Wednesday, January 7, 2009

"கல்லை உடைக்கும் நீ"

கடும் வெயில் உனக்கு நிலவானதா?
இல்லை இல்லை !
உன் வயிற்றின் பசி அக்னி
ஆதவனையும் அமுக்கியதா?
காலிலோ செறுப்புமில்லை
,காலும் கல்லானதா?
மலைக்கு நடுவில் நீ
உன் மனமே பறையானதா?
கல்லை உடைக்கும் உன் கையும்
உடைத்து உடைத்து இரும்பானதா?
கருமமே கண்ணாகியதா?
மனமும் ஒடிந்து போனதா?
ஓ பாட்டாளியே! கடும் வெயில் உனக்கு நிலவானதா?

Tuesday, January 6, 2009

"நீ வருவாயென "

அன்பு மகனேஏன் இந்தக் கோபம் ?

ஏன் இந்தத் தாபம் ?

இதில் என்ன லாபம் ?

மரத்தின் பின்னே நீ,ஒளிந்திருந்திருப்பது ஏன் ?

என்ன தான் செய்கிறாய்?அசையாமல் நின்றபடி,,,,,

காணத்துடிக்கும் நான்காத்து நிற்கும் நான் ,

உன் பசியை நான் அறிவேன் .

அன்புப் பாலைச் சுரப்பேன்,

மா என்று அழைப்பாயே!துள்ளி ஓடி வருவாயே

!வந்துபுட்டான் பாவி மனுசன்

பால் கறக்கும் சின்னசாமி

பாலை ஒட்டக் கறந்து புட்டான்

,என் கண்ணீர் வடிவது தெரியலயா !

என் மன நிலை நீ அறியலயா ?"

பால் குவளையும் கையுமாய்நடந்தான்

மரத்தடிக்கு சின்னசாமி ,

அலாக்காகத் தூக்கினான் கன்றை ,

வைக்கோல் சிதறி விழுந்தது

அம்மா "என்ற ஆசைக் குரலுமில்லை

,பசுவின் அலறல் மட்டும்

காற்றில் கலந்து அழுதது .

சக்தியைச் சேமிப்போம்

டிசம்பர் 14 சக்தியைச் சேமிக்கும் நாள் energy conservation dayஇந்த நாளை நாம் மிக முக்கியமான நாளாகக்கொண்டு நம்மால் முடியும் வரைசக்தியைச் சேமிக்க வேண்டும் இந்த பூமியிலேயே நமக்குத் தேவையான சக்திகள் அனைத்தும் உள்ளன நீர்மின்சக்தி ,,அணுமின்சக்தி என அனைத்தையும் உருவாக்கியது மனித ஆற்றல் என்ற சக்திதான் ,இல்லத்தரசிகள் கேஸ் அடுப்பை தேவைக்கு அதிகமாக உபயோகிக்காமல்சேமிக்கலாம் சிலர் தண்ணீரைக் கொதிக்க வைத்துவிட்டு டிவி கீழ் அமர்ந்துவிடுவார்கள் அது கொதித்து பாதி ஆனவுடன் பின் வந்து அணைப்பார்கள் சிலர்தோசை வார்க்கும் தவாவை பெரிய அளவில் வைத்து அதில் சிறிய தோசை வார்ப்பார்கள் ,சின்ன தவாவைத்தாலே தேவையான சூடு பரவும் ,பர்னரின் அளவு இருந்தால் நன்றாக இந்தச் சக்தியைச் சேமிக்கலாம்,சில ஆண்கள் ஷேவிங் செய்த்துக்கொள்ள குழாயைத் திறந்து விட்டபடிதொடருவார்கள் ,அத்துடன் செல்லிலும் பேசுவார்கள் தண்ணீர் போனபடி இருக்கும் ,,,,,,,இதே போல் பலதடவைகள் குழாய் திறந்துவிட்டபடி வந்து பக்கெட் ரொம்பி வழிந்துக்கொண்டிருக்கும் போது ஞாபகம்வந்து மூடுவார்கள் ,,,சிலர் மேலே தண்ணீர் ஏற மோட்டார் போட்டு விட்டுபின் அந்த டேங்க் ரொம்பி வழிந்து கீழே கொட்ட பின் முழித்துக்கொள்வார்கள்சில தெருவில் பகலிலும் விளக்கு எரியும் ,,அதை அணைக்க மறந்து இருக்கலாம் இதே போல் மனிதர்கள் இல்லாத அறையிலும் சுழல் காற்றாடிசுழன்றுக்கொண்டிருக்கும் ,கணினியோ கேட்கவே வேண்டாம் அதை சிலர் அணைப்பதேஇல்லை. மைக்ரோஅவனில் தேவையானஅளவுடன் கண்ணாடி பாத்திரம் வைக்க நிறைய சக்தி சேமிக்கலாம் ,வீட்டு வாசலில் மரங்கள் இருந்தால் நல்ல காற்று வருவதால் மினசாரச் சக்தி சேமிக்கலாம் ,தில்லியில் பஹுவாய் மந்திர் கட்டிருக்கும் வித்ம் மிக வியப்பைத்தருகிறது தாமரை மலர் போன்று அமைப்பு ஒரு இடத்திலும்மின்சாரம் இல்லை சுற்றி வாய்க்கால் போன்று நீரோடடம் ,,,,,உள்ளே தியானம் செய்ய ஏற்ற இடம் உள்ளே மிகவும் சில்லென்று ஏசிபோட்டாற்போல் இருக்கிறது இது நல்ல வெயில்கால்த்திலும் தான் ,,,,,,,,,,எங்கும் பச்சைப்பசேர் என்ற புல் வெளிஇந்தச் சக்தியைச் சேமிக்கும் போது நம்மிடம் இருக்கும் சக்தியையும்
சேமிக்கலாமே படபடவென்று பேசி சக்தியை இழக்கிறோம் கோபத்தில் சக்தியைஇழக்கிறோம் ,காமத்தில் சக்திஅதிகமாக போகிறது ,அதிக மௌனமாக இருந்தால் அதில் சக்தி சேமிக்கப்பட்டு பலநல்ல விஷயங்களுக்கு வழி உண்டாகிறது,ஜே.வி செர்னே சொல்கிறார்"ஆற்றல் சக்தியை நாம் பயன்படுத்தி வெற்றிபெற் வார்த்தைகள்வாகனங்களாக உள்ளன . "செய்து முடிப்பேன்" என்ற வாகனத்தில்ஏறிக்கொண்டால் அடக்கமுடியாத ஆர்வத்துடன் கூர்ந்து செயல்வடிவில் ஒவ்வொரு நாளும் இலட்சியத்தை நோக்கிச் செல்லலாம் வானத்தைத் தொட்டுவிடலாம் "சக்தியைச்சேமிப்போம்

அருள் புரிவாயே மாருதி

அருள் புரிவாய் மாருதியேஅருள் புரிவாய் மாருதியே

அல்லல் களைவாய் மாருதியே

வீரம் ஞானம் வெற்றி தந்துமன உறுதி வழங்கும் மாருதியே அசோக வனத்தில் அன்னையைக் கண்டாய்

அவள் சோக மனதில் ஆறுதல் தந்தாய்

ஸ்ரீ ராமனுடைய தூதனும் ஆனாய்

,எண்ணியதை முடித்தும் வைத்தாய் மாருதியே

இராம நாமத்தில் மூழ்கிப்போனாய் ,

சீதைக்கு கணையாழியும் கொடுத்தாய்

வாயு வேகத்தில் சஞ்சீவி கொண்டு

இலக்குவன் உயிரைக்காத்து நின்றாய் .

அஞ்சனையின் குமாரா மாருதியே

சிறிய திருவடி மாருதியே

சிரஞ்சீவிப் பட்டம் பெற்ற மாருதியே

பஞ்ச முகமான மாருதியே ,

ஈரேழுத்தலமும் புகழ்ந்து வணங்கும மாருதியே

செங்கமலத்திருவின் திருவருள் பெற்ற மாருதியே

காமனை வென்றவனே!காலத்தை வென்றவனே

காத்தருள்வாய் , நின் தாள் பணிந்தேன் அனுமானே

அன்புடன் விசாலம்

பிருந்தாவன துவாதசி

கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசியின் மறு நாள் பிருந்தாவன துவாதசி ,மஹாராஷ்ட்ராவில் இதை மிகப் பிரபலாமாக துளசி விவாஹமாகக் கொண்டாடுவார்கள்,அவர்கள் பெண்களுக்கும்பிருந்தா துளசி விருந்தா என்ற பெயர்கள் வைப்பார்கள் தனி வீடு இருந்தால்நிச்சியம் துளசி மாடம் இருக்கும் ,அதற்கு காவிப் பூசி கோலம் போட்டு வாழைமரங்கள் நட்டு பின் மாலைகளுடன் அலங்கரித்து வழிபடுவார்கள் துளசியுடன் கூட நெல்லிமரத்தின் சிறுகொம்பையும் நட்டு வைப்பார்கள் இன்றைய நாளில் தான் துளசி திருமாலைமணந்துக்கொண்டதாக ஐதீகம் பெண்களுக்கு மங்கலப்பொருட்கள் தந்து இனிப்புப்பண்டங்களும் வழங்குவார்கள். கர்நாடகாவிலும் இந்த வழிபாடு உண்டு ,துளசி துதிகள் சொல்லியப்பின் கற்பூரம் காட்டி வழிபடுவார்கள் ஒரு துளசி ஸ்லோகம் "ஜகத்தாத்ரி நமஸ்துப்யம் விஷ்ணோச்ச பிரியவல்லபேய்தோ பிரஹ்மாதயோ தேவா: ஸ்ருஷ்டிஸ்தித்யந்த காரிண:நமஸ்துளசி கல்யாணி நமோ விஷ்ணு ப்ரியே சுபேநமோ மோக்ஷப்பிரதே தேவி நமஸ்ஸம்பத் பிரதாயினீ துளசி தேவி பலப்பிரதே நமஸ்தே த்ரிஜகத் வந்த்யே நமஸ்தே லோக ரக்ஷிகே" திருவிண்ணகர் என்ற ஒப்பிலியப்பன் கோயில் துளசி வனமாக இருந்தது ,அந்தவனத்தில் ஸ்ரீ மார்க்கண்டேய மகரிஷி தனக்கு மகாலட்சுமியே பெண்ணாகஅவதரிக்க வேண்டும் என்று வரம் கோரி தவம் இருந்தார் ,துளசியும் தனக்குத்திருமகள் போல் திருமாலுடன் இருக்கும் பாக்கியம் வேண்டும் என்று வேண்டினாள் .இருவரது கோரிக்கையும் ஒப்பிலியப்பன் தலத்தில் நிறைவேறியது மார்க்கண்டேயருக்குப் பூமிதேவியாக ஒரு துளசிச்செடியின் கீழ் குழந்தை உருவில் கிடைக்கப்பெற்றாள்.திருமாலும் துளசியை தனக்கு உகந்தப்பொருளாக ஆக்கிக்கொண்டதால் திருமால்திருமேனியை எப்போதும் அலங்கரிக்கும் பாக்கியம் துளசிக்குக்கிடைத்தது ,துளசிசெடியின் கீழ்தான் ஆண்டாளும் அவதரித்தாள் ,அவளும் பூமி தேவியின் அம்சம்தான் துளசிச்செடியில் மும்மூர்த்திகளும் வாசம் செய்கிறார்கள்,துளசி செடிவாசலில் வைக்க பாம்பு போன்ற ஜந்துக்கள் உள்ளே நுழையாது துளசியைப்பூஜிக்கஅந்த வீட்டில் என்றும் மங்களம் உண்டாகும் ,,துளசி இலைகளை மாலையில்பறிக்கக்கூடாது ,,,