Saturday, September 13, 2008

புகழோடு தோன்றுக

இசை மேதை திருமதி அருணா சாயிராம்

இவர் நமது இசையை மேல்நாடுக்ளுக்கும் எடுத்துச் சென்று புகழ் மாலைச் சூட்டி வந்திருக்கிறார் என்று தெரிவிப்பதில் மிகப் பெருமை அடைகிறேன் {singer Aruna has been honoured with a spl congressional proclamation issued by the U.S.House of representatives } அந்த இடத்தில் நம் நாட்டுத்
தேசிய கீதம் இசைக்க அதே போல் அவர்கள் நாட்டு தேசிய கீதம் இசைக்க அவளை
மரியாதைச் செய்தது எனக்கு மிகப் பெருமை ,,,,,,அருணா சாயிராமுடன் அவர் சிறு குழந்தையாய் இருந்ததிலிருந்தே பழக்கம் ,அவர் தாயார் திருமதி ராஜலட்சுமி தந்தை
திரு சேதுராமன் என் குடும்பத்தில் ஒருவராக இருந்தனர் அந்தப் பெற்றொர்கள் அருணா
பெரிய பாடகியாய் வர கனவு கண்டனர்,அவர்கள் இப்போது இருந்திருந்தால் எத்தனை மகிழ்ச்சி
அடைந்திருப்பார்கள்? அவர்கள் எங்கிருந்தாலும் ஆசிகள் வழங்குக் கொண்டிருப்பார்கள்
திருமதி அருணா நடனமும் படித்தார் . அவளுடன் நான் பல வருடங்கள் கூட இருந்திருக்கிறேன் பள்ளிக்குப் போகும் வயது ,அப்போதே பாட்டும் சாதகம் செய்ய
அவளது பெற்றோர்கள் மிகவும் உதவினர் ,
தனக்கென ஒரு பாணி செய்துக்கொண்டு எந்தப் பாட்டு பாடினாலும் அதில் ஒரு விருத்தம் போல் சேர்த்து பின் பாடல் பாடும் அழகே தனி . ,கச்சேரியில் முதல் பாதி நேரம் ராக ஆலாபனை, கற்பனை ஸ்வரங்கள் ராகம் தானம் பல்லவி என்று முடித்து பின் பாமர
மக்களுக்கும் புரியும்படி நாட்டுப்பாடல்கள் காவடிச் சிந்து திருப்பாவை துக்காராம் ஞானேஸ்வர்
போன்ற்வர்கள் பாடிய அபங் மராட்டியில் ,,என்று கச்சேரி களைக் கட்டும் ஒவ்வொரு பாடலிலும் அதன் பாவத்தைக் காண்லாம் முருகன் நேரே வருவார் குழலூதும் கண்ணன் என்ன ,,,,,திருப்பதி வெங்கடாசல்பதி என்ன! காமாட்சி என்ன! என்று பலரையும் நமக்கு நேரே
நிறுத்தி விடுகிறார் நாம் உணர்ச்சி மேலிட்டு அழுதும் விடுகிறோம் இது எல்லாவற்றுக்கும்
காரணம் கடும் உழைப்பு ,சுருதி சுத்தத்துடன் பல மணி நேரங்கள் அப்பியாசம் ,அதில் லயித்து ஒரு யோகம் போல் ஒன்றிவிடுதல் ,,,,,,,,,இத்தனை இருந்தும் கர்வம் இல்லாமல்
எல்லோரிடமும் இனிமையாகப் பேசும் குணம் தன் மாமியார் அவர்களிடம் அன்பும் மரியாதையும் வைத்திருக்கும் பண்பு என்று பல நற்குணங்கள் அவரிடம் இருக்கின்றன
அவர் கண்வர் திரு சாயி ராமும் எனக்கு நன்குப் பழக்கப்பட்டவர் அவரது ஒத்துழைப்பும் இவர் மேலே முன்னேற வழி வகுத்தது அவருடைய பாட்டு காளிங்க நர்தன தில்லானா,,,, ஊத்துக்காடு பாடல் இன்றும் காதில் ஒலிக்கிறது அவருடைய ஒவ்வொரு பாடலும் முத்துக்கள் ,,,, அருணா ,,,,நான் உங்கள் உயர்வைக் கண்டு மிகப்பெருமை அடைகிறேன்,நீண்ட ஆயுளைப் பெற்று வாழ்க வளமுடன்
,

ஓணம் வாழ்த்து

ஆகஸ்டு கடைசி வாரத்திலிருந்தே கேரளா களைக்கட்ட ஆரம்பித்து விடுகிறது எங்கு
பார்த்தாலும் ஒரே கூட்டம் நகைக் கடைகளிலோ கேட்கவே வேண்டாம் தவிர ஓணத்தின்
புடவையும் 300லிருந்து ஆரம்பித்து பல ஆயிரம் வரை ,,,எங்கும் மகிழ்ச்சி ,உல்லாசம் ,,
இது எல்லாம் எதற்கு? அவர்களது மன்னன் திரு மஹாபலி சக்கிரவர்த்தி அல்லவோ
வரப்போகிறார்
திருவோண நட்சத்திர நாளில் வந்து ஒவ்வொரு பிரஜையையும் ஆசிர்வதித்துப் போகிறார்
அவரை வரவேற்க ஒவ்வொரு வீட்டு வாசலிலும் புஷ்பங்களால் அழகானக் கோலம்
போடப்பட்டிருக்கிறது ,எந்தக் கோலம் சிறந்தது என்றுச்சொல்ல முடியாதபடி அத்தனை அழகுடன் நம்மை மயக்குகிறது அவர் வருவதால் யானைகளின் ஊர்வலம் அந்த யானைகளுக்கும் பளபளவென உடை அதில் சரிகை வேலைப்பாடு ,,தவிர வித்விதமாக வாண
வேடிக்கை ,எல்லாவற்றுக்கும் மேலாக அவருக்கு வித்வித்மாக பிரசாதம் அந்தச் சாப்பாட்டை
சத்தி {saddhi } கூறுகின்றனர் ஓலன் காலன் எரிச்சேரி கூட்டான் பாலபாயசம் சக்கைப்பாயசம்
என்று பல வகைகள் அவர்கள் போடும் வாழை இலையின் அளவைப் பார்த்தாலே வயிறு
ரொம்பிவிடும் அந்த இலையின் முழுவதிலும் பலவிதமான ஐட்டங்கள் ஓ சொல்ல மறந்தேனே
நேந்தரம் பழம் இல்லாமலா,,,,,,,,அதுவும் இலையில் பலரூபங்களில் பறிமாறப்படுகின்றன ,
இதன் புராணம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று மஹாவிஷ்ணு வாமன்ராக வந்து மூன்று அடிகள் யாசித்தார் அதை திரு மஹாபலி கொடுக்க சம்மதித்த்வுடன் விண்ணையும் மண்ணையும்
இரண்டு அடிகளாக அளந்து பின் மூன்றாவது அடி எங்கே வைப்பது என்று கேடக மஹாபலி
தன் தலையைக் காட்ட அவரும் தன்பாதத்தை அவர் தலை மீது வைக்க அவன் கீழே அழுத்தப்பட்டு விடுகிறான் எல்லா மக்களும் அவருக்காக வருந்தி அழ மாஹாபலியும் தன் பிரஜைகளைப் பார்க்க வருடத்தில் ஒரு நாள் அனுமதி வேண்டி
நிற்க ஸ்ரீ மஹாவிஷ்ணுவும் ஆசிகள் வழ்ங்குகிறார் திருவோண நட்சத்திரத்தில் அவர்
தன் மக்களைப் பார்க்க வருவதாக ஒரு ஐதீகம்
கேரளா சர்க்கார் இந்த வாரத்தைச் சுற்றுலா வாரமாக வைத்து விடுகிறது ஆகையால் வெளி
நாட்டவர்கள் கூடுகின்றனர் அவர்களுக்கு மிகவும் பிடித்த படகு போட்டி அல்லவா இருக்கிறது
அதுவும் கேரளா "வள்ளம் களியையும் கதக்களியையும் பார்க்க நாம் நம்மையே மறந்து
விடுவோம் அத்தனை உல்லாசம் ,,பாம்பு போல் வளைந்தப் படகில் வரிசையாக மக்கள் உடக்கார்ந்து ஒரே மாதிரி துடுப்பு செலுத்தி அத்துடன் பாடலும் ரிதத்துடன் ஓட்ட ,,பார்க்க
வேண்டிய காட்சி தான் சிலர் புலி வேஷம் போட்டுக் கொண்டு தெருவில் நடனமும் ஆடுகின்றனர்

ஒணத்திற்கு நல் வாழ்த்துகள்

உலக நல்ல எண்ணங்கள் ப்திவு நாள்

உலக நல்லெண்ண நாள்,,,ஆஹா கேட்க்வே எத்தனை அருமையாக இருக்கிறது இந்த நாளில் ஒரு வெறுப்பு இருக்காது ஒரு வசவு இருக்காது கோபம் தாபம் எல்லாவற்றையும் மூட்டைக்
கட்டி வைத்து விட்டு மனதிலே நல்லெண்னங்களாலே நிரப்புவோமாக , ஒரு குழுவில் செய்யும் பிரர்த்தனைக்கே எத்தனைச் சக்தி நாம் எல்லோரும் கண்கூடாகப் பார்க்கிறோம் ஒவ்வொருவருடைய நல்லெண்ணங்களும் அவர்கள் வாழ்த்தலும் நம்மைச் சுற்றிப்பரவி பிரபந்தத்தில் கலந்து அதனால் நல்ல வைப்ரேஷன் ஏற்பட்டு அதனுடைய நற்பலன்களையும்
நாம் காண்கிறோம் இதே போல் உலகமுழுவதும் இன்று பாசிடிவ எண்ணங்கள் உதயமாக அதனுடைய சக்தி எத்தனை வலுவு மிகுந்ததாக இருக்கும் ?இலங்கையில் நல்ல
அமைதியான வாழ்க்கைப் பிறந்தவிட்டதாக எண்ணுவோம் தீவிரவாதிகள் மனம் மாறி
நல்ல செயல் செய்வதாக எண்ணுவோம் உலகில் இருக்கும் எல்லா மக்களும் வசதியாகவும்
நிம்மதியாகவும் வாழுகிறார்கள் என்று எண்ணுவோம் இதேபோல் பல பிரச்சனைகளுக்கு
முடிவு வந்து வளமாக வாழ்வதாக எண்ணுவோம் தவறு இழைப்பவர்களை மன்னித்து அன்பைப் பரப்ப எண்ணுவோம் பெற்றோர்கள் குருமார்களுக்கு சேவை செய்ய எண்ணுவோம்
இதே போல் எத்தனை ந்ல்லெண்ணங்கள் உண்டோ அத்தனையும் உலகம் முழுவதும் எண்ண அதன் பலன் சொல்ல இயலாது ஆனால் எண்ணுவதிலும் போலித்தனம் இல்லாமல்
உணமையாக அடி மனத்திலிருந்து வர வேண்டும்
இதனால்தான் ஒருவருடைய பெயரும் பார்த்து நல்ல பொருள் வருவதாக வைக்கிறார்கள்
பலர் அவரை அழைக்க அது அவரைச் சுற்றி பரவி அவருக்கு நல்லது செய்கிறது சிலர் நல்ல பெயரை வைத்துப் பின் சுருக்கி விடுகிறார்கள் அதனால் கிடைக்கும் பலன் போய்
விடுகிறது சில பெயரில் இருக்கும் பொருளில் எதிமறை அலைகள் பரவி அது அவர்களுக்கு
துன்பமும் விளைவிக்கிறது "நேமாலஜி"இதிலிருந்து தான் பிறந்திருக்கும் என நினைக்கிறேன்

எண்னங்களின் வலிமைக் குறித்து ஒரு புத்தகத்தில் படித்தேன்
ஒரு நோயாளி தன் நோயின் விஷத்தன்மை நீங்க தினமும் அந்த நோய் தன்னைவிட்டு
கறுப்பு கலரில் வெளியே செல்வதாகவும் அதனால் தான் திரும்ப உடல் நலம் பெற்றது
போல் வலிமையான எண்ணங்களை தினமும் கற்பனைச் செய்ய டாக்டர்களும் வியக்கும்படி
நன்கு தேறிவிட்டார், இதுவே தான் ஆல்பா தியானமும் சொல்கிறது ந்ல்லெண்ணங்களை
விதைப்போம் நன்மைச் செய்வோம் நற்பலன்களைப் பெறுவோம்

உலக நல்லெண்ணங்கள் நாளுக்கு என் வாழ்த்துக்கள் அன்புடன் விசாலம்