Monday, December 3, 2007

தோல்

மாட்டுத்தோல்
நமக்கு காலணி
ஆட்டு மயிர்
குளிருக்கு கம்பளி
யானைத்தந்தம்
அழகான சிற்பம்
காளைக்கொம்பு
தலைக்குச் சீப்பு
மயில் இறகால்
வெயிலுக்கு விசிறி
மான் தோல்
தியானத்தின் ஆசனம்
மீனால் உடற்தெம்புக்கு
மீனெண்ணை
பாம்புத்தோல்
கண்கவரும் கைப்பைகள்
மனிதத்தோல்
எதற்குப் பயன் ?
உடம்பில் உயிர்
இல்லை என்றால்
ஒருபிடி சாமபல் மீதி
உயிர் இருக்கும் போதே
செய்வாய் நீ பிறருக்கு உதவி ,,,

அன்புடன் விசாலம்

No comments: