அன்பு மகனே ,,,,,,
நீ ஆசைப்பட்டாய் ,,
பெரிய பள்ளியில் படிக்க ,
என்னால் முடியாத நிலை .
இருப்பினும் படிக்க வைத்தேன்
ஏன்? உன்னை நம்பித்தான்
நீ ஆசைப்பட்டாய் .
டாக்டருக்கு படிக்க ,
சட்டியில் இருந்தால்தானே
ஆப்பையில் வர
பிராவிடண்ட் தொகை எடுத்தேன்
உன் ஆசையைப் பூர்த்தி ஆக்க !
ஏன் ?உன்னை நம்பித்தானே!
உன் அருமைத் தங்கை நின்றாள்
அழகுச் சிலையாக
திருமணம் ஆக வேண்டும் ,
வெளிநாடு போக கோடிகாட்டினாய் .
புரிந்து கொண்டேன்
அனுப்பி வைத்தேன் !
ஏன்? உன்னை நம்பித்தான் .
உன் திருமணதிற்கு அழைத்தாய் ,
என் மாட்டுப்பெண் பிரன்சு நாட்டுப் பெண்,
உன் சந்தோஷமே எனக்கு வேண்டும்
அட்சதைப் போட்டு ஆசி வழங்கினேன்
ஏன் ? உன்னை நம்பித்தான் .
இன்று வயோதிகத்தில் நான் ,
உன் தங்கையின் நிழலில் ,
மகனின் கடமை அவள் செய்ய ,
திருமணத்தையே மறந்து விட்டாள்!
உன் போட்டோ என் கையில்
என் நம்பிக்கை என்னைப் பார்த்து
எக்காளமிட்டுச் சிரிக்கிறது ,,,,,,,,
அன்புடன் விசாலம்
Saturday, February 2, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment