அன்புள்ள குழந்தைகளே நாம் வாழுவது மிகப் பெருமை மிக்க இந்திய நாட்டில் ,,,,,,எத்தனை யோகிகள் ,அறிஞர்கள், மஹா கவிஞர்கள் , கணித மேதைகள்
சித்தர்கள் தேசபக்த தலைவர்கள் வாழ்ந்திருக்கின்றனர் எத்தனை மகிமை நிறைந்த
கோயில்கள் ,,,,நாம் நம் நாட்டின் பெருமையை நிலை நாட்ட வேண்டும் குழந்தைளும்
பல வீரதீரச் செயல்களைச்செய்து அன்புடனும் மரியதையுடனும் ப்ண்புடனும்
பழகவேண்டும் நம் பாரதத்தின் சிறப்பைப் பாருங்கள் பாடி மகிழுங்கள் கோலாட்டம்
கும்மி என்று இதற்கு ராகம் அமைத்து ஆடலாம்
எமது பாரதம்
இமயம் முதல் குமரி வரை எங்கள் பாரதம்
எங்கும் புகழ் தங்கும் வளம் பொங்கும் பாரதம்
அறிஞர்களும் அவனியிலே பிறந்த பாரதம்
அருந்துணைவர் காந்திதனை அளித்த பாரதம்
முப்புறமும் கடல் சூழ விளங்கும் பாரதம்
முடியெனவே மலையணிந்த வடிவம் பாரதம்,
அங்கும் இங்கும் ஆன்மீகஒளி வீசும் பாரதம்
ஸ்ரீராமகிருஷ்ணர் ,விவேகானந்தர் உதித்த பாரதம்
வள்ளுவரும் இளங்கோவும் ஒளிர்ந்த பாரதம்
சித்தர் பல அவனியில் வந்தருளும் பாரதம் ,
மூவேந்தர்கள் சிறப்பித்த பழைய பாரதம் ,
கண்ணனுடன் கலந்த மீரா வாழ்ந்த பாரதம் ,
உலகம் போற்றும் "திருக்குறள்" உதித்த பாரதம்
தமிழுக்கு ஒரு ஔவைப்பாட்டி வந்த பாரதம்
கட்டப்பொம்மன் ,வ.உ சியின் .வீரம் பார்த்த பாரதம்
"பகத்சிங்" நாட்டிற்கே உயிரைக்கொடுத்த பாரதம் .
"புரட்சிக்கவி பாரதி" வீர முழக்கமிட்ட பாரதம் ,
பூஜ்ஜியத்தின் தத்துவத்தைக் கண்டுபிடித்த பாரதம்
நான்மறைகள் தோன்றி வளமுற வைக்கும் பாரதம்
அர்சுனனுக்கு உபதேசித்த, கீதைப்பிறந்த பாரதம்
வீரத்தின் பிறப்பிடம் ராணி ஜான்சி தோன்றிய பாரதம்
சிலம்புடன் நியாயம் கேட்ட கண்ணகி பிறந்த பாரதம்
சிம்மகர்ஜனையாம் வீரசிவாஜி பிறந்த பாரதம்
இராமயண மஹாபாரத காப்பியம் தோன்றிய பாரதம்
மூவிசை மன்ன்ர்கள் இசையால் முக்தி அடைந்த பாரதம்
திருப்பாவை திருவாசகம் நம்மிடம் மலர்ந்த பாரதம்
பார் புகழும் பாரதம் எங்கள் பாரதம்
பாடிப்பாடி போற்றுவோம் எங்கள் பாரதம் ,,
அன்புடன் விசாலம்
Saturday, February 2, 2008
ஒன்றும் மாறவில்லை
முப்பது வருடங்களுக்குப் பின்
திரும்ப கிராமம் வந்தேன் ,
என் பாட்டி வளர்ந்த இடம் ,
என் அத்தை பிறந்த இடம் ,
கும்பகோணம் அருகில் "கச்சனம் "
குதி போட்டது என் மனம் ,
நுழைய நுழைய இனம் புரியாத மகிழ்ச்சி
பார்க்க பார்க்க ஒரு இன்பக் கிளர்ச்சி ,
அதே கிராமம் அதே சூழல் ,ஒன்றும் மாறவில்லை ,,,,,
மாறாத பஸ் ஸ்டாப்
கல்லும் மண்ணுடன் ,
வெளியே வந்தேன்
கசக்கிய கண்களுடன்.
முறுக்கு விற்ற அந்தச் சிறுவன் ,
ஆத்தா இட்டப் பெயரோ முருகன்
இன்று அவர் தொந்திப் போட்ட முதலாளி ,
ஆனால் இன்றும் வறுமைக்குக் காவலாளி
பெரிய ஆலமரத்தடி மேடை ,
அடிக்கும் சாராய வாடை ,
கத்தியைத் தீட்டுகிறான் ஒருவன்
முகம் காட்டுகிறான் ஒருவன்
சவரம் நடக்கும் காட்சி இங்கே ,
கிராமத்தின் சலூனும் இங்கே !
அதே கிராமம் அதே சூழல் ஒன்றும் மாறவில்லை ,
சரித்திரப்புகழ் பெற்ற கோயில் .
கேட்பாறற்று இருந்த வாயில் ,
பாசிப் படர்ந்த அல்லிக்குளம்
சேற்றிலும் மலரும் அல்லி தளம்
கோயிலுள் நுழைந்தேன் ,,,,,
குருக்களின் கடைக்குட்டிப் பையன்
சுப்பிரமண்ய குருக்கள் ஆனான்,
கற்பூரம் ஒளிர்ந்தது
பத்து ரூபாய் விழுந்தது
அவன் மனம் வியந்தது
அதே கிராமம் அதே சூழல் ,ஒன்றும் மாறவில்லை
அழுக்கு சினிமாக் கொட்டகை முன்
சூப்பர்ஸ்டாரின் விசிறிகள்
வெற்றிலைத் துப்பிய சிவப்பு கறைகள்
மூத்திர வாடை அடிக்கும் சுவறுகள்
கோடியில் கட்சித்தொண்டர்கள்
எதிரில் கொடி பிடிக்கும் எதிரிகள்
தெருக்கோடியில் சில மாமிகள்
அலசும் வீட்டுப் பிரச்சனைகள் ,
நடுத்தெருவில் ஒரு கிரிக்கெட் மாட்ச்,
அதிலும் ஒரு குட்டிச் சண்டை
கம்பத்தில் தொங்கிய தபால் பெட்டி ,
அதனருகே குழந்தைகளின் லூட்டி
பகலிலும் சாலை ஓரம்
போதையில் தூங்கும் கோரம்
அதே கிராமம் அதே சூழல் ஒன்றும் மாறவில்லை
ஆனாலும் அங்கு ஒரு நிம்மதி
கிடைத்தது எனக்கொரு அமைதி ,
சாணம் பூசிய சதுரங்கள்,
அதில் அழகிய கோலங்கள் ,
அனுபவித்தேன் இயற்கையின் சூழல்
கொடுத்தது எனக்கு இன்ப நிழல்
திண்ணையில் அமரும் பெரியவர் ,
சத்சங்கம் நடத்தும் தலைவர் ,
மரங்களில் கொஞ்சும் பறவைகள்,
சல சல வென்று ஓடும் ஆறுகள்
முன்நேரம் ஒலிக்கும் கோயில் மணி
காலை நாலுக்கே தொடங்கும் பணி
இதைத் தவிர வேறு என்ன வேண்டும் ?
இயறகை ரசிக்கும் மனம் வேண்டும்
அதே கிராமம் அதே சூழல் ஒன்றும் மாறவில்லை
அன்புடன் விசாலம்
திரும்ப கிராமம் வந்தேன் ,
என் பாட்டி வளர்ந்த இடம் ,
என் அத்தை பிறந்த இடம் ,
கும்பகோணம் அருகில் "கச்சனம் "
குதி போட்டது என் மனம் ,
நுழைய நுழைய இனம் புரியாத மகிழ்ச்சி
பார்க்க பார்க்க ஒரு இன்பக் கிளர்ச்சி ,
அதே கிராமம் அதே சூழல் ,ஒன்றும் மாறவில்லை ,,,,,
மாறாத பஸ் ஸ்டாப்
கல்லும் மண்ணுடன் ,
வெளியே வந்தேன்
கசக்கிய கண்களுடன்.
முறுக்கு விற்ற அந்தச் சிறுவன் ,
ஆத்தா இட்டப் பெயரோ முருகன்
இன்று அவர் தொந்திப் போட்ட முதலாளி ,
ஆனால் இன்றும் வறுமைக்குக் காவலாளி
பெரிய ஆலமரத்தடி மேடை ,
அடிக்கும் சாராய வாடை ,
கத்தியைத் தீட்டுகிறான் ஒருவன்
முகம் காட்டுகிறான் ஒருவன்
சவரம் நடக்கும் காட்சி இங்கே ,
கிராமத்தின் சலூனும் இங்கே !
அதே கிராமம் அதே சூழல் ஒன்றும் மாறவில்லை ,
சரித்திரப்புகழ் பெற்ற கோயில் .
கேட்பாறற்று இருந்த வாயில் ,
பாசிப் படர்ந்த அல்லிக்குளம்
சேற்றிலும் மலரும் அல்லி தளம்
கோயிலுள் நுழைந்தேன் ,,,,,
குருக்களின் கடைக்குட்டிப் பையன்
சுப்பிரமண்ய குருக்கள் ஆனான்,
கற்பூரம் ஒளிர்ந்தது
பத்து ரூபாய் விழுந்தது
அவன் மனம் வியந்தது
அதே கிராமம் அதே சூழல் ,ஒன்றும் மாறவில்லை
அழுக்கு சினிமாக் கொட்டகை முன்
சூப்பர்ஸ்டாரின் விசிறிகள்
வெற்றிலைத் துப்பிய சிவப்பு கறைகள்
மூத்திர வாடை அடிக்கும் சுவறுகள்
கோடியில் கட்சித்தொண்டர்கள்
எதிரில் கொடி பிடிக்கும் எதிரிகள்
தெருக்கோடியில் சில மாமிகள்
அலசும் வீட்டுப் பிரச்சனைகள் ,
நடுத்தெருவில் ஒரு கிரிக்கெட் மாட்ச்,
அதிலும் ஒரு குட்டிச் சண்டை
கம்பத்தில் தொங்கிய தபால் பெட்டி ,
அதனருகே குழந்தைகளின் லூட்டி
பகலிலும் சாலை ஓரம்
போதையில் தூங்கும் கோரம்
அதே கிராமம் அதே சூழல் ஒன்றும் மாறவில்லை
ஆனாலும் அங்கு ஒரு நிம்மதி
கிடைத்தது எனக்கொரு அமைதி ,
சாணம் பூசிய சதுரங்கள்,
அதில் அழகிய கோலங்கள் ,
அனுபவித்தேன் இயற்கையின் சூழல்
கொடுத்தது எனக்கு இன்ப நிழல்
திண்ணையில் அமரும் பெரியவர் ,
சத்சங்கம் நடத்தும் தலைவர் ,
மரங்களில் கொஞ்சும் பறவைகள்,
சல சல வென்று ஓடும் ஆறுகள்
முன்நேரம் ஒலிக்கும் கோயில் மணி
காலை நாலுக்கே தொடங்கும் பணி
இதைத் தவிர வேறு என்ன வேண்டும் ?
இயறகை ரசிக்கும் மனம் வேண்டும்
அதே கிராமம் அதே சூழல் ஒன்றும் மாறவில்லை
அன்புடன் விசாலம்
நம்பிக்கை சிரித்தது
அன்பு மகனே ,,,,,,
நீ ஆசைப்பட்டாய் ,,
பெரிய பள்ளியில் படிக்க ,
என்னால் முடியாத நிலை .
இருப்பினும் படிக்க வைத்தேன்
ஏன்? உன்னை நம்பித்தான்
நீ ஆசைப்பட்டாய் .
டாக்டருக்கு படிக்க ,
சட்டியில் இருந்தால்தானே
ஆப்பையில் வர
பிராவிடண்ட் தொகை எடுத்தேன்
உன் ஆசையைப் பூர்த்தி ஆக்க !
ஏன் ?உன்னை நம்பித்தானே!
உன் அருமைத் தங்கை நின்றாள்
அழகுச் சிலையாக
திருமணம் ஆக வேண்டும் ,
வெளிநாடு போக கோடிகாட்டினாய் .
புரிந்து கொண்டேன்
அனுப்பி வைத்தேன் !
ஏன்? உன்னை நம்பித்தான் .
உன் திருமணதிற்கு அழைத்தாய் ,
என் மாட்டுப்பெண் பிரன்சு நாட்டுப் பெண்,
உன் சந்தோஷமே எனக்கு வேண்டும்
அட்சதைப் போட்டு ஆசி வழங்கினேன்
ஏன் ? உன்னை நம்பித்தான் .
இன்று வயோதிகத்தில் நான் ,
உன் தங்கையின் நிழலில் ,
மகனின் கடமை அவள் செய்ய ,
திருமணத்தையே மறந்து விட்டாள்!
உன் போட்டோ என் கையில்
என் நம்பிக்கை என்னைப் பார்த்து
எக்காளமிட்டுச் சிரிக்கிறது ,,,,,,,,
அன்புடன் விசாலம்
நீ ஆசைப்பட்டாய் ,,
பெரிய பள்ளியில் படிக்க ,
என்னால் முடியாத நிலை .
இருப்பினும் படிக்க வைத்தேன்
ஏன்? உன்னை நம்பித்தான்
நீ ஆசைப்பட்டாய் .
டாக்டருக்கு படிக்க ,
சட்டியில் இருந்தால்தானே
ஆப்பையில் வர
பிராவிடண்ட் தொகை எடுத்தேன்
உன் ஆசையைப் பூர்த்தி ஆக்க !
ஏன் ?உன்னை நம்பித்தானே!
உன் அருமைத் தங்கை நின்றாள்
அழகுச் சிலையாக
திருமணம் ஆக வேண்டும் ,
வெளிநாடு போக கோடிகாட்டினாய் .
புரிந்து கொண்டேன்
அனுப்பி வைத்தேன் !
ஏன்? உன்னை நம்பித்தான் .
உன் திருமணதிற்கு அழைத்தாய் ,
என் மாட்டுப்பெண் பிரன்சு நாட்டுப் பெண்,
உன் சந்தோஷமே எனக்கு வேண்டும்
அட்சதைப் போட்டு ஆசி வழங்கினேன்
ஏன் ? உன்னை நம்பித்தான் .
இன்று வயோதிகத்தில் நான் ,
உன் தங்கையின் நிழலில் ,
மகனின் கடமை அவள் செய்ய ,
திருமணத்தையே மறந்து விட்டாள்!
உன் போட்டோ என் கையில்
என் நம்பிக்கை என்னைப் பார்த்து
எக்காளமிட்டுச் சிரிக்கிறது ,,,,,,,,
அன்புடன் விசாலம்
Subscribe to:
Comments (Atom)