பகுள பஞ்சமி அன்று ஸ்ரீ தியாகபிரம்மம் ,சித்தி அடைந்தார் ,
ஸ்ரீ தியாக ராஜ ஸ்வாமிகளை வால்மீகி முனிவரின் அவதாரம் என்கின்றனர் ஸ்ரீவால்மீகியும் இராமாயணத்தில் 24000 ஸ்லோகங்களைப் படைத்துள்ளார் ஸ்ரீ தியாகராஜரும் 2400 கீர்த்தனைகள் இயற்றி பாடி இருக்கிறார் இதில் இராமயணம் கதை
முழுவதும் வந்து விடுகின்றன ,,,எல்லாம் நவரத்த்னங்கள் போல் ஜுவலிக்கின்றன
1845 தமிழ் புத்தாண்டில் அவர் மனனவி காலமானார் ஒருவருடம் கழித்து அவர் கனவில்
ஸ்ரீராமசந்திர மூர்த்தி தோன்றினார் அதாவது 22-12-1846ல் ,.......அவர் தன் பக்தனை
ஆசையுடன் அழைத்து"தியாகராசா,,, இன்னும் பத்து மாதங்களில் நீ இறந்து விடுவாய்
உனக்கு இன்னொரு ஜன்மம் உண்டு என்றார் ,,அப்பப்பா,, எனக்கு இன்னொரு ஜன்மமா? வேண்டாம் ராமா என்று கதறி முகாரியில் "க்ஷீணமை திருக "என்ற பாட்டைப் பாடினார் அத்துடன் "மோக்ஷமு கலதா புவிலோ,ஸாதிஞ்சனே ஒ மனஸா " என்று ஒன்பது மாதமும் இடைவிடாமல் பாட திரும ராமர் வந்து "இன்னும் பத்து நாட்களில் , உனக்கு முக்தி கிடைத்துவிடும் நீ என்னிடம் வந்துவிடுவாய் நீ சன்யாசம் வாங்கிக் கொள் ' என்றார்
. இதைக்கேட்டு அவர் ஒரு பாட்டு பாடினார் அது சஹானா ராகத்தில் அமைந்தது ஒரு கீர்த்தனை "கிரிபை....நெல" என்று ஆரம்பிக்கும்,,5 1-1847 ல் சன்யாசம் வாங்கிக்
கொண்டார் புஷ்ய பகுள பஞ்சமி அன்று சித்தி அடைந்தார் அவரிடமிருந்து
வந்த ஒளி உடலிலிருந்து ஆகாய மார்க்கமாக அத்புத ஜோதியாக போனதை ச்கல
மக்களும் தரிசித்தனராம் அவரது உடல் சீடர்களால் அவரது குரு திருவெங்கடரமணய்யர் சமாதி அருகே தகனம் செய்யப்பட்டது அவருக்கு எண்ணற்ற
சீடர்கள் உண்டு உம்,, உமையாள்புரம் கிருஷ்ணபாகவதர் திருசுந்தர பாகவதர்
வீணை குப்பய்யர்,,,,, தஞ்சாவூர் ராமராம் ,,,,ஸ்ரீதியாகராஜர் நௌகாசரித்தரம் கனராக
பஞ்சரத்னம்,, நாரத பஞ்சரத்னம் திருவொற்றியூர் பஞ்சரத்னம் கோவூர்பஞ்சரத்னம்
ஸ்ரீரங்க பஞ்சரத்னம் லால்குடி ப்ஞ்சரத்னம் பிரஹ்லாத பக்தவிஜயம் முதலியவைகள்
இயற்றி பாடி இருக்கிறார்
1802ல் முதன் முதலாக குருவின் முன் பல வித்வான்கன்கள் அமர்ந்து "தொரகுனா இடிவண்டி சேவா" என்றபாடல் மேடை ஏறியது தற்போது இவர் பாடல்கள் இல்லாத
கச்சேரியே இல்லை ,
ஸ்ரீதியாகராஜர் இசையைப் பற்றி பாடிய ஒருபாடல் ,
ராகஸுதா ரஸ பானமு ஜேஸிரஞ்சில்லவே ஓ மனஸா,,,
ராகமென்னும் சுவையுள்ள பானத்தை அருந்தி மகிழ்வாய் மனமே ,,,
அ.ப்ல்லவி
யாக யோக தியாகபோக பல மொஸங்கே
யாகங்களாலும் யோகங்களாலும் தியாகங்களாலும்கிடைக்கும் ஆனந்தத்தை
அளிக்க வல்லது இசை ஏனெனில் இவ்வுலகம் தோன்ற காரணமானது தூய ஒலி ...
சரணம் ,,ஸததசிவ மயம்கு நாதோங்காரஸ்வர
விதுலு ஜீவன முக்துலனி தியாகராஜ தெலிய
நித்ய சைத்தன்யமான சதாசிவமான் ஓம் என்ற ஒலியிலும் நாதங்களிலும்
தன்னை மறந்து திளைப்பவர்கள் ஜீவன்முக்தர்கள் ஆவார் என்று நான் அறிவேன் ,,,,,,,
எத்தனை அழகான பாடல் ..கீதையிலும் ஜீவன்முக்தர்களைப் பற்றிச
சொல்லப்பட்டிருக்கிறது .இவர்களுக்கு சுகம் துக்கம் எல்லாம் ஒன்றுதான் உடலில் நோய
வந்தால் அதனால் இவருக்கு ஒரு துன்பமும் இல்லை அதைக்கண்டுக்கொள்ள
மாட்டார்கள்,,,,
பகுளபஞ்சமி அன்று இன்றும் திருவையாறில் தியாகராஜர் சன்னிதானத்தில் எல்லா வித்வான்களும்
அவர் இயற்றிய பஞ்சரத்ன கீர்த்த்னைகள் பாடுவார்கள்,கூடவே
அபிஷேகம் பூஜையும் நடக்கும்,,கேட்டு மகிழுங்கள்
அன்புடன் விசாலம்
.
Sunday, April 6, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment