Thursday, October 2, 2008

இவரும் ஒரு காந்தியே

ரயில் வண்டி ஓடி நடுவே மஹ்பூப்நகரில் விபத்துக்குள்ளானது மனது ஒடிந்துப்போனார் அந்த
ரயில்வே மந்திரி உடனே வேலையிலிருந்து நீங்கிக்கொள்ள கடிதம் கொடுத்தார் ஆனால் நேருஜி அவரை விடவில்லை ஆகையால் தொடர்ந்தார். ஆனால் இதே போல் அரியலூரில் திரும்பவும் ஒரு விபத்து ஏற்பட உடனே தன் பொறுப்பை உணர்ந்து தன் பதவியிலிருந்து நீங்கிக் கொண்டார் அத்துடன் அவர் குடியிருந்த பெரிய அரசைச்சேர்ந்த வீட்டையும் விட்டு விட்டார் . அவருக்கு அப்போது வேறு வீடு கூட இல்லை அவர் சேர்த்திருந்தால் மாளிகைக்
கூட கட்டி இருக்கலாம் ஆனால் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காமல் நேர்மை சத்தியம்
எளிமை என்று வாழ்ந்தவர் இப்போது தெரிந்திருக்கும் அவர் யார் என்று ,,,,,அவர்தான் திரு லால்பஹாதுர் சாஸ்த்ரி அவர் ரயில் மந்திரியாக இருந்த போது தான் ரயிலில் இரண்டே வகுப்புக்கள் கொண்டு வந்தார் இரண்டாம் வகுப்புக்கும் முதல் வகுப்புக்கு இருந்த எல்லா சௌகரியங்க்ளையும் கொடுத்தார் மூன்றாம் வகுப்புக்கு அப்போது காற்று வசதியும் இல்லை இவர் அதில்{ fan }காற்றாடி வசதிகளைச்செய்து கொடுத்தார் சிறுவயதிலிருந்தே அவர்
தந்தையை இழந்து விட்டார் தன் தாத்தா வீட்டில் வளர்ந்தார் பின் வாரணாசியில் தன் மாமாவின் வீட்டில் வளர்ந்தார் ஒருவரது பாசமும் கிடைக்காமல் இருந்தாலும் தன் தாயின் வழியில் நல்ல பண்புகளைப் பெற்றார் காந்தீஜியின் நட்புகிடைத்தது 1915 ல் அவருடைய
பேச்சைக் கேட்டார் அதிலிருந்து நம்ம் நட்டிற்கு ஏதாவது செய்து சுதந்திரப்போரில் பங்கு பெற ஆசைக் கொண்டார் வகுப்பு வாதத்தை ஒழிக்கப் பாடு பட்டார் தன் பெயரில் இருந்த
சாதிப் பெயரை போடாமல் விட்டார் பலதடவைகள் ஜெயிலுக்குப் போனார்
இவர் பின்னால் தன்னுடைய உழைப்பாலும் நற்பண்புகளலும் ராஜ்யசபா அங்கத்தினர் ஆகி பின் நேரு மறைவுக்குப் பிறகு பிரதம மந்திரியும் ஆனார் அப்போதும் அவரது உடை மிக எளிமையாகத்தான் இருந்தது எங்கு சென்றாலும் கூடியவரை ரயிலிலேயே செல்வார் காந்திஜியின் சத்தியம் அஹிம்சை ,எளிமை , நாட்டுப்பற்று, தெய்வ பக்தி ,,புன்னகை
எல்லோரிடமும் கனிவான பேச்சு என்று எல்லாமே இவரிடமே இருந்தது பின்
தாஷ்கெந்தில் இவர் இந்தியா பாக்க்கிஸ்தான் போரின் உடன்படிக்கை செய்யச் சென்ற போது
மார்புவலியால் உயிர் இழந்தார் இவருக்கும் இறந்தப்பின பாரதரத்னா பட்டம் கொடுக்கப்பட்டது இவரது பிறந்த நாளும் அக்டோபர் இரண்டு தான் காந்திஜியை நினைவு கொள்ளும் நாம் ஸ்ரீ லால்பஹாதுர் சாஸ்திரியையும் நினைத்துப்பார்த்து அவர் வழி
செல்ல முயற்சி செய்யலாமே
இதே போல் திரு காம்ராஜரின் நினவு நாளும் இதே தினம்தான் அவரும் காந்திஜியின் வழிதான் பின் பற்றினார் அவரையும் பணிவுடன் வணங்குகிறேன்

No comments: