Thursday, September 29, 2011

கலைமகளை வரவேற்கும் முருகன்

புரட்டாசி மாதம் .மகம் நட்சத்திரம் .முருகப்பெருமான் ஆசையாக
குமாரக்கோயிலிலிருந்து பத்மநாபபுரம் அரண்மனை வந்து கலைமகளின்
வருகைக்காகக் காத்து நிற்கிறார் .ஆம் ! சரஸ்வதி தேவி
திருவனந்தப்புரத்தில் நவராத்திரிவிழாவை ஆரம்பிக்க வரப்போகிறாள்.
இந்த சரஸ்வதி கவியரசர் கம்பர் பூசித்த விக்ரஹம். சோழநாட்டிலிருந்து
சேரநாட்டிற்கு வந்தப்பின்னர் அங்கிருந்த மன்னருக்குப்பரிசாகக் கொடுத்த
சரஸ்வதி விக்ரஹம் .. அந்தக்கலைமகள் இன்று யானைமேல் பவனி வருகிறாள் .
எங்கிருந்து வருகிறாள் தெரியுமா? முக்கடல் சேரும் இடமான,தமிழகத்தின்
எல்லையான கன்யாகுமரியிலிருந்து வருகிறாள். .அவளுக்குத் துணையாக
சுசீந்திரம் கோயிலிலிருந்து முன்னூற்று மங்கையும் சேர்ந்து வருவாள்,
முன்னே உதித்த மங்கை முன்னூற்று மங்கையாக ஆகி இருக்க வேண்டும் .

இதோ வந்துவிட்டாள் கலைமகள்.
பதமநாபபுரம் அரண்மனையில் தேர் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு
மிகப்பிரமாதமான ஊர்வலம் துவங்குகிறது .பத்மநாபதாசர்கள்
என்று சொல்லிக்கொள்ளும் திருவாங்கூர் ராஜபரம்பரையினரில் ஒருவர் வாள்
ஏந்தி முன்னால் செல்கிறார்,நீண்ட பாத யாத்திரை துடங்குகிறது ,சுமார்
மூன்று நாட்கள் , பிரயாணம் . வழியெல்லாம் முருகனையும் கலைமகளையும்
பார்க்க
ஏகப்பட்ட கூட்டம்
கூட வரும் கந்தன் கரமனை என்ற இடத்தில் தன் ஊர்வலத்துடன் நிற்கிறான் ,
அங்கு ஒரு வெள்ளிக்குதிரை மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு அதில்
அழகன் குமரன் அமர்கிறான் .கூடவே யானைகளின் அணி அழகாக நடக்க
ஆரம்பிக்கிறது ஒவ்வொரு யானைக்கும் நெற்றிப்பட்டம் பளபளக்க கூடவே மங்கல
ஒலி நாதஸ்வரத்தில் கிளம்ப ஊர்வலம் ஆர்யசாலைக்கு வருகிறது அங்கு முருகன்
தேவிகோயிலில் சென்று அமர்ந்து அருள் புரிகிறான் .
சரஸ்வதி தேவி யானையின் மேல் அமர்ந்தபடி
சரஸ்வதி மண்டபத்தில் வந்து நவராத்திரி முடியும் வரை அங்கு எழுந்தருளுகிறாள்.

பின் விழா தொடங்குகிறது .விழாவில் இசை
மேதைகள் பங்கு பெற்று ஸ்ரீ சுவாதி திருநாள் இயற்றிய பல
கீர்த்தனைகளைப்பாடுகின்றனர்..
ஸ்ரீ சுவாதிதிருநாள் என்ற மன்னர் ஸ்ரீபத்மநாபசுவாமியின் மேல் நூற்றுக்கணக்கான
பாடல்கள் எழுதியிருக்கிறார் ,
நவராத்திரி தேவிக்காக அம்பாளின் மேல் பல பாடல்களியற்றி
நெஞ்சுருகிப்பாடியிருக்கிறார்,
அவரது ஞாபகமாக பல கர்நாடக இசை வல்லுனர்கள் இந்த விழாவில் பங்கேற்று
விழாவை மேலும் சிறக்கச்செய்கிறார்கள்,
இன்றும் மன்னர் குடும்பத்தைச்சேர்ந்தவர்கள்
இதில் பங்கு பெறுகின்றனர் ,
அம்பாளே ஆரம்பித்து வைக்கும் இந்த நவராத்திரியின் சிறப்புக்கு எல்லை ஏது?

Thursday, April 7, 2011

மானஸ பூஜை

பலர் பலவிதமான பூஜை செய்கிறார்கள் சிலர்.அதற்கென்று மிகப் படாடோபமாய்
சிலவுகளைச்செய்து த்ங்களது பெயர் பெரிதாக வரவேண்டும் என்ற நினைப்பில்
மிகவும் அலட்டிக் கொள்கிறார்கள் .
அந்தப்பூஜையில் அவர்கள் மனது நிலைக்கின்றதா என்றால் இல்லை .கூட்டத்தில் எந்தப்பெரியவர் வந்திருக்கிறார்
{இங்குப்பெரியவர் என்றால் பணக்காரர் ]என்றுப்பார்த்து அவர் உள்ளே நுழைய
பூஜையையும் விட்டு எழுந்தோடி வரவேற்பார் . நான் வழக்கமாகப்போகும் ஒரு கோயிலில் உள்ளே நுழைந்தால் ஒருவிதமான நிம்மதியும் மனதில் சாந்தியும் உண்டாவதை உணருவேன் .நல்ல பாசிடிவ் எனர்ஜி அலைமோதும் ,
ஆனால் அங்குப்பூஜை செய்யும் சிலரின் போக்கு சுத்தமாக எனக்கு ஒத்துவருவதில்லை . புரோகிதர் கண்களுக்குத்தெரியும் யார் யார் தட்டில் பத்துரூபாய்
வைப்பார்களென்று .....ஆகையால் சிலருக்கு ஆர்த்திக்கூடக்காட்டாமல்
ஏதோ வேலைச்செய்வது போல் பாவித்து தவிர்த்துவிடுவார் ,வேறுசிலருக்கு
"வாங்கோ வாங்கோ"என்று அழைத்துக் குசலம் விசாரித்தப்பின் எல்லாம் நியமும்
செய்து அவர் கழுத்தில் மாலையும் போட்டு விபூதி வழங்குவார் .அவர் தட்டிலும்
ஐம்பது ரூபாய் விழும் இதெல்லாம் பார்த்தால் வீட்டிலேயே மானசீகமாக ஒரு நிலைமனதோடு சிரத்தையோடு பிரேமபாவத்துடன் அந்த இஷ்டத்தெய்வத்தைநினைத்துப்பூஜை
செய்யலாமே என்று தோன்றுகிறது பகவான் அந்தப்பக்தியை ஏற்று உடனே வந்துவிடுவார்,
வீட்டுப்பெண்மணிகள் தாங்கள் வேலைச்செய்யும் போதேமனதில்இஷ்டத்தெய்வத்தின்
தியானத்தில் ஈடுபட்டால் அங்கும் அம்பிகை அல்லது ஈசன் அருள் புரிய வந்துவிடுகிறார் .
இதெற்கெல்லாம் முக்கியமாகத்தேவைப்படுவது
சிரத்தை ..

பக்தப்பிரஹலாதன் "நாராயணா "வை விடாமல் நினைந்தான் எத்தனையோ இடர்கள் வந்தும் அவரால் காப்பாற்றப்பட்டான் .தியாகராஜரோ
தன் பக்தியால் இசைமூலம் ஸ்ரீராமரையே
தரிசித்தார் ,கோரகும்பர் மண்பாண்டம் செய்தப்படியே பக்தியைக்கடைப்பிடித்து இறைவனையும் தரிசித்தார் கபீர்தாஸ் தரிபோடும் ஒரு நெசவாளி .அவரும் தன் தொழிலைவிடவில்லை ஆனால் பல "தோஹா"க்கள் செய்து வேதந்தத்க்கருத்துக்களை
நம்மிடம் வைத்தார் ,செறுப்பு தைக்கும் தொழிலைக்கொண்ட ரயிதாஸும் தன் தொழிலை
விடவில்லை ஆனால் நாமஸ்மரணனையினால்
கடவுளின் அருளுக்குப்பாத்திரமானார் ,
ஆகையால் மானஸபூஜை மிகவும் சிறப்புவாய்ந்த ஒன்றாகக்கருதப்படுகிறது

"மானஸசிவபூஜை செய்குவோம்
சச்சிதானந்தம் பெற "என்ற பாடல் எனக்கு
ஞாபகம் வருகிறது

"கனகதாசரின்வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் இந்த மானசபூஜையின் மேன்மைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது

கனகதாசர் மிகச்சிறந்த கிருஷணபக்தர் பிறப்பால் அவர் நீசகுலத்தில் தோன்றினாலும்
அந்தமாதவன் மேல் அவருக்கு இருந்த பக்தியைச்சொல்லமுடியாது மிகவும் தயாளுவாக
இருந்ததால் தனக்கென்று ஒன்றும் அவர் வைத்துக்கொள்ளாமல் எல்லாமே தானம் செய்துவிடுவார் .முக்கால்வாசி நேரம் அவர் காட்டில் மாடுகள் மேய்த்தபடி மானசபூஜை செய்தபடி கிருஷணரின் அழகில் தன்னை
மறப்பார்

ஒரு நாள் .ஒரு பல்லக்கு அந்தக்காட்டில் வந்துக்கொண்டிருந்தது அதில் அமர்ந்திருந்தவர்
ஒரு பெரிய மஹான். பெயர் வியாசராயர்.
அங்கு ஒரு துளசிவனம் இருக்க இந்த மஹான் மனதினாலேயே ஒரு துளசிமாலைக்கட்டி
கண்ணனை நினைத்து அவன் தோளில் போட்டார் ஆனால் அந்த மாலை கண்ணனின் தோளில் விழாமல் கீழே சரிந்தது இதைப்பற்றி அவர் தெரிந்துக்கொள்ள அவர் தன் சிஷ்யர்களிடம் காரணம் கேட்டார் .
"ஒருநிலைப்பட்ட மனமாக இருந்தால் இப்படி நடக்காது மனம் அலைப்பாயும் போதுதான்
இதுபோல் நடைப்பெறும் அதனால் தான் நீங்கள் வீசிய துளசிமாலையும் கண்ணன்
கழுத்தில் விழவில்லை " என்றனர் சீடர்கள்

தூரத்தில் வரும் சிபிகையைப்பார்த்து அதில் யாரோ பெரிய மகான் இருப்பார் என எண்ணி
கன்கதாசர். ஓடோடி வந்து கைக்கட்டியபடி தூர நின்றார் பின் வணங்கினார். அவரைப்பார்த்த
மகான் கேட்டார் .

"நீ ஓடி வந்தக்காரணம் என்னவோ?"

"சுவாமி நான் நீசக்குலத்தில் உதித்தவன் படிப்பில்லாதவன் அறிவற்றவன் இருப்பினும்
நான் கூற வந்ததைத்தயவு செய்து கேட்க வேண்டும் தவறு இருந்தால் மன்னிக்க வேண்டும் "

"மேலே சொல்லு"

"நீங்கள் கிருஷ்னனுக்கு அணிவித்த துளசிமாலை அவனது மத்தில் மாட்டிக்கொண்டு
விட்டது அதனால் அவனது தோளில் அது விழவில்லை'

"ஏம்பா இதெல்லாம் உனக்கு எப்படித்தெரிந்தது?'

"நானும் அந்தமாதவனின் தியானத்தில் இருந்தேன் .நீங்கள் துளசிமாலைக்கட்டி கிருஷ்ணனுக்கு வீசியதைக்கண்டேன் அது மத்தில் மாட்டிக்கொண்டதையும் கண்டேன் "

"அப்படியா என்ன ஆச்சர்யம் "

"சுவாமி மானஸ பூஜை நாம் இருவரும் செய்கின்றோம் அதனால் நம் இருவர் மனதிலும்
கிருஷ்ணன் தானே இருக்கிறான் "

"தம்பி ஹரிதாஸர்களில் மிகச்சிறந்தவனாக
இருக்கும் நீ நீசனில்லை. யோகேச்வரன் நீ
உத்தம புருஷன் நீ . தூர ஏன் நிற்கிறாய்/
என் அருகில் வா"

கனகதாசர் அருகில் வர அப்படியேஅவரை
ஆலிங்கனம் செய்துக்கொண்டு மந்த்ரோபதேசம்
செய்து அவரைத்தன் சிஷ்யராக ஆக்கிக்கொள்கிறார் .

இந்த உண்மைச்சம்பவம் நமக்குப் பக்தியும் சிரத்தையும் மனத்தின் ஒருநிலையும் இருந்தாலே போதும் இறைவனின் தரிசனம் கிடைத்துவிடும் என்பதை மிகத்தெளிவாக
எடுத்துக்கூறுகிறது ,அலைப்பாயும் மனதுடன் பல கோயில்களைத் தரிசிப்பதைவிட உள் மனதில் கோயிலைக்கட்டி ஆண்டவனைக் காணலாம்

ஓம் எனும் சக்தி

ஓம் என்ற மந்திரத்திற்கு மிகுந்த சக்தி உண்டு என்பது நம் எல்லோருக்கும் தெரியும் . அதை மேலும் என் அனுபவத்தில் உணரும் சந்தர்ப்பமும் எனக்குக்கிடைத்தது . நாம் உடல் நலம் குன்றி ஆஸ்பத்திரியில் இருப்பவர்களையும் அதே போல் வீட்டில் படுத்திருப்பவர்களையும் காணச்செல்கிறோம் .அப்போது நாம் அவர்களுக்கென்று முசம்பி ,ஆரஞ்சு
அல்ல்து ஆப்பிள் என்று ஏதாவது வாங்கிப்போகிறோம் சில சமயம் ஹார்லிக்ஸ்
பாட்டிலும் வாங்கிச்செல்கிறோம் .
எனக்குத்தெரிந்தவர் தில்லி அருகில் இருக்கும் குர்கான்வில் {gurgaon} ஒரு பத்து நாளாக படுத்த படுக்கையாக இருந்தார் நல்ல சுரம் .........அவர் வீட்டில் ஒரு திருமணம் வெகு சமீபத்தில் நடக்க இருந்தது . நான் அவரைக்காண ஆப்பிள் வாங்கிவந்தேன் . அப்போது மும்பையில் ஒரு மஹானைச்சந்தித்ததும் அவர்
கூறியதும் என் ஞாபகத்திற்கு வந்தது .

"யாராவது உடல்குன்றி வியாதியுடன் படுக்கையில் வீழ்ந்திருக்கும் போது எதாவது பழத்தை வாங்கி அதைக்கட்டைவிரலாலும் ஆழ்காட்டிவிரலாலும் பிடித்துக்கொண்டு வலது கையினால் அதன் மேல் " ஓம் " என்று எழுதிவிட்டு
அதை 108 தட்வையோ அல்லது 1008 தடவையோ உருவேற்றி பின் வாயால் ஊதிவிட்டு அந்தப்பழத்தை அந்த நோயளிக்கு அளிக்க அவர் விரைவில் குணமடைந்து விடுவார் .அந்தப்பழத்தைக்கொடுக்கும் போது மிருத்துஞ்சய மந்திரத்தைச்சொல்லி மனதார பிரார்த்தித்தபடி கொடுக்க வேண்டும்'

அந்தப்பெரியவர் சொன்னதை நான் பார்க்கப்போகும் நோயாளியிடம் முயன்று பார்க்க எண்ணினேன் மிகவும் சிரத்தையாக அதன்படி செய்தேன் . ஆஹா என்ன ஆச்சர்யம் . ! இரண்டுநாளில் சுரம் போய் அவர் திருமணத்திலும் கலந்துக்கொண்டார் . எல்லாம் நம்பிக்கைதான்
இதைச்சிலர் "காக்கா உட்க்கார பனம் பழம் விழுந்தது போலும் எண்ணலாம் .
எனக்கு இந்த "ஓம்" பலித்தது

ஏப்ரல் 7 எனக்கு மறக்கமுடியாத நாள்

ஏப்ரல் 7ந்தேதி என்னால் மறக்கமுடியாத தேதிதான் , ஏன் என்று கேட்கிறீர்களா?
இந்தத்தேதியில் தான் "உலக சுகாதார நாள் "கொண்டாடப்படுகிறது . இது மறக்க
முடியாத நாளாக இருக்கக் காரணம் என் கணவர் அந்த ஆபீசில் தான் வேலை செய்து
வந்தார் . மார்ச் மாதத்திலிருந்தே வேலை சக்கைப்போடு போடும் .இன்றைய தினம் தில்லி W.H. O. காரியாலயத்தின் பெரிய மண்டபத்தில் ஒரு பெரிய திருவிழாதான் நடக்கும் . ஒரு அரண்மணைக்குள் புகுவது போல் மிகப்பிரமிப்பாக இருக்கும் .வருடாவருடம் எனக்கும் சேர்த்து அழைப்பு வந்துவிடுமாதலால் அங்குப் போவதைத்தவிர்க்க முடியாது. மாலை சுமார் 6 மணிக்கு விழா ஆரம்பிக்க இரவு 11 வரைப்போகும் . இந்த விழாவிற்கு எல்லோரும் தவறாமல் ஆஜராகிவிடுவார்கள்
இந்தியாவின் சுகாதார மந்திரியும் வருவார் ,தவிர W.H O டைரக்டரும் வருவார்
அன்றைய வருட தீர்மானம் ,ஸ்லோகன் எல்லாம் பேசிமுடித்தப்பின் எல்லோரும்
அழகான கண்ணாடிக்கோப்பையை. எடுத்து அதில் ஷிவாஸ் ரீகல் என்ற மிக உயர்ந்த மதுவகையை நிரப்பிப்பார்கள் .கூடவே
சூடான பக்கோடா வகைகளும்
வறுத்த முந்திரிபருப்பும் மேலும் பல அசைவ விஷயங்களும் வரும் ,

அந்தச்சூழ்நிலைஎங்களைப்போன்றவருக்குச்சற்று சிரமம் தான் ,அந்த நேரத்தில் என்ன செய்வது ?
சில தமிழ்ப்பெண்மணிகளைக் கண்டுப்பிடித்து அவர்களுடன் பேசவேண்டும்
என்ன பேசுவது ? அதுவே ஒரு கலைதான் .

" மாமி நீங்கள் மிஸஸ் ......?
"நான் தான் மிஸஸ் வேணுகோபால் "

"உங்கள் ஸாரி மிகவும் எடுப்பாக இருக்கிறது"

"தாங்கஸ்.... .இது பிரகதிமைதான் எக்சிபிஷனில்
வாங்கினேன் "

" உங்கள் வீடு எங்கே.......கரோல்பாக்தானா?'

"இல்லை நாங்க ஜனக்புரியில் இருக்கோம் ஆமாம் நீங்க யாருன்னு சொல்லலையே !"

"நான் தான் மிஸஸ் ராமன் "

"ஒரே ஆபீஸிலே நம்ம கணவன்மாரெல்லாம் இருந்தும் நம்ம ஒருத்தருக்கொருத்தர் contact இல்லை " . என்று சொன்னபடியே அந்த மாமியின் கண்கள் தன் கணவர் இருக்கும் திசையில் செல்லும் அவர் கோப்பையை ரசித்து கையில் பிடித்திருப்பார். ..பின் அந்த மிஸஸ் என்னிடம் கேட்பாள்.

"உங்கள் பையன் இப்போ என்ன செய்யறான் ?' .

"அவன் இப்போ பிலானியில் நாலாவது வருஷம்படிக்கிறான் "

இதுபோல் அர்த்தமில்லாமல் மேலுக்காக பேசி காலங்கழிக்கும் ஒரு குழுவும்
தங்கள் கணவருடன் சேர்ந்து கொட்டம்போட்டபடி மதுவை ருசிப்பாக்கும் சில
வடநாட்டுப்பெண்மணிகளின் குழுவும் கலந்து பார்ட்டி நடக்கும் .
நாசூக்காக ஒன்று அல்லது இரண்டு முந்திரி பாதாமை எடுக்கும் ரகமும் இருக்கும்.

ஒவ்வொரு தடவையும் கையில் முந்திரியை அள்ளிக்கொள்ளும் ரகமும் இருக்கும் .

உதட்டளவில் அன்பும் .உள்ளத்தில் பொறாமையும் இருக்க உலவும் குழுவும் ,
"சம்சா "என்று சொல்லும் தொண்டர்கள் கூட்டமும் தனக்கு எதாவது ஆதாயம் கிடைக்காதா என்ற நினைவில் மேலதிகாரிகளின் வீட்டு வேலையும் செய்யத்தயங்காத நபர்களும்
அங்கு வந்து "மஜா" செய்வார்கள் ,
ஒரு மணி நேரம் பொழுதை எப்படியோ கழித்தாலும் பாக்கி மூன்று மணி நேரத்தைக்கழிப்பது என்னைப் பொருத்தவரையிலும் ஒரு தண்டனைதான் .ஆண்கள் தங்கள் ஆபீஸ்
நிர்வாகம் பற்றியோ .அரசியலைப்பற்றியோ அல்லது கிரிக்கெட் மாட்ச் பற்றியோ பேச நேரம்
போவதே தெரியாது அதுவும் கையில் மதுக்கோப்பையும் ஏற அந்த உலகமே தனிதான் .

வருடம் முழுவதும் உழைத்துப்பின்
தன் இஷடப்படி எல்லோரும் சமமாக ஒரே ஹாலில் கூடி இசை , ஜோக்குகள் , என்று ஆரம்பித்து எல்லோரும் ஒன்றாகப்பழக ஒரு சந்தர்ப்பம் அளிக்கிறதே ,இந்த ஆபீஸ் அதைப் பாராட்ட வேண்டியதுதான்

இந்த உலக சுகாதார அமைப்பு ஐக்கிய நாடுகளின் சபையின் ஒரு பிரிவாகும்
உலக சுகாதார கூட்டம் 1948ல் ஆரம்பித்தது பின்
1950லிருந்து {ஏப்ரல் 7ந்தேதி } தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது மக்களிடையே சுகாதார
விழுப்புணர்ச்சி ஏற்படுத்தவும் நோய்களைத்தடுக்க
தக்க நடவடிக்கை எடுப்பதும் இதன் முக்கிய கோளாக இருந்தது
இதன் தலைமை ஆபீஸ் ஜெனிவாவில் உள்ளது
இது எடுத்த சில தலைப்புக்கள்

சுகாதார கேடு ,
இன்று செயலில்லை என்றால் நாளை குணமில்லை

நோயைக்குணமாக்க கூடுதல் வசதி

ஒன்றுபட்டு உடல் நலத்திற்காக உழைப்போம்

தாய்க்கும் சேய்க்கும் இரு பாதுகாப்பு

தெருவின் சுத்தம்

சுற்றுச்சூழநிலை

பிறந்த குழந்தைக்கு மூன்று முக்கிய ஊசிகள்

மனக்கலக்கம் .மன அழுத்தம் , மாறுபட்ட மனநிலை mental disorder

தொற்று நோய்

இளம்பிள்ளை வாதம்

எய்ட்ஸ் நோய்


இது போல் பல விஷயங்களை எடுத்துக்கொண்டு அதற்கென்று என்னவெல்லாம்
செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்து
அதை வெற்றிகரமாக முடிக்கும் திறன்
அவர்களிடம் இருந்து வருகிறது
இதேபோல் சிக்கன்குனியா ஸ்வைன் ப்ளூ
போன்ற நடுநடுவே தலைக்காட்டும் பயங்கர நோய்களையும் ஆய்வு செய்து அதற்குத்தகுந்த
வைத்தியமுறைகளையும் ஆறாய்ந்து மக்களிடம்
அந்த்ந்த நாட்டின் பிரதிநிதிகள் மூலமாக சேர்ப்பிக்கிறார்கள்

இந்த வருடம் அவர்கள் எடுத்த தலைப்பு

"Anti micodrial resistance " அதாவது ஆங்கில மருநதுகளின் நச்சுபொருடகள் நம் உடலில் நாம் உட்கொள்ளும் போது இரத்தத்துடன் கலக்க அதைத்தாங்கும் சக்தியை {immunity }அதிக்கப்படுத்த என்னவெல்லாம் செய்யலாம்
என்ற விஷயத்தை இந்த வருடம் எடுத்துக்கொந்திருக்கிறது என நினைக்கிறேன்
மருத்தவர் இதைப்பற்றி நன்கு கூற இயலும்
உலக சுகாதார நாளில் நாம் உடல் சுத்தத்துடன்
மனதையும் சுத்தமாக வைத்துக்கொள்வது மிக
அவசியம்

வட நாட்டில் சூரியனது கோயில்கள்

மார்கழி மாதக்குளிர் கொஞ்சம் கொஞ்சமாகக்குறைய
தை மாதம் தன்னுடன் வசந்தத்தைக்கொண்டு வந்து
எல்லோரையும் மலர வைக்கின்றது ."தை பிறக்க
வழி பிறக்கும் " என்றபடி தை மாதத்தில் பல "பீ பீ டும் டும்" என்றச்சத்தம் , பல திருமணங்கள் ,பல முகூர்த்தங்கள் .....இனிய கனவு காணும் இளைஞர்கள் மனம் பூரிக்க , குயில் இசைப்பாட மயில் நடனமாட எங்கும் குதுகூலம் , எங்கும்
ஆட்டம் பாட்டத்துடன் தை மாதம் பிறக்க சூரிய பகவான்
உத்திராயணத்தில் பிரவேசிக்கிறார் சூரிய நாராயணரது பூஜையுடன் பொங்கல் பானை
வைக்க்கப்பட்டு"பொங்கலோ பொங்கலோ"என்றகோஷத்துடன்
பாலும் பொங்கி வழிகிறது . பால் பொங்கி வழியும்
திசை நல்லதாக இருந்தால் அந்த வருடம்
மேன்மையாக இருக்கும் என்ற நம்பிக்கையும்
கூடவே பிறக்கிறது.
சூரிய பூஜை மிகவும் முக்கியமான ஒன்று .நம் உடலில் கண்களுக்கும் தோல்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டால் சூரிய பகவானை வழிபடவேண்டும்
மேலும் மனதில் உறுதி, பலம் மற்றும் தேக ஆரோக்கியத்திற்கும் சூரிய வழிபாடு மிகவும்
இன்றியமையாத ஒன்று. யோகாவில் சூரிய நமஸ்காரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது


சூரியனது கோயில் வெளிநாட்டிலும் இருந்ததாகவும்
சூரிய வழிபாடு தொன்றுதொட்டே இருந்து வருகிறது
என்றும் சரித்திரத்தில் தெரிய வருகிறது

நான் அஸ்ஸாம் போனபோது ஒரு வித்தியாசமான சூரியனது கோயில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது

இங்குச்சூரியன் கோயில் வட்டவடிவமாக "சூரியபஹார்" என்னும் மலைமேல் "கோல்புரா'
என்ற இடத்தில் உள்ளது இந்தக்கோயிலில் சூரியன் இருக்கும் அமைப்பும் வித்தியாசமாக இருக்கிறது பன்னிரண்டு சூரிய உருவங்கள் சுற்றி நிற்க நடுவில் சூரியனின் தந்தை "கச்யபர்"
அமர்ந்திருக்கிறார். புதைப்பொருள் ஆராய்ச்சியில் இங்கு சில லிங்கங்களும் கிடைத்தனவாம்
சூரியன் அருள் புரியும் இடம் தான் இந்தச்சூரியமலை என்று இங்கிருக்கும் மக்கள்
நம்புகிறார்கள்.


மத்யப்பிரதேசத்தில் உனாவோ {unao} என்ற இடத்தில் பிரமண்ய தேவ கோயில் என்பது சூரியனுக்காகக் கட்டப்பட்டக்கோயில் .,,,,
ஒரு செங்கல் மேடையின் மேல் கறுப்பு வண்ண சிலேட்டுக்கள் பதிக்கப்பட்டு அதன் மேல் சூரிய பகவான் அருள்புரிகிறார் .சிலையைச்சுற்றி இருபத்தொன்று முக்கோணங்கள் செம்பினால் செயயப்பட்டு சிலைக்குப்பாதுகாப்பாக
அவைகள் அமைகின்றன பீஷ்வாக்களும் இந்தகோயிலில் பலத்திருப்பணிகள் செய்திருக்கிறார்கள்

மிகப்பழமையான சூரியனது கோயில் குஜராத்திலும் மோதேரா என்ற இடத்தில் நமக்குக்காண முடிகிறது 1026 ம்
ஆண்டில் இந்தக்கோயில் கட்டப்பட்டது சூரியனின் கதிர்கள் சில நாட்களில் உள்ளிருக்கும் சிலைமேல் விழுகின்றன .உள்ளிருக்கும் மண்டபத்தில் பல
சித்திரங்கள் தத்ரூபமாய் செதுக்கப்பட்டிருக்கின்றன
பல நடனக்கலைஞர்கள் இங்கு இருக்கும் மண்டபத்தில் இயற்கைச்சூழலில் நடனங்கள் ஆடுகின்றனர்

ஆந்திராவில் அரசவில்லி என்ற இடத்தில்ஏழாவதுநூற்றாணடைச்சேர்ர்ந்த
"சூர்யநாராயணஸ்வாமி கோயில் ஒன்று இருக்கிறது இதைக்கலிங்க ராஜா
கட்டினாராம் உள்ளே கர்ப்பகிரஹத்தில் சுமார் ஐந்து அடி உயரம் கொண்ட கறுப்பு கிரனைட் கல்லில் சூரிய பகவான் நிற்கிறார் அவரது இருபுறமும் இரு மனைவிகள் உஷாவும் சாயாவும்
நின்று அருள்பாலிக்கின்றனர் சூரியபகவான் ஒரு தாமரை மொட்டைக் கையில் பிடித்திருக்கிறார்
ஆகையால் இவரைப் "பத்மபாணி "என்றும் அழைக்கின்றனர் இந்தக்கோயில் "ஸ்ரீகாக்குலம்" என்ற இடத்தில் இது அமைந்துள்ளது

இப்போது மிகவும் புகழ் வாய்ந்த கொனாரக் சூரிய
கோயிலைப்பார்க்க நாம் வருவோம் இது ஒரிஸ்ஸா மாகாணத்தில் உள்ளது
அடுத்து வரும் சூரியன் கோயில் ஒரிஸ்ஸாவில் இருக்கும் கொனாரக் இது கங்கை
நதி தீரத்தில் அமைந்துள்ளது இந்தக்கோயில் பலதடவைகள் அன்னியர்களது படையெடுப்பால் சூரையாடப்பட்டு அதன் பல பாகங்கள் சிதிலடைந்து வீணாகிப்போய்விட்டன. தவிர இயற்கையின் சீற்றத்தாலும் கடல் கொந்தளிப்பாலும் பாழ்பட்டு விட்டது
எஞ்சி இருக்கும் கோயிலைப் பார்க்க பல வெளி நாட்டவர்கள் வருகின்றனர்
,இதன் கட்டடக் கலை மிகச்சிறப்பு வாய்ந்தது இதன் கலை நுட்பத்தைச் சொல்ல இயலாது . அங்கு இருக்கும் சிற்பங்களும் செதுக்கின விதமும் நம்மை மிகவும் வியப்படைய வைக்கின்றன.
முதலாம் நரசிம்மதேவன் 13ம் நூற்றாண்டில் மிகவும் வித்தியாசமான முறையில் இதைக் கட்டினான். கற்கள் நடுவே இரும்புத்துண்டுகளின் இணைப்புக் கொடுத்துக்
கட்டப்பட்டுள்ளது. சூரியன் ஏழு குதிரைகள் கொண்ட தேரில் பவனி வருகிறான்
அந்தத் தேரின் சக்கிரங்கள் 24.

அந்தச்சக்கிரங்களின் வேலைப்பாடு மிகவும் மனதைக்கவர்கிறது .பிற்காலத்தில் சூரியனின்சிலை அகற்றப்பட்டு தற்போது பூரியில் இருப்பதாகச் சொல்கிறார்கள் ,
இந்தக் கோயிலில் வில்ங்குகளின் சிலைகள் பறவைகளின் சிலைகள் அதைத்தவிர தேவ்
தேவிகள், அப்சரஸ் போன்ற அழகிகள் எல்லாம் மிக நுணுக்கமாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன , குழந்தைகளும் இந்த விலங்குகள் பறவைகளால்
ஈர்க்கப்படுகின்றனர் ,இளைஞர்களுக்கு காமசூத்ராவின்அடிப்படையில் பல சிற்பங்கள் அங்கே காணப்படுகின்றன .வயதானவர்களுக்கும் தேவ தேவிகள் அருள் புரிகின்றனர் ,
கோயில் மூன்று பிரிவுகளாக உள்ளது சூரியன் ஒவ்வொரு நாலு மாதத்தில் ஒவ்வொரு
பிரிவின் வழியாக தன் ஒளியைத் சூரியனார் மீது வீச வைக்கிறான்,இந்தக்கோயிலை யுனெஸ்கோ உலகப்பாரமபரியச்சின்னமாகப் பாதுகாத்து வருகிறது

இத்தனைச்சூரியன் கோயில்கள் இருந்தாலும்
தமிழ்நாட்டில் கும்பகோணம் அருகில் இருக்கும்
ஸ்ரீசூரியனாரது கோவிலுக்கு இணை வேறொன்றுமில்லை இந்த ஒரு கோயிலில் தான் நவகிரஹங்களுக்குத்தனித்தனி சன்னதி இருக்கிறது .சோழ மன்னரால் கட்டப்பட்ட இந்தக்கோயில் மிகப்புராதனமானது வினாயகர் சூரியன் காசிவிசுவநாதர் விசாலாக்ஷி சந்திரன்
புதன் குரு சுக்கிரன் சனி ராகு கேது என்று இங்கு இருக்க ஒரே சமயத்தில் எல்லா கிரகங்களையும் பிரார்த்திக்க முடிகிறது சூரியன் நடுவில் அமர்ந்திருக்க அவருக்குக் கிழக்கே சுக்கிரன் ,தெற்கே செவ்வாய் .மேற்கே சனீச்வரன் ,வடக்கே குரு ,தென்கிழக்கே
சந்திரன் ,தென் மேற்கே ராகு,வடமேற்கே கேது என ஆகமப்படி எல்லாம் அமைந்திருக்கின்றன

சூரியபகவானின் அழகைச்சொல்ல இயலாது ,
கோயிலினுள் போனாலே ஒரு தெய்வீக உணர்வுநம்மை ஆட்கொள்வதை நன்கு உண்ரமுடிகிறது

சூரிய காயத்ரி --

ஆதித்யாய வித்மஹே சஹஸ்ரகிரணாய தீமஹி
தன்ன சூர்யப் பிரசோதயாத்

Monday, April 4, 2011

குத்துவிளக்கு

நமது ஹிந்து தர்மத்தில் எநதப்பூஜை ஆரம்பித்தாலும் அதில் முதலில் இடம் பெறுவது குத்துவிளக்கு .குத்துவிளக்கு இல்லாதவர் காமாட்சி விளக்காவது வைத்து
தீபம் ஏற்றுவது வழக்கம் . திருமணத்தின் போது தாய் வீட்டுச்சீதனமாக மணப்பெண்ணிற்கு குத்துவிளக்கைக்கொடுப்பது வழக்கம்


தை மாதம் வெள்ளிக்கிழமை மாதர்கள் எல்லோரும் கோயில்களில் நடக்கும் குத்துவிளக்குப்பூஜையில் கலந்துக்கொள்வார்கள்.
குத்துவிளக்கில் அம்பாளை ஆவாஹனம் செய்துக்கொண்டு பின் தியானித்து
ஸ்ரீ லலிதாசஹஸ்ரநாமம் செய்தபடி 1008 நாமாக்கள் சொல்லியபடி பூக்களால்
அர்ச்சனை செய்வார்கள் ,இதைச்செய்து வைக்கும் புரோகிதர் ஒலிப்பெருக்கில்
இந்தப்பூஜை செய்யும் கிரமத்தை ஒவ்வொன்றாக அழகாக எடுத்துச்சொல்ல
பெண்மணிகளும் அப்படியே செய்வார்கள் . பல கோயில் மண்டபத்தில் சுமார்
ஐநூறுக்கும் மேல் இந்தப்பூஜையில் பங்குப்பெறுவார்களை நாம் காணலாம் . .அவர்கள் வீட்டிலிருந்துக் கொண்டுப்போகும் பொருட்களில் குத்துவிளக்கு முக்கியப்பங்கு வகிக்கும்

இந்த விளக்குப்பூஜையில் என்ன தத்துவம் இருக்கிறது ? விளக்கு எரிந்து அதனால்
இருள் போக்கப்பட்டு அங்கு ஒளி பிரகாசிக்கிறது விளக்கு தன்னையே அழித்துக்கொண்டு மற்றவர்களுக்கு வெளிச்சம் தருகிறது . ஜோதியிலே அம்பாள் அருள் புரியும் ஒரு கோயில் தில்லியில் ஜனக்புரி என்ற இடத்தில் இருக்கிறது.
24 மணி நேரமும் விடாமல் தீபம் எரிந்தவண்ணம் இருக்க அதை உன்னிப்பாக
கவனிப்போமானால் அம்பாள் அங்கு அமர்ந்து
அருள் புரிவது விளங்கும் ,காமாட்சி விளக்கு
போல் இருக்க அதன் கீழ்பாகம் வட்டவடிவமான
பாத்திரம் போல் இருக்கிறது பக்தர்கள்
அதில் எண்ணெய் விட்ட வண்ணம் இருக்கிறார்கள் ,அங்கு ஸ்ரீராஜராஜேஸ்வரியும்
சௌந்தர்யபூஷணியாக நின்றபடி அருள்புரிகிறாள் அங்கு .ஜோதியிலேயே அன்னையைக்காண்கின்றோம் .

அக்னி புராணத்தில் நல்லெண்னை அல்லது
நெய்யிலோ விளக்கு ஏற்ற பல பலன்கள் விளக்கப்பட்டிருக்கின்றன நம் உடலில் இருக்கும்
ஏழு சக்கரங்களில் மூலாதாரமும் ஸ்வாதிஷ்டானமும் நல்லெண்ணை விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது , அதேபோல்
மணிபூரகம் அனாஹதம் இரண்டும் நெய்விளக்கேற்ற தூய்மையடைந்து நற்பலனை அடைகிறது . நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரிய நாடி .சந்திர நாடி ,சுஷம்னா நாடி மிக
முக்கியமாகக்கருதப்படுகின்றன
சூரிய நாடி நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது .சந்திரநாடி குளுமையைத்தருகிறது
சுஷம்னா நாடி அந்தப்பரம்பொருளுடன்
சம்பந்தப்பட்டு ஆன்மீகப்பாதையை வகுக்கிறது
நல்லெண்ணை விளக்கு ஏற்ற சூரிய நாடி
சுறுசுறுப்பு அடைகிறது நெய்விளக்கு சுஷம்னா நாடியைத்தூண்டிவிட உதவுகிறதாம் பொதுவாகவே நெய் தீபம் சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலனையும் தருகிறது
சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம்தான் ஏற்ற வேண்டும்
விளக்கெண்ணெய் தீபம் புகழ் குடும்பத்தில் ஒற்றுமை தாம்பத்ய சுகம் உண்டாகும்

இலுப்ப எண்ணெயிலும் தீபம் ஏற்றலாம் .வீட்டிற்கு நலன் உண்டாகும்

கடலெண்ணையில் தீபம் ஏற்றுவது உசிதமில்லை இதனால் கடன் , துக்கம், பயம், பீடை எல்லாம் வந்து ஆட்டிப்படைக்கும்

விளக்கைத்தேய்த்து சுத்தப்படுத்தவும் சில
நாட்கள் விதிக்கப்பட்டிருகின்றன
அவை ஞாயிறு திங்கள் ,வியாழன் ஆவன .
செவ்வாய் புதன் வெள்ளி ஆகிய கிழமைகளில்
விளக்கினைத் துலக்கக்கூடாது .

மழலைச்செல்வம் வேண்டுபவர் வாழைத்தண்டு
நூலைப்பக்குவப்படுத்தி அதைத்திரியாக்கி
தீபம் ஏற்ற நல்ல பலன் கிடைக்கும்

அதிக அளவில் செல்வம் வேண்டுமென்றால் வெள்ளெருக்கன் பட்டையைத்திரியாக்கி தீபம் ஏற்ற வேண்டும்

தாமரைத்தண்டுத்திரி முன் வினைப்பாவத்தை
நீக்கும்
பஞ்சுத்திரி எல்லாவற்றுக்குமே நல்லது
வீட்டில் மங்களம் உண்டாகும்

தினமும் காலையிலும் மாலையிலும் குத்துவிளக்கேற்றி மனம் ஒன்றியபடி தியானம்
செய்ய மனதில் இருக்கும் கொந்தளிப்புகள்
அகன்று அங்கு அமைதி நிலவும் மனச்சாந்தி
கிடைக்கும்

மாற்றமடைந்த இராமாயணம்

வால்மீகி ராமாயணத்தின் கதை பல கவிகளின் கைகளிலே போய் சில சம்பவங்கள் வேறாகி அங்கு மாற்றமும் வந்துவிடுகிறது .கம்பரின் இராமாயணத்திலும் ஸ்ரீதுளசிதாசரின் "ஸ்ரீராம்சந்த்ரமானஸ்"லும் சில இடங்கள் மாறிவருகின்றன .
கவிநயத்திற்காகவும் ஒருவரின் சரித்திரத்தை மேல்படுத்திக்காட்டவும் இதுபோல்
எழுதியிருக்கலாம் ஆனால் சமீபத்தில் நான் கேள்விப்பட்ட இராமயணக்கதை மிகவும் வித்தியாசமாக இருந்தது பல மாற்றங்களுடன் எழுதியிருக்கும் அந்த இராமாயணத்தைப் பார்க்கப்பார்க்க வியப்பாக இருந்தது

இதைப்போல் இராமயணத்தை மாறுபட்டு எழுதியவர் "பம்பாகவி " இவர் இதை எழுதிய போது முப்பத்தொன்பது வயதுதான் 942ம் வருடம் இந்தக்காவ்யத்தை எழுதினார் .
இவர் ராஷ்டரகுடா மன்னர் " அரிகேசரின் " அரண்மணையில் அரசகவியாக இருந்தவர்.
இவரது பெற்றோர்கள் முதலில் பிராம்மணப்பிரிவில் இருந்து பின் ஜைனமதத்தைத்தழுவினவர்கள்.

இவர்கள்து மகனும் ஜைனமதத்தைத்தழுவி
தன் வாழ்நாள் கடைசி வரையிலும்
தொண்டு செய்துவந்தார் ,பல புத்தகங்களையும் எழுதியிருக்கிறார் ,பெரிய கவிஞர் , மகாஞானி
அவரது புத்தகம் " ரிஷபா " 24.தீர்த்தங்கரர்களைப்பற்றிக்கூறுவது.
இவர் வாழ்ந்த சமயத்தில் ரன்னா ,பொன்னா என்ற மிகச்சிறந்த கவிஞர் இருவர்கள் பல கன்னட புத்தகங்கள் எழுதியிருக்கின்றனர்.ஆகையால் இவர்களுடன் பம்பா அவர்களையும் சேர்த்து
"ரத்னத்ரயா "என்று பாசமாக மக்கள் அழைத்தனர்,

இவர் ஆதிபுராணா என்று மஹாபாரதத்தையும் இராமாயணத்தையும் எழுதியிருக்கிறார்
'பம்பாபாரதா' என்பது மஹாபாரதத்தின் சுருக்கும் என சொல்லலாம்
சில இடங்களில் அவரது மன்னர் அரிகேசரினை வில்வீரன் அர்சுனனுக்கு
ஒப்பிட்டுள்ளார் ,நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் இவருக்கு அதிக அளவில்
இருந்ததால் பல சிறந்த படைப்புகளைத் த்ந்துள்ளார்

இனி அவர் எழுதிய இராமாயணதிற்கு வருவோம்

இந்த ராமாயணத்தின் பெயர் "ஸ்ரீராமசந்த்ரசரித புராணா'

இந்த இராமயணைத்தில் தசரதருக்கு நாலு மனைவிகள்

அபராஜிதா என்ற மனைவிக்குப்பிறந்த மகன் பெயர் பத்மா பின்னார் ராமரானவர்.
சுபத்ரா என்ற மனைவிகுப்பிறந்தவர் நாராயணா ,இவர்தான் இலட்சுமணர்
கைகேயிக்கு பரதர் சுப்பிரபா என்ற மனைவிக்குப்பிறந்தவர் சத்ருக்னர்

இதே போல் ஸ்ரீராமருக்கும் நான்கு மனைவியைச்சித்தரிக்கிறார் இந்தக்கவி.
அவர்கள் ....மைதலி ,பிரபாவதி , ரத்னிபா , ஸ்ரீதமா

இவர் இராமயணத்தில் ஸ்ரீராமர் இராவணனைக்கொல்லவில்லை ஆனால் இலட்சுமணனே இராவணைக்கொல்கிறார் .ராமர் யுத்தம் முடிந்தப்பின் ராஜ்யத்தைச்சகோதருக்குத்தந்துவிட்டு ஜைன சன்யாசியாக மாறிவிடுகிறார்
பின் அவர் ஸ்வர்க்கமும் போகிறார் .
ஆனால் இராவணனைக்கொன்ன பாவத்தினால் இலட்சுமணன் நரகம் போகிறான்,
அவனுடன் இராவணனும் நரகம் போகிறான் இருவரும் மறுபிறப்பில் நற்காரியங்களைச்செய்து முக்தி அல்லது மோக்ஷம் அடைவார்கள் என்று ராமர் கூறுகிறார் .இராவணன் வருங்கால தீர்த்தங்கரர் ஆவார் என்றும் கூறுகிறார் ,

சீதையின் கதையிலும் சீதை யுத்தம் முடிந்தப்பின் ஜைன சன்யாசினியாக ஆகிவிடுவதால் ராமர் அவளை விட்டு விட்டு சுவர்க்கம் போகிறார்

தசரதர் செய்த புத்ரகாமேஷ்டி யாகம் இங்கு வருவதில்லை இங்கு விசுவாமித்ரரும்
வருவதில்லை ஆனால் நாரதர் வருகிறார் சீதையைக்கண்டு ஆசைக்கொள்கிறார்,
ஆனால் சீதை இவரை விரும்பாததால் பல கஷ்டங்கள் ஒடுக்கிறார்

சுயம்வர மேடையில் ராமர் உடைப்பது ஜனகருடைய வில் .
ஜனகரிடம் இரண்டுவில்கள் இருந்தன .ஒன்று வஜ்ராவர்த்தம் மற்றொன்று
ஸாராவர்த்தம் ..அதில் ஒன்றை உடைத்து சீதையை மணந்துக்கொள்கிறாள்,
இலட்சுமணனும் மற்றொன்றை உடைத்து சந்திரதுவஜன் என்பவரின் இரு
மகள்களை மணந்துக்கொள்கிறான் ,

வால்மீகி இராமயணத்தில் பரதனை மிக உயர்வாகச்சித்திரிக்கப்பட்டிருக்கிறது
ஆனால் இவரோ பரதனைப் பொறாமையால் வேகும் சகோதரானாகச் சித்தரிக்கிறார்

இங்கு வரும் கைகேயியோ ராமரைக்காட்டுக்குப்போகச் சொல்லவில்லை
ஆனால் பரதனுக்குப்பட்டம் மட்டும் கேட்கிறாள்.

கானகத்தில் மாரீசன் வருவது இந்த இராமயணத்தில் இல்லை ஆனால் ஜடாயு சீதையைக்காவல் காத்து நின்றாராம்

எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்ரீராமர் ஏகபத்னி
விரதம் கொண்டதாக இல்லாமல் சுக்ரீவனுடைய
மகளை மணந்ததாகச்சொல்கிறார் இவர்

பிரம்மசாரியான ஸ்ரீராமபக்தரான அனுமார் இங்கு
அனங்கபுஷ்பை என்றவளை மணம் செய்துக்கொண்டிருக்கிறார் .இவள் இராவணனின்
தங்கை சந்திரநகியின் மகள். அதாவது சூர்ப்பனகையின் மகள்,இந்தக்கல்யாண
வைபவத்தில் சீதனமாக இராவணன் அனுமனுக்கு கர்ணகுண்டல்புரம் என்ற இடத்தை
அளித்தானாம் .மாருதி இந்த இடத்திற்கு அரசன் ,
ஆனால் இராவணன் சீதையை அபகரித்து வர
இந்த அதர்மச்செயலால அனுமன் இராவணனுக்கு எதிரியாகி ராமனுக்கு உதவி புரிய அவருடன் சேர்ந்துக்கொள்கிறார்
ஜைனமதத்தில் இருந்த பம்பா ஹோமத்தையும்
யாகத்தையும் தவிர்த்திருக்கிறார் இதனால் அசுவமேத யாகம் இதில் வரவில்லை என நினைக்கிறேன் இந்தப்புத்தகம் வாங்கிப்படிக்க நினைக்கிறேன் ஆனால் கன்னடத்தில் இது இருக்கிறதே!

இதைப்பற்றி எனக்குச்சொன்னவர் ஒரு கன்னட
நண்பர் ,ரயில் பிரயாணத்தில் சந்தித்தவர் ரயில் பிரயாணம் போது இராமயணத்தைபற்றி நாங்கள் பேசஅவர் இந்த மாறுபட்ட
இராமயணத்தைச்சொன்னார் ,மிகவும் வித்தியாசமாக இருந்தது



.