Wednesday, August 20, 2008

என் தோழியின் ஷஷ்டிப்தபூர்த்திக்கு என்னை அழைத்திருந்தாள் அந்த வைபவம் நடக்கும் இடம் திருக்கடையூர் என்றும் குறிப்பிட்டிருந்ததால் கண்டிப்பாக போய் அந்தக் கோயிலின் சிறப்பை நேரில் காண வேண்டும் என்று
தீர்மானித்தேன் ,பலர் தன் அறுபது வயதில் சாந்தி அல்லது பரிகாரம் செய்துக்
கொள்வது வழக்கம் ,அதுதான் சஷ்டிஅப்தபூர்த்தி ,,,70 வயதில் செய்துக் கொள்வது பீமரத சாந்தி என்றும் 80 வயதில் சதாபிஷேகம் என்றும் பின் 100 வயதில் கனகாபிஷேகம் என்றும் சொல்கின்றனர் ,இந்த மகிழ்ச்சிகரமான நாளை அவர்கள்
பிள்ளைகள் பேரன்கள் நடத்தி மகிழ்கின்றனர். பேரன் கொள்ளுபேரன் பேத்தி
என்று மூன்று தலைமுறையும் ஒருமிக்க சேர்ந்து கொண்டாடும் இந்தத் திருநாள்
நடப்பது ஒரு கண்கொளாக் காட்சிதான் ,

இதைத் திருக்கடையூரில் செய்துக் கொள்வது ஒரு தனி சிறப்புத்தான் ஏன் என்றால் அங்குதான் ஸ்ரீ மார்க்கண்டேயர்"என்றும் பதினாறு " என்ற சிரஞ்சீவி வரம் சிவனிடமிருந்துப் பெற்றார் .நான் அங்குப் போனது ஒரு சிறந்த
அனுபவம் தான் ,,அங்கு பலதரப்பட்ட தம்பதிகளைக் கண்டேன் .சுமார் பத்து
திருமணங்கள் ஒரே சமயத்தில் அங்கு நடக்கின்றன ,ஒவ்வொரு குழுவும்
தனித்தனி இடங்களைப் பெறுகின்றனர் கோயில் மிகப் பெரியதாக இருப்பதால்
இது போல் செய்ய முடிகிறது இதில் ரேட்டுக்குத் த்குந்தாற்போல் இடமும்
நேரமும் மந்திரங்களும் சொல்லப்படுகின்றன ,சிலவு ஐம்பதிலிருந்து ஆரம்பித்து சுமார் 50000 க்கு மேல் கூடப் போகிறது ,சமீபத்தில் முன்னாள்
முக்கிய மந்திரி சௌ ஜயலலிதா அவர்களும் அங்குப் போய் சாந்தி
செய்துக் கொண்டார் யானையும் பரிசாகக் கொடுத்தார்கள் ,,,
இப்போது நான் அன்று பார்த்த வயதான கலயாண தமபதிகளைப் பற்றியும்
சொல்லப் போகிறேன் ,ஒரு தமபதியுடன் ஒரு கூட்டமே நுழைந்தது ,எழுபது
வயது மாப்பிள்ளை மாலையும் கழுத்துமாக உள்ளே நடக்க அவர் வேகத்திற்கு
ஈடு கொடுக்க முடியாமல் அவர் மனனவி முணுமுணுத்தபடி பல அடிகள் பின்னே நடக்க அவர்களது பிள்ளைகள் அவர்களது மனைவிகளுடன் ஜோடிப் போட்டுக்கொண்டு தன் அப்பாவுக்கு நாம் இந்தக்கலயாணத்தை நடத்துகிறோம் என்ற பெருமிதத்துடன் நடக்க இப்படி ஒரு காட்சி ,,,,,,

இன்னொரு மாப்பிள்ளை தலையில் அழகாக சரிகைத் தலைப்பாகையுடன்
நெற்றியில் நாமத்துடன் காட்சித் தந்தார் அவரது மாலையோ அத்தனைப் பாரம்.அவரது மனைவியின் கழுத்து சும்மா தங்கத்தாலேயே இழைக்கப்படிருந்தன அத்தனை நகைகள் .அவரது கழுத்தே தெரியவில்லை .
நல்ல பசையான குடும்பம் எனத் தெரிந்தது .அவரது குடும்பத்தில் பலர்
வெளிநாடுகளிலிருந்து வந்திருந்தனர் அவர்கள் தமிழர்கள்: ஆனாலும் அவர்களது உடை கோயிலுக்கு மிகவும் பொருத்தமில்லாததாக இருந்தது .
வயதான மாப்பிள்ளை பெண்ணின் மனம் நிறைந்திருந்தது அவரது பேத்திகள்
கொள்ளுப்பேத்திகள் அவர்களைச்ச் சுற்றி கொஞ்சம் ஆங்கிலம் கொஞ்சம் தடுமாறி தமிழ் பேசினர் அவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதை அவர்களது பெற்றோர்கள் பெருமையாகப் பார்த்து ரசித்தது எனக்கு ஒரு மதிரி இருந்தது ,

மூன்றாவது காட்சியில் நுழைந்த தம்பதிகள் சேர்ந்து மாலையும் கழுத்துமாகப்
போனார்கள் ஆனால் அவர்களைச் சுற்றி ஒருவரும் இல்லை கொஞ்சம்
தூரத்தில் அவர்களது மகன் மகள் குழந்தைகளுடன் வந்துக் கொண்டிருந்தனர்
ஒரு பிடிப்பில்லாதக் குடும்பம் போல் தென்பட்டது அந்த மாமி தன் மருமகளைப்
பற்றி பொரிந்து தள்ளினார் '
"சாதிவிட்டு சாதியில் கல்யாணம் செஞ்சிண்டு இதெல்லாம் யார் செய்யணும்,,னு
அழுதா,,வந்துட்டான் பெரிசா பஞ்சாபிக்காரியைக் கூட்டிண்டு "
"சும்மா இரேண்டி இங்கேயும் ஆரம்பிச்சுட்ட்யே ,,ஆசையா நம்ம அம்மா
அப்பாவுக்கு சஷ்டிப்தபூர்த்தி செஞ்சு பாக்கணும்னு எல்லாம் அரேஞ்சு செய்திருக்கான் அவனைப் போயி ,,,,,,"

அந்தப்பஞ்சாபி மருமகளுக்கு ஒன்றும் புரியவில்லை எதோ தன்னைத்
திட்டுகிறார் என்று மட்டும் புரிந்தது மொழி பிரச்சனை ,,,,அன்பு மொழி இருந்தால்
எதையும் சாதித்து விடலாமே ,,,,,

சிற்றிலக்கியங்கள்


இலக்கியங்கள் பண்டைக்காலத்திலிருந்தே பல தோன்றி நமக்கு பொக்கிஷமாக
இன்றும் தனிச் சிறப்புடன் விளங்கி வருகிறது திணைவகை இலக்கியம் நீதி இலக்கியம் பக்தி இலக்கியம் என்று பல
சொல்லலாம். சோழர் காலத்தில் காப்பிய இலக்கியம் மிகச்சிறப்பும் செல்வாக்கும் பெற்றது
சிற்றிலக்கியத்தில் ஆற்றுப்படை பிள்ளைத் தமிழ் , பரணி பள்ளு கலம்பகம்
என்று பல உயிர்ப் பெற்றன தமிழில் சுமார் ஒரு நூறு சிற்றிலக்கியங்கள் இருக்கலாம் என்று தோன்றுகிறது

திணைவகை இலக்கியத்தில் அகத்திணை புறத்திணை என இரண்டு ,,,,
நீதி இலக்கியத்தில் திருக்குறள் நல்வழி ,நீதிநெறிவிளக்கம் போன்றவை
பக்தி இலக்கியம் ,,தேவாரம் திருவாசகம் திவயப்பிரபந்தம் போன்றவை
அந்தாதி ,,அபிராமி அந்தாதி
காப்பியம் ,,,,,,,.. சீவக சிந்தாமணி சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி
குண்டலகேசி

ஆற்றுப்படை சிறுபாணாற்றுப்படை திருமுருகாற்றுப்படை ,,,

சிற்றிலக்கியங்களில் பதிகம் என்பது ஒருவரைக் குறித்து பத்துச் செய்யுள்
பாடுவது ,சதகம் என்பது நூறு செய்யுள் கொண்டது அந்தாதி என்பது அந்தத்தையே திரும்ப ஆதியாகக்கொண்டு புனைவது ஒரு செயுயுளின்
இறுதி எழுத்தோ அல்லது சொல்லோ அடியோ சீரோ அடுத்து வரும் அடியில்
முதலாக வந்து செய்யுள் தொடரும் .இதிலேயே நூறு வெண்பாக்கள் பாடுவது
அந்தாதி இலக்கியம் இதுப்போல் பேயாழ்வார் .பொய்கையாழ்வார் ,
பூதத்தாழ்வார் பாடி இருக்கின்றனர் .

ஒரு அரசன் அல்லது தலைவன் ,இறைவன் வீதியில் உலா வரும் போது
அவனைப் பார்த்து மனம் பறிக்கொடுத்து காதல் கொள்வர் சிலப்பெண்கள்.
அவன் சென்றப்பின் அவனையே நினைத்து ஏக்கத்துடன் வேதனையுடன் அமைக்கும் செய்யுள் "உலாபிரபந்தம் "இதில் எல்லா வயது பெண்மணிகளும்
உணர்ச்சிகளைக் கொட்டி உலா செய்யுள் பாடுவார்களாம் சில நாட்டிய
பதங்களிலும் இதுப்போல் நாயகனைப் பார்க்கத் துடிக்கும் நாயகி காதல்ரசம்
கொண்டு பாடிய பாட்டுக்கள் பல உண்டு வடநாட்டில் இருக்கும் ராஸலீலா
கீதகோவிந்தம் போல பாடலகள் இது போல் உள்ளன ,முதல் உலா இலக்கியம் பாடியவர் சேரமான் பெருமாள் நாயனார் ,அவர் எழுதிய நூலின் பெயர் "ஞான உலா " உலாவில் வந்தத்தலைவர் சிவபெருமான் . அதன் பின் ஒட்டக்கூத்தர் பாடிய மூவருலா மிகவும் சிறப்புப் பெற்றது

ஏலாதி

அற இலக்கியத்தில் "ஏலாதி"மிகச் சிறப்பு உடையது , "ஏலாதி" என்றால்
ஏலம்+ ஆதி ,,அதாவது ஏலக்காயுடன் இலவங்கம் சிறுநாவற்பூ, சுக்கு ,மிளகு,
திப்பிலி என்ற ஆறும் சேர்ந்த ஒரு மருந்து இவைகளில் சிலவற்றை நாம்
மசாலா பொருள்களாக உபயோகிக்கிறோம் ,இந்த ஆறும் சேர்ந்த மருந்து உடல் பிணியை அகற்றுகிறது உடலைப் புத்துணர்ச்சிப் பெற செய்கிறது அது போல்
ஏலாதி செய்யுளில் ஆறு அருமையான கருத்துக்கள் அமைக்கப்பெற்றுள்ளன,இது மனநோயாகிய அறியாமைக்கு சிறந்த மருந்தாகிறது ,நம் அறியாமையைப்
போக்குகிறது ஆகவே இந்நூ "ஏலாதி" என்ற பெயருடன் விளங்குகிறது இந்நூல்
82 செய்யுட்களைக் கொண்டது இது பதினென்கீழ்க் கணக்கில் ஒன்றாக
வருகிறது இதை இயற்றியவர் திரு கணிமேதாவியர், இவர் "கணிமேதை "
என்ற தொடரும் எழுதியிருக்கிறார் சோதிடத்திலும் வல்லவர் , இவர் சமய
சமணத்தைச் சார்ந்தவர் ,"திணை மாலை நூற்றைம்பது "என்னும் நூலையும்
இயற்றியுள்ளார் இவர் திரு மாக்காயனாரின் மாணாக்கர் ,,
இவர் இயற்றிய ஒரு செய்யுள்

சாதல் பொருள்கொடுத்தல் இன்சொல்புணர்வுவத்தல்,
நோதல் பிரிவில் கவறலே -- ஓதலின்
அன்புடையார்க்{கு] உள்ளன ஆறு குணமாக
மென்புடடயார் வைத்தார் விரித்து .


இதில் இவர் சொல்கிறார் ,நண்பர் இறந்தால் தாமும் அவருடன் இறத்தல்
அவர்களுக்கு வறுமை வரும் போது பொருள் கொடுத்து உதவி செய்தல்,
துன்பம் வந்த போது இனிய சொற்களைப் பேசுதல் நணபர்களுடன்
கலந்து பேசி அவர்கள் துன்பத்திலும் பங்குக் கொள்ளுதல் பிரிந்தக் காலத்தில்
உள்ளம் கலங்குதல் ,,,,,,,,இந்த ஆறு குணங்களையும் நண்பர்களை உயிருக்குயிராய் நேசிப்பவர்கள் பெற்றிருக்கவேண்டும் ,,,இவைகள்
பெற்ற நண்பர்கள் மென்மையான் சான்றோர்கள் ,,,,,

இவைகளில் எல்லாவற்றையும் நான் ஏற்றுக்கொள்கிறான் ஆனால்முதலாக்ச்
சொல்லிய சாதல் அதாவது நண்பர் இறந்தவுடன் தானும் இறத்தல் என்பது
எந்த அளவு சரி என்று தெரியவில்லை அந்த நண்பனின் குடும்பத்தைக்
காப்பாற்றலாமே ,இதற்கு வேறு அர்த்தம் உள்ளதா என்றும் தெரியவில்லை நான் சாதல் என்பதற்குக் கொண்ட பொருள் சரிதானா என்றும் தெரியவில்லை.

கசப்பு சாக்லேட்

சாக்கலேட் கசந்தது ,,இது என்ன ? "பாலும் கசந்ததடி சகியே படுக்கையும் நொந்தத்டி"
என்ற பாட்டைப் போல் ஏதாவது காதல் கதையா ?இல்லை இல்லை ,எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம் தான்
முதல் தடவையாக நான் பாரிஸ் சுவிட்சர்லாந்த் போயிருந்தேன் சில மாதங்கள் அங்குத்
தங்கியப் பின் திரும்பி இந்தியா வரும் நேரம் நெருங்கியது நான் என் பள்ளி ஆசிரியர்களுக்கு
சாக்கலேட் டப்பாக்கள் வாங்கிக் கொடுக்க முடிவு செய்தேன் பின் என் மகன் என்னை ஒரு பெரிய கடையில் இறக்கி விட்டு "நீ செலக்க்ட் செய்து வை நான் சில வெளி காரியங்களை
முடித்துவிட்டு வருகிறேன் " என்று சொல்லி விட்டுப் போனான் நான் பார்க்க அழகாக பெரிய
விதவிதமான சாக்கலேட் பாக்கட்டுக்கள் எடுத்துக் கொண்டேன் மேலே எல்லாம் பிரஞ்சு மொழியில் எழுதப்பட்டிருந்தது ,மிகச் சந்தோஷமாக வாங்கி விட்டேன் ,பின் தில்லி வந்தாயிற்று ,ஆசையுடன் வாங்கிய சில டப்பாக்களை சிலருக்குக் கொடுத்தேன் ,அவர்களும்
நன்றி தெரிவித்து எடுத்துக் கொண்டார்கள்
நான் வீட்டிற்கு வந்து ஆசை ஆசையாக ஒரு பெரிய சாக்கலெட் எடுத்து அதன் அழகான மேல்
மூடி இருந்தப் பேபரை பொறுமையாக எடுத்தேன் வாயில் போட்டுக் கொண்டேன் முதல் சில நிமிடங்களில் தித்திப்பாக வெனிலா வாசனையுடன் ஆரம்பித்து பின் இலேசாக கசக்க ஆரம்பித்தது பின் ஒருவிதமான ஸ்பிரிட் நாற்றம் ,,அப்படியே வயிறு குமட்டிக்கொண்டு வர
லஞ்சில் சாப்பிட்டதும் சேர்ந்துக் கொண்டு வெளியே வந்தது ,ஐயோ இது என்ன்? food poison
ஆகி விட்டதோ ,foreign பொருட்கள் அப்படி ஆகி இருக்க முடியாதே என்று பரபரப்புடன் என் மகனுக்கு போன் செய்தேன் "ராஜா எனக்கு என்னவோ செய்கிறது சாக்கலேட் ஆசையுடன்
சாப்பிட்டேன் ,இது எதனால் ?
"அம்மா கவலைபடாதே அந்தச் சாகலேட்க்குள் விஸ்கி, ரம் வோட்கா போன்றவை
உள்ளே இருந்திருக்கலாம் ,நீ பார்த்து வாங்கலையா ?
"இல்லை ராஜா பிரான்ஸ் மொழியில் எழுதப்பட்டிருந்தது அதன் அழகும் பேக் செய்த விதமும் என்னைக் கவர்ந்தது அதனால் வாங்கி விட்டேன் '
"எல்லாம் சரியாகிவிடும் ,இஞ்சி அல்லது எலுமிசம்பழம் ஜூஸ் குடித்து விடு "

மறுநாள் பள்ளிக்குப் போனேன் சில ஆசிரியர்கள் என்னிடம் ஓடி வந்து "ரொம்ப தேங்ஸ்
மேடம் மறக்க முடியாத சாக்கலேட் எங்கள் வாழ்க்கையில் இது போல் இதுவரையிலும்
சாப்பிட்டதே இல்லை"என்று நன்றி தெரிவித்தார்கள் ஒரு சிலர் "இன்னும் இருந்தால் கொடுக்க முடியுமா?என்று கேட்டனர் ,ஒரே பொருள் ஒருவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது
ஒருவருக்கு வாந்தியே வருகிறது ,இது போல் தான் வாழ்க்கையிலும் ஒருவருக்குப்
பிடித்தது மற்றவருக்கு பிடிக்க வேண்டும் என்பதில்லை ,விட்டுக்கொடுக்கும் பண்பு இருந்தால் இதை எளிதாகச் சமாளிக்கலாம் என்று என் மனதில் படுகிறது
இந்தச் சாக்கலேட் என்னை headmistress ஆக ஆக்கிவிட்டது ,எல்லோரும் அந்தப்போஸ்டுக்கு
என்னையே தேர்ந்தெடுத்தார்கள் எல்லாம் எனக்குத் தெரியாமலே

அந்தக் கசப்பு சாக்லேட் வாழ்க

இதுவா சுதந்திரம்?

கண்ணீர் விட்டு வளர்த்த செடி,
தழைத்து வளர்ந்து மரமானது,
பலரின் உயிர் தியாகமானது,
காந்தியின் அஹிம்சை பலனானது,
சுதந்திரத்தை அடைந்துவிட்டோம் ,
அடிமைத்தளையிலிருந்து விடுபட்டோம்,


இப்போது இருப்பது சுத்ந்திரமா?
இது பெயர்தான் சுதந்திரமா?
சுதந்திரத்தின் தப்பான உபயோகமா?
அளவுக்கு மிஞ்சின சுதந்திரமா?

தன்னடக்கம் சுதந்திரம்
நாட்டுத்தொண்டு சுதந்திரம்,
தேசப்பற்று சுதந்திரம்
ஏமாற்றாத பிழைப்பு சுதந்திரம்
நாட்டில் இவைகள் எங்கே போயின?
உண்மை அன்பு எங்கே மறைந்தன?
பழைய கண்ணியம் எங்கே?
அந்தக் கட்டுப்பாடு எங்கே?


வயதான கிழவர்,
கால் தேய நடக்கிறார்.
பென்சன் தொகைக்காக
அவர் காகிதம் வைத்த இடத்தில்,
மேலே நகர லஞ்சப்பணம் இல்லை,

சீட்டுக்கம்பெனியில் ஏமாற்றம்,
ஏழைகள் வயிற்றில் பெரிய அடி
நல்ல மதிப்பு பெற்ற இளைஞனுக்கு
லஞ்சம் கொடுக்க பணமில்லை,
கல்லூரியில் இடமில்லை,

நாற்பது மார்க் எடுத்தவன் ,
டாக்டர் பட்டம் பெறுகிறான்
சுதந்திரத்தியாகிகள் குடிசையிலே,
கிடைத்த பதக்கத்தின் திருப்தியிலே,
சுத்ந்திரப்போரின் நினவினால்
வயிற்றின் பசியை நினப்பதில்லை

மேல் நாட்டு மோகம் நாட்டினிலே,
உடைக் குறைவு முன்னேற்றம் பெண்களிலே,
சுயநலத்திற்குத் தலைவர்கள்,
பொது நலத்தை மறந்தார்கள்,
கீழ்படியிலிருந்து மேல்வரை
ஊழல் லஞ்சம் பரவி இருக்க,
தைரியம் இல்லை தட்டிக் கேட்க,

பெற்றோர்கள் முதியோர் இல்லத்திலே.
அவர்களின் மக்கள் மேலை நாட்டினிலே
சுத்ந்திரம் இதுவா பாரினிலே
எல்லாம் போலி தேசத்தினிலே,

மனம் வெம்பிப் போகிறேன்,
தன்னலமற்றத் தியாகிகளைத் தேடுகிறேன்,
சுத்ந்திரத்தின் உண்மைப் பொருளை,
இனி யார்தான் புரிய வைப்பாரோ?

ஆடி மாதச் சிறப்பு {நிலாச்சாரலில் பிரசுரமானது}

ஆடி மாதம் தான் தக்ஷிணாயணத்தின் தொடக்கம். இது ஒரு புண்யகாலமாகக் கருதப்படுகிறது. பண்டிகைகள் பல நம்மைப் பரவசப்படுத்தும் மாதம் இந்த ஆடிமாதம். ஆடி மாதம் என்றாலே மல்லிகை மணமும் கூடவே வரும். அம்மன் கோயில்களில் பூக்களால் அலங்கார பூஷிணியாக அமர்ந்திருப்பாள்.இந்த மாதத்தில் தான் சதுர்மாஸ்ய விரதம் தொடங்குகிறது. அதாவது சன்யாசி போன்ற பெரியவர்கள் ஒரு இடத்தில் அமர்ந்து பூஜை புனஸ்காரங்களைத் தொடருவர். இந்தக் காலத்தில்தான் பல ஊர்வன வகையைச் சேர்ந்த ஜீவராசிகள் மழை வெள்ளத்தைத் தாங்க முடியாமல் தங்கள் இருப்பிடத்திலிருந்து வெளிவரும். அப்போது நடந்தால் அவைகள் மிதிபட்டு, துன்பப்பட்டு இறக்க நேரிடும் என்பதால் சன்யாசிகள், சாதுக்கள் ஒரு இடத்தில் போய் அமர்ந்து நாலு மாதங்கள் அங்கேயே தங்கி இருப்பர். வியாசபூஜையும் நடக்கும். இது ஆடி பெளர்ணமியில் குரு பூர்ணிமா என்ற பெயரில் நடக்கும். மஹாராஷ்ட்ராவில் தத்தாத்ரேயருக்கும் சிறப்பு பூஜை உண்டு. தவிர ஸ்ரீமஹாவிஷ்ணு சயனக்கோலத்தில் இருந்துகொண்டு நம்மைக் காக்கிறார். இந்த மாதம் வரும் ஏகாதசி மிக விசேஷமானது, சயன ஏகாதசி என்றும் ஷாட ஏகாதசி என்றும் கூறுவார்கள். ஆடி மாதம் வரும் ஏகாதசியை மஹராஷ்ட்ரத்தில் ஆஷாட ஏகாதசி என்று மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். காவடி போல் தோளில் இருபக்கமும் பால் அல்லது தயிர் எடுத்துக்கொண்டு பண்டரிபுரம் சென்று பகவான் விட்டலைத் தரிசனம் செய்து விட்டு வருவார்கள். பண்டரிபுரம் வரை பொடி நடைதான். நடு நடுவே செல்வந்தர்கள் அவர்களுக்கு உணவுப் பந்தல் ஏற்பாடு செய்திருப்பார்கள். சிறுவர்களும் இதில் கூட்டம் கூட்டமாகப் போவார்கள். அவர்கள் வாயில் 'பாண்டுரங்க விட்டலா பண்டரிநாத விட்டலா' என்றும் 'விட்டல் விட்டல் ஜய ஜய விட்டல்' என்றும் விடாமல் நாமஜபம் வந்து கொண்டிருக்கும். விஷ்ணு கோயிலில் இந்த நேரம் தக்ஷிணாயண வாயிலைத் திறப்பார்கள். இது தெற்குப் பக்கம் இருக்கும். இது போல் உத்தராயண வாசலும் உண்டு, அதாவது அது வடக்குப் பக்க வாசல்.இந்த மாதத்திலேதான் ஜீவ நதிகளுக்கு பூஜை செய்யப்படுகிறது. இதை ஜலப்பிரவாஹப்பூஜை என்று சொல்கிறார்கள். காவேரி அம்மனுக்கு மசக்கை என்று ஆடி பதினெட்டாம் பெருக்கைக் கொண்டாடுகிறார்கள். காலையில் காவிரி நதி தீரம் சென்று குளித்து, அம்மன் பூஜை செய்து பின் எல்லா சித்திரான்னங்களையும் படைப்பார்கள். எலுமிச்சைசாதம், புளியஞ்சாதம், தயிர் சாதம், வற்றல் வடகங்கள் என்று கொண்டு போய் அங்கு ஆற்று மணலின் அருகே அமர்ந்து குடும்பத்தினர் அனைவரும் உண்டு மகிழ்வார்கள்.பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு ஆடி அமாவாசை மிகச் சிறந்த நாள். ஆடி பதினெட்டாம் பெருக்கு அன்று உழவர்கள் நிலத்தில் விதைகள் விதைப்பார்கள். ஆடி மாதம் மாரியம்மனுக்கு மிகவும்விசேஷம் பொருந்திய நாள். ஆடி செவ்வாய் அன்றும் ஆடி வெள்ளி அன்றும் சிலர் ஞாயிறன்றும் அம்மனுக்குக் கூழ் ஊற்றுவார்கள். கிராமங்களில் எல்லை தேவதைகளுக்கும் இந்த உபசாரங்கள் நடக்கும். மஞ்சள், வேப்பிலை, குங்குமம் முக்கியப் பங்கு வகிக்கும். வைணவர்களுக்கு ஆடிப்பூரம் மிகவும் முக்கியமான நாள். அன்றுதான் ஆண்டாள் பிறந்த தினம். வரலட்சுமிவிரதமும் சில சமயம் ஆடியில் வந்து விடும். அன்னை காமாட்சியும் சிவனை நோக்கித் தவம் இருந்து பின் ஈசனை அடைந்த மாதம் இந்த ஆடி மாதம் தான். ஆடி மாதம் சிலர் தேவியை வாராஹியாக வழிபடுவர். இவள் நமக்கு தைரியத்தை வழங்கி சத்ருவை அடக்குகிறாள்.பொன்னி அம்மன், பச்சை அம்மன், திரெளபதி அம்மன், பொம்மி, காத்தாயி, மதுரைவீரன், முனீஸ்வரன் என்ற தெய்வங்களையும் இந்த மாதம் கரகம், காவடி, தெருக்கூத்து போன்றவைகளுடன் வழிபடுகிறார்கள்.திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் ஆடி தபசு விழா நடக்கிறது. அதாவது கோமதி அம்மன் தவம் இருக்க, புன்னைவனத்தில் சிவன் சங்கரநாராயணராக அவருக்கு் பெளர்ணமி அன்று காட்சி அளித்தார்.தவிர சுதந்திரதினமும் இந்த மாதத்தில் தான் அநேகமாக வருகிறது. அத்துடன் அன்னையைப் பராசக்தியாகக் கண்ட, கண்ணனையும் தரிசனம் செய்த ஸ்ரீஅரவிந்தர் அவர்களின் பிறந்த தினமும், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின் பிறந்த தினமும் ஆகஸ்ட் 15ல் வருகிறது. , ஷீரடியில் ஷீரடி பாபா உத்சவமும் பிரமாதமாக நடக்கும். இத்தனை உயர்வுகளைக் கொண்ட ஆடி மாதத்தைக் கண்டாலே உள்ளம் குளிர்ந்து போகிறது

வாழ்க்கை ஒரு சர்கஸ்

வாழ்கையே ஒரு ஸர்கஸ்,
சிலர் மேலே ஏற
சிலர் கீழே இறங்க
பலர் குட்டிகரணம் அடிக்க
காட்சிகள் தொடறுகிறது
ஒரு சிலருக்கு
மிருகங்களுடன் சிநேகம்
ஒரு சிலருக்கு கோமாளி வேஷம்
வெளியில் சிரிப்பு
எல்லாமே நடிப்பு
வாழ்வது போலி வாழ்க்கை
சூழ்ந்திருப்பது நம்மை செயற்கை
சிலருக்கோ ஊஞ்சல் போல் ஆடடம்
சிலரோ மனம் ஒன்றி நாட்டம்
சிலரோ நெருப்புடன் களிப்பு
வரும் உள்ளூரத் தவிப்பு
சிலர் தொடுவார் உச்சி ஏணி
செய்து முடிப்பார் கடமையைப்பேணி
அவரவர் வேஷம் கலைய
முடிந்து போகும் வாழ்க்கை சர்கஸ்

Tuesday, August 12, 2008

ஆடிமாதச்சிறப்பு

வைணவர்களுக்கு ஆடிப்பூரம் மிகவும் முக்கியமான நாள். அன்றுதான் ஆண்டாள் பிறந்த தினம். வரலட்சுமிவிரதமும் சில சமயம் ஆடியில் வந்து விடும்.ஆடி மாதம் தான் தக்ஷிணாயணத்தின் தொடக்கம். இது ஒரு புண்யகாலமாகக் கருதப்படுகிறது. பண்டிகைகள் பல நம்மைப் பரவசப்படுத்தும் மாதம் இந்த ஆடிமாதம். ஆடி மாதம் என்றாலே மல்லிகை மணமும் கூடவே வரும். அம்மன் கோயில்களில் பூக்களால் அலங்கார பூஷிணியாக அமர்ந்திருப்பாள்.இந்த மாதத்தில் தான் சதுர்மாஸ்ய விரதம் தொடங்குகிறது. அதாவது சன்யாசி போன்ற பெரியவர்கள் ஒரு இடத்தில் அமர்ந்து பூஜை புனஸ்காரங்களைத் தொடருவர். இந்தக் காலத்தில்தான் பல ஊர்வன வகையைச் சேர்ந்த ஜீவராசிகள் மழை வெள்ளத்தைத் தாங்க முடியாமல் தங்கள் இருப்பிடத்திலிருந்து வெளிவரும். அப்போது நடந்தால் அவைகள் மிதிபட்டு, துன்பப்பட்டு இறக்க நேரிடும் என்பதால் சன்யாசிகள், சாதுக்கள் ஒரு இடத்தில் போய் அமர்ந்து நாலு மாதங்கள் அங்கேயே தங்கி இருப்பர். வியாசபூஜையும் நடக்கும். இது ஆடி பெளர்ணமியில் குரு பூர்ணிமா என்ற பெயரில் நடக்கும். மஹாராஷ்ட்ராவில் தத்தாத்ரேயருக்கும் சிறப்பு பூஜை உண்டு. தவிர ஸ்ரீமஹாவிஷ்ணு சயனக்கோலத்தில் இருந்துகொண்டு நம்மைக் காக்கிறார். இந்த மாதம் வரும் ஏகாதசி மிக விசேஷமானது, சயன ஏகாதசி என்றும் ஷாட ஏகாதசி என்றும் கூறுவார்கள். ஆடி மாதம் வரும் ஏகாதசியை மஹராஷ்ட்ரத்தில் ஆஷாட ஏகாதசி என்று மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். காவடி போல் தோளில் இருபக்கமும் பால் அல்லது தயிர் எடுத்துக்கொண்டு பண்டரிபுரம் சென்று பகவான் விட்டலைத் தரிசனம் செய்து விட்டு வருவார்கள். பண்டரிபுரம் வரை பொடி நடைதான். நடு நடுவே செல்வந்தர்கள் அவர்களுக்கு உணவுப் பந்தல் ஏற்பாடு செய்திருப்பார்கள். சிறுவர்களும் இதில் கூட்டம் கூட்டமாகப் போவார்கள். அவர்கள் வாயில் 'பாண்டுரங்க விட்டலா பண்டரிநாத விட்டலா' என்றும் 'விட்டல் விட்டல் ஜய ஜய விட்டல்' என்றும் விடாமல் நாமஜபம் வந்து கொண்டிருக்கும். விஷ்ணு கோயிலில் இந்த நேரம் தக்ஷிணாயண வாயிலைத் திறப்பார்கள். இது தெற்குப் பக்கம் இருக்கும். இது போல் உத்தராயண வாசலும் உண்டு, அதாவது அது வடக்குப் பக்க வாசல்.இந்த மாதத்திலேதான் ஜீவ நதிகளுக்கு பூஜை செய்யப்படுகிறது. இதை ஜலப்பிரவாஹப்பூஜை என்று சொல்கிறார்கள். காவேரி அம்மனுக்கு மசக்கை என்று ஆடி பதினெட்டாம் பெருக்கைக் கொண்டாடுகிறார்கள். காலையில் காவிரி நதி தீரம் சென்று குளித்து, அம்மன் பூஜை செய்து பின் எல்லா சித்திரான்னங்களையும் படைப்பார்கள். எலுமிச்சைசாதம், புளியஞ்சாதம், தயிர் சாதம், வற்றல் வடகங்கள் என்று கொண்டு போய் அங்கு ஆற்று மணலின் அருகே அமர்ந்து குடும்பத்தினர் அனைவரும் உண்டு மகிழ்வார்கள்.பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு ஆடி அமாவாசை மிகச் சிறந்த நாள். ஆடி பதினெட்டாம் பெருக்கு அன்று உழவர்கள் நிலத்தில் விதைகள் விதைப்பார்கள். ஆடி மாதம் மாரியம்மனுக்கு மிகவும்விசேஷம் பொருந்திய நாள். ஆடி செவ்வாய் அன்றும் ஆடி வெள்ளி அன்றும் சிலர் ஞாயிறன்றும் அம்மனுக்குக் கூழ் ஊற்றுவார்கள். கிராமங்களில் எல்லை தேவதைகளுக்கும் இந்த உபசாரங்கள் நடக்கும். மஞ்சள், வேப்பிலை, குங்குமம் முக்கியப் பங்கு வகிக்கும். வைணவர்களுக்கு ஆடிப்பூரம் மிகவும் முக்கியமான நாள். அன்றுதான் ஆண்டாள் பிறந்த தினம். வரலட்சுமிவிரதமும் சில சமயம் ஆடியில் வந்து விடும். அன்னை காமாட்சியும் சிவனை நோக்கித் தவம் இருந்து பின் ஈசனை அடைந்த மாதம் இந்த ஆடி மாதம் தான். ஆடி மாதம் சிலர் தேவியை வாராஹியாக வழிபடுவர். இவள் நமக்கு தைரியத்தை வழங்கி சத்ருவை அடக்குகிறாள்.பொன்னி அம்மன், பச்சை அம்மன், திரெளபதி அம்மன், பொம்மி, காத்தாயி, மதுரைவீரன், முனீஸ்வரன் என்ற தெய்வங்களையும் இந்த மாதம் கரகம், காவடி, தெருக்கூத்து போன்றவைகளுடன் வழிபடுகிறார்கள்.திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் ஆடி தபசு விழா நடக்கிறது. அதாவது கோமதி அம்மன் தவம் இருக்க, புன்னைவனத்தில் சிவன் சங்கரநாராயணராக அவருக்கு் பெளர்ணமி அன்று காட்சி அளித்தார்.தவிர சுதந்திர தினமும் இந்த மாதத்தில் தான் அநேகமாக வருகிறது. அத்துடன் அன்னையைப் பராசக்தியாகக் கண்ட, கண்ணனையும் தரிசனம் செய்த ஸ்ரீஅரவிந்தர் அவர்களின் பிறந்த தினமும், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின் பிறந்த தினமும் ஆகஸ்ட் 15ல் வருகிறது. , ஷீரடியில் ஷீரடி பாபா உத்சவமும் பிரமாதமாக நடக்கும்.
அன்புடன் விசாலம்

நிர்ப்பந்தம்

நிர்ப்பந்தம்

பகல் இரவானது
இரவு பகலானது
இரவும் கசந்தது
பகலும் சுமையானது
இயந்திரமானது உடல்
வெறுத்துவிட்டது கூடல்
எல்லாம் உயிருடனிருக்க
செத்து விட்டது உணர்ச்சிகள்
சுயநலமிக்க மனிதர்கள்
சுய இன்பத்திற்கு வந்தவர்கள்
விட்டில் பூச்சிப்போல் விழுந்தப்பின்
விளக்கு எரிய வழியுண்டோ ?

அன்புடன் விசாலம்

யார் நரி யார் புலி

மிருகங்களைக் காண
காடு சென்றேன்.
என் செல்ல மகளின்
அன்புக் கட்டளையால்
"அதோ பார் நரி"என்றேன்
கைத்தட்டிச் சிரித்தாள.
வெகு தூரத்தில் புலி என்றேன்
பயமில்லாமல் பார்த்தாள்.
"ஆஹா இதோ வந்து விட்டது கரடி"என்றேன்
கன்னம் குழியச் சிரித்தாள்,
பின் ஒரு கேள்விக் கேட்டாள்,
"அப்பா மனிதர்களில்
யார் புலி ? யார் நரி ?
எப்படிக் கண்டுப்பிடிப்பது?

இரண்டு பேய்கள்

ஓரங்க நாடகம் ,,,,,,இது ஒரு ஹாஸ்ய்த்திற்கு மட்டும் தான்

இடம் ,,புளிய மரத்தடியில் ஒரு மேடை , நேரம் ,,,இரவு 12 மணி

பாத்திரங்கள் ,இரண்டு பிசாசுகள் ,ஒரு மனிதன் சைகிளில் ,,,,,,,,
காட்சி ,,,,,,

ஒரு பிசாசு {இளைஞன்],,,,,,,"எத்தனை நாள் இங்குத் தனியாக இருக்கிறேன் . சுதந்திர தினமும் வருகிறது,,,,, பேச யாராவது
வருகிறார்களா ?என்னுடன் பேச யராவது வருகிறீர்களா?

வேகமாகச் காற்று அடித்துச் சுழல ஒரு வயதானப் பேய
வருகிறது வெள்ளை நிறத்தில் ,,,,,,,

வயதானப்பேய்,,,, " என்ன ! முனிசாமி என்ன யோசனை?என்னைத் தெரிகிறதா?"

இ ,பே,,,,,,"நீங்கள் யாரு எந்தத் தொகுதியைச் சேர்ந்தவர்?
என்ன ஜாதி ?"
வ் பே,,,,"ஏம்பா இத்தனை வருடமாகியும் இந்த ஜாதி மதத்தை விடவில்லையா ?சரி ,,,,நானா,,,நான் வந்து
சுதந்திரப்போரில் ஈடுபட்டு பின் சுதந்திரத்தைப் பார்த்துக்
களித்தவன் ,"
இ பே,," பின் எப்படி பேயானீர்கள்?"
வ் பே ,,,,,,,இந்தியா பாகிஸ்தான் போரில் என்னைத் தகாத
முறையில் சுட்டுவிட்டனர் அதுதான் இப்படி ,,,ஆமாம் நீ ஏன் இப்ப்டி,,,?"

இ பே ,,,,,நானா அது வந்து தேர்தல் சமயத்தில் ஒருவனைக்கொலைச் செய்ய எனக்கு மேலிடத்திலிருந்து
உத்தரவு வந்தது அது செய்வதற்குள் என்னை மாட்டவிட்டு என்னையே கொலைச் செய்துவிட்டான் ஒரு பாவி,,,"

வ் பே,,,,,"அச்சச்சோ ,,,மிக வருந்துகிறேன் ,இப்ப்டிக் கூட
ஒரு தேர்தல் நம் நாட்டிலா நட்க்கிறது?"
இ,,பே ,,,,,,,,ஆமாம் இப்போ எல்லாம் அந்தக் காலத் தேர்தல் போல் நடப்பதில்லை ,"
வ பே ,,,,"சரி இந்தக் காலத் தேர்தலுக்கு என்ன தகுதி வேண்டும் ?"

இ பே ஹாஹ்ஹா தகுதியா,,,,தகுதியே வேண்டாம் "

வ பே ,,,,,அது என்ன அப்படிச் சொல்கிறாய்?"
இ பே ,,,,,தேர்தலுக்கு பணக்காரனும் நிற்கலாம் ஏழைகளும் நிற்கலாம் சிறந்த அறிவாளியும் நிற்கலாம்
முட்டாளும் நிற்கலாம் கைநாட்டு வைக்கத்தெரிந்தாலே போதும் ,சன்னியாசியும் நிற்கலாம் குடும்பஸ்தர்களும்
நிற்கலாம் யார் நின்றாலும் மக்கள் தன் சுயபுத்தியை
உபயோகித்து ஓட்டுப் போடும் வழக்கமில்லை."

வ.பே ,,,,,,,,அப்படியா வேடிக்கையாக இருக்கே வேறு
என்ன தெரிந்திருக்க வேண்டும்?"

இ .பே ,,,அப்படிக் கேளும் பெரியவரே ,, நன்கு பேசத் தெரிந்திருக்க வேண்டும் கூச்சல் போடத்தெரிந்திருக்க வேண்டும் "என் இரத்தத்தின் இரத்தமே "என்று மேடைப்
பேச்சை ஆரம்பிக்க வேண்டும் லஞ்சம் வாங்கத் தெரிந்திருக்க வேண்டும் ,கோடிக்கோடியாகச் சேர்க்கத்
தெரிந்துக்கொள்ள வேண்டும் "
வ பே அப்பப்பா இத்தனை முன்னேறி விட்டதா நம் நாடு ?"
இ பே ,,,,,,,"இருங்கள் இன்னும் சொல்கிறேன் பத்விக்கு வந்து விட்டால் சில வாக்கியங்கள் சொல்லத் தெரிய வேண்டும் "

வ பே ,,அப்படியா அது என்ன ?"

இ பே,,,," ஒன்று பொறுமைக் காப்போம் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன .2,கட்சித்தலைவர்கள்
முடிவெடுத்தவுடன் எல்லாம் தெரிய வரும் .3 எங்கள்
கட்சிக்கு உயிரையே கொடுப்போம் 4 , அது பற்றி ஆராய
ஒரு கமிஷன் நியமித்திருக்கிறோம் அது முடிவு செய்யும் .,இந்த சில வாக்கியங்களைப் பேசத் தெரிந்தால்
எந்த இக்கட்டிலிருந்தும் தப்பி விடலாம் "

வ ,பே,,,,,"சரி தேர்தலில் செயிப்பது எப்படி ?அத விளக்கமாகச் சொல்லு "

இ பே ,,,," அதுவா ரொம்ப ரொம்ப எளிது ஓட்டுப்போடுபவர்களுக்கு ஒரு காப்பிப்பொடி பேக்கட்
இலவசம் என்று தெருத்தெருவாய் கூறினால் போதும் இலவசம் என்பது ஒரு மந்திரச் சொல் ,அதில் மயங்காதவரும் உண்டோ ? "

வ பே,,,,,அப்படியும் மயங்கவில்லை என்றல்?"

இ பே ,,,அதுக்குதான் நோட்டு இருக்கே மெள்ள சில நோட்டுக்கத்தைகளை அவன் கண்ணில் காட்டினாலே போதும் பெட்டிப்பாம்பாக மாறி விடுவான் காரியமும் நடந்து விடும் "

அப்போது இரவு படம் பார்த்த மகிழ்ச்சியில் ஒருவன்
சைக்களில் பாடிய படியே வருகிறான் "காதல் பிசாசே காதல் பிசாசே ,,,,"
வ பே "இது என்ன?நம் பேர் வைத்துக்கூட பாடல்கள்
வந்திருக்கிறது "

இ பே,,,,,"ஆமாம் இது ஹிட் சாங் ,,,,,நம் பேரை வைத்து செய்யும் சினிமாவும் சரி பாடலும் சரி ஹிட்டு தான்
சந்தரமுகி பாடலும் ஹீட் ,,,,,,பாடட்டுமா ,,,,,,,{பாடத்
தொடங்குகிறது ,,'ரா ரா ஸரஸகு ராரா ,,,,,,"

வ பே "போதும் போதும் எனக்கு நாழி ஆகிவிட்டது அந்தக்கால படேல் லாலாலஜபதிராய் லோகமான்யதிலக்
திரு வ உ சிதம்பரனார் போன்றத்தலைவர்கள்
இந்தக் காலத்தில் கிடைக்குமா ?எனக்கு வேண்டாம்பா இந்த இடம் , "
இ பே ,,,எங்கு போவீர்கள்? எல்லா இடத்திலேயும் இதே
பாட்டுத்தான் என்னிடமே இருந்து விடுங்கள் பேச்சுத்
துணையாக ,,,,,,,,"
வ பே இல்லேப்பா ஜம்மூ காஷ்மீரில் சண்டையாம் அதையும் பார்த்துவிட்டு வருகிறேன் "

என் தோழி

உஷா என் பிரியத் தோழியே !
நீ என் விசிறி
நீ இல்லாமல் நானில்லை ,
நீ வந்தாலே தென்றல்
மேனி மேல் தழுவ ஆவல் ,
உஷ்ணத்துடன் நான் அமர ,
குளுமையுடன் நெருங்குகிறாய் ,
உன்னைத் தினமும் முடுக்குகிறேன்
சோர்வில்லாமல் இயங்குகிறாய்
உன் காதைத் திருகிப் பார்க்கிறேன்
மலர்ந்தமுகத்துடன் சுழல்கிறாய் ,
கொசு விரட்டவும் எனக்கு நீதான் ,
என் அன்புத் தோழியே
எப்பவும் எனக்கு நீதான்
மினசாரம் இல்லை என்றால்
நீயும் வ்ருவதில்லை
நானும் சோர்ந்துப் போகிறேன்,
நீ வரும் நேரம் எதுவோ?
ஆவலுடன் உனையே பார்க்கிறேன்

அன்புடன் விசாலம்