Sunday, April 6, 2008

பகற்கனவு

உன்னைக் கண்டவுடன்
பல இன்பக் கவிதைகள்
ஊற்றாகப் பிறக்கிறது
நீ பின்னல் அசைய நடக்கும் நடையோ
அனைத்தையும் கிறங்க வைக்கிறது
காய்கறிகளுடன் உன் ஊர்வலம்
தெருவையே அசர வைக்கிறது
அடிக்கடி கூந்தலைக் கோதும் அழகோ
என்னையே மறக்க வைக்கிறது
கன்னம் குழிய ஒரு புன்னகை
முத்தம் இட விழைகிறது
மன்மதனின் அழைப்பும்
என் காதில் வந்து விழுகிறது
அவன் எய்த மலர் அம்புகளால்
உன்னைத் தழுவத் தோன்றுகிறது
மயக்கும் இளமை கவர்ந்து
உடலும் புல்லரிக்கிறது
"என்னவளே " என்று சொல்லிவிட்டேன்
அதை உண்மை ஆக்கிவிடு
நெற்றி வகிட்டில் குங்குமம் இட்டேன்
என் உடலிலும் அது தெரிய
எங்கும் மங்கலம் நிறையட்டும்
""பீம் பீம்" என்ற சத்தம் அருகில் அலர
வண்டி ஓட்டுனர் என்னைத்திட்ட
அவள் மறைந்துப் போய்விட்டாள்

No comments: