Thursday, October 2, 2008

காந்தி மகான்

காந்தி நீ எங்கு இருக்கிறாய்?
ஓடி வந்து நாட்டைக் காப்பாய் ,
நீயே இந்நாட்டை வாழ வைத்தாய்
இன்று பலரால் நாடு வீழ்கிறதே !
நீயோ கடும்போர் வழி இகழ்ந்தாய் .
ஆனால் இன்றும் எங்கும் போர் நிகழ்கிறதே
அஹிம்சை என்ற ஆயுதம் பிடித்தாய் .
இன்றோ இம்சை ஆயுதம் இயங்குகிறதே !
எங்கும் அன்பென துடுப்பு போட்டாய்
ஆனால் இன்றும் வெறுப்பு ஓங்குகிறதே
எல்லா இதயத்திலும் கடவுளைக் கண்டாய் !
இன்றோ மக்களின் உள்ளம் மாசு படிகிறதே
பாழ்ப்பட்ட பாரதத்தை உயர்த்தி நிறுத்தினாய்
இன்றோ பாரதம் பண்பில் தாழ்கிறதே
கைராட்டினமே உன் மூச்சாக இருந்தாய் .
இன்று ராட்டினமே தெரியாமல் போனதே
சத்தியம் தருமச்சோதனையில் வென்றாய் .
இன்று சத்தியம் என்ற சொல்லே மறந்து போனதே
சாதிக்கொடுமையை நீ அன்றே எதிர்த்தாய் .
இன்றும் சாதி சண்டை நிற்கிறதே !
ஒரு சிறு வேஷ்டி துண்டில் நீ வாழ்ந்தாய்
இன்று போலி கௌரவம் வாழ்கிறதே
நான்கு திசையிலும் சுதந்திர நாதம் முழக்கினாய்
இன்று நாலு திசையிலும் லஞ்சம் முழங்குகிறதே !
நற்குணம் கொண்ட கல்வியே மேனமை என்றாய்
இன்றோ கல்வி வெறும் ஏட்டுப்படிப்பானதே
காந்தி நீ ஏன் மறைந்தாய் ?
திரும்பி வந்து நாட்டைக் காப்பாய் ,,

No comments: