அக்டோபர் இரண்டு உலக அஹிமசை தினம் ,இந்த ஒரு நாளாவது குண்டு வெடிப்பு கொலை
அராஜகம் போர் இல்லாமல் இருக்க வேண்டும் தீவிரவாதிகள் இந்த ஒரு தினமாவது
மகாத்மா காந்திஜிக்கு மரியாதைச் செலுத்தும் வகையில் த்ங்க்ள் வால்களைச் சுருட்டி
வைத்துக் கொள்ள வேண்டும் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளட்டும் ,,,இன்றைய தினமாவது
ஸ்ரீலங்காவில் பயமில்லாமல் நிம்மதியுடன் மக்கள் நடமாடட்டும் இந்த அஹிம்சை தினம் தொடர்ந்து இருக்க பிராத்தனை செய்வோம்
ஜூன் 15ம் தேதி 2007 ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் முக்கிய அங்கத்தினர் ஜெனரல் செகரட்ரி
காந்திஜியின் கொள்கையான அஹிம்சை அன்பு ,,,,,இந்த இரண்டிற்காக உலக அஹிம்சா தினம் கொண்டாடும் எண்ணத்தை வெளியிட்டவுடன் அதை எல்லோரும் ஆதரித்தனர் சுதந்திரத்திற்காகப் பாடுப்பட்ட காந்திஜி மனித உரிமைகளையும் இந்தியாவிலும் தென் ஆப்பிரிக்காவிலும் எடுத்துரைக்க அது எல்லா இடங்களிலும் பரவி நன்மையே செய்தது அதனால் அவரது பிறந்த அக்டோபர் இரண்டாம் தேதியை முக்கிய நாளாக உலகம் முழுவதும்
கொண்டாட முயற்சி செய்து அது அங்கீகரிக்கப்பட்டது 192 அங்கதினர்களுடன் திரு ஆனந்த சர்மா {minster of external affairs } இதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்க பின் மஹாத்மாவின் வேதாந்தம் பற்றியும் விவரிக்கப்பட்டது
பின் சஞ்சய் தத்தின் "லகே ரஹோ முன்னாபாய்" என்ற காந்தீயம் கொண்ட சினிமா காட்டப்பட்டது
"உற்றுநோய் நோன்றலுயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு . "
இந்த வள்ளுவர் வாசகம் படி தமக்கு வரும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதல் தாம் பிறர் உயிர்களுக்கு துன்பம் தராதிருத்தல் போன்றத் தவத்தினைக் கடைபிட்த்தார் காந்திஜி
நாம் பிறர் உடலுக்கு துன்புறுத்துவது மட்டும் ஹிம்சை என்று கொள்ளாமல் பிறர் மனம்
புண்படுமாறு நடந்து கொண்டாலும் அது ஹிம்சைதான் என்று கொள்ள வேண்டும்
இந்த நன்நாளில் சூளுரைப்போம்
" நான் எப்போதும் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துனபம் தரமாட்டேன் துன்பம் படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்வேன் "
இது திரு வேதாத்ரி மஹரிஷி சொன்ன வாக்கு
வாழ்க உலக அஹிம்சா தினம்
அன்புடன் விசாலம்
Thursday, October 2, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment