Thursday, November 6, 2008

மொழிப்பிரச்சினை நட்பில் முடிந்தது

நமக்கு பல மொழிகள் தெரிந்திருந்தால் மிகப் பலன்கள் உண்டு,என்னுடைய
அனுபவத்தை இங்கு பகிர்ந்துக் கொள்கிறேன்.ஒரு சமயம் எங்கள் பள்ளி
மாணவ மாணவியர் குழுவுடன் தில்லியிலிருந்து கன்யாகுமரி வரை
அழைத்துச் சென்றோம். எல்லோரும் ஹிந்தி பஞ்சாபி பேசுபவர்கள்தான்
ஆகையால் அங்கு நான் தான் ராணி . அவ்வளவு மரியாதை ஏன் என்றால்
தமிழ் .மலையாளம் தெரிந்த ஒரே பெண்மணி நான் தான் .தவிர தெலுங்கும் புரியும்
.ஆகையால் ஒவ்வொரு நிமிடமும் என் உதவி அவ்ர்களுக்குத்
தேவைப் பட்டது.,,எழுவதுக்கும் மேல் மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டதால் முழு போகியையும்
புக் செய்து பேனரும் கட்டி கதவை அடைத்து வைத்தோம் உள்ளே
மாணவர்கள் கொம்மாளம் போட அது எங்கள் வீடாகிவிட்டது நாங்களும்
சிறிது கண்டிப்புடன் .முழு சுத்ந்திரம் கொடுத்ததில் அவர்களுக்கு மகிழ்ச்சி. ரயில் விஜயவாடா, வந்தது சில மாணவர்கள் சில தின்பண்டங்கள்
வாங்க கீழே இறங்கினார்கள் கதவு திறந்திருந்தது அப்பொது ஒரு தெலுங்கு மாணவன் உள்ளே ஏறினான் கீழே நின்ற ஒரு பெண்ணையும் கூப்பிட்டான் "இக்ட ரண்டி .,,,இக்ட ரண்டி" ஒரு வினாடிதான்
திடீரென்று எங்கள் பள்ளி மாணவன் அந்தத் தெலுங்கு பையனைப் பிடித்து, அவன் காலரையும் பிடித்து "மொத்து மொத்து" என்று மொத்தத்
தொடங்கினான் அந்த சத்தம் கேட்டு நாங்கள்{ஆசிரியர் குழு} நான் தான்
அங்கு அவர்களது வலது கை .அருகில் போனேன் கைக் கலப்பு
நின்றது,அந்த ஹீரோக்கள் வெற்றியுடன் என்னைப் பார்த்தனர் .
"ஏன் அவனை இப்படி மொத்துகிறாய் "
"இல்லை மேடம் அவன் நம் பெண்களைப் பார்த்து ,,,,,,,,,,
"ஏன் நிறுத்திவிட்டாய்? மேலே சொல்லு"
அவன் சொன்னான் "கெட்டவார்த்தைகள் சொன்னான் "
என்ன சொன்னான்?அதைச் சொல்லு "
"ரண்டி என்று சொன்னான் நம் சகோதரிகளைப் பார்த்து அவன் சொன்னால் நான் சும்மா
விடுவேனா மேடம் ?
அந்தத் தெலுங்கு பிள்ளை திரு திருஎன்று மொழி தெரியாமல் முழித்தான்
பின் என்னை பரிதாபமாகப் பார்த்தான் என்னைக் காப்பாற்றுங்கள் என்று
கூறாமல் கூறியது அவன் கண்கள். நான் கூறினேன்
"அட பைத்தியமே தெலுங்கில் ரண்டி என்றால் "வாருங்கள்" என்று அர்த்தம் இக்ட என்றால் இங்கே என்று அர்த்தம் அவன் தன் உறவினரை அப்படி அழைத்திருக்கிறான் என்றேன் ,
ஒ அப்படியா மாப் கர்னாஜி ஸோ ஸாரி என்று அவனை அப்படியே அணைத்துக் கொண்டார்கள் அவர்கள் .
ஆமாம் ஹிந்தியில் ரண்டி என்றால் என்ன? வேச்யா என்று பொருள்
கெட்ட அர்த்தத்தில் உபயோகிப்பார்கள் இதை அந்தத் தெலுங்கு மாணவனுக்கும் விளக்கினேன் அழுகையை நிறுத்தி விட்டு விழுந்து விழுந்து சிரிக்கலானான்.. பின் என்ன? அந்தப் பையன் அரைகுரை ஆங்கிலத்தில் போடு போட நட்பு தொடர்ந்து சீட்டு கச்சேரியில் முடிந்தது
அவன் இறங்கும் இடம் வந்ததும் கைக் குலுக்கி கீழே இற்ங்கி அவனை அனுப்பி வைத்த விதம் மனதைத் தொட்டது
மொழிதெரியாத பிரச்சனை எதில் கொண்டுவிட்டது பாருங்கள்
ந்ல்ல வேளை நான் இருந்தேனோ அவன் பிழைத்தான் இல்லாவிட்டால் சினிமாவில் வரும் ஹீரோ வில்லன் சீன் தான்.

வேரொரு சம்பவம் சொல்கிறேன் .ஒரு பாலக்காடு கல்யாணம் சாப்பிடும் சமயம் என் அருகில் ஒரு மலையாளி பெண் நாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம்
அப்போது இருட்டிக் கொண்டு மழை ஆரம்பமாயிற்று
:"ஒ தூற்றல் போடுகிறதே என்று நான் இழுத்தேன்,,,
எந்தா இங்கன பரையுன்னது ஊணு கழிக்காம்போது. "ஒருமாதிரி முகம்
மாற்றிக்கொண்டாள். அதன் அர்த்தம் தெரிந்த்துக் கொண்டபின் எனக்கே
ஒரு மாதிரித்தான் இருந்தது .

எல்லா மொழியையும் வரவேற்போம் விரும்பிக் கற்போம் .ஆனால் தாய் மொழிக்குத்தான்
முதலிடம் .வாழ்க தாய் மொழி ,,,விசாலம்

மனிதன் எங்கே போகிறான்

மனிதன் எங்கே போகிறான் ?

மிருகங்களுக்கு பகுத்தறிவு இல்லை,
ஆனால் நெறியிலிருந்து தவறுவதில்லை.
புலி பசித்தாலும் புல்லைத் தின்பதில்லை
பசுவோ பால் கொடுக்க தவறுவதில்லை.
தண்ணீரோ மேலிருந்து கீழே பாய தவறுவதில்லை.
உரியக்காலத்தில் பழங்களோ பழுக்கத் தவறுவதில்லை
மல்லிகை தன் மணத்தை மாற்றிக் கொள்ளவுமில்லை.
இயற்கை தன் கடமையிலிருந்து தவறினதில்லை.
ஆனால் ஆறரிவு பெற்ற மனிதன் தவறிவிட்டானே.

எதையே தின்கிறான் .
எதையோ உடுக்கிறான்
எப்படியோ வாழ்கிறான்.
கட்டுப்பாட்டை உடைக்கிறான்
தன் இஷ்டப்படி ஆடுகிறான்
மிருக இனத்திற்குப் போகிறான்
தாழ்ந்த மட்டத்தையும் அடைகிறான்.
பணத்திற்குப் பின் ஒடுகிறான்
தெய்வ்த்தை தேட மறுக்கிறான்.
சத்யத்தை நழுவ விட்டான்
அன்பையும் உதறி விட்டான்
தெய்வம் போன்ற பெற்றோர்களை
முதியோர் இல்லத்தில் போடுகிறான்
எங்கே போகிறான் மனிதன்?
என்று திருந்துவான் மனிதன்?

இன்பமும் துன்பமும்

அழகான புத்தகம் என் எதிரில் ,
பல படங்கள் எதிர் சுவரில் ,
அழகான சூரியோதயம் ஒரு படம் ,
கண்ணீர் விடும் குழந்தை மறு படம்,
நான் சென்றது ஒரு கலைக்கூடம்,
அங்கு கற்றுவந்தது ஒரு பாடம்
பிரித்துப் பார்த்தேன் ஒரு புத்தகத்தை,
கண்கள் ரசித்தன ஒரு சித்திரத்தை,
பஞ்சவர்ணகிளி தன் சிகப்பு அலகுடன்,
சிவப்பு பழத்தைக் கொத்தியது அழகுடன்,
என் மனம் நிறைந்தது,
இலேசாகப் பறந்தது,
கலைப் பூரித்தது,
அடுத்தப் பக்கம் புரட்டினேன்,
என் கண்கள் குத்திட்டு நின்றன .
ஒரு பயங்கர சிறுத்தை,
அதன் கண்களில்தான் என்ன கொடூரம்.
அதன் கோரைப்பற்கள் நடுவில்
அழகு புள்ளிமானின் கழுத்து
உயிருடன் பிடித்த பெருமிதம்
உயிருக்குப் போராடி உயிர் விட்ட மான்.
முதல் படத்தின் அழகுதான் என்ன?
அடுத்த சித்திரத்தின் அகோரம்தான் என்ன?
இதுதான் வாழ்க்கையின் சாரமோ?
இதுதான் கடவுளின் விருப்பமோ/
அழகு அகோரம்.இன்பம்,துன்பம்,
மாறி,மாறி வருவது அவனது சித்தம்,
வெப்பம் .தண்மை விருப்பு,வெறுப்பு,
போன்ற எதிர்ப்பதம் வாழ்க்கையின் சுழலோ?
வெயிலின் அருமை நிழலுக்குத்தெரியும்,
கடவுளின் வேதாந்தம் சுவைக்க,சுவைக்கப் புரியும்,
இன்பத்தையும்.ரசித்துப் பார்,
துன்பத்திலும் இன்பம் பார்,
இரண்டிலும் சமத்துவம் பார்.
வாழ்க்கையில் பூரணத்துவம் பார்.

வரதட்சிணை பேய்

வரதட்சிணை என்ற பேய் ,
என்னைத் துரத்தி துரத்தி வருகிறதே,
பேராசைப் பிடித்த அம்மாக்கள்,
சுயநலமிக்க கணவர்கள்,
அதைத் தட்டிக்கேட்காத அப்பாக்கள்,
ஆ,,,,என் கண் முன்னே சுழல ,
சினிமாப் படம் போல் சுற்றிச் சுற்றி வருகிறதே.

முதல் காட்சி,
பெண் பார்க்கும் படலம் ,,,என்னைத்தான்,
ஒரு ஆணழகன் வந்தான் ,
கூடவே ஒரு கூட்டம் ,
பஜ்ஜி, ஸொஜ்ஜி தட்டுகளில்
சுடச் சுட காபி என் கையில்
பொம்மைப் போல் என் அலங்காரம்
இயந்திரம் போல் நமஸ்காரம் ,
என் அழகை ரசித்த பல கண்கள்
கேட்டதோ எண்பது ப்வுன் நகை
என் மனதில் எழுந்ததோ எரியும் புகை
சீர் என்ற பெயரில் பலவரிசை,
காட்டினார்கள் தன் கை வரிசை,
இடிந்துப் போனார் என் அப்பா,
ஒடிந்துப் போனது என் மனமும் தான்


காட்சி இரண்டு ஆரம்பம்,

வந்தான் அம்மாவுடன் ஒரு செல்லப் பிள்ளை,
சாவி முடுக்கிய பொம்மையானேன்,
ஒரு போலிப் புன்னகை என் முகத்தில்
இனிப்பு காரம் என் கையில் ,
ஸல்வார் .கமீஸில் என் அலங்காரம் ,
வணங்க மறுத்தது என் மனம்
சிலைப் போல் நின்றேன் ஒரு ஒரத்தில் ,
மனம் அசைப் போட்டது ,
நான் பாஸா, பெயிலா?தீர்வு என்ன?
"ரொம்பத்திமிர் இந்தப் பெண்"
முணுமுணுத்தா'ள் ஒரு மாது
மனத்தில் பாரம் அழுத்தியது,
அதேபாட்டு .அதே பல்லவி,
"வரதக்ஷிணை ஒன்றும் வேண்டாம்,
ஆனால் "பிஸினஸுக்குப் பணம் வேண்டும்
முதல்வனைவிட மிஞ்சிவிட்டான் .
கேட்டும் விட்டான் பல லட்சங்கள்.
உடைந்துப் போனாயே அப்பா நீ,
எப்படி உதவி செய்வேன் நான்

மூன்றாவது காட்சி ஓடுகிற்து
சகோதர சகோதரியுடன் வந்தது ஒரு குடும்பம் ,
பழக்கூடையுடன் வாசனைக்கதம்பம்
சாந்தம் அன்புடன் ஒரு தோற்றம்
திருமணச்சிலவுடன் சிறு ஏற்றம்

அப்பாவின் முகத்தில் ஒரு மலர்ச்சி,
என் தோற்றத்தில் ஒரு கவர்ச்சி.
"உங்கள் வீட்டுப் பெண்,
எங்கள் வீட்டு செல்லம் ,
சொன்னாள் என் வருங்கால அத்தை ,
பின்னால் தெரிந்தது எனக்கு
நான் விழுந்தது ஒரு பள்ளம்,,
அம்மாவின் படத்திற்கு மாலையிட்டேன்
அவன் எனக்கு மாலையிட்டான் .


நான்காவது காட்சியின் க்ளைமேக்ஸ்,

நாலு மாதங்கள் ஒடிவிட்டன.
ஆபீஸ் தொலைவு ஒரு கார் தேவை,
தொடர்ந்தது நச்சரிப்பின் உச்சம்
முளையிட்டது வெறுப்பின் ஆரம்பம்
என் இன்பக்கதவு மூடியது
வாழ்க்கையில் மேகம் சூழ்ந்தது

"மாப்பிள்ளை கார் கேட்கிறார்"
நெஞ்சம் அழுதது குரல் கொடுத்தேன்
காரும் வந்தது ஒரு மாதத்தில்
ஆனால் ஏறி அமர பிடிக்கவில்லை
உயிர் போக மாடாய் உழைத்த
அந்த அப்பாவின் ரத்தமல்லவா?
என் வாழ்க்கையைக் காப்பாற்ற
ஒரு தியாகச்செம்மல் ஆகிவிட்டார்
முதல் வருடச் சீர் வரிசை
முதலைப் போல் விழுங்கியது
வாய் ஒடுக்கி வயிறு ஒடுக்கி
கடன் தொல்லையால் மனம் புழுங்கி
நடைப்பிணம் ஆனார் என் அப்பா.
பசுத்தோல் போற்றியப் புலிப் போல்
அமைந்துவிட்டது என் புகுந்த இடம்
"தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் கொடுக்கப்படும்"
என் அப்பா என் கண்முன் ஒரு ஏசு ஆனார்.
என் அப்பவின் எலும்பை எண்ணுகிறேன் ,
மனத்திற்குள் புழுங்குகிறேன்,
என் ந்ல் வாழ்க்கைக்காக
உன் வாழ்க்கைத் தியாகம் எனப்பா?
வெளிச்சம் கொடுக்கும் மெழுகுவத்திப்போல்,
என் வாழ்வு சிறக்க உருகினாயோ?


அப்பா வரதக்ஷினைப் பேய் என்னைத்
துரத்தித் துரத்தி வருகிறதே,,,,,,,,,,,

ஒரு ஆடு மனம் திறக்கிறது

ஆடி மாதம் வந்து விட்டால் ,
அம்மன் கோவிலில் கொண்டாட்டம்,
எங்கள் வாழ்க்கை ஒரு பந்தாட்டம்,
எங்கள் இனத்திற்குத் திண்டாட்டம் ,

என் வயிற்றில் புளியைக் கரைக்க,
என் மகனை நான் தேடுகிறேன் ,
இன்னும் எங்கே போனான் அவன் .
புல் மேய இவ்வளவு நேரமா?
திண்டாடிப் போனேன்
மனம் தவித்தேன்
ஓடி வந்தான் என் மகன் ,
கழுத்தில் பூ மாலை நெற்றியில் மஞ்சள் ,
கொம்பின் நடுவில் குங்குமம் .
அழகாக மின்னினான் .
"அம்மா ,எனக்கு பிறந்த நாளா?
ஏன் எனக்கு இந்த அலங்காரம்.?
மனதிற்குள் அழுதேன் அவனை நினைத்து
"மகனே உன் பிறந்த நாளில்லை இது
இன்று உன் மரண நாள்"
ஒன்றும் புரியாமல்.அவன் விழித்தான்
நான் மே,,,மே,,, என்று அலறினேன்,
காந்தியை அழைத்தேன் .கேட்டேன்
பார்த்தாயா? உன் அஹிம்சைக் கொள்கையை ,
கீழே இறங்க முடியாமல் மேலிருந்தே வேதனைப்பட்டார்,
புத்தர்.மகாவீரர் அன்னை தெரசா
என்ற பலபேர் வந்து வந்து போனார்கள்.
என் கண் முன்னே.,
அவர்கள் பரப்பிய அஹீம்சை எங்கே?
ஜீவ காருண்ய தத்துவம் எங்கே ?
மனிதனின் சுய நலத்திற்கு
எங்கள் கழுத்தில் கத்தியா?
உங்கள் விரதம் நிறைவேற்ற
எங்கள் உயிர் தேவையா/
பலி கொடுக்கும் மக்களே
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
போன உயிர் திரும்புமா
அதைக் கொடுக்கத்தான் முடியுமா?

விசாலம்

ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ

"ஹெப்பி வெட்டிங் டே அப்பா'
இது என் பெண்ணின் குரல்,
இனிமையான் குரல்,
அணைத்துப் பிடித்தேன்,
தேன்க்யூஎன் செல்லமே என்றேன்
என் மனைவியைப் பார்த்தேன்.
கன்னம் சிவக்க என் சாந்தி சிரித்தாள்,
சாந்தமான குணம்,
வீட்டில் அவளால் சாந்தி.
பத்து வ்ருடங்கள் முன்.
என் மனம் அசைப்போட்டது.

இதே தேதி.
உள்ளே நுழைந்தேன் ,
கட்டிலும்.மணக்கும் பூக்களும்
வா வா என்று அழைத்தன.
ஆனால் என் முகத்தில் சந்தோஷமில்லை,
ஆர்வமில்லை,சிரிப்பும் இல்லை,
இந்த நாள் இப்படியா?
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
வ்ந்தாள் என் கனவுக்கன்னி,
அருமைக்காதலி,
இன்று என் மனைவி.
எங்கள் காதல் ஒரு புனிதக்காதல்,
நான்கு வ்ருடங்கள் காத்தகாதல்
விரல் நுனிக்கூட் படாத காதல்
இந்த நாள் வருமா என்று ஏங்கிய காதல்


ஆனால் இன்று,
இந்த நாள் ஏன் வ்ந்தது ?
என் மன்ம் கனத்தது.
எதிர் காலம் இருட்டானது,
உள்ளேஇடி இடித்தது.
என் கனவுக்கன்னி சாந்தி அருகில் .
சற்று நேரம் மௌனம்
கடிகாரம் டிக்,டிக்,என்றசத்தம்
"எனக்கெல்லாம் தெரியும் "
மொழிந்தாள் அவள்
நான் அவள் கையில் முகம் புதைத்தேன்
கண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது
ஆண்கள் அழலாமா? நான் அழுதேன்
அவள் தடுக்கவில்லை.
"எப்படி இது........."
என் மேல் முழு நம்பிக்கை .
கிராமத்தில் வைரஸ் சுரம் வ்ந்தது
ஒரு ஊசிதான் ....முடிக்கவில்லை நான்
எப்போது தெரிந்தது?என் சாந்தி கேட்டாள்
ப்ளட் க்ரூப் டெஸ்ட்க்கு போன வாரம் ....
மேலே பேச முடியவில்லை
விம்மினேன்.
என் தலையைக் கோதினாள் அவள்
உங்கள் நிழல் போல் நான் இருக்கிறேன்,
கவலை வேண்டாம்"
என்ன அன்பு. என்ன பாசம்
பிரமித்து போனேன்.
"மனப்பொருத்தம் தான் முக்கியம் .
இனி நாம் பிரும்மசாரி{ணி]
வாழ்க்கை என்றபடகை
அன்பு என்ற தோணியால்
அமைதியாக ஒட்டலாமே"

நான் சிலைப்போல் ஆனேன்
அவள் எனக்குப் பராசக்தி ஆனாள்.
"அப்போது நமக்கு குழந்தை?
"காப்பகம் சென்று தத்து எடுத்து கொள்ளலாமே"

ஆமாம் என் எய்ட்ஸ்க்கு
அன்பு என்ற மருந்து தந்து.
எனக்கு உயிர் கொடுத்த சக்தி அவள்.
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ
எனக்கு உயிர் கொடுத்த ரக்ஷகி அம்மா நீ
நான் என் நிலைக்கு வ்ந்தேன் .
நன்றியுடன் அவள் கையைப் பிடித்தேன் .
"ஹெப்பி வெட்டிங் டே அப்பா'
இது என் பெண்ணின் குரல்,
இனிமையான் குரல்,
அணைத்துப் பிடித்தேன்,
தேன்க்யூஎன் செல்லமே என்றேன் .
என் மனைவியைப் பார்த்தேன்.
கன்னம் சிவக்க என் சாந்தி சிரித்தாள்,
சாந்தமான குணம்,
வீட்டில் அவளால் சாந்தி.
பத்து வ்ருடங்கள் முன்.
என் மனம் அசைப்போட்டது.

இதே தேதி.
உள்ளே நுழைந்தேன் ,
கட்டிலும்.மணக்கும் பூக்களும்
வா வா என்று அழைத்தன.
ஆனால் என் முகத்தில் சந்தோஷமில்லை,
ஆர்வமில்லை,சிரிப்பும் இல்லை,
இந்த நாள் இப்படியா?
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
வ்ந்தாள் என் கனவுக்கன்னி,
அருமைக்காதலி,
இன்று என் மனைவி.
எங்கள் காதல் ஒரு புனிதக்காதல்,
நான்கு வருடங்கள் காத்தக்காதல்
விரல் நுனிக்கூடப் படாத காதல்
இந்த நாள் வருமா என்று ஏங்கிய காதல்


ஆனால் இன்று,
இந்த நாள் ஏன் வ்ந்தது ?
என் மன்ம் கனத்தது.
எதிர் காலம் இருட்டானது,
உள்ளேஇடி இடித்தது.
என் கனவுக்கன்னி சாந்தி அருகில் .
சற்று நேரம் மௌனம் .
கடிகாரம் டிக்,டிக்,என்றசத்தம்.
"எனக்கெல்லாம் தெரியும் "
மொழிந்தாள் அவள்
நான் அவள் கையில் முகம் புதைத்தேன்.
கண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது
ஆண்கள் அழலாமா? நான் அழுதேன்
அவள் தடுக்கவில்லை.
"எப்படி இது........."
என் மேல் முழு நம்பிக்கை .
கிராமத்தில் வைரஸ் சுரம் வ்ந்தது
ஒரு ஊசிதான் ....முடிக்கவில்லை நான்
எப்போது தெரிந்தது?என் சாந்தி கேட்டாள்
ப்ளட் க்ரூப் டெஸ்ட்க்கு போன வாரம் ,,,,,
மேலே பேச முடியவில்லை
விம்மினேன்.
என் தலையைக் கோதினாள் அவள்
உங்கள் நிழல் போல் நான் இருக்கிறேன்,
கவலை வேண்டாம்"
என்ன அன்பு. அன்ன பாசம்.
பிரமித்து போனேன்.
"மனப்பொருத்தம் தான் முக்கியம் .
இனி நாம் பிரும்மசாரி{ணி]
வாழ்க்கை என்றபடகை
அன்பு என்ற தோணியால்
அமைதியாக ஒட்டலாமே"

நான் சிலைப்போல் ஆனேன்
அவள் என்க்கு பராசக்தி ஆனாள்.
"அப்போது நமக்கு குழந்தை?
"காப்பகம் சென்று தத்து எடுத்து கொள்ளலாமே"

ஆமாம் என் எய்ட்ஸ்க்கு
அன்பு என்ற மருந்து தந்து.
எனக்கு உயிர் கொடுத்த சக்தி அவள்.
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ
எனக்கு உயிர் கொடுத்த ரக்ஷகி அம்மா நீ
நான் என் நிலைக்கு வ்ந்தேன் .
நன்றியுடன் அவள் கையைப் பிடித்தேன் .

சிவகாசியில் "முத்து"

சிவகாசியில் "முத்துவேலுஅவன் வயது பதினாலு,அவன் பெயர் முத்துஒரு அழுக்கு நிக்கர்,மேலே கிழிஞ்ச பனியன்இதுவே அவனது உடை.புத்தாடைக்கு பணமே தடை ,கைகளில் ஒரு பரபரப்பு,,செய்யும் வேலையில் ஒரு சுறுசுறுப்பு .ஊசிவெடி சுருட்டுகிறான் ,மருந்தை உள்ளே அப்புகிறான்.சிவப்புத்தாளை ஒட்டுகிறான் .நூலுடன் சேர்த்துக் கட்டுகிறான்கையில் கிடைப்பதோ தினக்கூலி.சிலவு செய்ய ஒரு வேலி .அவனைச் சுற்றி ஒரு குடுமபம் ,வாழ்க்கையே அவனுக்குச் சிலம்பம்அவனது பட்டாசு பலரிடம் ,ஆனால் செய்தவனுக்கு ஒன்றும் இல்லை ,வாங்கித்தர தந்தையுமில்லை தாயிடமோ காசுமில்லை ஏன் என்று கேட்க யாருமில்லை ,பல கட்டுக்கள் அவன் முன்னால் ,ஏக்கப்பார்வை அதன் மேலே ,வருகிறது ஒருபெருமூச்சு ,ஏழையின் கதி இப்படி ஆச்சு

கல்லுடைக்கும் பாட்டாளி

கடும் வெயில் உனக்கு நிலவானதா?இல்லை இல்லை !உன் வயிற்றின் பசி அக்னிஆதவனையும் அமுக்கியதா?காலிலோ செறுப்புமில்லை ,காலும் கல்லானதா?மலைக்கு நடுவில் நீஉன் மனமே பறையானதா?கல்லை உடைக்கும் உன் கையும்உடைத்து உடைத்து இரும்பானதா?கருமமே கண்ணாகியதா?மனமும் ஒடிந்து போனதா?ஓ பாட்டாளியேகடும் வெயில் உனக்கு நிலவானதா?

விவேக சூடாமணி 2

இரண்டாம் பாகம் ,,,இந்த நான் என்பதற்கு சாதி இல்லை பேதமில்லை மொழி, நாடு, குணம் , குறைஎன்று ஒன்றும் இல்லை. நாம் உலகத்தில் நடக்கும் நாடகத்தில் ஒரு வேஷம்எடுத்து க்கொண்டிருக்க்கிறோம் ,அந்த வேஷம் போட்டுக்கொள்ள நிச்சியம் ஒருஉடல் தேவை ,இப்போது நாம் நடிகராகிறோம் மேடையில் அந்த வேஷத்துடன் நடிக்கிறோம் ,பின் நாடகம் முடிந்ததும் வேஷமும் கலைந்து விடுகிறது. இதே போல்தான் உலகப்பற்று,,,,,,,,முதலில் பற்றினால் ஒரு வேஷம் போடுகிறோம் ,அது ஒரு நாள் கலையத்தான்போகிறது , குருவின் தயவால் அவரின் உதவியால் இந்த வேஷம் கலைக்கப்பட்டுபின் ஆன்மாவை உணர்கிறோம் ,எல்லா வேதாந்தத்திலும் ஆரம்பத்தில் கயிறு ,பாம்பு உதாரணம் வரும் ,இருளில் ஒருவன் நடக்கிறான் ஒரு சாதாரணத்தாம்புக் கயிற்றைக் கண்டு பாம்பு எனநம்பி அலறுகிறான் பின் வெளிச்சத்தில் பார்த்தவுடன் அது கயிறாகஇருக்கிறது ,அதாவது ஞானஒளி வந்தவுடன் அவனுக்கு இது புரிகிறது , தெளிவுபிறக்கிறது ,அறியாமை என்ற இருளில் அவன் கயிறைப்பாம்பாக நினைக்கிறான் இதுதான் அவன் மாயையில்சூழ்ந்திருப்பது ,,,,,,,எப்போது ஒருவனுக்கு பற்று அகல்கிறதோ அப்போதுஞானமும் பிறக்கிறது அந்த ஞானம் பிறந்து விட்டால் என்றுமே ஆனந்தம் தான்துக்கம் அவனை அண்டுவதேயில்லை ,துக்கம் சுகம் ஏழை பணக்காரன் வெயில் குளிர் எல்லாமே அவனுக்குச் சமம் தான்"எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்போருள்மெய்ப்பொருள் காண்பது அறிது "என்கிறார் திருவள்ளுவர் ,எந்தப்பொருளையும் அதன் உண்மைக்குணங்களை நன்கு உணர்ந்து பின் தான்செயல்படவேண்டும்உலகம் மாயையால் கவரப்பட்டிருக்கிறது அந்த மயக்கத்தில் நாம் விழாமல் பொருள்களின் உண்மையைப் புரிந்து வாழ்ந்தால் அதுவே ஞான வாழ்வாகும்.ஒரு பெரிய நீரோடையில் பனிக்கட்டி விழுகிறது.. அது மிதந்தபடி பல நாட்கள்அப்படியே இருப்பதில்லை .மெள்ள நீரில் கரைந்து அத்துடன் சேர்ந்து கலந்தும் விடுகிறது சங்கரர் சொல்கிறார் ." ஒரு கையளவு நீரை எடுத்து இதுதான் கரைந்த பனிக்கட்டி நீர் என்று சொல்லமுடியுமா? ஆன்மா பனிக்கட்டி என்றால் பிரம்மம் ஒரு கடல்,,பனிக்கட்டிப்போல் ஆன்மா பிரும்மத்துடன்கல்க்கிறது இதுவே "அஹம் பிரும்மாம்மி " நானே பிரும்மம் ,,,,,,,,,,

விவேக சூடாமணி

விவேக சூடாமணி என்பது ஆத்மாவின் தத்துவங்களைச் சொல்லும்நூல் ,இதை எழுதியவர் ஆதி சங்கரர் , இது அவரது முதல் ஆன்மீக நூல்.இதில்அவர் பாமர மக்களுக்கும் புரியும்படி மிகஎளிதாக எழுதியிருக்கிறார்,இதைப் படிக்கப்படிக்க ஆன்மீக வழிஎளிதாக அடைய முடியும் விவேகம் என்பதை இரண்டு விதமாகப்பிரயோகிக்கலாம் "அந்த மனுசன் ரொம்ப விவேகமான மனுசன் தான்" என்றும்"அவனுக்கு சின்ன வயதிலேயே விவேகம் வந்து விட்டது என்றும் கூறக்கேட்டிருக்கிறோம் இந்த அர்த்தத்தில் விவேகம் என்றால் அறிவு ,ஆன்மீகத்தில் விவேகம் என்பதற்கு உலகத்தில் இருந்தும் காணமுடியாத இறைவனைப்பற்றி உண்மைகளைத் தெரிந்துக்கொண்டு அதைப்பற்றிச் சிந்தித்துமேலும் பல உண்மைகளை அறிவது எனலாம் எது தவறு எது சரியானது என்றுசிந்திப்பதும் விவேகம் தான்சூடாமணிஎன்பது நம் எல்லோருக்கும் தெரியும், சிதாப்பிராட்டிஅந்த அனுமனிடம் தன்னுடைய சூடாமணியைத் தான் உயிருடன்இருப்பதைத்தெரிவிக்க ஒரு அடையாளமாகக் கொடுத்துஅனுப்பினார் ,இதற்கே 500க்கும் மேல் ஸ்லோகங்கள் உண்டுஎன நினைக்கிறேன்,பலர் இதற்கு பாஷ்யமும் எழுதியுள்ளனர்.இன்னும் ராஜஸ்தானிலும் குஜராத்திலும் இந்தச் சூடாமணி அணியும் வழக்கம்உள்ளது இது பலரககற்களால் ஆனது நவரத்தினங்களால் செய்யப்படும் ஒரு அணிகலன்,இதைதலையில் வகிட்டிலிருந்து ஆரம்பித்து நெற்றி அரம்பத்தில் படும்படியாகஅணிவார்கள் தலையில் தான் கடைசி சக்க்ராவான ஸ்ஹஸ்ராரா இருப்பதால் அதுமுக்கியமாக இருந்திருக்குமோஎன நினக்கிறேன்சூடாமணி தலையில் எப்படி பிரகாசிக்கமோ அதுபோல் விவேகச்சுடர்சூடாமணியைப்போல் பிராகாசிக்கிறதுஅதில் கூறிய கருத்துக்கள் ,,தெய்வத்தின் அருள் இருக்க ஒருவன் சத்சங்கத்தில் இருப்பான்சத்சங்கத்தில் இருக்க அவனுக்கு நல்ல குருவும் கிடைப்பார் , ஒரு நல்லகுரு கிடைக்க நல்ல எண்ணங்கள் உருவாகும் ,குரு எப்படி இருக்க வேண்டும்?அவர் நல்லெண்ணங்கள் மட்டும் கொண்டிருக்க வேண்டும் சொல்லிக்கொடுப்பதைக்கடைப்பிடிக்க வேண்டும் பாபச்செயலகள் செய்யாதிருத்தல் வேண்டும் .வேதங்களைக் கற்று ஓதி அதன் வழிநடக்கவும் வேண்டும் தீயஎண்ணங்கள் வரவிடாமலும் அப்படி வந்துவிட்டால்அதைச்சுட்டெரித்து மனதைவிட்டே நீக்க வேண்டும்இரக்க சுபாவம் மனித நேயம் கருணை நல்வழி இவைகளுக்குவழிகாட்ட வேண்டும்.துக்கம் சுகம் இரண்டையும் சமநிலையாகப்பாவிக்கவேண்டும் பிறர் சேவை செய்யவேண்டும் தன் நலமில்லாமல் இருக்கவேண்டும் பற்றை ஒதுக்குப்வராக இருக்க வேண்டும் இதே போல் மஹான்கள்இப்பவும் இருக்கிறார்கள்{ஆனால் நம்க்கு பக்குவம் போதாமல் அவர்களைக் கண்டுக்கொள்ள முடிவதில்லை ,போலி சாமியார்களினால் நம்பிக்கைகுறைந்து போகிறது என நினக்கிறேன் }அடுத்த நிமிடம் நம் வாழ்வில் நட்ப்பது என்ன்வென்று தெரியாதுஆகையால் நல்லகாரியத்தை இப்போதே செய்து விடு ஆசை யாரை விட்டது?ஆசைப்படலாம்,ஆனால் அதிக அளவு அதாவது பேராசைப்படாதே ." பேராசைபெருநஷ்டம்"ஆசைகள் ஓரளவு அந்தந்த காலங்களில் அனுபவித்தபின்னர் அதையும்விவேகத்தால் வராமல் பார்த்துக்கொள் ,வந்து விட்டால் தடைசெய்துவிடு நான் என்றச்சொல்லைக் கவனித்து அந்த நான் யார்?என்று சிந்தித்தல் வேண்டும் .கைவலி என்கிறோம் கை என்பதுநானா ,,,கால் வலி என்கிறோம் கால் என்பது நானா? கால் என்பது நானாகஇருந்தால் "நான் வலி "என்று ஏன் சொல்வதில்லை?"நான் தூங்கிவிட்டேன்என்பதில் தூங்கியது யார் ?என் கண்ணா அல்லது நானா ? இவைகளெல்லாம் சிந்திக்கச் சிந்திக்க நம்க்குவிடைக்கிடைக்கும் ,எல்லா விஷயங்களுக்கும்"நான் யார்?"என்ற கேள்வி கேட்க ஒரு நாள் ஞானம் வெளிப்படும்என்று விவேக சிந்தாமணி சொல்கிறதுஇந்த ஞானம் ஆரம்பத்தில் கொடுப்பது நல்ல குருதான் அவர்ஆசியுடன் கடவுள் சித்தமும் இருந்தால் தான் இந்த நிலை கிடைக்கும் .