை ஆனால் உடல் மட்டும் ராஜகுமாரன் போல் அழகாக வளர்ந்திருக்கிறது
ஒரு நாள் அந்தக் குழந்தையை அழைத்து அவனது அம்மா கைப்பிடித்தபடி தெருவைக்கடக்க
திடீரென்று எதிர்பாராத விதமாய் நிகில் அம்மாவின் கையை உதறிவிட்டு ஓடினான் அந்தச்
சமயம் பார்த்து ஒரு கார் வந்து கீரீச்சென்று பிரேக் போட்டு நின்றது உள்ளே இருந்தவன்
"என்ன அம்மா நீங்கள் என்ன யோசனையில் வருகிறீர்கள் குழந்தையைக் கூட பார்த்துக்
கொள்ள முடியவில்லை விபத்து ஏற்பட்டால் மட்டும் கோர்ட் கேஸ் என்று வந்துவிடுவீர்கள்"
என்று கன்னாபின்னா என்று கத்தினான அந்தத் தாய் மனம் கலங்கி குழந்தையின்
ராமாயணத்தை திரும்பவும் கூட்டம் நடுவில் சொல்லத் தயங்கி வந்து விட்டாள் அந்தத் தாய்
பிஎச் டி படிக்கிறாள் {எகனாமிகஸ்}காலேஜில் பெரிய பதவி வகிக்கிறாள்
விட்டில் குழந்தைப் பார்த்துக்க்கொள்ள ஒரு தனி பெண்மணியை அமர்த்தவேண்டி இருந்தது இல்லாவிட்டால் பால்கனியிலிருந்து கூட குதிக்கும் வாய்ப்பு உண்டு இந்த ஆடிசம்
வருவதற்கு காரணங்கள் என்ன ?கர்ப்பம் தரித்தவுடனேயே இது பற்றி தெரிய வாய்ப்பில்லையா
இது போல் குழந்தைகள் 25 வயதுக்கு மேல் இருக்காது என்கிறார்களே அது உண்மையா?
நம் டாக்டர் ச்ங்கர் இதற்கு பதில் அளிப்பார் ,,
இந்தக்குழந்தை யாருமில்லை என் அக்காவின் பேரன் தான் ,,,,,பார்க்க மனது மிகவும்
வருந்துகிறது ஆண்குழந்தைப் பிறக்காதா என்று ஏங்கி பின் பிறந்தக்குழந்தையால் வீட்டில்
எல்லோரும் நிம்மதி இழந்து தவிக்கின்றனர் ,,,,blood group சேரக்கூடாதது சேர்ந்து விட்டால் வரும் பிரச்சனையோ ,
அன்புடன் விசாலம்
,,,
சரளாதாசர்
பேசும் மொழி ஒரியா இது அநேகமாக பெங்காலி போல் தான் இருக்கும்.இந்த ஒரிய மொழியில் ஒரு கவிஞர் பல கவிதைகள் எழுதி இருக்கிறார் தவிர வில்லங்க ராமாயணம் சண்டி புராணம் எழுதி இருக்கிறார் இவரை ஒரிஸ்ஸாவின் வியாசர் என்றே சொல்வார்கள் நம்
காளிதாசருக்கு நாக்கில் காளி எழுதியதுபோல் இவருக்கும் நாக்கில் அமபாள் சரளாதேவி வந்து
எழுதிவிட்டுச்சென்றாள் ,இவர்தான் திரு சித்தேஸ்வர் பாண்டா பின்னால் சரளாதாசர் என்று புகழ் பெற்றார் கூட்டுக்குடும்பத்தில் ஒருவனாக இவன் சிறுவயதில் இருந்தான் சிறுவயதில் படிப்பில் கவனம் செல்லாமல் ஒரு வேலையிலும் ஆர்வம் காட்டாமல் அப்பாவின் வசவுகளை அடிக்கடி வாங்கிக் கட்டிக் கொள்வான்
ஒருநாள் ஊரைச்சுற்றிப்பின் அவன் வீடு நுழைந்த போது எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டு
இருந்தனர் "அம்மா எனக்கும் சாதம் போடு"என்றான்
"எங்கள் எல்லோருக்கும் வயிலில் வேலை நிறைய இருக்கு அதான் அவசரமாகப் போகிறோம்"
"நானும் வரேன் அப்பா"
:நீயா தண்டச்சோறு ஒரு வேலை ஒழுங்கா செய்யத் தெரியாது அங்கு வந்து என்ன
செய்யப்போகிறாய் .ஏதாவது பாடிக்கொண்டே இருப்பாய் ,அது கூட தனக்காத் தெரியாது என் அம்மா சொல்லித்தந்தப் பாட்டுக்கள் எல்லாம் "
சித்துவின் முகம் வாடியது "இல்லேப்பா நானும் வரேன்"
"சரி பேசாமல் சோறு கட்டிக்கொண்டு வயலுக்குப்போ ஏற்றம் இறைத்து நீர் பாய்ச்சு உருப்படியாக அதையாவது செய்"
"அம்மா" என்றுச் சொல்லிக்கொண்டே அம்மாவை அணைத்தான் சித்து
"கவலைப்படாதே நம் குலதெய்வம் சரளாதேவி காப்பாற்றுவாள் நீதான் குலதெய்வம்
சரளாதேவிமேல் எவ்வளவு அழகாக்ப் பாடுகிறாய் அது அவர்களால் பாடமுடியுமா?
சரளாதேவி நிச்சியம் உனக்கு அனுக்கிரஹம் செய்வாள்?"
அவள் அவர்கள் என்றுக் குற்ப்பிட்டது சித்துவின் சகோதரர்களைத்தான் ,,,,,,,
சரி என்று சொல்லியபடியே சித்து வயலுக்குப் போனான் அங்குஅவன் நண்பர்கள்
"என்ன சித்து நீ வயல் வேலைகெல்லாம் வரமாட்டாயேஇன்று என்ன வந்திருக்கிறாய்?
"எல்லோரும் சந்தைக்குப் போய்விட்டார்கள் அதனால் நான் இங்கு வந்தேன்"
"சித்து உன்னைப்பார்த்தாலே எங்களுக்கு ஒரே மகிழ்ச்சிதான் ஒரே ஒரு பாட்டு பாடு .உன்
பாட்டைக்கேட்டுக்கொண்டே வேலைச்செய்தால் அலுப்பேதெரியாது இல்லையா?"
சித்து பாடப்பாட பறவைகள் அனுபவித்துக்கேட்டன.பின்னர் மாடுகள் அசைப்போட மறந்தன
உழவர்கள் மெய்மறந்து நின்றார்களவன் குலதெய்வம் சரளாதேவியும் மெய்மறந்துப் போனாள்
சங்கீதத்தில் அப்படியே லயித்துப்போனாள்,ஒரு கிண்ற்றின் திண்டில் அமர்ந்து அவள் ஒரு நேரத்தில் தாளமும் போட்டாள் சித்துவுக்கு தாளம் போடும் சத்தம் கேட்டது ஆனால் தரிசனம் கிடைக்கவில்லை
சட்டென்று பாட்டை நிறுத்தினான் சித்து,"ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்?"என்று கேட்டாள்
அவள்,பின் சொன்னாள் "பாடுப்பா அருமையாகப்பாடுகிறாய் ஒரு வரம் ஒன்று கேள்
தருகிறேன்"
"நீ என்ன பெரிய சரளாதேவி என்றநினைப்போ?வரம் எப்படித் தருவாய் ?"
"நான் சரளாதேவிதான் சித்து நீ என்னக்கேட்டாலும் தருகிறேன்"
சித்து யோசித்தான் இவளை எப்படி நம்புவது?என்று நினைத்து "நான் யோசித்துப் பின்னால் தேவைப்பட்டால் கூப்பிட்டு வரம் கேட்கிறேன் கூபிடும் போது வருவாயா?"என்றான்
"சரி சித்து நீ எபோ கூப்பிட்டாலும் ஓடி வருவேன் " என்று கூறி சரளாதேவி மறைந்தாள்
சித்து பாடிக்கொண்டே நீர் இறைத்ததால் மூங்கில் கிணற்றில் விழுந்துவிட்டது வீட்டிற்கு வந்து
மூங்கில் விழுந்துவிட்டதைச் சொன்னான் அவன் அப்பா அவனைத் திட்டி "எந்தக்காரியம் ஒழுங்காகச் செய்கிறாய் ?என்று ஒரு கம்பால் அடித்துவிட்டார்
"ஆ வலி தாங்கமுடியவில்லையே ! எங்கே என் சரளாதேவி வா எனக்கு வலித் தெரியாமல்
செய் " அன்புடன் அழைத்தான் அவளும் உடனே தோன்றினாள் வலி இல்லாமல் செய்து
பின்"சித்து என்னம் வரம் வேண்டும்" என்றாள் ,பின் "நானே முடிவு செய்து விட்டேன் உன் நாக்கை நீட்டு ?என்றாள் சித்து நாக்கை நீட்டியவுடன் தன் திரிசூலத்தினால் நாக்கின் மேல்
ஏதோ எழுதினாள்பின் சொன்னாள்" சித்து இனி நீ மாடுமேய்க்கும் சிறுவன் அல்ல உன் நாக்கில் வியாசர் வால்மீகிய
ும் குடிகொள்ளப் போகின்றனர் ஒரியா மொழியில் பல இலக்கியங்களைப் படைப்பாய் மிக உன்னத நிலையை அடைவாய்
சரளாதேவியின் அருளால் பெரிய மேதை ஆனார் கவிஞர் ஆனார் சித்து. பெயரும் சரளாதாசர்
ஆனது
பல சமுதாயத்தொண்டுகளும் செய்தார் ஒரு நாள் அவரைத்தேடிஅந்த நாட்டு படை வீரர்கள்
வந்தனர்
"கவிஞரே வீட்டுக்கு ஒருவ்ர் போர் புரிய தேர்ந்தெடுக்கிறோம் வீட்டுக்கு ஒருவர் படையில் சேர மன்னரின் உத்தரவு திருவுளச்சீட்டின் படி உங்கள் பெயர் விழுந்து
இருக்கிறது. "
குடும்பத்தில் எல்லோரும் இவரின் முகம் கண்டு பின் "வேண்டாம் சரளதாசர் நீங்கள் கவி
படைக்கவும் .எங்களில் ஒருவர் போகிறோம் உன் கவிதைத் தொண்டுதான் முக்கியம் அது
தடைப்படக்கூடாது "
பின் என்ன?பல படைப்புக்கள் அவர்மூலம் வெளிவந்தன "மக்கள் கவிஞர் "இலக்கியத் தந்தை
என்ற பட்டங்கள் கிடைத்தன இன்றும் ஒரிஸ்ஸாவில் அவர் பெயருடைய பல ஸமஸ்தானங்கள் உள்ளன ,
அன்புடன் அம்மம்மா
ஊரைக்காத்த அருணி
அப்படித்தானே ! சரி ஒரு உண்மைக் கதையைப் பார்ப்போம் நான் சொல்லும் கதைகளில் அநேகமாக நல்ல வழியில் போக பாடம் சொல்லப்பட்டிருக்கும் நீங்கள் கதைப் படிப்பதோடு நில்லாமல் அதன் வழி நடக்கவும் வேண்டும் .இதையே தான் பெற்றோர்களும் விரும்புவார்கள் இல்லையா ?
மஹாராஷ்டாரவில் ஒரு ஆஸ்ரமம் ,,அங்கு ரிஷி தௌம்யா என்பவர் வசித்து
வந்தார் அவரது ஆஸ்ரமத்தில் சில் மாணவர்களும் குருகுலவாசியாக இருந்து
கல்வி கற்றும் வந்தனர் அதில் ஒரு மாணவன் இரத்தினம் போல் பிரகாசித்தான்
குரு பக்திக்கு பெயர் போனவன் ,மிகவும் பணிவானவன் சிறந்த அறிவாளி
தேசத்திற்கு உயிரையே கொடுப்பவன் .நல்ல ஒழுக்கம் உடையவன் .
எல்லோரிடமும் மிக அன்பாகப் பழகுவான் ,அவனை எலோருக்குமே மிகவும்
பிடிக்கும் அவன் பெய்ர் அருணி ,,,,,,,,
ஒரு நாள் அவனது குரு காட்டிற்கு போகச்சொல்லி சிறு குச்சிகள் , காய்ந்த உடைந்தக் கிளைகள் பொறுக்கி வருமாறு கட்டளை இட்டார் அந்தக் காலத்தில்
நெறுப்பு மூட்டி உணவு சமைக்க இந்த விறகுகள் ,குச்சிக்ள்
உதவியது திடீரென்று கருமேகம் சூழ்ந்துக் கொள்ள மழை இலேசாகக் கிளம்பி பின் அடை மழையாகக் கொட்டத்
தொடங்கியது . நடு வழியில் ஒரு அணை ஒன்று கட்டப்பட்டிருந்தது மழைத்த்ண்ணீர் அளவுக்கு
மீறி அலைப் போல் மோதியது இதனால் அந்த அந்த
அணையில் இலேசாக விரிசல் கண்டது அருணி மற்ற
மாணவர்களைத் திரும்பிப் போகச் சொன்னான்
"நீ இங்கு தனியாக என்ன செய்வாய்?" என்று அவன் நணபன் கேட்டான் ,அதற்கு அருணி "நான் இந்த அணையின் விரிசலை மேலும் விரியாதபடி பாதுகாக்க்ப்
போகிறேன் இந்த அணி உடைந்தால் ஊரே வெள்ளத்தில்
மூழ்கும் எல்லோரும் நாசமடைவார்கள் கால்
நடைகள் வெள்ளத்தில் மூழ்கி மாண்டுப் போகும் வீடு எல்லாம் மூழ்கி விடும் ஆகையால் என்னால் முடிந்த
அளவு மேலும் சேதம் ஆகாமல் பார்த்துக் கொள்ளப்
போகிறேன் நீங்கள் எல்லோரும் போய் குருவிடம்
நான் தங்கிய காரணத்தைச் சொல்லுங்கள் ..பாவம்
அவர் கவலைப் படுவார் "என்றான்
மற்ற மாண்வர்கள் திரும்பப் போய் விட்டனர்
அருணி அணைப்பகுதிக்குச் சென்றான் அங்கு ஒரு ஓட்டை வழியாக தண்ணீர் வேகமாக வெளியே வருவதைக்
கண்டான் தன் கட்டைவிரலால் அந்த ஓட்டையை அமுக்கி
அழுத்திப் பிடித்துக் கொண்டான் கட்டைவிரல் சில்லிப்பினால்
நீலம் பாய்ந்தது இரத்த ஓட்டம் நின்றது
அருகில் இருக்கும் நிலங்கள் நீரில் மூழ்கின ..பாவம் அருணி மனதில் கடவுள் தியானம் செய்து தன் குருவையும் சிந்தித்து கொஞ்சம்
மண்ணைப் பிசைந்து அதில் அடைத்தான் ,அந்த
வேகத்திற்கு இது எம்மாத்திரம் ?பிய்த்துக்கொண்டு
விழுந்தது ,பல தடவைகள் இதைச் செய்தும் பிரயோசனப்
படவில்லை .யோசனைச் செய்தான் ,பின் தன் முதுகை
அந்த இடத்தில் அழுத்தியபடி நின்றான் அவன் உடல் கொஞ்சம் கொஞ்சமாக நீலம் பாய்ந்தது கட்டைப் போல் ஆனது
ஆனாலும் மனதின் திடச்சக்தியினால் அந்த இடத்தை
விட்டு நகரவில்லை கடவுள் அருளால மழையின் வேகம்
குறைந்தது இலேசாக தூற்றல் போட்டது குருவும் மற்ற
மாணவர்களும் அருணியைப் பார்க்கத் தேடி வந்தனர்
அருணி மயங்கிக்கிடந்தான் குரு அவனைத் தன் தோளில்
தூக்கிப் போட்டுக் கொண்டு ஆஸ்ரமம் போனார் மூலிகை
வைத்தியம் செய்தார் .
கண் விழித்துப் பார்த்தான் அருணி அவன் கேட்ட முதல் வாக்கியம் "அணை என்னவாயிற்று ?" ,ஒரே கூட்டம் ஒரே புகழ் மாலை தான் அந்த ஊரையே காப்பாற்றிய அருணிக்கு ஒரு பெரிய பாராட்டே நடந்தது குருவும் மனதார
அவனை ஆசீர்வதித்து பாராட்டினார்
அன்புடன் அம்மம்மா
ஏன் இந்தத் திடீர் மாற்றம்?
ஏன் இந்த திடீர் மாற்றம் ?
அந்த நாள் வந்தது ஞாபகம் ,
உன் உடலிலே எண்ணெய்த் தடவ ,
குட்டிச் சட்டியுடன் நிற்பாயே!
மிதமான சூடுடன் விளாவி ,
ஆசையுடன் முதுகைத் தேய்க்க
சுகமாகக் காட்டுவாயே!
இப்போது ஏன் இந்த மாற்றம்
என்னை விலகி ஓடுகிறாய் ?
உன் தலைமுடியைக் கோதி ,
இரு கன்னத்தை அசங்காமல் பிடித்து ,
உன் சுருட்டைமுடியை நீவ
சமத்தாகக் காட்டுவாயே .
இன்று உன்னைப் பார்க்கிறேன்
பல நாட்கள் வாராத முடி
குருவியின் கூடு கவிழ்த்தாற்போல்
அடிக்கடி முடியால் ஒரு கண் மறைய
கைகளால் பலதடவைகள் கோத
கழுத்துவரை முடி பரவ
கண்ணா ஏன் இந்த மாற்றம் ?
என்னை விலகி ஓடுகிறாய்?
மொறு மொறுவென்று
உருளைக்கிழங்கு வதக்கி .
சுடச்சுட குழம்பு சாதம்
உன் தட்டில் வைக்க
நீ உண்ணும் அழகை நான் ரசிக்க
அப்படியே உன்னை அணைத்து
உச்சி முகர்ந்தேனே .
அந்த நாட்கள் இனி வருமா ?
இன்றும் உன்னை
அணைக்கத் துடிக்கின்றேன்.
ஏன் இந்தத் திடீர் மாற்றம் ?
ஏன் விலகிப் போகிறய் ?
பள்ளியிலிருந்து ஓடி வருவாய் ,
பல கதைகள் பேசுவாய் ,
என் மடியில் தலை வைத்து
களைப்பில் தூங்கி விடுவாய் ,
கால் வலித்தாலும்
உன் தூக்கம் கலையாமல் இருக்க
அசையாமல் அமர்ந்திருப்பேனே .
ஆனால் இன்றோ
காலேஜிலிருந்து வருகிறாய்
சன்னலில் தவம் செய்கிறாய்.
நண்பர்கள் இடையில் மறைகிறாய் ,
வண்ணச் சிட்டுக்கள் உன்னைச் சூழ
முகம் மலர ரசிக்கிறாய் .
ஏன் இந்தத் திடீர் மாற்றம்
என்னைவிட்டு விலகுகிறாய் ?
குழந்தைப் பருவம் முடிந்துப் போக
விடலைப் பருவம் தலைத்தூக்க
அதைப் புரிந்துக் கொள்ளாத நான்
உன்னைக் குழந்தையாகவே பார்க்கிறேன் ,
ஒரு வயதில் தந்தை இழந்தாய் .
நானே தந்தை ,நானே தாய் ,,,,,,
உனக்கென்று தனி வழி தேடி விட்டாய் ,
என்க்கென்ற ஒரு வழியைத் தேடவேண்டும் .
தாய்க்குப் பின் தாரமும் வருவாள்,,,,
எதிர்ப்பார்ப்பு இல்லாத வாழ்க்கை
நான் இனி தேட வேண்டும்
தன் காலால் நான் நிற்க
இன்மேல் பயில வேண்டும்
அன்பு என்ற உலகில்
வலம் வரவேண்டும்
மகனே நீ விலகினாலும்
நான் தெளிவாகி விட்டேன்
வேண்டாம் இந்தச் சித்ரவதை
நாலு மாடுகள் ஏற்றும் இடத்தில்
ஏற்றப்பட்டன ஒரு டஜன் ,
அடைக்கப்பட்டன் நெருக்கமாக ,
கட்டப்பட்டன் மிக இறுக்கமாக ,
தலைகள் எல்லாம் கீழ் நோக்கி
தொங்கும் நிலையில் பரிதாபம் .
மினி லாரி நகர்ந்தது .
சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு பவனி
மாடுகள் உடல்கள் உரச
வாயிலிருந்து நுறை வழிய
புஸ் புஸ்ஸென்று பெரும் மூச்சு
ஒரு பிரேக்கில் அவைகளின் நிலைமை
பார்க்க இயலாது இந்தக் கொடுமை .
நாம் என்ன மிருகங்களா?
இல்லை மனிதர்களா?
ஈவு இறக்கம் எங்கே போனது?
மனித நேயம் எங்கே மறைந்தது ?
வெட்டப்பட்டுச் சாகத்தான் போகிறது.
சாகும் வரை நிம்மதி பெறட்டும்
தேவையா இந்தச் சித்ரவதை ,,,,,
அன்புடன் விசாலம்
நான்கு திசையில் காளி
உருகிப் பிரார்த்தனைச் செய்யக் காளியும் அவன் முன் தோன்றினாள் அவனும் தான் ஆயிரம் ஆண்டுகள்
வாழ அரசு புரிய வரம் வேண்டினான் . காளிதேவியும் வரம்
கொடுத்தாள் அவனுக்கு தன் தம்பி பட்டியின் மேல் மிகப் பாசம் அவனும் பல்லாண்டுகள் வாழத் திரும்பவும் காளியைக் குறித்துத் தவம் இருந்தான்
காளியும் வந்தாள் பகதர் கூப்பிட்டால் ஓடியும் வருவாள் காளி ,,,தன் தம்பிக்கு இரண்டாயிரம் வருடங்கள் வாழ வரம் கேட்டான் .காளியும் அவனுக்கும் அருள் புரிந்தாள்
"காடாறு மாதம் நாடாறு மாதம் என வாழ்ந்தால் ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி
செய்வாய் "எனக் கூறி மறைந்தாள் ஆதலால் ஆறு மாதம் வருடத்தில்
அவன் காட்டில் கழித்தான் அப்படி அலையும் தருணத்தில் தான் நான்கு
திசைகளிலும் காளி கோயில் கட்டினான் , திருச்சி மாவட்டத்தில் சக்திப்பெற்ற
பெரிய காளிக்கோயில்களைக் கட்டினான் உறையூர் வெக்காளிஅம்மன்
கோயில் தெற்கு திசைக் கோயில்
தொட்டியத்தில் உள்ள காளிகோயில் மேற்கு திசைக் கோயில் ,,,,,
சிறுவாச்சூரில் அமைந்துள்ள மதுர காளியம்மன் கோயில் வடக்கு த்சைக் கோயில்
திருச்சி சமயபுர மாரியம்மன் கோயிலுக்கு அருகே மஹாகாளிகுடியில் உள்ள
காளிக்கோயில் கிழக்குத் திசைக் கோயில் ,கேட்டதை வழங்கும் சிறப்புப் பெற்ற இந்த நாலுகோயில்களையும் நேரே போக முடியாவிட்டாலும்
மானசீகமாக வலம் வருவோம்
அன்புடன் விசாலம்
பெண் என்பவள் கரும்பு
இவர் பலர் படிப்பதைக்கேட்டு மனப் பாடம் செய்து ஒப்பிப்பார் பல மணி நேரங்கள் கவிதைச் செய்து பழகி பின் பெரிய கவிஞர் ஆகிவிட்டார் இவரை
"அந்தகக் கவி " என்று எலோரும் போற்றினர் ,இவர் தான் திரு வீர ராகவர் ,
இவர் ஒரு சம்யம் ஒரு நூல் எழுதினார் இக்காலம் போல் அத்தனை எளிதாக
அதற்கு ஒப்புதல் கிடைப்பது அந்தக்காலத்தில் இல்லாத ஒன்று ,முதலில்
சபைக் கூட்ட வேண்டும் பின் நூலை அறிமுகப் படுத்த வேண்டும் சபையில்
இருப்பவர் அதை அலசுவர் ,அதில் இருக்கும் நல்லது ,அல்லது கெட்டதை வெளிப்படையாகக் கூறுவர் பொருட்குற்றம் சொற்குற்றம் இருப்பின் அதை
அரங்கத்தில் அம்பலப்படுத்துவர் , இவர் எழுதிய நூலில் ஒரு பெண்ணைப்
பற்றி சித்தரித்திருந்தது அதாவது பெண் என்பவள் "கரும்பு" என்றார்
அதாவது அத்தனை இனிப்பானவள் சுவையானவள் இனிமையானவள்,,,,,,,,,,
அத்துடன் கருமபு விளையும் இடத்தையும் வர்ணித்தார்
ஏரியிலிருந்து பால் பாய ,தேன் மழைப்பொழிய,,வயலுக்கு எருவாக பாகும்
கற்கண்டும் சேர முப்பழங்கள் சேராக அமைந்தன அந்த வயலில் விளைந்த
கரும்பு தான் பெண்,,,
"பாலேரி பாயச்செந்தேன் மாரி பெய்யநற் பாகு நற்கண்
டாலே எருவிட முப்பழச் சேற்றின் அமுத வயல்
மேலே முளைத்த கரும்போ ,,,,,,,,,
என அமைந்திருந்தன சபையில் இதை அவரது மாணவன் படித்துக் காட்டினான்
எல்லோரும் கரகோஷம் செய்தனர் ஆனால் ஒரு பெண்மணி "இந்தக் கவிதையில் கருத்து கெட்டிருக்கிறது ,,கவிஞருக்கு கண்தான் கெட்டிருக்கிறது என நினைத்தேன் ஆனால் கருத்தும் ,,,,என்று இழுத்தார் அவர் சொன்னது
கவிஞருக்கு உடனே புரிந்து விட்டது தன் பிழையை உணர்ந்தார் பின் தன்
மாணவனிடம் " சீடா கொம்பை வெட்டிக் காலை நடு " என்றார் மாணவனும் குருவுக்கு ம
ிஞ்சிய சிஷ்யன் ,,உடனே "கப்பென்று"பிடித்துக் கொண்டான்
பாடலை மாற்றி படித்தான் "முப்பழச் சாற்றின் அமுத வயல் மேலே
முளைத்த கரும்போ" ,,
அந்த பெண்மணி கூறினார் "மூன்று பழங்களைப்பிழிந்தால் அது பழச் சாறு
ஆகத்தான் இருக்கும் எப்படி சேறாக முடியும் ?
கவிஞர் இதைப்புரிந்துக் கொண்டு ,தன் மாணவனிடம் "கொம்பை வெட்டி காலை
நடு என்றார்,அவனும் கொம்பு கால் எது என்று கேட்க்காமல் "சேறு என்பதில் உள்ள கொம்பை நிக்கினான் "ச்" எழுத்தின் பக்கத்தில் ஒரு காலை எழுதினான்
அது "சா"ஆனது பின் என்ன எல்லோரும் அவரது கவி நயம் கண்டு
வியந்தனர் அந்த நூலும் மிகச் சிறப்பாக அரங்கேறியது
வித்தியாசமான நேர்த்திக்கடன்
நம்மைச் சுற்றி நற்றலைகளும் எதிர்மறை அலைகளும் சந்தர்ப்பத்திற்கு
ஏற்றால் போல் அமைகின்றன ஒரு கோயிலோ கல்யாணமோ அல்ல்து
சத்சங்கமோ வேறு மனதிற்குப் பிடித்தமாதிரி அழகான் இயற்கைக் காட்சிகள்
இருந்தால் அங்கு நற்றலைகளால் உற்சாகம் ஏற்படுகிறது இதுவே ஒரு இழப்பு வீடோ, ஆஸ்பிடலோ வேறு வகுப்புவாதம் சண்டை கொலை இரத்தம் என்று இருந்தால் நம் மனம் மகிழ்ச்சி அடைவதில்லை மனதிற்குள் ஏதோ ஒன்று சொல்லத் தெரியாத ஒன்று எற்படுகிறது இதனால் மனச் சோர்வு
தலைவலி பசியின்மை என்று ஏற்படுகிறது இது வெற்றலைகளால் {negative
vibrations} உண்டாகும் நிலைமை ,
சினிமாவிலோ அல்லது டிவி சீரியல்களிலோ ஒருவர் இறந்துப் போகும் காட்சியைத் தத்ரூபமாகஎடுக்க வேண்டும் என்று நடிகர் அல்லது நடிகை
பிணம் போல் படுத்துக் கொள்ள ,காதிலே பஞ்சு மூக்கிலே பஞ்சு அடைக்கப்பட்டு
கட்டைவிரல்கள் சேர்த்துக் கட்டப்பட :
Reply
Reply to all
Forward
Reply
Reply to all Forward Print Add vishalam to Contacts list Delete this message Show original Message text garbled?
vishalam raman
to முத்தமிழ், illam, piravakam, nambikkai
show details
15 Jun
டெக்னிகல் தவறால் கால் பாகம் தான் வந்திருக்கிறது இது மேலே தொட்ரும்
மன்னிக்கவும் அன்புடன் விசாலம்
- Show quoted text -
On 15/06/2008, vishalam raman <rvishalam@gmail.com> wrote:
நம்மைச் சுற்றி நற்றலைகளும் எதிர்மறை அலைகளும் சந்தர்ப்பத்திற்கு
ஏற்றால் போல் அமைகின்றன ஒரு கோயிலோ கல்யாணமோ அல்ல்து
சத்சங்கமோ வேறு மனதிற்குப் பிடித்தமாதிரி அழகான் இயற்கைக் காட்சிகள்
இருந்தால் அங்கு நற்றலைகளால் உற்சாகம் ஏற்படுகிறது இதுவே ஒரு இழப்பு வீடோ, ஆஸ்பிடலோ வேறு வகுப்புவாதம் சண்டை கொலை இரத்தம் என்று இருந்தால் நம் மனம் மகிழ்ச்சி அடைவதில்லை மனதிற்குள் ஏதோ ஒன்று சொல்லத் தெரியாத ஒன்று எற்படுகிறது இதனால் மனச் சோர்வு
தலைவலி பசியின்மை என்று ஏற்படுகிறது இது வெற்றலைகளால் {negative
vibrations} உண்டாகும் நிலைமை ,
சினிமாவிலோ அல்லது டிவி சீரியல்களிலோ ஒருவர் இறந்துப் போகும் காட்சியைத் தத்ரூபமாகஎடுக்க வேண்டும் என்று நடிகர் அல்லது நடிகை
பிணம் போல் படுத்துக் கொள்ள ,காதிலே பஞ்சு மூக்கிலே பஞ்சு அடைக்கப்பட்டு
கட்டைவிரல்கள் சேர்த்துக் கட்டப்பட நம்மைச்சுற்றி
நற்றைலைகளும் எதிர்மறை அலைகளும் சந்தர்ப்பத்திற்கு
ஏற்றால் போல் அமைகின்றன
ஒரு கோயிலோ கல்யாணமோ அல்ல்து
சத்சங்கமோ வேறு மனதிற்குப் பிடித்தமாதிரி அழகான் இயற்கைக் காட்சிகள்
இருந்தால் அங்கு நற்றலைகளால் உற்சாகம் ஏற்படுகிறது இதுவே ஒரு இழப்பு வீடோ, ஆஸ்பிடலோ வேறு வகுப்புவாதம் சண்டை கொலை இரத்தம் என்று இருந்தால் நம் மனம் மகிழ்ச்சி அடைவதில்லை மனதிற்குள் ஏதோ ஒன்று சொல்லத் தெரியாத ஒன்று எற்படுகிறது இதனால் மனச் சோர்வு
தலைவலி பசியின்மை என்று ஏற்படுகிறது இது வெற்றலைகளால் {negative
vibrations} உண்டாகும் நிலைமை ,
சினிமாவிலோ அல்லது டிவி சீரியல்களிலோ ஒருவர் இறந்துப் போகும் காட்சியைத் தத்ரூபமாகஎடுக்க வேண்டும் என்று நடிகர் அல்லது நடிகை
பிணம் போல் படுத்துக் கொள்ள ,காதிலே பஞ்சு மூக்கிலே பஞ்சு அடைக்கப்பட்டு
கட்டைவிரல்கள் சேர்த்துக் கட்டப்பட அந்தக்காட்சியைப் பார்க்கவே மனது சங்கடமாகிறது ,தவிர கூடி இருக்கும்
உறவினர்கள் மகன் மகள்,என்று எலோரும் அடித்துக்கொண்டு அழ அது மேலும் மனதைப்
பாதிக்கிறது சிலருக்கு இதைப் பார்த்துக் கடந்தக்
கால ஞாபகம் வர வாய்ப்பு இருக்கிறது பாவம் அந்த
நடிக நடிககக்ய்ம் இது போல் படுத்திருப்பது மிக
சிரமம் தான் அவர்கள் இதை நாடகம் தானே என்று
எடுத்துக்கொண்டாலும் அவருக்கே தெரியாமல் அவரைச் சுற்றி எதிர்மறை அலைகல் உண்டாகி அதன் ஆக்கமும் அதனால் வரும் பாதிப்பும் தடுக்க
முடியாதது தான் ,
சில சமயம் சிறு குழந்தைகளை வைத்து ஹாஸ்பிடல் காட்சியோ அல்லது சுடுகாடு சீன் ,
பேய் மந்திர தந்திரம் போன்ற காட்சிகள் தயாரிக்கிறர்ர்கள்,இதனால் குழந்தைக்குப் பணம் நிறையக் கிடைத்தாலும் மனத்தளவு பாதிப்பு நிச்சியம் வரலாம் ,என்று தான் தோன்றுகிறது
ஒரு மனநல ஆஸ்பத்திரியில் ஒரு நர்ஸ் ஒரு காதலரை பக்குவமாகப் பேசி அவர் பைத்தியத்தைச்
சரிசெய்தாள் ஆனால் அவளே முடிவில் மனச்சிதைவு ஆகி அடைப்பட்டாள் காமோஷி என்ற ஹிந்தி படம் ,,,,,,,
சரி இது போகட்டும் உண்மையாகவே ஒரு நேர்த்திக்கடன் இது போல் உள்ளது வலங்கைமான் என்னும் கிராமத்தில் இருக்கும் மாரியம்மனுக்கு புது
மாதிரியான் நேர்த்திக்கடன் ,அதை "பாடைக்காவடி "என்பார்கள் பங்குனித் திருவிழாவில் எட்டாம் நாள் இந்த நேர்த்திக் கடனைச் செய்கிறார்கள்.பல மாதங்கள் நோய்வாய்ப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருபவருக்காக அவரது மகன் இதை
வேண்டிக்கொண்டு அவர் நலம் அடையவேண்டும் என்று பிரார்த்திப்பார் பின் பிணம் போல் படுத்து விடுவார் ஒருவர் இறந்தால் என்னென்ன செய்வார்களோ அத்தனையும் உறவினர் செய்வார்கள் பஞ்சு அடைக்கப்ப்டும் வாய்க்கு அரிசி போடப்படும் நெருப்பு சட்டியும் தூக்கிக் கொள்ள
தாரை தம்பட்டை முழங்க பாடையில் வைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படும் பிணம் போல் படுத்தவர் படுத்தவுடனேயே தன் நினைவை இழப்பார் ,{ந்ல்லவேளை} பின் சுடுகாடு போவதற்குப் பதிலாக மாரியம்மன் கோயிலுக்கு எடுத்து வருவார்கள்.அங்கு கீழே இறக்கி வைத்தவௌடன் பூசாரி விபூதியைத்
தெளிப்பார் அப்போதுதான் தன் நினவு வந்து பிணமாக இருந்தவர் கண்ணைத் திறப்பார் நோயாளியும் பூரணகுணம் அடைந்து விடுகிறார்களாம் ,எல்லாவற்றுக்கும் அஸ்திவாரம் அசைக்க முடியாத நம்பிக்கைதான்
Reply
Reply to all
Forward
Samlyn Josfyn
உணர்வுகள் இரு வகைப்படும். 1. Primary feelings 2. Secondary Feelings அடியுணர்வ...
15 Jun
பட்டாசு சிவா
தெரியலியே. புதுசா எதோ சொல்றீங்க. தொடர்ந்தா நல்லா இருக்கும். கேள்வி கேக்குறதோட...
15 Jun
AKR
அன்பு சகோதரி இருப்பதைக் கொண்டு இன்பமாய் வாழ வழிகாட்டும் ரகசியத்தை மிக எளிதில்...
16 Jun
Reply
Reply to all Forward Print Add Natarajan to Contacts list Delete this message Show original Message text garbled?
Natarajan kalpattu N
to இல்லம்
show details
16 Jun
எதிர்மறை அலைகளின் தாக்கத்தை கட்டுரையின் கால் பகுதியிலேயே காண முடிந்துவிட்டதே!
On Jun 16, 3:17 pm, "AKR" <akrconsulta...@gmail.com> wrote:> அன்பு சகோதரி இருப்பதைக் கொண்டு இன்பமாய் வாழ வழிகாட்டும் ரகசியத்தை மிக எளிதில் சொல்லிவிட்டீர்கள். நாம் காணும் காட்சிகள், கேட்கும் ஓசைகள் மற்றும் எண்ணும் எண்ணங்கள் மனதிற்கு ஏற்புடையனவாய் அமைந்தாலே மன மகிழ்ச்சி ஏற்பட்டு வாழ்க்கையை உற்சாகமாய் வாழ முடியும் எனும் இச்சிறு உண்மையை உணராமல் பலர் அதிலும் குறிப்பாக இல்லத்தரசிகள் தினமும் காலை முதல் இரவு வரை எதிர்மறையான உணர்ச்சிகளைத் தூண்டிவிடக்கூடிய தொலைக்காட்ச்சித் தொடர்களைப் பார்த்து தங்களது மனங்களை மேலும் குழப்பிக்கொண்டு தங்களது சுய பிரச்சினைகளைத் தீர்க்க வழிதேடாமல் உழல்கிறார்கள்.>> சமூகத்தில் ஏற்படும் சீர்கேடுகளையும் தனி நபர்களுக்கு ஏற்படும் சிக்கலான பிரச்சினைகளையும் எடுத்துவைத்து அவற்றைத் தீர்க்கும் மார்க்கத்தைக் காட்டுவதாக அமைந்துள்ள திரைப்படங்களையும் தொலைக்காட்சிகளையும் காண்பவர்கள் இயல்பாகவே மன உறுதி மிக்கவர்களாகவும் பிறரது பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் நோக்கமும் சக்தியும் உடையவராகவும் இருந்தால் பலனுண்டு. இல்லையேல் இவையும் எதிர்மறையான விளைவுகளையே தரும்.>> பாடைக்காவடி போன்ற சடங்குகளை மட்டும் செய்துவிட்டு நோய்க்கு உரிய மருத்துவ உதவியைத் தேடி அளிக்காமல் விடுவது உயிர் இழப்பிலேயே முடியும் என்பதை உணராமல் பகுத்தறிவில்லா மாந்தர் பலர் அல்லலுறுகின்றனர். மந்திரத்தால் மாங்காய் விழாது.>> நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்> வாய்நாடி வாய்ப்பச் செயல்>>>> ----- Original Message -----> From: vishalam raman> To: முத்தமிழ் ; illam@googlegroups.com ; piravakam@googlegroups.com ; nambikkai@googlegroups.com> Sent: Sunday, June 15, 2008 3:11 PM> Subject: [ILLAM, your HOME] Re: vithiyasamana nerthikadan>
- Show quoted text -> On 15/06/2008, vishalam raman <rvisha...@gmail.com> wrote:> நம்மைச் சுற்றி நற்றலைகளும் எதிர்மறை அலைகளும் சந்தர்ப்பத்திற்கு> ஏற்றால் போல் அமைகின்றன ஒரு கோயிலோ கல்யாணமோ அல்ல்து> சத்சங்கமோ வேறு மனதிற்குப் பிடித்தமாதிரி அழகான் இயற்கைக் காட்சிகள்> இருந்தால் அங்கு நற்றலைகளால் உற்சாகம் ஏற்படுகிறது இதுவே ஒரு இழப்பு வீடோ, ஆஸ்பிடலோ வேறு வகுப்புவாதம் சண்டை கொலை இரத்தம் என்று இருந்தால் நம் மனம் மகிழ்ச்சி அடைவதில்லை மனதிற்குள் ஏதோ ஒன்று சொல்லத் தெரியாத ஒன்று எற்படுகிறது இதனால் மனச் சோர்வு> தலைவலி பசியின்மை என்று ஏற்படுகிறது இது வெற்றலைகளால் {negative> vibrations} உண்டாகும் நிலைமை ,> சினிமாவிலோ அல்லது டிவி சீரியல்களிலோ ஒருவர் இறந்துப் போகும் காட்சியைத் தத்ரூபமாகஎடுக்க வேண்டும் என்று நடிகர் அல்லது நடிகை> பிணம் போல் படுத்துக் கொள்ள ,காதிலே பஞ்சு மூக்கிலே பஞ்சு அடைக்கப்பட்டு> கட்டைவிரல்கள் சேர்த்துக் கட்டப்பட அந்தக்காட்சியைப் பார்க்கவே மனது சங்கடமாகிறது ,தவிர கூடி இருக்கும்> உறவினர்கள் மகன் மகள்,என்று எலோரும் அடித்துக்கொண்டு அழ அது மேலும் மனதைப்> பாதிக்கிறது சிலருக்கு இதைப் பார்த்துக் கடந்தக்> கால ஞாபகம் வர வாய்ப்பு இருக்கிறது பாவம் அந்த> நடிக நடிககக்ய்ம் இது போல் படுத்திருப்பது மிக> சிரமம் தான் அவர்கள் இதை நாடகம் தானே என்று> எடுத்துக்கொண்டாலும் அவருக்கே தெரியாமல் அவரைச் சுற்றி எதிர்மறை அலைகல் உண்டாகி அதன் ஆக்கமும் அதனால் வரும் பாதிப்பும் தடுக்க> முடியாதது தான் ,> சில சமயம் சிறு குழந்தைகளை வைத்து ஹாஸ்பிடல் காட்சியோ அல்லது சுடுகாடு சீன் ,> பேய் மந்திர தந்திரம் போன்ற காட்சிகள் தயாரிக்கிறர்ர்கள்,இதனால் குழந்தைக்குப் பணம் நிறையக் கிடைத்தாலும் மனத்தளவு பாதிப்பு நிச்சியம் வரலாம் ,என்று தான் தோன்றுகிறது
> ஒரு மனநல ஆஸ்பத்திரியில் ஒரு நர்ஸ் ஒரு காதலரை பக்குவமாகப் பேசி அவர் பைத்தியத்தைச்> சரிசெய்தாள் ஆனால் அவளே முடிவில் மனச்சிதைவு ஆகி அடைப்பட்டாள் காமோஷி என்ற ஹிந்தி படம் ,,,,,,,> சரி இது போகட்டும் உண்மையாகவே ஒரு நேர்த்திக்கடன் இது போல் உள்ளது வலங்கைமான் என்னும் கிராமத்தில் இருக்கும் மாரியம்மனுக்கு புது> மாதிரியான் நேர்த்திக்கடன் ,அதை "பாடைக்காவடி "என்பார்கள் பங்குனித் திருவிழாவில் எட்டாம் நாள் இந்த நேர்த்திக் கடனைச் செய்கிறார்கள்.பல மாதங்கள் நோய்வாய்ப்பட்டு உயிருக்குப் போராடிக்> கொண்டிருப்பவருக்காக அவரது மகன் இதை> வேண்டிக்கொண்டு அவர் நலம் அடையவேண்டும் என்று பிரார்த்திப்பார் பின் பிணம் போல் படுத்து விடுவார் ஒருவர் இறந்தால் என்னென்ன செய்வார்களோ அத்தனையும் உறவினர் செய்வார்கள் பஞ்சு அடைக்கப்ப்டும் வாய்க்கு அரிசி போடப்படும் நெருப்பு சட்டியும் தூக்கிக் கொள்ள> தாரை தம்பட்டை முழங்க பாடையில் வைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படும் பிணம் போல் படுத்தவர்>
> ...>> read more »- Hide quoted text ->> - Show quoted text -
- Show quoted text ---~--~---------~--~----~------------~-------~--~----~You received this message because you are subscribed to the Google Groups "ILLAM [இல்லம்], your HOME". This group is affiliated to www.azhagi.com, hosting Azhagi [அழகி], the one'stop Tamil software for "all" your Tamil computing needs.To post to this group, send email to illam@googlegroups.comTo unsubscribe from this group, send email to illam-unsubscribe@googlegroups.comFor more options, visit this group at http://groups.google.com/group/illam?hl=en-~----------~----~----~----~------~----~------~--~---
Reply
Forward
Invite Natarajan to chat
Choose Language
Auto
English (US)
English (UK)
Deutsch
Español
Português (Brasil)
Português (Portugal)
Français
Italiano
Nederlands
Polski
Svenska
Norsk (Bokmål)
Suomi
Dansk
Български
Hrvatski
Magyar
Slovenský
Slovenščina
Українська
Tiếng Việt
Ελληνικά
Íslenska
Bahasa Indonesia
Català
Český
Eesti keel
हिन्दी
Lietuvių
Română
Русский
Filipino
Hebrew
Arabic
Bahasa Melayu
Latin
New window
Print all
Expand all
Forward all
Sponsored Links
Jobs in Tamil NaduSelect From Local Jobs That You Will Not Find in Local Newspapers.MonsterIndia.com
South Tamil Nadu PropertySouth In Tamil nadu Property 200000 Tamil nadu Properties ListedTamilnadu.IndiaProperty.com/Search
Jobs in tamil naduSwitch To A Better Job. Submit Your Resume with Shine. Register Now!WinSalary.Shine.com/TamilNadu
50000+ Free WallpapersHuge Animated Selection. 100% Download Free Screensavers Now!ScreenSavers.com
Download Tamil SongsGet Your Favorite Songs & Listen. Create Your Free Account Now!www.Get-Music4Free.com
Jobs in Tamil NaduIndia's Largest Jobs
பௌர்ணமி நிலா
பாப்பாவுக்கு அதன் அம்மா "நிலா நிலா வா வா ,நில்லாமல் ஓடிவா
மலை மேலெ ஏறி வா மல்லிகைப் பூ கொண்டுவா என்று பாடி சாதம்
ஊட்டுகிறாள் காதலர்கள் நிலவை ரசித்து தன்னை மறக்கின்றனர் உலகம் துறந்தவர் அல்லது சன்யாசிகளும் நிலாவின் குளுமையில் வெற்று வெளிச்சத்தில் அமர்ந்து தியானம் செய்கின்றனர் ,முழுநிலாவின் போது அதாவது
பௌர்ணமி அன்றுதான் ஸ்ரீ சத்யநாராயண பூஜையும் மாலை நேரம் நடக்கிறது ,
மஹாகவி பாரதியார் வெண்ணிலவைக் குறித்து கவிதை இயற்றி இருக்கிறார்
"எல்லைக் யில்லாததோர் வானக் கடலிடை
வெண்ணிலாவே! --விழிக்
கின்ப மளிப்பதோர் தீவென் றிலகுவை
வெண்ணிலாவே
ந்ல்ல ஒளியின் வகைபல கண்டிலன்
வெண்ணிலாவே---இந்த
நனவை மறந்திட செய்வது கண்டிலன்
வெண்ணிலாவே !
தீது புரிந்திட வந்திடும் தீயர்க்கும்
வெண்ணிலாவே --நலஞ்
செய்தொளி நல்குவர் மேலவ ராமன்றோ
வெண்ணிலாவே ,,,,
சினிமாவிலும் நிலாவை வைத்து பல பாடல்கள் உள்ளன ,
பழையக் கால பாடல் " அமுதைப் பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ?"
மிகவும் ரசிக்கப்பட்டது இதேபோல் நிலவே என்னிடம் நெருங்காதே " என்ற பாடலும் ஹிட் ஆனது இந்தக்கால படங்களிலும் பல பாடல்கள் நிலாவைக்
குறித்து பாடப் படுகின்றன
சரி நிலா எங்கேயாவது கீழே விழுமா? விழுந்ததே ,,,,, ஒரு பெரிய மரத்தின் கீழ்
குரங்குகள் அடித்த லூட்டியைக் ஒரு கவிதை மூலம் பார்க்கலாம்
என் நிலா உடைந்து போனதே,,,,,
பௌர்ணமி நிலவில்
ஒரு நாள்
ஆலமரத்தின் கீழ்
ஒரு வானரப் பட்டாளம்
தாவித் தாவிக் களித்தன
வம்புச் சண்டை போட்டன
வாலைப் பிடித்து இழுத்தன
முதுகில் சவாரி செய்தன ,
பழங்களைப் பிடுங்கின
கிளைகளை உலுக்கின .
ஒரு குட்டிக்குரங்கு
கிணற்றில் தாவ
கண்டது முழுநிலவைத்தான்
"ஐயோ காபாற்றுங்கள்
நிலா விழுந்து விட்டது நீரில்"
அலறிபுடைத்துக்கொண்டு
வந்தது ஒரு பட்டாளம்
நீரிலிருந்து எடுத்தது நிலாவை
நிலவும் கலைந்து போனது
குட்டிக்குரங்கின் அழுகை
வானத்தை எட்டியது .
"ஐயோ என் நிலா
இப்படி உடைந்து போனதே "!
வ்ந்தது அங்கு வயதான வானரம்
"அட முட்டாள்1
வானத்தைப் பார்
நிலா உடையவில்லை
நிலா மாறவில்லை
நிலா அழியவில்லை
அதோ பார் வெண்நிலா
பவனி வரும் அதன்
அழகைப் பார் "
அன்புடன் அம்மம்மா
சீக்கியர்களின் குரு பக்தி
சீக்கியர்களை எடுத்துக் கொள்ளலாம் சிக்கியர்களிடம் வீரம் அதிகம். தன்
குருவுக்காகவும், நாட்டிற்காகவும் உயிரையும் கொடுத்திருக்கிறார்கள் .
ஒரு சமயம் மொகலாய மன்னன் ஔரங்கசீப் தன் தந்தையையே கொடுமைப்
படுத்திப் பின் எல்லோரையும் இஸ்லாம் மதத்தைத் தழுவ கட்டளை இட்டான்.
அந்தநேரத்தில் சீக்கியர்களுக்கு மத குருவாக இருந்தார் குரு தெஜ்பஹாதூர்.
அவர் தன் மதத்தை விட மறுத்ததால் ஔரங்கசீப்பினால் கொலைச்
செய்யப் பட்டார் .அத்துடன் நில்லாது அந்த உடலுக்கு முறைப்படி இறுதிக்
கடன் ஒன்றும் செய்ய முடியாதபடி அங்கேயே மண்ணில் மக்கி மடிய
வேண்டும் என்று உத்தரவு இட்டுக் காவலும் போட்டுவிட்டான் காவல்
மிகக் கடுமையாக இருந்தது அவரது மகன் ஸ்ரீ குருகோவிந்தசிங் ஒரு
சிறுவனாக இருந்தான்.அவனுக்குத் தன் தந்தையை அந்த மாதிரி நிலையில்
காண இயலவில்லை அவனுக்கு பதினாலு வயதுதான் ஆகி இருந்தது எப்படியாவது தன் தந்தையின் ஈமச்சடங்குகளைச் செய்ய வேண்டும் என்று
திட மனம் கொண்டு பஞ்சாபிலிருந்து தில்லி நோக்கிப் புறப்பட்டார் இங்கு
மக்களுக்கு ஒரே கவலை அந்த்க் குரூர மஹராஜா ஔரங்கசிப் என்ன வேண்டுமானாலும் செய்துவிடுவானே என்று கவலையுடன்
ஏங்கினர் .ஆனாலும் குரு கோவிந்த சிங் நினைத்த்தை முடிக்கக் கூடியவர் ,
அவரை எப்படி தடுத்து நிறுத்துவது ?ஒருவருக்கும் தைரியம் வரவில்லை
இதையெல்லாம் ஒரு சீக்கிய குதிரை வண்டிக்காரன் கேள்விப்பட்டு தன் மகனுடன் அங்கு வந்தான் அ வர்கள் இருவரும் குரு கோவிந்த சிங்கைக் கண்டனர் அந்தச் சடலத்தைக் கொண்டு வரும் காரியத்தை அவர்கள் இருவரும் செய்து முடிப்பதாகவும் இவரைத் தலைமறைவாய்
இருக்கும்படியும் மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர் குருஜியும் ஒப்புத்துக்கொண்டார் வண்டிக்காரனும் சீக்கியன் அல்லவா ?அவன் உடலிலும் வீர ரத்தம் அல்லவா ஓடுகிறது .
பின் வண்டிக்காரன் தன் மகனுடன் தில்லி வந்தான் , மிகவும் சிரமப்பட்டு
மாறுவேஷ்ம் தரித்து எப்படியோ சடலத்தைக் கண்டுப் ப
ிடித்து விட்டனர் அதை எப்படி வண்டியில் எடுத்து வருவது?யோசித்தனர் ,,,,,,,,
காவலர்கள் நன்கு குடித்து விட்டு மயங்கி இருந்த நிலையில் இருந்தனர்
அந்தச் சடல்த்தின் துற்நற்றம் அதிகமானதால் மக்கள் அந்த வழியாகப் போகாமல் இருந்தனர் தவறி வந்தவர் கூட முகத்தை
மூடிக்கொண்டு சென்றனர் அப்போது தந்தை சொன்னான் , "மகனே நம் இருவருள் ஒருவர் உயிரைவிட்டு இங்கு குரு தெஜ்பஹாதூர் போல் படுக்க
வேண்டும் அப்போது தான் சந்தேகம் வராது பழைய உடலை அப்புறப்படுத்தி அந்த இடத்தில் வேறு உட்லை வைக்க வேண்டும் .என் மகனே நீயோ இளைஞன் . உடல் வலிமையுடன் செயல் படமுடியும் நானோ கிழவனாகி
விட்டேன் ஆகவே குருதேவரின் உடலை நீ எடுத்துச்செல நான் இங்கு
இறந்து விடுகிறேன் " என்றான்
மகனின் பதில் வருவதற்கு முன்னாலேயே தன் வாளினால் தன்னை
மாய்த்துக் கொண்டான் மகன் தந்தையை அந்த இடத்தில் வைத்து
போர்த்தி அந்த தெஜ்பஹாதூரின் உடலை தன்வண்டியில் வைத்து
வேகமாக ஓட்டிக் கொண்டு குரு கோவிந்தசிங்கிடம் கொடுத்தான்
தான் சபதம் இட்டப்டியே குரு கோவிந்த சிங்ஜி தன் தந்தையின் அந்திம கிரியைகளைச் செய்தார் ,
இந்தக் கதையில் குரு பக்தி தேச பக்தி பித்ரு பக்தி என்று பல காணலாம்
தவிர சிறுவனாக இருந்தாலும் பயம் இல்லாமல் வீரத்துடன் செய்யும்
திறன் நமக்குப் புலப்படுகிறது
அன்புடன் அம்ம்மமா
ஏலாதி
ஏலம்+ ஆதி ,,அதாவது ஏலக்காயுடன் இலவங்கம் சிறுநாவற்பூ, சுக்கு ,மிளகு,
திப்பிலி என்ற ஆறும் சேர்ந்த ஒரு மருந்து இவைகளில் சிலவற்றை நாம்
மசாலா பொருள்களாக உபயோகிக்கிறோம் ,இந்த ஆறும் சேர்ந்த மருந்து உடல் பிணியை அகற்றுகிறது உடலைப் புத்துணர்ச்சிப் பெற செய்கிறது அது போல்
ஏலாதி செய்யுளில் ஆறு அருமையான கருத்துக்கள் அமைக்கப்பெற்றுள்ளன,இது மனநோயாகிய அறியாமைக்கு சிறந்த மருந்தாகிறது ,நம் அறியாமையைப்
போக்குகிறது ஆகவே இந்நூல் "ஏலாதி" என்ற பெயருடன் விளங்குகிறது இந்நூல்
82 செய்யுட்களைக் கொண்டது இது பதினென்கீழ்க் கணக்கில் ஒன்றாக
வருகிறது இதை இயற்றியவர் திரு கணிமேதாவியர், இவர் "கணிமேதை "
என்ற தொடரும் எழுதியிருக்கிறார் சோதிடத்திலும் வல்லவர் , இவர் சமய
சமணத்தைச் சார்ந்தவர் ,"திணை மாலை நூற்றைம்பது "என்னும் நூலையும்
இயற்றியுள்ளார் இவர் திரு மாக்காயனாரின் மாணாக்கர் ,,
இவர் இயற்றிய ஒரு செய்யுள்
சாதல் பொருள்கொடுத்தல் இன்சொல்புணர்வுவத்தல்,
நோதல் பிரிவில் கவறலே -- ஓதலின்
அன்புடையார்க்{கு] உள்ளன ஆறு குணமாக
மென்புடடயார் வைத்தார் விரித்து .
இதில் இவர் சொல்கிறார் ,நண்பர் இறந்தால் தாமும் அவருடன் இறத்தல்
அவர்களுக்கு வறுமை வரும் போது பொருள் கொடுத்து உதவி செய்தல்,
துன்பம் வந்த போது இனிய சொற்களைப் பேசுதல் நணபர்களுடன்
கலந்து பேசி அவர்கள் துன்பத்திலும் பங்குக் கொள்ளுதல் பிரிந்தக் காலத்தில்
உள்ளம் கலங்குதல் ,,,,,,,,இந்த ஆறு குணங்களையும் நண்பர்களை உயிருக்குயிராய் நேசிப்பவர்கள் பெற்றிருக்கவேண்டும் ,,,இவைகள்
பெற்ற நண்பர்கள் மென்மையான் சான்றோர்கள் ,,,,,
இவைகளில் எல்லாவற்றையும் நான் ஏற்றுக்கொள்கிறான் ஆனால்முதலாக்ச்
சொல்லிய சாதல் அதாவது நண்பர் இறந்தவுடன் தானும் இறத்தல் என்பது
எந்த அளவு சரி என்று தெரியவில்லை அந்த நண்பனின் குடும்பத்தைக்
காப்பாற்றலாமே ,இதற்கு வேறு அர்த்தம் உள்ளதா என்றும் தெரியவில்லை நான் சாதல் என்பதற்குக் கொண்ட பொருள் சரிதானா
என்றும் தெரியவில்லை
இன்றும் தனிச் சிறப்புடன் விளங்கி வருகிறது .திணைவகை இலக்கியம் நீதி இலக்கியம் பக்தி இலக்கியம் என்று
பல சொல்லலாம் சோழர் காலத்தில் காப்பிய இலக்கியம் மிகச்சிறப்பும் செல்வாக்கும் பெற்றது
சிற்றிலக்கியத்தில் ஆற்றுப்படை பிள்ளைத் தமிழ் , பரணி பள்ளு கலம்பகம்
என்று பல உயிர்ப் பெற்றன தமிழில் சுமார் ஒரு நூறு சிற்றிலக்கியங்கள் இருக்கலாம் என்று தோன்றுகிறது
திணைவகை இலக்கியத்தில் அகத்திணை புறத்திணை என இரண்டு ,,,,
நீதி இலக்கியத்தில் திருக்குறள் நல்வழி ,நீதிநெறிவிளக்கம் போன்றவை
பக்தி இலக்கியம் ,,தேவாரம் திருவாசகம் திவயப்பிரபந்தம் போன்றவை
அந்தாதி ,,அபிராமி அந்தாதி
காப்பியம் ,,,,,,,.. சீவக சிந்தாமணி சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி
குண்டலகேசி
ஆற்றுப்படை சிறுபாணாற்றுப்படை திருமுருகாற்றுப்படை ,,,
சிற்றிலக்கியங்களில் பதிகம் என்பது ஒருவரைக் குறித்து பத்துச் செய்யுள்
பாடுவது ,சதகம் என்பது நூறு செய்யுள் கொண்டது அந்தாதி என்பது அந்தத்தையே திரும்ப ஆதியாகக்கொண்டு புனைவது ஒரு செயுயுளின்
இறுதி எழுத்தோ அல்லது சொல்லோ அடியோ சீரோ அடுத்து வரும் அடியில் முதலாக வந்து செய்யுள் தொடரும்
.இதிலேயே நூறு வெண்பாக்கள் பாடுவது அந்தாதி இலக்கியம்.
இதுப்போல் பேயாழ்வார் .பொய்கையாழ்வார் ,
பூதத்தாழ்வார் பாடி இருக்கின்றனர் .
ஒரு அரசன் அல்லது தலைவன் ,இறைவன் வீதியில் உலா வரும் போது
அவனைப் பார்த்து மனம் பறிக்கொடுத்து காதல் கொள்வர் சிலப்பெண்கள்.
அவன் சென்றப்பின் அவனையே நினைத்து ஏக்கத்துடன் வேதனையுடன் அமைக்கும் செய்யுள் "உலாபிரபந்தம் "இதில் எல்லா வயது பெண்மணிகளும்
உணர்ச்சிகளைக் கொட்டி உலா செய்யுள் பாடுவார்களாம் சில நாட்டியப் பதங்களிலும் இது போல் நாயகனைப் பார்க்கத்
துடிக்கும் நாயகி காதல்ரசம் கொண்டு பாடியப் பாட்டுக்கள்
பல உண்டு .வடநாட்டில் இருக்கும் ராஸலீலா
கீதகோவிந்தம் போல பாடலகள் இது போல் உள்ளன ,முதல் உலா இலக்கியம் பாடியவர் சேரமான் பெருமாள் நாயனார் ,அவர் எழுதிய நூலின் பெயர் "ஞான உலா " உலாவில் வந்தத்தலைவர் சிவபெருமான் . அதன் பின் ஒட்டக்கூத்தர் பாடிய மூவருலா மிகவும் சிறப்புப் பெற்றது
சாக்லேட் கசந்தது
என்ற பாட்டைப் போல் ஏதாவது காதல் கதையா ?இல்லை இல்லை ,எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம் தான்
முதல் தடவையாக நான் பாரிஸ் சுவிட்சர்லாந்த் போயிருந்தேன் சில மாதங்கள் அங்குத் தங்கியப் பின் திரும்பி இந்தியா வரும்
நேரம் நெருங்கியது. நான் என் பள்ளி ஆசிரியர்களுக்கு
சாக்கலேட் டப்பாக்கள் வாங்கிக் கொடுக்க முடிவு செய்தேன். பின் என் மகன் என்னை ஒரு பெரிய கடையில் இறக்கி விட்டு "நீ செலக்க்ட் செய்து வை நான் சில வெளி காரியங்களை
முடித்துவிட்டு வருகிறேன் " என்று சொல்லி விட்டுப் போனான் நான் பார்க்க அழகாக பெரிய
விதவிதமான சாக்கலேட் பாக்கட்டுக்கள் எடுத்துக் கொண்டேன் மேலே எல்லாம் பிரஞ்சு மொழியில் எழுதப்பட்டிருந்தது ,மிகச் சந்தோஷமாக வாங்கி விட்டேன் ,பின் தில்லி வந்தாயிற்று ,ஆசையுடன் வாங்கிய சில டப்பாக்களை சிலருக்குக் கொடுத்தேன் ,அவர்களும்
நன்றி தெரிவித்து எடுத்துக் கொண்டார்கள்
நான் வீட்டிற்கு வந்து ஆசை ஆசையாக ஒரு பெரிய சாக்கலெட் எடுத்து அதன் அழகான மேல்
மூடி இருந்தப் பேபரை பொறுமையாக எடுத்தேன் வாயில் போட்டுக் கொண்டேன் முதல் சில நிமிடங்களில் தித்திப்பாக வெனிலா வாசனையுடன் ஆரம்பித்து பின் இலேசாக கசக்க ஆரம்பித்தது பின் ஒருவிதமான ஸ்பிரிட் நாற்றம் ,,அப்படியே வயிறு குமட்டிக்கொண்டு வர
லஞ்சில் சாப்பிட்டதும் சேர்ந்துக் கொண்டு வெளியே வந்தது ,ஐயோ இது என்ன்? food poison
ஆகி விட்டதோ ,foreign பொருட்கள் அப்படி ஆகி இருக்க முடியாதே என்று பரபரப்புடன் என் மகனுக்கு போன் செய்தேன் "ராஜா எனக்கு என்னவோ செய்கிறது சாக்கலேட் ஆசையுடன்
சாப்பிட்டேன் ,இது எதனால் ?
"அம்மா கவலைபடாதே அந்தச் சாகலேட்க்குள் விஸ்கி, ரம் வோட்கா போன்றவை
உள்ளே இருந்திருக்கலாம் ,நீ பார்த்து வாங்கலையா ?
"இல்லை ராஜா பிரான்ஸ் மொழியில் எழுதப்பட்டிருந்தது அதன் அழகும் பேக் செய்த விதமும் என்னைக் கவர்ந்தது அதனால் வாங்கி விட்டேன் '
"எல்லாம் சரியாகிவிடும் ,இஞ்சி அல்லது எலுமிசம்பழம் ஜூஸ் குடித்து விடு "
மறுநாள் பள்ளிக்குப் போனேன் சில ஆசிரியர்கள் என்னிடம் ஓடி வந்து "ரொம்ப தேங்ஸ்
மேடம் மறக்க முடியாத சாக்கலேட் எங்கள் வாழ்க்கையில் இது போல் இதுவரையிலும்
சாப்பிட்டதே இல்லை"என்று நன்றி தெரிவித்தார்கள் ஒரு சிலர் "இன்னும் இருந்தால் கொடுக்க முடியுமா?என்று கேட்டனர் ,ஒரே பொருள் ஒருவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது
ஒருவருக்கு வாந்தியே வருகிறது ,இது போல் தான் வாழ்க்கையிலும் ஒருவருக்குப்
பிடித்தது மற்றவருக்கு பிடிக்க வேண்டும் என்பதில்லை ,விட்டுக்கொடுக்கும் பண்பு இருந்தால் இதை எளிதாகச் சமாளிக்கலாம் என்று என் மனதில் படுகிறது
இந்தச் சாக்கலேட் என்னை headmistress தலைமை ஆசிரியை ஆக ஆக்கிவிட்டது ,எல்லோரும் அந்தப்போஸ்டுக்கு
என்னையே தேர்ந்தெடுத்தார்கள் எல்லாம் எனக்குத் தெரியாமலே சாக்கலேட் செய்த மாயம்
அன்புடன் விசாலம்