சிறு வயதில் கண்ணன் செய்த குறும்புக்கு அளவே இல்லை ;அந்தக்குறும்பிலும் பலர் நன்மை அடைந்திருக்கின்றனர் அதில் ஒரு பானையும் உண்டு. மண்பானை எப்படி வைகுந்தத்திற்கு போயிற்று? அந்தக்கதையைப்பார்க்கலாம் ததிபாண்டன் என்பவன் கண்ணனுக்கு உற்ற நண்பன்.ஆனால் ரொம்ப சாது.சூது கபடம் இல்லாதவன் .கண்ணன் செய்யும் குறும்புகளில் கண்ணன் தப்பிக்க இவன் மாட்டிக்கொண்டு தண்டனை அனுபவிப்பான்.ஒரு நாள் ததிபாண்டனின் தாய் அவனுக்கு கன்றுகுட்டிகளைக்கட்டி பாதுகாக்கும் வேலையைக்கொடுத்தாள் அவைகளை அவிழ்த்து விட்டால் தாயிடம் சென்று பாலைக்குடித்துவிடும் ஆகையால் அவைகளைக்கட்டி வைக்கச்சொன்னாள். ததிபாண்டனும் தாய் சொன்னதைத்தட்டாமல் காத்து நின்றான் .அங்கு மயில் பீலி ஆட கிருஷ்ணன் வந்தான் ,
"என்ன ததிபாண்டா?என்ன கன்றின் அருகில் நிற்கிறாய்? "அதுவா கன்றுகள் தாயிடம் சென்று பால் குடிக்காமல் பார்த்துக்கொள்ளும்படி என் தாய் கட்டளை இட்டிருக்கிறார்.அதனால் தான் இங்கு நிற்கிறேன் ." "அப்போ உனக்காக கொண்டு வந்த இனிப்பு வேண்டாமா? இதைக்கேட்டவுடன் நாக்கு ஊற "எங்கே வைத்திருக்கிறாய் .காட்டு பார்க்கலாம் "
"அவைகளை வைக்கோல் போர் பின் வைத்திருக்கிறேன் .அங்குப்போய் பார் "
ததிபாண்டன் இப்போது கன்றுகளை மறந்தான் ,கண்கள் முன் இனிப்பே தெரிந்தது வைக்கோல் போர் அருகில் சென்றான்.அதற்குள் கண்ணன் கன்றுகுட்டிகளை அவிழ்த்து விட்டான்.கன்றுகளும் துள்ளிக்குதித்தோடி தாய்பசுவிடம் பாலைப்பருகின.இந்த நேரத்தில் ததிபாண்டவனின் தாய் அங்கு வந்து பார்த்து கோபம் கொண்டாள். "எங்கேடா போனாய்?நான் கன்றுக்குட்டிகளைப் பாத்துக்கொள்ளச்சொன்னால் நீ எங்கேயோ போய்விட்டாய் " என்று கூறியபடியே வர கண்ணன் அங்கு வந்தான் . "நீங்கள் உங்க மகனைத் தேடுகிறீர்களா?அவன் வைக்கோல்போர் பின்னால் இனிப்பை ருசி பார்த்துக்கொண்டிருக்கிறான் ." "ஏண்டா ததிபாண்டா உனக்கு இவ்வளவு திமிரா?' என்று கூறியபடியே அவனை ஒரு குச்சியால் விளாசினாள் அவனும் அழுதபடி கண்ணனிடம் வந்தான் 'கண்ணா என்னை மாட்டிவிட்டாயல்லவா?எனக்கும் ஒரு காலம் வரும் அப்போது பார் " என்று கூறியபடியே அங்கிருந்து நகர்ந்தான் .
அந்த நாளும் வந்தது. திருட்டுத்தனமாக இதோ கண்ணன் எதோ ஒரு வீட்டில் நுழைகிறான்.இதை ததிபாண்டன் பார்த்துவிடுகிறான்
"என்ன கண்ணா எங்க ஓடி ஒளிகிறாய் நீ ?"
"நான் ஒரு கோபியர் வீட்டில் நுழைந்து வெண்ணெய் சட்டியை உடைத்துவிட்டேன் .இதை யாரோபோய் என் அம்மாவிடம் சொல்ல என் அம்மா என்னைத்தேடி வருகிறாள்."
"நான் உன்னைக்காட்டிக்கொடுக்கப்போறேன் நீ அன்று என்னைக்காட்டிக்கொடுத்து அடி வாங்க வைத்தாய் அல்லவா?' "வேண்டாம் வேண்டாம் நீ என் நண்பனல்லவா? நீ என்னை இப்போது காப்பாற்ற நான் உனக்கு யாவரும் கிட்டாத ஒன்றை உனக்கு அளிப்பேன்' ததி பாண்டவனும் மனசு மாறி அவனிடம் "இங்கேபெரிய பானை இருக்கு அதற்குள் ஒளிந்துக்கொள்" "கண்ணனும் ஒரு பானைக்குள் ஒளிந்துக்கொண்டான் ததிபாண்டன் அதன் மூடியின் மேல் அமர்ந்துகொண்டான்.
கோபியும் யசோதயும் அங்கு வந்து 'இங்கு கண்ணன் வந்தானா ?நீ பார்த்தாயா?"என்று வினவ அதற்கு அவன் "எனக்குத்தெரியாதே நான் ஒருவரையும் இங்கு பார்க்கவில்லை "என்று பதிலளித்தான் .அவர்களும் போய்விட்டார்கள் .கண்ணன் பானையிலிருந்து குரல் கொடுத்தான் .நண்பா நான் வெளியே வரவேண்டும் ..பானையிலிருந்து கீழே இறங்கு" ததிபாண்டவன் கீழே இறங்காமல் குரல் கொடுத்தான் "கண்ணா பானையிலிருந்து வெளியே வரவேண்டுமென்றால் எனக்கு நீ மோட்சம் கொடு'
"ததி பாண்டன் எனக்கு உள்ளே மூச்சு முட்டுகிறது சரி தருகிறேன் . நீ கீழே இறங்கு" அப்போதும் அவன் கீழே இறங்கவில்லை "இன்னும் ஏன் தாமதம் செய்கிறாய்? நான் தான் மோட்சம் கொடுப்பேன் என்றேனே "
"நீ எனக்கு மட்டும் கொடுத்தால் போதாது .உன்னைக்காப்பாற்றிய இந்த மண்பானைக்கும் மோட்சம் அளிக்க வேண்டும் " . "சரி அப்படியே செய்கிறேன் ரொம்ப மூச்சு முட்டுகிறது நண்பா" ததி பாண்டன் பானை மூடியிலிருந்து கீழே குதிக்கிறான். வாசலில் புஷ்பவிமானம் ஒன்று வந்து நிற்கிறது "நண்பா நீ கேட்டபடியே இதில் ஏறி பானையுடன் வைகுந்தம் போ."
"மிக்க நன்றி கண்ணா. நீ சொன்னபடி செய்துவிட்டாய் " என்றபடி மண்பானையுடன் வைகுந்தம் சென்றுவிட்டான் .வைகுந்தத்தில் இந்தப்பானை இருப்பதாக ஐதீகம்
1 comment:
அருமையாக இருந்தது...இன்னும் எழுதியிருக்கலாம்..!
Post a Comment