சில காரியங்களைச் செய் சிலகாரியங்களைச் செய்யாதே என்று நம் முன்னோர்கள்
நமக்கு பலதடவைகள் எடுத்துக் கூறியதைக்
கண்டிருக்கிறோம் ,வடமொழிகளில் இன்னன்ன ஆசாரங்களை பின் பற்ற வேண்டும்
என்பதைச் சொல்வது ஸ்மிருதிகள் ,,நாம் அப்போது ஏன் எதற்கு என்று கேட்காமல்
பின் பற்றினோம். அதனுள் ஏதாவது நன்மை இருக்கும் ஏனென்றால் அனுபவஸ்தர்கள்
சொல்வது என்று நினைத்து நம்பினோம் இதைப் போல் பண்டைக்காலத்தில்
ஆசாரக்கோவை என்னும் நூல் எதைச் செய்யவேண்டும் எது ஆகாது என்று
விவரித்திருக்கிறது ,இதன் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார் .இவர்
வடமொழியிலும் திறைமைப்பெற்றுள்ளார் .ஆனால் இவரது ஆசாரக்கோவையில்
வெண்பாக்கள் நீரோட்டம் போல் தெளிவாக ஓடுகிறது.
நூறு வெண்பாக்கள் இருக்கின்றன சில இரண்டு வரிகளும்
சில ஐந்து அடிகள் வரையிலும் காண்ப்படுகின்றன .
எப்படி நிலத்தில் நல்லவிதைப்போட நல்ல விளைச்சலோ அதே போல் நம்
வளர்ச்சிக்கு ஒழுக்கம் என்ற நல்ல விதைப்போட நல்ல
மனிதனாக உயர்கிறான் ,இதுதான் "விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமா?
என்ற பழமொழி சொல்கிறது
ஆசாரக்கோவை என்ன சொல்கிறது ,,,,,,,,
"நன்றிஅறிதல் பொறை உடமை இன்சொல்லோடு
இன்னாத எவுயிர்க்கும் செய்யாமை .கல்வியோடு
ஒப்புறவு ஆற்ற அறிதல் :அறிவுடமை
நல் இனத்தரோடு நட்டல் : இவை எட்டும்
சொல்லிய ஆசார வித்து '
பிறர் நமக்குச்செய்த நன்மையை மறவாமல் இருக்கவேண்டும் அறியாமைக் காரணமாக
பிறர் நமக்குச்
செய்யும் துன்பங்களைப் பொறுத்துப்போவது ,எப்போதும் இனிமையாகப்பேசுவது
கடுஞ்சொற்களை அகற்றுவது ,
எந்த உயிர்களுக்கும் தீமை செய்யாதிருத்தல் அவைகளுக்கு வருத்தம் அளிக்காமல் இருத்தல்
உலக நடப்புக்கு ஏற்றார்போல் பின் பற்றுவது எதையும் நன்றாகச் சிந்தித்து
செயல்படுவது உண்மைக் காணும்
அறிவைப்பெறுவது ,அறிவு கல்வி நல்லொழுக்கம்
கொண்ட கூட்டத்தாரோடு நட்பு வைப்பது ஆகியவைகள்
நம் வளர்ச்சிக்கு நல்ல விதைகளாகும்
காலையில் எழுந்தது முதல் செய்யும் எல்லா காரியங்களும் எப்படி செய்ய
வேண்டும் என்று இந்த ஆசாரக்கோவையில் எழுதப்பட்டிருக்கிறது
Friday, December 19, 2008
பிருந்தாவன துவாதசி
கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசியின் மறு நாள் பிருந்தாவன துவாதசி ,
மஹாராஷ்ட்ராவில் இதை மிகப் பிரபலாமாக துளசி விவாஹமாகக் கொண்டாடுவார்கள்
,அவர்கள் பெண்களுக்கும்
பிருந்தா துளசி விருந்தா என்ற பெயர்கள் வைப்பார்கள் தனி வீடு இருந்தால்
நிச்சியம் துளசி மாடம் இருக்கும் ,அத்ற்கு காவி பூசி கோலம் போட்டு
வாழைமரங்கள் நட்டு பின் மாலைகளுடன் அலங்கரித்து வழிபடுவார்கள்
துளசியுடன் கூட நெல்லிமரத்தின் சிறு
கொம்பையும் நட்டு வைப்பார்கள் இன்றைய நாளில் தான் திருமாலை
மணந்துக்கொண்டதாக ஐதீகம் பெண்களுக்கு மங்கல்ப்பொருட்கள் தந்து இனிப்பு
பண்டங்களும் வழ்ங்குவார்கள்
கர்நாடகாவிலும் இந்த வழிபாடு உண்டு ,துளசி துதிகள் சொல்லி
பின் கற்பூரம் காட்டி வழிபடுவார்கள்
ஒரு துளசி ஸ்லோகம்
ஜகத்தாத்ரி நமஸ்துப்யம் விஷ்ணோச்ச பிரியவல்லபே
ய்தோ பிரஹ்மாதயோ தேவா: ஸ்ருஷ்டிஸ்தித்யந்த காரிண:
நமஸ்துளசி கல்யாணி நமோ விஷ்ணு ப்ரியே சுபே
நமோ மோக்ஷப்பிரதே தேவி நமஸ்ஸம்பத் பிரதாயினீ
நம்ஸ்தே துளசி தேவி ஸ்ர்வாபீஷ்ட பலப்பிரதே
நமஸ்தே த்ரிஜகத் வந்த்யே நமஸ்தே லோக ரக்ஷிகே
திருவிண்ணகர் என்ற ஒப்பிலியப்பன் கோயில் துளசி வனமாக இருந்தது ,அந்த
வனத்தில் ஸ்ரீ மார்க்கண்டேய மகரிஷி தனக்கு மகாலட்சுமியே பெண்ணாக
அவதரிக்க வேண்டும் என்று வரம் கோரி தவம் இருந்தார் ,துளசியும் தனக்கு
திருமகள் போல் திருமாலுடன் இருக்கும் பாக்கியம் வேண்டும் என்று
வேண்டினாள். இருவரது கோரிக்கையும் ஒப்பிலியப்பன் தலத்தில் நிறைவேறியது
மார்க்கண்டேயருக்கு பூமிதேவியாக ஒரு துளசிச்செடியின் கீழ் குழந்தை
உருவில் கிடைக்கப்பெற்றாள்.
திருமாலும் துளசியை தனக்கு உகந்தப்பொருளாக ஆக்கிக்கொண்டதால்
திருமால்திருமேனியை எப்போதும் அலங்கரிக்கும் பாக்கியம்
துளசிக்குக்கிடைத்தது ,துளசிசெடியின் கீழ்
தான் ஆண்டாளும் அவதரித்தாள் ,அவளும் பூமி தேவியின் அம்சம்தான்
துளசிச்செடியில் மும்மூர்த்திகளும் வாசம் செய்கிறார்கள்,துளசி செடி
வாசலில் வைக்க பாம்பு போன்ற ஜந்துக்கள் உள்ளே நுழையாது துளசியைப்பூஜிக்க
அந்த வீட்டில் என்றும் மங்களம் உண்டாகும் ,,துளசி இலைகளை மாலையில்
பறிக்கக்கூடாது ,,,

சக்தியைச் சேமிப்போம்
டிசம்பர் 14 சக்தியைச் சேமிக்கும் நாள் energy conservation day
இந்த நாளை நாம் மிக முக்கியமான நாளாகக்கொண்டு நம்மால் முடியும் வரை
சக்தியைச் சேமிக்க வேண்டும் இந்த பூமியிலேயே நமக்குத் தேவையான சக்திகள்
அனைத்தும் உள்ளன நீர்மின்சக்தி ,,அணுமின்சக்தி என அனைதையும்
உருவாக்கியது மனித ஆற்ரல் என்ற சக்திதான் ,
இல்லத்தரசிகள் கேஸ் அடுப்பை தேவைக்கு அதிகமாக உபயோகிக்காமல்
சேமிக்கலாம் சிலர் தண்ணீரைக் கொதிக்க வைத்துவிட்டு டிவி கீழ் அமர்ந்து
விடுவார்கள் அது கொதித்து பாதி ஆனவுடன் பின் வந்து அணைப்பார்கள் சிலர்
தோசை வார்க்கும்
தவாவை பெரிய அளவில் வைத்து அதில் சிறிய தோசை வார்ப்பார்கள் ,சின்ன தவா
வைத்தாலே தேவையான் சூடு பரவும் ,
பர்னரின் அளவு இருந்தால் நன்றாக இந்தச் சக்தியைச் சேமிக்கலாம்,
சில ஆண்கள் ஷேவிங் செய்த்துக்கொள்ள குழாயைத் திறந்து விட்டபடி
தொடருவார்கள் ,அத்துடன் செல்லிலும் பேசுவார்கள்
தண்ணீர் போனபடி இருக்கும் ,,,,,,,இதே போல் பலதடவைகள் குழாய் திறந்து
விட்டபடி வந்து பக்கெட் ரொம்பி வழிந்துக்கொண்டிருக்கும் போது ஞாபகம்
வந்து மூடுவார்கள் ,,,சிலர் மேலே தண்ணீர் ஏற மோட்டார் போட்டு விட்டு
பின் அந்த டேங்க் ரொம்பி வழிந்து கீழே கொட்ட பின் முழித்துக்கொள்வார்கள்
சில தெருவில் பகலிலும் விளக்கு எரியும் ,,அதை அணைக்க மறந்து இருக்கலாம்
இதே போல் மனிதர்கள் இல்லாத அறையிலும் சுழல் காற்றாடி
சுழன்றுக்கொண்டிருக்கும் ,கணினியோ கேட்கவே வேண்டாம் அதை சிலர் அணைப்பதே
இல்லை. மைக்ரோஅவனில் தேவையான
அளவுடன் கண்ணாடி பாத்திரம் வைக்க நிறைய சக்தி சேமிக்கலாம் ,
வீட்டு வாசலில் மரங்கள் இருந்தால் நல்ல காற்று வருவதால் மினசாரச் சக்தி
சேமிக்கலாம் ,
தில்லியில் பஹுவாய் மந்திர் கட்டிருக்கும் வித்ம் மிக வியப்பைத்
தருகிறது தாமரை மலர் போன்று அமைப்பு ஒரு இடத்திலும்
மின்சாரம் இல்லை சுற்றி வாய்க்கால் போன்று நீரோடடம் ,,,,,
உள்ளே தியானம் செய்ய ஏற்ற இடம் உள்ளே மிகவும் சில்லென்று ஏசி
போட்டாற்போல் இருக்கிறது இது நல்ல வெயில்
கால்த்திலும் தான் ,,,,,,,,,,எங்கும் பச்சைப்பசேர் என்ற புல் வெளி
இந்தச் சக்தியைச் சேமிக்கும் போது நம்மிடம் இருக்கும் சக்தியையும்
சேமிக்கலாமே படபடவென்று பேசி சக்தியை இழக்கிறோம் கோபத்தில் சக்தியை
இழக்கிறோம் ,காமத்தில் சக்தி
அதிகமாக போகிறது ,அதிக மௌனமாக இருந்தால் அதில் சக்தி சேமிக்கப்பட்டு பல
நல்ல விஷயங்களுக்கு வழி உண்டாகிறது,
ஜே.வி செர்னே சொல்கிறார்
"ஆற்றல் சக்தியை நாம் பயன்படுத்தி வெற்றிபெற் வார்த்தைகள்
வாகனங்களாக உள்ளன . "செய்து முடிப்பேன்" என்ற வாகனத்தில்
ஏறிக்கொண்டால் அடக்கமுடியாத ஆர்வத்துடன் கூர்ந்து செயல்
வடிவில் ஒவ்வொரு நாளும் இலட்சியத்தை நோக்கிச் செல்லலாம் வானத்தைத் தொட்டுவிடலாம் "
சக்தியைச்சேமிப்போம் ,,,,,,,,,
அன்புடன் விசாலம்

) |
|
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.
டாக்டர் சங்கர் எழுதிய முதல் திருப்பாவையைப் படித்துப் பாடியும்
பார்த்தேன் இதை ஏன் எழுதுகிறேன் என்றால் இந்தத் திருப்பாவைக்கு ஒருவர்
பல நல்ல பொருட்களைச் சொன்னார் இதில் இத்தனை விஷயங்களா என்று மலைத்து
நின்றேன்
அவர் மேடையில் பேசியதில் பாதிதான் என் மண்டையில் நின்றது பாதி
மறந்துவிட்டது இருந்தாலும் ஞாபக்ப்படுத்தி எழுதுகிறேன்
மார்கழி ஒரு சிறந்த மாதம் இது தேவர்களின் உஷாக்காலம்
இது நமது பிரும்ம முகூர்த்த காலம் இந்தக்காலம் தத்வ நிலைக்கும்
தவநிலைக்கும் ஏற்றது ,
திங்கள் என்றால் மாதம் , சந்திரன் மதி நிறைந்த என்றால்
நம் புலன்களை அடக்கி உள் நோக்கிப் பார்த்து அந்த நாரயணனைக்
காண்பது ,,,,,,,நன்னாள் என்பது மிகச் சிறந்த நாள்,,, அதாவது தெய்வ பணி
செய்ய எல்லாமே மிகச் சிறந்த நாள் தான் ,
"நீராட போதுவீர் " இங்கு நீராட்டம் என்றால் கிருஷ்ணரின் அனுபவ
நதியில் நீராடி அதில் மூழ்கி குளித்து ,,,,அதன் ஆனந்தத்தைப்
பெறுவது ,,,, கிருஷ்ண அனுபவமே நீராட்டம் ,இந்த நீராட்டத்தை
பெற தகுதி இருக்கிறதா ? ஆம யாருக்கு கிருஷ்ணாமிருதத்தில்
நீராட ஆசையோ அவர்கள் எல்லோரும் சேரலாம்,
அதாவது அதற்கு விருப்பம் ஒரு தகுதி ,உண்மையான பக்தி
இருந்தால் போதும் கீதையில் கண்ணன் ஒரு துளசி இலை வைத்தாலே போதும் நான்
வந்து விடுவேன் என்கிறார் ,ஆகையால் கண்ணன் விரும்புவது தின்பண்டம் இல்லை
உண்மையான் ப்கதி
சிரத்தையே ,,,,,
சிறுமிகள் என்றால் ஐந்து வயதிலிருந்து ஆரம்பிக்கும் வயது ,செல்வசிறுமிகள்
,,,என்றால் அவர்களுக்கு கண்ணன் என்ற
மிகப் பெரிய செல்வம் இருக்கிறது
கூர் வேல் கொடுந்தொழிலன் ,,,,,,,,,நந்த கோபர் முதலில் மிகவும் சாது
வாகத்தான் இருந்தார்,பின் குட்டிக்க்ண்ண்னைக் கொல்ல ஒருவர் மாறி ஒருவராக
அசுரர்கள் வர ,தன் அருமைப்புதல்வனைக் காக்க கூர் வேலைப் பிடித்துக்கொண்டு
கண்ணின் இமைப்போல்
அவனைக் காத்தாராம் நந்தகோபர்,
ஏரார்ந்தக்கண்ணி யசோதை ,,,,கண்ணனைப் பார்த்துப்பார்த்து மகிழ்ந்த
யசோதையின் கண்களும் மிக அழகாக ஆனதாம்
"என்ன தவன் செய்தனை அடி யசோதா எங்கும் நிறைந்த பரபிரும்மம் அம்மா
என்றழைக்க " என்ற பாடல் இந்த இடத்தில் பொருந்துகிறது
"இளஞ்சிங்கம் ,,," சின்ன பாலகன் ஆனால் கொன்றதோ அசுரர்களை ,,ஒரு
கட்டைவிரலால் உதைக்க சக்டாசுரன் மரிக்கிறான் பூதனை ஸ்தனங்களை உரிய அவளும்
சாய்கிறாள் இதனால் தான் இங்கு கண்ணனை ஆண்டாள் இளஞ்சிங்கம் என்று
பாடுகிறாள்
கார்மேனி ,,மேகன் போன்ற மேனி ,, மேகம் பிரதிபலன் பார்க்காமல் மழையைப்
பொழிகிறது தராதரமும் பார்ப்பத்தில்லை
"கதிர்மதியும் போல் முகத்தான் " வருகிற பக்தர்களுகெல்லாம் அருள்
புரிகிறார் ஒரு கண் சூரியன் ஒரு கண் சந்திரன் ,,,,,ஒன்று உஷ்ணம்
மற்றொன்று குளிர்ச்சி ,,இது எப்படி சாத்தியம்?
நரசிம்ம அவதாரத்தில் ஹிரண்யனைக்கிழித்தக்கோபம் அத்துடன் பிர்ஹ்லாதனின்
ஸ்தோத்திரத்தில் குளிர்ச்சி ,,,,இப்படி இரண்டும்
கலந்தது "கதிர்மதியம்"
"நாராயணனே நம்க்கே பறைத் தருவார்"
ஆண்டாளை ஒரு ஏகாரச் சீமாட்டி என்பார்கள் சிலர்
இங்கும் நாராயணனே என்றும் நம்க்கே என்றும் பாடுகிறாள்
அதாவது நாராயணன் மட்டுமே நமக்கு அதாவது இந்த நோம்பு நூற்கும் நமக்கே
மோட்சம் கொடுப்பார் அவனே கதி என்று நினைக்கும் நம்க்கு அவன் தான் ரட்சகன்
,
இந்த நோன்பு நூற்கும் அதிகாரிக்கு ஆசை வேண்டும் அடைய வேண்டியது நாரயணன்
செய்ய வேண்டியது நிதய கைங்கர்யம்
கிடைக்கபெறுவது அவனின் திருவடி"
என் மனதில் நின்ற சில்வற்றை எழுதினேன் ,,,,,,,,,,ஒருதிருப்பாவையில்
இத்தனை உள்ளர்த்தங்கள் பொதிந்து தேனாம்மிருந்தமாக இருக்கிறது
,,,,,,சூடிக்கொடுத்த நாச்சியாருக்கு என் வணக்கங்கள் பல ,,,,,,
அன்புடன் விசால்ம் ,,,,

கல்லும் முள்ளும் கலுக்கு மெத்தை
ஸ்வாமியே சரணமய்யப்பா,,,,,,,,,,
"பள்ளிக்கட்டு சபரிமலைக்க்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை" என்ற
கோஷங்கள் கேட்கின்றன குருஸ்வாமி வழிக்காட்ட பகதர்கள் பின் செல்கின்றனர்
முதலில் போகும் இடம் எரிமேலிபேட்டை
இங்கு பகதர்கள் பேட்டை துள்ளல் செய்கிறார்கள் இந்த இடத்தில் தான் ஸ்ரீ
மணிகண்டன் மகிஷியுடன் போர்செய்தான் இதை நினைவுகூரும் நிகழ்ச்சிதான் இது,
அவர்கள் பாடும் பாட்டு நமையும் பாடவைக்கிறது "ஸ்வாமியே அய்யப்ப ,அய்யப்ப
ஸ்வாமியே ,,சுவாமி திந்தக்க தோம் தோம் ஐயப்ப திந்தக்க தோம் தோம் என்ற
கோஷத்துடன் பாடல் , ,,,,,,,
பேட்டைத்துள்ளிக்குப்பின் எரிமேலி சாஸ்தா பின் வாபரின் தரிசனம்
,,,,,அதன் பின் காட்டு வழி தொடங்குகிறது
அவர்கள் ஒரு நாள் தங்குவது பம்பாநதி தீரத்தில் தான் , இந்தப்
பம்பா நதியை தக்ஷிண கங்கை என்றும் கூறுகிறார்கள் ,
இது மிகச் சிறப்பு வாய்ந்த இடம் ஏனென்றால் ஐயப்பனைப் பிறக்கச் செய்த
இடமல்லவோ ? ஈசனும் மோகினி அவதாரம் எடுத்த மஹாவிஷ்ணுவும் தங்கள் சக்தியை
ஒன்று கலக்கச் செய்து ஹரிஹரனை உண்டாக்கிய இடம் ,அதோடு மட்டுமல்ல! பந்தள
ராஜா குழந்தை ஹரிஹரனைக் கண்டு எடுத்த இடமும் இதுதான் .
இங்கு குளித்து பின் பூஜை செய்தப்பின் பக்தர்களுக்கு கிடைக்கும்
சாப்பாட்டை "பம்பாசத்தி" என்கின்றனர் வடை பாயசத்துடன்
சக்கைவரட்டி எரிசேரி ஓலன் , அவியல் , என்று பல ஐட்டங்கள்
இருக்கும் சரியான பிறந்த நாள் விருந்துதான் .இந்த விருந்திலே
சாதி இல்லை பேதமில்லை பண்க்காரரென்று இல்லை ஏழையென்றும் இல்லை ,எல்லோரும்
ஒரே குலம் எல்லோரும் ஒரே இனம் என்றபடி அமைகிறது ,தவிர ஐயப்பனும் பகதர்
வடிவில் வந்து அமர்ந்து "சத்தி"saddhi}உண்வாராம் ஆகையால் எல்லா
பக்தர்களும் தம் அருகில் அமர்ந்திருப்பது ஐய்யப்னோ என்று எண்ணி மகிழ்ந்து
போவார்கள்.
இதற்கு சமைப்பது இலேசல்ல ,,எத்தனைக் கூட்டம் ,,,அன்னதானம் நடந்தபடியே
இருக்கும் ,இதற்கென்று மூட்டப்பட்ட விறகின் சாம்பல் மகா பிரசாதமாக ஆகி
வினியோகிக்கப்படுகிறது இதனால் வளர்க்கும் அடுப்புக்கள் 108 ,,இந்த
அடுப்புச் சாம்பலை அல்லது பஸ்மத்தை பிரசாதமாக கன்னிசாமி வீடு எடுத்து
வரவேண்டும்
ஹரித்துவாரில் கங்கா மாதாவுக்கு மாலை ஆர்த்தி காட்டுவார்கள்
ஒவ்வொரு அகல் விளக்கோ அல்லது பனை ஓலையில் விளக்கோ ஏற்றி ஆர்த்தி முடியும்
தருவாயில் அவைகளை கங்கை நதியில்
மிதக்க விடுவார்கள் ஒரே சமயத்தில் நூறுகண்க்கான விளக்குக்ள்
மிதந்துப்போவது கண்கொள்ளாக்காட்சிதான் ,,அதேபோல் இங்கும்
மூங்கிலால் செய்யப்பட்ட சிறு சப்பரங்களில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து
நதியில் விடுவார்கள்,இவரது இருமுடிகளை ஐய்யப்னாகவே நினைத்து அவற்றுக்கும்
தீபபராதனைச் செய்து
பின் தலையில் ஏற்றி வைப்பார் ,,,,,,,
பமபா நதி பார்க்க மிக அழகு ,,,கோயிலுக்கு போக முடியாதவர்கள்
பமபா நதி தீரத்திற்காவது அவசியம் போக வேண்டும் சபரி மலைக்குப் போகும்
ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு சிறப்பைக் கொண்டுள்ளது ,,,,அங்குப் போக
அனுஷ்டிக்கும் நியதிகளால்
ஒரு ஒழுங்குமுறை , மனத்தூய்மை எல்லாம் ஒன்றாக நினைக்கும் பக்குவம்
எல்லாம் வந்துவிடுகிறது ஒரு வேளை சாப்பாடு பின் பலகாரம் என்பதில் சீரண
சக்தி சீராக இயங்குகிறது ,படாடோபம்
அஹங்காரம் மறைகிறது ,தேகப்பயிற்சி போல் நிறைய நடை இருப்பதால் உடல்
சீராகுகிறது ,மனம் ஒருமைப்படுகிறது ,
ஞாபகச்சக்தி பெருகுகிறது ,

குரு பெயர்ச்சி
குரு பகவனை பிரஹஸ்பதி என்றும் அழைப்பதுண்டு இவர் தேவர்களுக்கெல்லாம் குரு
, மிக நுண்னிய அறிவைக்கொண்டவரும்
கல்வி கேள்விகளில் மிக சிறந்தவர் என்பதால் பிர்ஹஸ்பதி என்றும் பெயர் .
ஸ்ரீ தீட்சதர் நவகிரஹ கிருதியில் பிரஹஸ்பதே என்று அடாணா ராகத்தில்
குருவின் வர்ணனை மிக அழகாகச்
செய்திருக்கிறார்,இவருக்கென்று அமைந்த மிகச் சிறப்பு பெற்ற ஆலயங்கள்
ஆலங்குடி , மாயவரம் அருகில் அமைந்திருக்கும் திட்டை பின் செனையில்
பாடியில் இருக்கும் அலயம் திருவலிதாயம் ,,,,,குரு பகவன் பூசித்த
திருத்தலம் திருச்செந்தூர்
இவருக்கு ஒரு துதி
" மறைமிகு கலை நூல் வல்லோன் வானவர்க்கரசன் ,மந்திரி
நறைசொரி கற்பகம் பொன் னாட்டினுக் கதியனாகி,
நிறைதனம் சிவிகை மண்னில் நீடுபோகத்தை நல்கும்
இறையவன் குரு வியழன் இருமலர்ப்பாதம் போற்றி"
குருவின் காயத்ரி
விருஷ்ப த்வஜய வித்மஹே
கிருணி ஹஸ்தாய தீமஹி
தன்னோ குரு: பிரசோதயாத்.
குரு பகவான் 6ம் தேதி முற்பக்ல 10-25க்கு பெயர்ந்து மகர லக்னத்திற்கு
வருகிறார் ,மகரம் குருவுக்கு நீச வீடு
ஸ்தான பலம் பலவீனமடந்ததால் பார்வை பலத்திற்கு முக்கியத்தவம் அதிகம் உண்டு .
நற்பலன் அதிகம் கிடைக்கும் ராசிகள்
ரிஷ்பம் கடகம் கன்னி
மிதமான பலன்கள் அடையும் ராசிகள்
தனுசு மீனம்
பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்
மேஷம் , மிதினம் சிம்மம் துலாம் விருச்சிகம் மகரம் குமபம் ,
சில பரிகாரங்கள்
குருவின் ஸ்தலங்கள் ஆல்ங்குடி திட்டை சென்று அபிஷேகம் செய்யலாம்
வயதானவர்களுக்கு குருபோன்றவர்களுக்கு மஞ்சள் வஸ்திரம்
தம்பதியாக இருந்தால் மஞ்சள் புடவை ரவிக்கைத்துணியுடன் தனம் செய்யலாம்
வியாழன் அன்று நெய் விளக்கு ஏற்றலாம்
குருவுக்கு பொன்னன் என்ற பெயரும் உண்டு ஆகையால் எண்ணெயில் தங்கப்பொருளை
நனைத்து பின் வேண்டிக்கொண்டு
தீபம் ஏற்றலாம்
பிரதொஷத்தின் போதும் நெய் விள்க்கு ஏற்றி சிவதரிசனத்தை நந்தி மூலம் தரிசிக்கலாம்
குருவின் கோலம் போட்டு வாமனாவதாரம் படிக்கலாம்
குரு பெயர்ச்சியின் போது குருவை வணங்கி நலம் பெறுவோம்

Subscribe to:
Comments (Atom)