Saturday, June 21, 2008

பெண் என்பவள் ஒரு கரும்பு

பிறவியிலேயே பார்வை இழந்தவர் பெரிய கவிஞராகி புகழ் பெற்றார் அவர் முதுகில் தமிழ் எழுதச் சொல்லிக் கற்றுக் கொண்டவர் என்று கேட்கும் போது நான் கண்ணிருந்தும் இன்னும் நிறைய சாதித்திருக்கலாமே என்று தோன்றுகிறது
இவர் பலர் படிப்பதைக்கேட்டு மனப் பாடம் செய்து ஒப்பிப்பார் பல மணி நேரங்கள் கவிதைச் செய்து பழகி பின் பெரிய கவிஞர் ஆகிவிட்டார் இவரை
"அந்தகக் கவி " என்று எலோரும் போற்றினர் ,இவர் தான் திரு வீர ராகவர் ,

இவர் ஒரு சமயம் ஒரு நூல் எழுதினார் இக்காலம் போல் அத்தனை எளிதாக
அதற்கு ஒப்புதல் கிடைப்பது அந்தக்காலத்தில் இல்லாத ஒன்று ,முதலில்
சபைக் கூட்ட வேண்டும் பின் நூலை அறிமுகப் படுத்த வேண்டும் சபையில்
இருப்பவர் அதை அலசுவர் ,அதில் இருக்கும் நல்லது ,அல்லது கெட்டதை வெளிப்படையாகக் கூறுவர் பொருட்குற்றம் சொற்குற்றம் இருப்பின் அதை
அரங்கத்தில் அம்பலப்படுத்துவர் , இவர் எழுதிய நூலில் ஒரு பெண்ணைப்
பற்றி சித்தரித்திருந்தது அதாவது பெண் என்பவள் "கரும்பு" என்றார்
அதாவது அத்தனை இனிப்பானவள் சுவையானவள் இனிமையானவள்,,,,,,,,,,

அத்துடன் கருமபு விளையும் இடத்தையும் வர்ணித்தார்

ஏரியிலிருந்து பால் பாய ,தேன் மழைப்பொழிய,,வயலுக்கு எருவாக பாகும்
கற்கண்டும் சேர முப்பழங்கள் சேராக அமைந்தன அந்த வயலில் விளைந்த
கரும்பு தான் பெண்,,,

"பாலேரி பாயச்செந்தேன் மாரி பெய்யநற் பாகு நற்கண்
டாலே எருவிட முப்பழச் சேற்றின் அமுத வயல்
மேலே முளைத்த கரும்போ ,,,,,,,,,

என அமைந்திருந்தன சபையில் இதை அவரது மாணவன் படித்துக் காட்டினான்
எல்லோரும் கரகோஷம் செய்தனர் ஆனால் ஒரு பெண்மணி "இந்தக் கவிதையில் கருத்து கெட்டிருக்கிறது ,,கவிஞருக்கு கண்தான் கெட்டிருக்கிறது என நினைத்தேன் ஆனால் கருத்தும் ,,,,என்று இழுத்தார் அவர் சொன்னது
கவிஞருக்கு உடனே புரிந்து விட்டது தன் பிழையை உணர்ந்தார் பின் தன்
மாணவனிடம் " சீடா கொம்பை வெட்டிக் காலை நடு " என்றார் மாணவனும் குருவுக்கு மிஞ்சிய சிஷ்யன் ,,உடனே "கப்பென்று"பிடித்துக் கொண்டான்
பாடலை மாற்றி படித்தான் "முப்பழச் சாற்றின் அமுத வயல் மேலே
முளைத்த கரும்போ" ,,

அந்த பெண்மணி கூறினார் "மூன்று பழங்களைப்பிழிந்தால் அது பழ்ச் சாறு
ஆகத்தான் இருக்கும் எப்படி சேறாக முடியும் ?

கவிஞர் இதைப்புரிந்துக் கொண்டு ,தன் மாணவனிடம் "கொம்பை வெட்டி காலை
நடு என்றார்,அவனும் கொம்பு கால் எது என்று கேட்க்காமல் "சேறு என்பதில் உள்ள கொம்பை நிக்கினான் "ச்" எழுத்தின் பக்கத்தில் ஒரு காலை எழுதினான்
அது "சா"ஆனது பின் என்ன எல்லோரும் அவரது கவி நயம் கண்டு
வியந்தனர் அந்த நூலும் மிகச் சிறப்பாக அரங்கேறியது

Friday, June 20, 2008

சிற்றிலக்கியங்கள் 2 பாகம்

சிற்றிலக்கியத்தில் "பிள்ளைத் தமிழ்" என்பது ஒரு தெய்வத்தையோ அல்லது
சிறந்தத் தலைவரையோ ,ஒரு அரசனையோ வைத்து அவர்களின் சிறு பிரயாத்தினை வைத்துப் பாடல்கள் புனைவது .
அந்தப் பிள்ளைப் பருவக்காலப் பகுதியைப் பத்துப்பருவங்களாகப்
பிரித்து பருவத்துக்கு பத்து ஆசிரிய
விருத்தங்களாக இயற்றி பாடுவர் பிள்ளைத் தமிழ் என்றாலே கண்ணனின் பலவிதமான நம்மைக் கிறங்க வைக்கும்
செயல்கள் நம் கண் முன் வருகின்றன.
பெரியாழவார், மிக அழகாக்ப் பாடி இருக்கிறார். குலோத்துங்கரும் ஒட்டக்கூத்தரும்
மிக அருமையாகப் பிள்ளைத்தமிழ் இயற்றி இருக்கின்றனர் . ஸ்ரீகுமரகுருபரரின் மினட்சி அம்மைப் பிள்ளைத் தமிழும்,
மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின்
சேக்கிழார் பிள்ளைத்தமிழும் சிறந்து விளங்குகின்றன .
பகழிக்கூத்தரின் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்த்மிழும்,மிகச் சிறப்பாக அமைந்துள்ளன .
,

நாம் கதம்பத்தைப் பார்த்திருக்கிறோம் அதில் பலவகைப் பூக்கள் சேர்ந்து
கட்டப்பட்டிருக்கும் ,அதேபோல் பலவகைப் பாக்களைக் கொண்டுச் செய்யப்
படும் இலக்கியம் கலம்பகம் ,,,,,
இதற்கு 18 உறுப்புக்கள் உண்டு இதில் அகப்பொருளும் புறப்பொருளும் தன்னுள்ளே கொண்டிருக்கும் .தமிழில் எழுதிய முதல் கலம்பகம்
"நந்திக்க்லம்பகம்"அதன் பின் வந்தக் கலம்ப்கம் "காசிக் கலம்பகம் .
இதைக்குமரகுருபரர் இயற்றினார்."தில்லைக்கலம்பகத்தை "இரட்டைப்புலவர்கள்
பாடினார்கள் . சிவப்பிரகாசர்"திருவெங்கைக் கலம்பகம் பாடினார்
பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் "திருவரங்கக் கலம்பகம் பாடி இருக்கிறார்.


"பரணி " என்பது சிற்றிலக்கிய வகையில் ஒன்று .அரசன் போருக்குப் போகுமுன்
வீரத்தை வழங்கும் காளி பவானி போன்ற தெய்வத்தைப் பூஜித்து ,பின் போர்க்களம் சென்று
அங்கு கூழ் ஊற்றி பின் மகிழ்வான் அவனது வெற்றியைக் குறித்து பாடுவது "பரணி"
பாடல்கள் கலிங்கப் போரில் குலோத்துங்கன் வெற்றி பெற்றான்
அதுவே "கலிங்கத்துப் பரணி "ஆனது ,இதைப் பாடியவர் திருசெயம்கொண்டார்,


அடுத்து வருகிறது "பள்ளு" ,,,,,,,உழவர்கள் பள்ளமான வயல் வெளிகளில் ஏர்
பூட்டி உழவார்கள் இந்த உழவர்களையும் உழவுத்தொழிலையும் குறிக்கும்
பாடல்கள் "பள்ளு " என்பதாகும்
குறிச்சொல்லும் குறத்திகளின் பாடல்கள் குறவ்ஞ்சி என்பதாகும்
முக்கூடத்து பள்ளும் "குற்றாலக் குறவஞ்சியும் " எல்லோருக்கும் தெரிந்த்வை
சில நாட்டியங்களில் இந்தக் குறத்தியின் பாடல்கள் நடனத்தில் சேர்ப்பார்கள்
"வஞ்சி வந்தனளே மலைக்குறவஞ்சி வந்தனளே" என்று அந்தக் காலத்தில்
குமாரி கமலா அவர்கள் ஆடியது இன்னும் என் கண் முன்னே நிற்கிறது

சிற்றிலக்கியங்கள் முதல் பாகம்

இலக்கியங்கள் பண்டைக்காலத்திலிருந்தே பல தோன்றி நமக்கு பொக்கிஷமாக
இன்றும் தனிச் சிறப்புடன் விளங்கி வருகிறது திணைவகை இலக்கியம் நீதி இலக்கியம் ,பக்தி இலக்கியம் என்று
பல சொல்லலாம். சோழர் காலத்தில் காப்பிய இலக்கியம் மிகச்சிறப்பும் செல்வாக்கும் பெற்றது
சிற்றிலக்கியத்தில் ஆற்றுப்படை பிள்ளைத் தமிழ் , பரணி பள்ளு கலம்பகம்
என்று பல உயிர்ப் பெற்றன தமிழில் சுமார் ஒரு நூறு சிற்றிலக்கியங்கள் இருக்கலாம் என்று தோன்றுகிறது

திணைவகை இலக்கியத்தில் அகத்திணை புறத்திணை என இரண்டு ,,,,
நீதி இலக்கியத்தில் திருக்குறள் நல்வழி ,நீதிநெறிவிளக்கம் போன்றவை
பக்தி இலக்கியம் ,,தேவாரம் திருவாசகம் திவயப்பிரபந்தம் போன்றவை
அந்தாதி ,,அபிராமி அந்தாதி
காப்பியம் ,,,,,,,.. சீவக சிந்தாமணி சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி
குண்டலகேசி

ஆற்றுப்படை சிறுபாணாற்றுப்படை திருமுருகாற்றுப்படை ,,,

சிற்றிலக்கியங்களில் பதிகம் என்பது ஒருவரைக் குறித்து பத்துச் செய்யுள்
பாடுவது ,சதகம் என்பது நூறு செய்யுள் கொண்டது அந்தாதி என்பது அந்தத்தையே திரும்ப ஆதியாகக்கொண்டு புனைவது ஒரு செயுயுளின்
இறுதி எழுத்தோ அல்லது சொல்லோ அடியோ சீரோ அடுத்து வரும் அடியில்
முதலாக வந்து செய்யுள் தொடரும் .இதிலேயே நூறு வெண்பாக்கள் பாடுவது
அந்தாதி இலக்கியம் இதுப்போல் பேயாழ்வார் .பொய்கையாழ்வார் ,
பூதத்தாழ்வார் பாடி இருக்கின்றனர் .

ஒரு அரசன் அல்லது தலைவன் ,இறைவன் வீதியில் உலா வரும் போது
அவனைப் பார்த்து மனம் பறிக்கொடுத்து காதல் கொள்வர் சிலப்பெண்கள்.
அவன் சென்றப்பின் அவனையே நினைத்து ஏக்கத்துடன் வேதனையுடன் அமைக்கும் செய்யுள் "உலாபிரபந்தம் "இதில் எல்லா வயது பெண்மணிகளும்
உணர்ச்சிகளைக் கொட்டி உலா செய்யுள் பாடுவார்களாம் சில நாட்டிய
பதங்களிலும் இதுப்போல் நாயகனைப் பார்க்கத் துடிக்கும் நாயகி காதல்ரசம்
கொண்டு பாடிய பாட்டுக்கள் பல உண்டு வடநாட்டில் இருக்கும் ராஸலீலா
கீதகோவிந்தம் போல பாடலகள் இது போல் உள்ளன ,முதல் உலா இலக்கியம் பாடியவர் சேரமான் பெருமாள் நாயனார் ,அவர் எழுதிய நூலின் பெயர் "ஞான உலா " உலாவில் வந்தத்தலைவர் சிவபெருமான் . அதன் பின் ஒட்டக்கூத்தர் பாடிய மூவருலா மிகவும் சிறப்புப் பெற்றது