அன்பு குழந்தைகளே வினாயக சதுர்த்தியின் போது உங்கள் அப்பா பிள்ளையாருக்குப்
பூஜை செய்வதைப் பார்த்திருப்பீர்கள் ,பூக்களுடன் எல்லா விதமான இலைகளும் போட்டு அர்ச்சனைச் செய்வார் வேறு பூஜையின் போது சேர்க்காத எருக்கன் இலை நொச்சி இலை
இந்தப்பூஜையில் சேர்ப்பார்கள் இது எதனால் என்று பார்ப்போமா?
ஒரு நாள் ஒரு மனிதன் தன் கிராமத்திற்குப் போகக் கிளம்பினான் அப்போது இருண்டு மழை
வரும் போல் இருந்தது ஆகையால் குறுக்கு வழிப்பாதையால் போனால் வெகு சீக்கரம் போய் விடலாம் என்று ஒரு காட்டு வழிப் பாதையில் நுழைந்தான் பாதிதூரம் சென்றிருப்பான்
அப்போது தான் ஒரு புலியைக் கண்டான் அத்னிடமிருந்து தப்பிக்க தலைத்தெரிக்க ஓடினான்
புலி அவனைத் துரத்த ஆரம்பித்தது உடனே அங்கு ஒரு மரம் இருந்தது அதன் கீழே ஒரு பெரிய பிள்ளையார் அமர்ந்திருந்தார் இந்த மனிதன் உயிர் தப்ப பிள்ளையார் சிலை மேல்
கால் வைத்து ஏறி மரத்தின் மேல் பதுங்கிக் கொண்டான் புலியும் சிறிது நேரம் பார்த்து
விட்டுச்சென்று விட்டது இரவைக்கழிக்க அவன் அங்கேயே இருந்தான் ஆனால் கணபதியின்
மேல் கால் வைத்து ஏறியதற்கு மிகவும் வருந்தினான் அன்று சதுர்த்தி தினம் அவன் மேலே
இருந்த இலைகளையும் அருகில் படர்ந்திருந்த எருக்கம் செடியின் இலைகளும் அதன் காய் பூக்கள் என்று பிய்த்துப் பிள்ளையார் மேல் அர்ச்சனைச் செய்வது போல் கணபதியின்
நாமாக்கள் சொல்லி கீழே போட்டுக்கொண்டிருந்தான் அவனது பூஜா பலன் புலி
அவனைக் கொல்லாமல் போய்விட்டது பின் வினாயகர் அவன் முன் தோன்றி இன்றையதினம் அதாவது சதுர்த்தியில் இந்த ஒதுக்கப்பட்ட இலைகளை எனக்கு சம்ர்ப்பித்து
பூஜை செய்தால் நான் அதை ஏற்றுக்கொண்டு பலன் கொடுப்பேன் என்று அருள் வழங்கினார் இதனால் தான் பலவித இலைகளினால் அர்ச்சனைச் செய்கிறோம்
பிள்ளையார் எப்படிக் கூப்பிட்டாலும் வந்து விடுவார் மஞ்சளைப் பிடித்து வைக்கலாம் சந்தனம்
சர்க்கரை பசுஞ்சாணம் என்று எல்லாவற்றையும் கூர்மையாகப் பிடித்து வைத்தாலே அவர்
ஆஜராகி விடுகிறார் எத்தனை விதம் கணபதி ! கருங்கல் சலவைக்கல் பளிங்குக்கல் வெள்ளை ,எருக்கு வேர் ,பஞ்சலோகம் வெள்ளி தங்கம் ,தந்தம் முத்து ,பவழம் மண்
சிப்பி என்று பலவித கணபதி உண்டு மும்பயில் தேங்காயிலே பிள்ளையார் செய்கிறார்கள்
நீங்களும் மண்ணில் பிள்ளையார் செய்து பூஜைக்கு உங்கள் அப்பாவுக்குத் தாருங்கள்
செய்வது மிக எளிது செய்துப்பாருங்கள்
அன்புடன் அம்மம்மா
Thursday, October 2, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment