Saturday, January 8, 2011

2010 ம் ஆண்டே உனக்கு டாடா பைபை

2010 ஆண்டே உனக்கு டாட்டா பை பை ,,,,,,

சமயம் யாருக்கு நிற்கிறது ? அது தன் கடமையைச்செய்தபடி ஒடிக்கொண்டே இருக்கிறது .அதில் நன்மைகள் தீமைகள் கலந்து வருகின்றன ,இறைவன் சங்கல்பத்திற்கேற்ப இயற்கையும் ஆடுகின்றன இன்று நடப்பது பின்னால் ஒரு சரித்திரம் ஆகிவிடுகிறது
2010 ஆண்டை எடுத்துக்கொண்டால் குருவின் ஆதிக்கம் கொண்ட ஆண்டாக இருந்ததால் முன் ஆண்டுகள் போல் அத்தனை இழப்புகள் இல்லை எனலாம் ,

ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை என் மனதில் நின்ற சம்பவங்களை நினைவு
படுத்திப் பார்க்கிறேன் .முதலில் நடந்த நல்ல
சம்பவங்களை நினைத்துப்பார்க்கலாம்

ஜனவரியில் மிகவும் நீண்ட பல ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் சூரியகிரஹணம் ஏற்பட்டது

தனுஷ் பிருத்வி என்ற ஏவுகணைகள் விடப்பட்டன

திரு ஏ.ஆர் ரஹ்மான் .இசைஞானி திரு இளைய ராஜா திரு அமீர்கான்
இவர்களுக்கு பத்ம பூஷன் விருதுகள் வழங்கப்பட்டன ,

மயிலாடுதுறை அருகே கைலாச நாதர் கோயில் சமீபம் சோழர் காலத்து
12 செப்பேடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டன அத்துடன் சில திருமேனிகள் ,பூஜைக்கு
உதவும் பொருட்கள் வாத்தியங்கள் கிடைக்கப்பெற்றன .

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

பெண்களுக்குச் சட்டமன்றத்தில் ராஜ்யசபாவில் அவர்கள் வேண்டுகோளின்படி இடம் ஒதுக்கப்பட்டது

முதன் முதலாக திவ்யா என்ற பெண்மணி சிறந்த ராணுவ அதிகாரி பயிற்சியின் விருதைத்தட்டிச்சென்றார் ,ஓடியபடி சுடுவது ஓடும் குதிரையில் ஏறுவது
என்று பல சாகசச்செயல்களைப்புரிந்தார் .

கிரிக்கெட் சாதனையாளர் திரு டெண்டுல்கர் தன் விளையாட்டின் உச்சியை எட்டினார் " sports icon of the yr for 21 yrs " என்று ND TV அவரை கௌரவித்தது

சமையல் கலையில் திருமதி விஜி வரதராஜன் என்பவர் தன் சமையல் குறிப்புகள் அடங்கிய புத்தகத்திற்காக சர்வதேச விருது பெற்றார் {"கேர்மேன் ட் வேர்ல்ட்
குக் புக்" }இவர் நம் மாவடு, தயிர்சாதத்தை உலக அளவு பரப்பி டைனிங்க் டேபிள்
மெனு வாக ஆக்கிவிட்டார் என்று படித்தேன் .மனது மகிழ்ச்சியானது நம் நாட்டு
ஸ்பெஷல் ஆயிறேறே!

தட்டு எறிவதில் சாதனைப்பெற்று பரிசுகள் வாங்கினார் தமிழ்நாட்டுப்பெண் வசுமதி

உலகத்தமிழ் செம்மொழி மகாநாடு கோவையில் மிகச்சிறப்பாக நடந்தது திருமதி பிரதிபாபாட்டில்
குடியரசு தலைவர் மகாநாட்டை ஆரம்பித்து வைத்தார் ,
தஞ்சைக்கோயிலின் ஆயிரம் வருட விழா
பல நடனக்கலைஞர்களுடன் திருமதி டாக்டர் பத்மா சுப்பிரமண்யம் அவர்களின் மேற்பார்வையில் பலநடனங்கள் நடக்கப்பெற்றன.
முதலமைச்சர் டாக்டர் கருணாநிதி அவர்கள்
ஆரம்பித்து வைத்தார்

சூப்பர் ஸ்டார் திரு ரஜனிகாந்திற்கு மிகசிறந்த மனிதர் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது

பிரசன் சாட்டர்ஜி என்ற இந்தியர் அமெரிக்காவில் சுற்றுச்சூழல் பொறியிலுக்காக மிக உயர்ந்த ஆராய்ச்சி விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு பாரதத்திற்குப்பெருமை
சேர்த்தார்

"காமென்வெல்த் கேம்ஸ் " அக்டோபர் மூன்றிலிருந்து பதினாலு வரை கோலாகலாமாய் நடந்தது
இதனால் தில்லியில் மெட்ரோ ரயில் பாதை பூரணமாக
வெற்றிக்கண்டது

பாப்ரிமஸ்ஜித் தீர்ப்பு எல்லோருக்கும் திருப்தியைக்கொடுத்தது

தங்கத்தின் விலை கரை காணமுடியாத நிலையாக ஏறியது

தனியார் பள்ளியில் அதிக பணம் வசூலிக்க கடிவாளம் போடப்பட்டது


பெங்கலூர் பெண் நிக்கோல் பாஸ்தா மிஸ் இந்தியா ஆனபின் மிஸ் வேர்ல்டும் ஆனார்

இனி நம்பமுடியாத சம்வங்களைக்காணலாம்.

சினிமா உலகில் காமெடியில் உச்சியிலிருந்த வடிவேலு தன் இணைபிரியா காமெடி நண்பர் திரு சிங்கமுத்துவுடன் எலியும் பூனையும் போல் ஆனார்

உலகப்புகழ் சுவாமி நித்யானந்தர் காமனின் அம்பில் சிக்கி நடிகை ரஞ்சிதா என்பவருடன்
மிக நெருக்கமாக இருந்தது மிகவும் பரபரப்பான செய்தியானது

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் அமைச்சர் திரு ராஜாவுடன் பல விஐபி பேர்கள் அடிப்பட்டு பல புதுப்புது சம்பவங்கள் வெளி வந்து
மக்களை திடுக்க வைத்தன. இன்னும் அது வளரும் .

காலாவதியான மருந்து திரும்பவும் விற்கப்பட்டு
பெரிய மோசடி தெரிய வந்து பல மருந்துக்கடைகள் மூடப்பட்டன பலர் இந்த மருந்துகளை உபயோகித்ததால் உடல் நலம் குன்றினர் சிலர் உயிரிழந்தனர் மோசடியில் ஒன்பதரைக்கோடிரூபாய் மருந்துகள் விற்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது

காமென்வெல்த் விளையாட்டிலும் மோசடி
அம்பலமாகி கோர்ட்டில் விசாரணை வரை வந்திருக்கிறது



வேதனைப்படுத்திய செய்திகள் .....

ஆஸ்ட்ரேலியாவில் இந்திய மாணவர்கள் அந்நாட்டு மாணவர்களால் தாக்கப்பட்டனர் .இதனால் பல பெற்றோர்கள் தங்கள் மகன்களைப்பற்றி
கவலைக்கொண்டனர் ,

இந்த ஆண்டு வடக்கில் பலதடவை ரெயில் விபத்து ஏற்பட்டது உத்தர்பிரதேசத்திலேயே மூன்றுதடவைகள் விபத்து ஏற்பட்டு பலர் படுகாயமுற்றனர் மங்கலூரிலும் ஏர் இந்திய
விமானம் விபத்துக்குள்ளாகி 158 பேர்கள் உயிரிழந்தனர்

பிப்ரவரியில் பூனாவில் ஜெர்மன்பேக்கரியில் குண்டு வெடித்து பலர் இறந்து
போனார்கள்

மார்ச்சில் பிரதாப்கட் என்ற இடத்தில் இருக்கும் அம்மன் கோயிலின் திருவிழாவின் போது கூட்டம் தாங்காமல் நெரிசல் ஏற்பட்டு பலர் கீழேவிழுந்து மிதிப்பட்டனர் அதில் சுமார் 63 பேர் உயிரிழந்தனர்

சோமாலி ஹைஜாக்கினால் 120 மாலுமிகள்
கடத்தப்பட்டனர் .கிழக்கிந்திய புயல் அடித்து
பெங்காலில் 50000 பேர்கள் வீடுகளில்லாமல்
எல்லாம் இழந்து நின்றனர்

மும்பையில்நடந்த மறக்க முடியாத தீவிரவாதத்தில் முக்கிய பங்கு வகித்த கசாப்புக்கு மரணதண்டனை தீர்ப்பு வெளியாகியது

எரிபொருள் விலை ஏறி ஜூலையில் நாடுமுழுவதும் "பந்த்" நடத்தப்பட்டது

ஆகஸ்டில் ஜம்மு காஷ்மீர் லே பகுதியில் வெள்ளம்
கரைப்புரண்டோடி நூறுக்கும் மேல் உயிரிழந்தனர்

காளஹஸ்தி கோயிலின் கோபுரம் சரிந்து விழுந்தது .அத்துடன் காரைக்குடி அருகில் கொற்றவாளீச்வரம் கோயிலில் பலத்த இடியினால்
மூன்று கலசங்கள் சாய்ந்தன .இராமேச்வரம் இராமநாத ஸ்வாமி கோயில் கோபுரத்தில் விரிசல்
கண்டு கலசம் விழுந்தது அத்துடன் கொடிமரமும்
சாய்ந்தது .இதேபோல் ஸ்ரீரங்கம் கோயிலிலும்
சுவரில் விரிசல் என்று பக்தர்கள் கவலையடைகின்றனர்

மழை இந்த வருடம் நன்றாகவே பெய்திருக்கிறது
ஆகையால் தண்ணீர்ப்பஞ்சம் வரும் வருடம் இருக்காது ஆனால் காய்கறிகளின் விலை உச்சத்தைத்தொட்டு நடுத்தர மக்கள் மிகவும் தவிக்கின்றனர் .

பல சாதனைகள் செய்து புகழுடன் மறைந்தவர்கள்.

திரு ராஜரெட்டி திருமதி மார்க்க்ரெட் தாச்சர்
அரசியல் தலைவர் திரு கருணாகரன்
நகைச்சுவை நடிகர் எஸ் எஸ் சந்திரன்
நடிகர் முரளி மெல்லிசையில் பல பரிசுகள் பெற்ற
சுவர்ணலதா .புல்லாங்குழல் மேதை சிக்கல்
திரு.குஞ்சுமணி இசை அமைப்பாளர் திரு சந்திரபோஸ் கன்னட நடிகர் திரு விஷ்ணுவர்தன்
திரு டி எம் தியாகராஜன் திரு டிவி வாசன்
எழுத்தாள்ர்திருமதி அனுராதா ரமணன் .திருமதி அனுத்தமா

என் ஞாபகத்தில் வந்ததை எல்லாம் எழுதியிருக்கிறேன் சில முக்கிய விஷயங்கள் விட்டும் போயிருக்கலாம்.

அன்பர்கள் யாவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2011 ம் ஆண்டே என் இனிய கரங்களை நீட்டி உன்னை வரவேற்கிறேன்

அன்புடன் விசாலம்

ஆனந்த நட்ராஜர்

கோனேரிராஜபுரத்திலுள்ள நடராஜர் மிக பிரம்மாண்டமானவர் ,இங்கு ஸ்தல
விருக்ஷங்கள் இரண்டு . அரசமரம் வில்வமரம் இந்த நடராஜர் திருவீதி உலாவுக்குப் போகமாட்டார் இவரைப்போலவே மதுரையில் இருக்கும் நடராஜரும் உத்திரகோச மங்கையில் இருக்கும் நடராஜரும் திருவீதிஉலாவுக்குச்செல்லமாட்டார் .கோனேரிராஜபுரத்தில் இருக்கும் நடராஜரும் சிவகாமியும் சுயம்புவாகத் தோன்றி அருள் புரிகிறார்கள் ,ஒரு சமயம் வரகுணபாண்டிய மன்னன் நடராஜர் சிவகாமி இருவரையும் அங்கேயே தங்கி அருள் புரியுமாறு கேட்டுக்கொண்டார் அவர் மிகுந்த சிவபக்தர் ,த்ன் பக்தரின் வேண்டுகோளின்படி நடராஜரும் சிவகாமியும் பஞ்சலோகத்தால் ஆன குழம்பைக்குடித்துப் பின்னர் சுயம்பு மூர்த்தியாக ஆனார்
அதே நேரத்தில் சிவகாமி அம்மையும் அவர் அருகில் அமர்ந்து வரகுணபாண்டியனுக்குக் காட்சியளித்தாராம் .

இந்த நடராஜரின் விசேஷம்என்னவென்றால் சாதாரண மனிதனைப்போல் இவருக்கும் ரோமம நகம் மச்சம் கைரேகை எல்லாம் இருக்கின்றனவாம் .சிலையில் இருக்கும் ரேகைகள் ந்னகு கண்களுக்குத் தெரிகின்றனவாம் .

இந்தகோயிலை "நடராஜா ஆலயம் "என்றுதான் பலர் அழைக்கின்றனர்
இந்தக்கோயிலில் இருக்கும் சனிபகவானும் வித்தியாசமாக இருக்கிறார்
எல்லாக்கோயில்களும் சனிபகவான் கருப்பாக இருந்து கருப்புத்துணியைத்தரித்திருப்பார் ஆனால் இங்கு இவர் வெண்மை ஆடையுடன் அருள் புரிகிறார் சனிக்கிழமைகளில் எல்லோரும் வெள்ளை எள்ளும் அதனால் ஆனா எண்ணெயில் தீபமும் ஏற்றுகின்றனர் இவர் ஏன் வெண்மை உடையை விரும்பினார் என்று தெரியவில்லை ,நிச்சியமாக ஏதாவது புராணக்கதை இருக்கும்.

இதே போல் நடராஜரும் எப்போதும் சந்தனத்தால் மூடப்பட்டு இருப்பது உத்திரகோசமங்கையில்தான் ஏன் என்றால் இந்த நடராஜ சிலை மரகதக்கல்லினால் ஆனது இந்த நடராஜர் சிலையிலும் பச்சை நரம்புகள் தெரிகின்றன .என்கிறார்கள் மக்கள்,
வருடத்தில் ஒருநாள் திருவாதிரை திருநாள் மட்டும் அந்தச்சிலையிலிருக்கும்
சந்தனக்காப்பை முழுவதும் விலக்கி பகதர்களுக்காக மரகத நட்ராஜர் தரிசனம்
கிடைக்கும்படி செய்யப்பட்டிருக்கிறது . ஆனால் மாலை ஆனவுடன் திரும்பவும்
இரவில் சந்தனக்காப்புக்குள் நுழைந்துவிடுகிறார் மரகத நடராஜர் .
மரகதக்கல் சேதமாகமல் இருக்க மேளச்சத்தம் ,நாதஸ்வர ஒலி என்பது போல்
பல ஒலிகளைத் தவிர்க்கின்றனர் இதேபோல் மரகதலிங்கம் இருக்கும் இடங்களிலும் கோயிலைப்பரமரிக்கும் அங்கத்தினர்கள் அவைகளைப்பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர்

ஓம் நமச்சிவாய .ஆனந்த தாண்டவ நடராஜா

ஆஞ்சநேயர் பிறந்த நாள்

மார்கழி மாதம் வரும் அமாவாசையில் மூல நக்ஷத்திரத்தில் ஸ்ரீஆஞ்சநேய ஜயந்தி சிறப்பாக
பல கோயில்களில் நடைப்பெறும் ,ஆஞ்சனேயரின் பிறந்த நாள் அல்லவா இது !.அஞ்சனா தேவி பெற்றெடுத்த ஒரு மாணிக்கம் அல்லவா இவர்.! ஆஞ்சனேயர் மனோபலத்திற்கும் புத்தி பலத்திற்கும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்கியவர். பிரும்மசார்யத்தைக்கடைப்பிடித்தவர் .சிறந்த அறிவாளி.
ஸ்ரீராமரைத்தவிர வேறு ஒன்றும் அவர் நினைத்ததில்லை அவர் மேல் அத்தனை அளவு கடந்த பக்தி .

நாம் ஆஞ்சனேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம்,ஏழரை சனி இருப்பவர்கள் ஆஞ்சனேயர் பாதத்தைப் பிடித்துக் கொண்டால் போதும் சனியின் தாக்கம் மிகவும் குறையும் அதே போல் பலவிதமான இன்னல்கள் துக்கங்கள் என்று வரும் போதுஆஞ்சனேயருக்கு நெய் விள்க்கு வைத்தால் படிப்படியாகதீரும் .அவருக்குச்செய்யும் ப்ரீதிகளில் சிலவற்றைப்பார்க்கலாம் ,

வடைமாலை சாத்துதல்
செந்தூரக்காப்பு அணிவித்தல்
வெண்ணெய் காப்பு சாத்துதல்
ராம் ராம் என்று எழுதி மாலை சாத்துதல்
இந்தப் பரிகாரங்களை நான் பலருக்குச் சொல்லி நன்மை நடந்ததைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்

வடைமாலை,,,,,அனுமானுடைய தாய் அஞ்சலிதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும்
இருக்க உளுந்து வடைசெய்துக் கொடுத்ததாக ஐதீகம் .உளுந்து எலும்புகளுக்கு நல்ல போஷாக்கு .

வெற்றிலைமாலை ,,,,,,,சீதையைத்தேடிதேடி பல இடங்களில் காணாது பின் அசோகவனத்தில்
அவரைச் சந்த்தித்தார், அப்போது சீதை அவருக்கு வெற்றிலைக் கொடி அணிவித்து அவரை
வாழ்த்தினார். என்றும் சிரஞ்ஜீவியாய் இருக்க வாழ்த்தினார். வெற்றிலை வயிறு சம்பந்தமான எல்லா தோஷங்களையும் போக்கும் . பண்டைக் காலத்தில் சின்ன குழந்தைக்கும் வெற்றிலை சுரசம் வாயு தொல்லை இல்லாமல் இருக்கக் கொடுப்பார்கள்

வெண்ணெய் சாத்துதல்,,,,,,,ராம ராவண யுத்தம் நடக்கிறது அப்போது ராமரையும் லக்குமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டுச் சென்றார் அனுமான் அப்போது ராவணன் சராமாரியாய் அம்புகள் தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப்பட்டார்,அந்தக் காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய் பூசிக் கொண்டாராம். வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை ,அதனால் வெண்ணெய்
சார்த்தும் பழக்கம் உள்ளது,

சிந்தூரக் காப்பு ,,,,,,சீதையை அசோகவனத்தில் கண்ட அனுமாரிடம் சீதை கேட்கிறாள்."என் அவர் நலமா?
என்று அதற்கு அனுமான் "எப்போதும் உங்களைத்தான் நினத்துக் கொண்டிருக்கிறார் என்றதும் மகிழ்ச்சித் தாங்காமல் சீதை தரையிலிருந்து செம்மண்ணை நெற்றியில் வைத்துக்கொண்டாள் இதைப் பார்த்த அனுமனுக்குச் சந்தோஷம் .தாங்க முடியவில்லை தானும் தன் உடம்பு முழுவதும் செம்மண் பூசிக் கொண்டாராம்

ராம் ராம் எழுதி மாலையாக அணிவித்தல் அனுமன் தன்இதயத்திலேயே ராமாவை
வைத்திருக்கிறார். சில படங்களில்அவர் தன் இதயத்தையே கிழித்து ராமாவைக் காட்டுவது போல் நாம் பார்த்திருக்கிறோம்.
ராமர் எல்லா ஷேமங்களையும் அள்ளி வழங்குவார்.ராம நாமத்திற்கு அவ்வளவு மகிமை

வாலில் பொட்டு வைப்பது ,,,,,,அனுமனுக்கு சக்தி
முழவதும் தன் வாலில் தான் .இராவணன் முன் தன் வாலையே
சுருளாக்கி சிம்மாசனமாக்கி இராவனனுக்கும் மேல் உயரமாக அமர்ந்தவர் அவர் இலங்கையை எரித்ததும் அந்த வாலில் வைத்த
நெருப்பினால்தான் அந்தத்தீ அவருக்குச் சூடு கொடுக்கவில்லை ஆனால் இலங்கையே எரிந்தது
ஆகையால் வாலிலிருந்து சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து ஒரு சுற்றுமுடிவதற்குள் நினைத்த காரியம் சித்தியாகிறது என்ற ந்ம்பிக்கை ...நம்புகிறவர்களுக்கு பலிக்கிறது

வடநாட்டில் 'ஜய் போலோ பஜரங்க பலி கி 'என்ற கோஷம் ஒவ்வொரு மாருதி மந்திரிலும்
காணலாம்.
அவர்கள் அனுமனுக்கு ஜிலேபி மாலையும் சார்த்துவதைக்கண்டிருக்கிறேன் கபாஸ் என்ற சர்க்கரை மிட்டாய்யும் குஞ்சாலாடுவின் உதிர்ந்த தூளும் பிரசாதமாகக்கொடுக்கிறார்கள்.
தவிர வாயில் வெண்ணெயும் வைக்கிறார்கள் .வடநாட்டில் செவ்வாய்க்கிழமை சனிக்கிழமை இரண்டும் தான் ஹனுமானுக்கு மிக விசேஷம் அன்று கூட்டம் அலை மோதுகிறது எல்லோரும் ஹனுமன் சாலீசா "
என்ற நாற்பது குறள்களைக்கொண்ட அனுமானைப்பற்றிய சிற்ப்புகளை ஸ்லோகமாகப் படிக்கிறார்கள்.

"ஜோ யஹ் படை ஹனுமான் சாலீஸா
ஹோய் ஸித்தி ஸாகி கௌரீஸா"

jo yah padai hanuman chaleesa { சரியான உச்சரிப்புக்காக
hoy siddhi saakhi gaureesa

இந்த ஹனுமான் சாலீஸவைப் படிப்பவனுக்கு
சிவபெருமான் அருள் புரிகிறார் அவன் பரிபூர்ண
நிலையை அடைகிறான்

வீர பஜரங்கபலி

வீர பஜ்ரங்கபலி என்றாலே வடநாட்டில் அருள் புரியும் அனுமானைக்குறிக்கும்.
மராட்டியர்கள் கன்னடிகர்கள் அனுமாரைப் பூஜிக்கும் போது ஜெய் பஜரங்கபலி" என்று கோஷம் இடுவார்கள் அவர்கள் "மாருதி "ஹனுமானை அழைப்பதுண்டு.

பெங்களூரில் கெம்பகௌடா என்ற அரசர் பல கோயில்களைக்கட்டியிருக்கிறார்
பசவங்குடி நந்திகேஸ்வரர் கோயில் என்றால் தெரியாதவரே கிடையாது ,கோரமங்களா லட்சுமி , தொட்டா கணபதி என்ற கோயில்களும் இவர் கட்டியதுதான்
இவரது " கரெஞ்சி ஆஞ்சநேயர் கோயில் மிகவும் பிரசித்திப்பெற்றது மிகவும் புராதனமானது இந்த அனுமார் இங்கு வந்ததே அரசர் கெம்பகௌடாவுக்கு ஏற்பட்ட
ஒரு வியப்பூட்டும் சம்பவத்தினால் தான்

சிறு வயதிலேயே அரசருக்கு ஹம்பி போன்ற பெரிய நகரை உண்டாக்கவேண்டும் என அளவுகடந்த ஆசை ஏற்பபட்டது. இதற்காக மன்னர் திரு கிருஷ்ணதேவராயரையும் சந்தித்து
சமமதம் பெற்று பன்னிரண்டு கிரமங்களையும் பெற்றார்
பின்னர் ஒரு காட்டுப்பகுதியைத் தேர்ந்தெடுத்தார் .

ஒருநாள்.... கெம்பகௌடா ஒரு அருமையான கனவு கண்டார். தாமரை மலருடன்
இலட்சுமி தேவி புன்னைகையுடன்அவர் முன்
தோன்றிஅருள் புரிந்தாள்.பின்னர் சாதுக்கே பெயர் பெற்ற ஒரு முயல் வந்தது அப்போது அநதப்பக்கம் ஒரு வேட்டை நாயும் வந்தது அதன் நாக்கில் நீர் கசிந்தது. முயலைக்குறி வைத்தது
ஆனால் முயலோ அதை எதிர்த்து மனோதிடத்துடன் துரத்தியது .

கனவு கலைந்தது " ஆஹா என்ன அருமையான கனவு ! இந்தக்காட்டுபகுதியில் ஒரு நல்ல கோயில் எழுப்பவேண்டும் " என்று எண்ணி ஒரு நல்ல நாளில்
அந்தஇடத்தைச்சரி செய்து நாலு காளைகளைக்கொண்டு உழ ஆரம்பித்தார் .
பின் மலைப்பகுதியைக்குடைய சிறு குன்றின் அடிவாரத்தில் "ஆஞ்சநேயர்"
சுயம்பு வடிவாக பூமிக்குள்ளிலிருந்து எடுக்கப்பட்டார்
அரசர் அடைந்த ஆனந்தத்திற்கு அளவேயில்லை உடனேயே அந்த உருவத்திற்கு
மந்திரங்கள் மூலம் உயிர் கொடுத்தார் அந்த இடத்திலேயே சின்ன கர்ப்பகிரஹம்
கட்டினார் .தினமும் பூஜையும் தொடர்ந்தது

பின் இங்கு ஒரு கோயிலும் எழுந்தது

இந்த அனுமாரின் உயரம் எத்தனைத் தெரியுமா?
இந்த மாருதி சிலையின் உயரம் சுமார் 22 அடி மிகவும் உக்ரமாகவும் வீரமாகவும்
காணப்படுகிறார் .இலங்காபுரியை ஒரு கலக்கு கலக்கிவிட்டு வாலில் தீ யுடன்
இலங்கையை எரித்து பல பாகங்களைச்சேதம் செய்து இந்திரஜித்துடனும் மோதிவிட்டு பின் வந்து அமர்ந்த இடம் இது தானாம். காதில் விழுந்த செய்தி இது இவர் சீதா தேவி ஸ்ரீராமருக்குக்காட்டச்சொல்லிக் கொடுத்த சூடாமணியைக் கையில் பொத்தியவாறு முகத்தின் அருகே வைத்திருக்கிறார்
சன்னதிக்கு முன் புறம் இருக்கும் கொடி மரத்திலும் மூலவர் ஆஞ்சநேயரின்
உருவம் செதுக்கப்பட்டிருக்கிறது.
அனுமன் அருள்புரிய அவ்ர் எதிரே இருப்பவர் ஸ்ரீராமர் . இவர் த்னியாக இல்லை
சீதா இலக்ஷ்மணருடன் சேர்ந்து மந்தஹாஸ்வதனத்துடன் அருள் புரிகிறார்

மேலே விமானத்தில் விஷ்ணுவின் தசாவதாரம் சித்தரிக்கப்ப்ட்டிருக்கிறது. இங்கு
அனுமன் ஜயந்தி மிக விமரிசையாகக்கொண்டாடப்படுகிறது கூட்டம்
அலைமோத எல்லோரும் அனுமனின் அருள் பார்வையில் தங்களை மறந்து
பிரார்த்தனை செய்கின்றனர் ஏழரைச் சனி பிடித்தவர்கள் பலர் இங்கு செவ்வாய்,
சனியன்று எள்ளு விளக்கேற்றுகின்றனர்

"ஆஞ்சநேய வீரா அனுமநத சூரா
வாயு குமாரா வானர வீரா "

உனக்குக்கோடி நமஸ்காரங்கள்