வணக்கம் என்று கூறுவோம்
அழகுத் தமிழில் வண்ங்குவோம்
இரண்டு கைகள் கூப்புவோம்
பணிவுடன் புன்னகை வீசுவோம்
அக மகிழ்ந்து வாழ்த்தி மகிழ்வோம்
வாழ்த்து அலைகளைப் பரப்புவோம்
சுற்றுசூழ்நிலையில் நற்றலைகள்
எந்நிலையிலும் காக்கும் பேரலைகள்
சொல்,, வாய் நிறைய வணக்கம்,
ந்ம் உளமெல்லாம் மணக்கும் .
கும்பிடும் இரண்டு கைகளின் சேர்க்கை
ஆதமா பரமாத்மாவின் சேர்க்கை
பெருவிரல்கள் திரும்பும் திசையே
உள்ளொளியைக் காட்டும் திசை
அந்த மெய்ப்பொருளை உணர்வோம்
வணக்கத்தின் பெருமையை அறிவோம்
அன்புடன் விசாலம்
Sunday, December 16, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment