மகர சங்கரந்தியில் ஆதவன்
ஒளியுடன் பவனி வருகிறான்
அவனில்லாமல் உலகில்லை,
ஒருச்செடியில்லை ,கொடியில்லை
தைப்பிறந்தால் வழிப் பிறக்கும்
பொங்கல் திருநாள் மிகச் சிறக்கும்,
பொங்கலோ பொங்கல் என்றச் சத்தம்
மகிழ்ச்சியில் மலரும் நம் சித்தம் ,
விவசாயிகள் மகிழும் இத் திருநாள்
ஆதவனுக்கு நன்றிச் சொல்லும் நாள்
உழுவும் காளைகளுக்கும் பூசை
வீர "ஜல்லிக்கட்டில் ஆசை ,
காணும் பொங்கலில் உறவினர் கூட்டம் ,
பாசமும் அன்பும் பெருக்கும் வட்டம்
பொங்கல் வாழ்த்துத் தந்து மகிழ்வோம்
ஏழையின் வாழ்வில் ஏற்றம் தருவோம்
அன்புடன் விசாலம்
பொங்கல் நல் வாழ்த்துக்கள்
Sunday, April 6, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment