குலம் எதுவானால் என்ன .மனம் நிர்மலமாக இருந்தால் அந்த ஈஸ்வரனே நம் முன் வந்துவிடுவார். சுவாமி தன் பக்தனுக்காக என்னவேண்டுமானாலும் செய்வார். வியாசராயருடைய சீடர் "கனகதாசர்" நீச குலத்தில் தோன்றியவர்.ஆனால் எப்போதும் சத்யத்தை விடாது கடைப்பிடிப்பவர்.சிறந்தஞானஸ்தர் . தன்னிடமிருக்கும் எல்லா செல்வத்தையும் ஏழைகளுக்கு தானம் செய்துவிட்டு நாம ஜெபம் செய்து கொண்டிருப்பார். பகவத்பஜனையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பவர் .ஆனால் இந்த ஜாதி வெறி இவரைக்கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை.பாவம் ! கோயில் வாசலிலேயே மணிக்கணக்காய் நிற்பார்.காலில் சலங்கைக்கட்டியபடி பஜன் பாடியபடியே நர்த்தனம் ஆடுவார்,கையிலோ வீணை இருக்கும். அவர் கண்முன் எப்போதும் கிருஷ்ணனே தெரிவார்.அதுவும் மாத்வாசாரியார் பூஜித்த கிருஷ்ணன் .. ஒரு முறை கிருஷ்ணரின் பாடலைப்பாடியபடி 'கோவிந்தா கோபாலா 'என்று குதித்து குதித்து ஆடிகொண்டிருந்தார்.அந்த வழியாக சில பிராம்மணர்கள் வந்தனர் .கனகதாசர் தன் கண்களை மூடியபடி கண்ணனை அனுபவித்தபடி ஆடிக்கொண்டிருந்ததால் இவர்கள் வந்ததை கவனிக்க முடியவில்லை . தாங்கள் உயர்ந்த ஜாதி என்ற கர்வத்துடன் கனகதாசரைப்பார்த்து "என்ன முட்டாளே ! கிருஷ்ணன் பாட்டு பாடிண்டு இப்படி தொம் தொம்முன்னு குதிக்கறயே. நீயா கண்ணனை பார்க்க போறே !கீழ்சாதில பிறந்துட்டு கண்ணனெ ஏமாத்தப்பாக்கறயா நாங்க வரது கூட தெரியாம வழியை மறைச்சு கூத்தடிக்கறே.போ போ தூரத்தல ஒரு ஓரமா நின்னு என்ன வேணுமோ செய் .முதல்ல எங்களுக்கு வழி விடு ."
கனகதாஸர் தன்னை நிந்தித்த பிராம்மணர்களையும் வணங்கிவிட்டு கோயிலின் பின்புறமாகச்சென்று ஹரிகீத்தனம் செய்ய ஆரம்பித்தார் ,பிராம்மணர்களும் "சஹஸ்ர சீருஷா புருஷா'என்றபடி புருஷசூக்தம் ஓதியபடி கோயிலுக்குள் சென்றனர்.கண்ணன் பார்த்தான் தன் பக்த்தனுக்கு அபராதம் செய்த அவர்களை அவனுக்குப் பார்க்க விருப்பம் இல்லை.அதனால் கிருஷணன் கனகதாசர் இருக்கும் பக்கம் திரும்பிக்கொண்டான் . கனகதாசரின் பாடல் காதி விழ தன் மத்தினால்சுவற்றில் ஒரு ஓட்டையிட்டான் . தன் பக்தனைக் கண்டான்.பக்தனோ தன்னையும் மறந்து வீணையுடன் பாடுவது தெரிந்தது .தானும் ஜல் ஜல்லென்று நடனம் ஆடத்தொடங்கினான். கனகதாசரும் என்னடா இது திடீரென்று சுவற்றில் ஓட்டை தெரிகிறதே என்று ஓட்டை வழியாக பார்க்க ஆஹா அருமையான காட்சி . நீலமேகஸ்யாமளன் ,பங்கஜாட்சன் .தலையில் மயில்பீலி கழுத்தில் கௌஸ்துப மணி மாலை .அணிந்து அதி சுந்தரனாக காட்சியளித்தான்.உதட்டில் புன்னைக.கண்களில் குறும்பு. சகலாபரணபூஷிதனாக அவரைக்கவர்ந்தான்.காலில் தங்க கொலுசு .கையில் மத்தைப்பிடித்தபடி நடனமாடும் கண்ணன் .அங்கு அவருக்கு தரிசனம் தந்தான் . கனகதாசர் இந்த பூலோகத்திலேயே இல்லை.கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருக கண்ணனையே கன் கொட்டாமல் பார்த்தபடி நடனம் ஆடினார் .
கோயிலில் பிராம்மணர்கள் கண்ணன் திரும்பி நிற்பதைப்பார்த்து திகைத்துப்போனார்கள் விஷயத்தைப்புரிந்துக்கொண்டார் கள் கனகதாசரிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டு அவரது பெருமையையும் தெரிந்துக்கொண்டார்கள். இப்பவும் கண்ணனைக்காண செல்பவர்கள் அந்த ஓட்டை வழியாகத்தான் கண்ணனை தரிசிக்க முடியும் .
No comments:
Post a Comment