ஒரு சமயம் சித்தேஸ்வரி பீடத்தில் நவராத்திரி விழா எப்போதும் போல் விமரிசையாக நடக்க இருந்தது .எல்லா அனபர்களுக்கும் தொண்டர்களுக்கும் வினியோகிக்க என்ன செய்யலாம் என்று பலர் யோசிக்க கடைசியில் லட்டு என்று தீர்மானிக்கப்பட்டது.அதற்கு முன் கூட்டியே தேவையான நெய்க்கு சில வியாபாரிகளிடம் தொண்டர்கள் சொல்லி வைத்திருந்தனர். "என்னப்பா நெய் வந்துவிட்டதா ?நேரம் போகிறதே. இன்னும் லட்டு வேறு பிடிக்க வேண்டுமே" "ஆமாம் எனக்கும் அந்தக்கவலைதான் என்ன ஆச்சோ ? ஒரு வியாபாரிக்குமா ஞாபகமில்லாமல் போய்விடும் "
"என்ன செய்வது! பக்தர்கள் கூட்டம் வர ஆரம்பித்து விட்டதே " இப்படி லட்டு பிடிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்கள் கவலையால் முகம் களையிழ்ந்து நிற்கு அங்கு திடீரென்று பிரவேசம் செய்தார் ஒரு சித்தர் .எல்லோரும் ஆச்சரியமாக அவரைப்பார்த்து வாயடைத்து நிற்க அவர் "என்ன இன்னும் நெய் வரலையா? அதான் கவலையா?' என்றார் அவரே மௌனானந்த சுவாமிகள் என்ற சித்த புருஷர் . வந்தவர் அமைதியாக ஒரு கரி அடுப்பை மூட்டி ஒரு பெரிய இரும்புசட்டியைக்கொண்டுவரச்சொன் னார்.
" மகனே ஆச்ரமத்தில் மண்ணெண்ணை இருக்கா ?" "இருக்கு சுவாமி " "சரி இரண்டு டின் கொண்டுவா" இரண்டு டின் மண்ணெண்ணை வந்ததும் லட்டு செய்யும் வேலை ஆரம்பமாகியது இரும்பு சட்டியில் மண்ணெண்ணை ஊற்றி ஏதோ ஒரு பச்சிலை மூலிகையின் சாரை பிழிந்து காய்ச்சினார் .அது கமகமக்கும் நெய்யானது .அதன் வாசனை ஊரைத்தூக்கியது அதை வைத்து ஐயாயிரம் லட்டுக்கள் தயாரானது சீரடி பாபா ஜி தன் வாயிலிருந்து உமிழ்ந்த நீரால் விளக்கை ஏற்றியது போல் இந்த சித்தர் மண்ணெண்ணையிலிருந்து நெய் உண்டு செய்திருக்கிறார் .இவர் மூலிகைக்கொண்டு பல அத்புதங்களைச்செய்தவர்மூலிகைகளி ன் மஹத்துவத்தை அறிந்து பலருக்கு வைத்தியம் செய்தவர் .தேள் கடி பாம்பு கடி போன்றவைகளை மூலிகைச்சாரால் குணப்படுத்திவிடுவார் .மாதர்கள் குழந்தை பேறுவின் போது இவரிடமிருந்து ஒரு வேர் வாங்கிச்சென்று தங்கள் தலைகாணி அடியில் வைத்துக்கொள்ள சுகப்பிரசவம் ஏற்படும் சில மூலிகைக்கொண்டு சில உலோகங்களைத் தங்கமாக ஆக்கும் திறனும் இவரிடம் இருந்தது .இந்த மௌனானந்தர் சுவாமிகள் 1943ல் சித்தி அடைந்தார். இவரது சமாதி சித்தேஸ்வரி பீடத்தில் இருக்கிறது .
No comments:
Post a Comment